மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே கேஷவ் மற்றும் மைரா தங்கள் மகளை தங்கள் வீட்டிற்கு தூக்கி சென்றனர். பின்னர் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் அன்பையும் தங்கள் மகள் பெற வேண்டும் என்று விரும்பியதால் அவர்கள் மீண்டும் தங்கள் குடும்ப வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
வீட்டிலேயே ஒரு எளிய பெயர்சூட்டு விழாவில் தங்கள் மகளுக்கு லயா என்று பெயரிட்டனர், மேலும் கேஷவ் லயாவுக்கு பெயர்சூட்டு நடத்திய நாளை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு பண்ணை வீட்டை வாங்கினான். வசுந்த்ராவும் அர்ச்சனாவும் பகலில் மைராவையும் லயாவையும் கவனித்துக் கொண்டனர், ஆனால் கேஷவ் இரவில் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. மைரா லயாவுக்கு உணவளித்து, லயாவை கவனித்துக்கொள்வது, அவளுக்கு டையப்பர் மாற்றி அவளை தூங்க வைப்பான்.
ஒரு மாதம் கடந்து போனது. மற்ற நாட்களைப் போலவே மைரா உறங்கிக் கொண்டிருக்க, கேஷவ் முழங்கையை ஊன்றி லயா விழித்துக் கொண்டு அவனைப் பார்ப்பதைப் பார்த்தான்.
“ அப்பா கூட நேரம் செலவிட என் ப்ரின்சஸ் உற்சாகமா இருக்காளா ? என் அம்முவ தொந்தரவு செய்யாம நாம சோபாவுக்கு போகலாம் “ என்று சொல்லி லயாவின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டு கேஷவ் சோபாவில் அமர்ந்தான். தன் ஆள்காட்டி விரலால் அவள் தாடையை மெல்ல அழுத்தியவன், அவளது உள்ளங்கையை முத்தமிட்டு, அவளது கொட்டாவியை பார்த்து அழகாக புன்னகைத்தான்.
“ நீயும், உன் அம்மாவும் எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க ? “ என்று புன்னகையோடு சொல்லி தன் மகளைக் கையில் ஏந்திக்கொண்டு அறை முழுவதும் நடந்தான். அவள் தூங்கியதும் அவளைத் தொட்டிலில் கிடத்தி மைராவைக் கட்டிப்பிடித்து உறங்கச் செய்தான்.
நாட்கள் வேகமாக சென்றது. லயா தற்போது மூன்று மாத குழந்தையாக வளர்ந்திருந்தாள்.
கேஷவ் தன் வேலையை முடித்துவிட்டு ஹாலை அடைந்து லயாவை மெத்தையில் பார்த்தான். கை, கால்களை காற்றில் உதைத்துக் கொண்டு மதனையும் ராஜனையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். வசுந்தரா மைராவுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார், அர்ச்சனா நைனாவின் மகன் ஆத்விக்கைத் தூக்கிக்கொண்டு லயாவைப் பார்த்துக் கொண்டிருந்தார். கேஷவ் லயாவின் அருகில் குப்புற படுத்து அவள் நெற்றியில் முத்தமிட, அவள் அவனை பார்த்து அழகாக் சிரித்தாள்.
கேஷவ் ஒரு பொம்மையை அவளருகில் வைக்க, அதன் ஒலி மற்றும் ஒளியை பார்த்து லயா புன்னகைத்தாள். விளையாடி முடித்ததும் அழ ஆரம்பித்து பசியிலும் தூக்கத்திலும் கண்களைக் கசக்கிக் கொண்டாள். மைரா சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பியதால் கேஷவ் லயாவை தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். மைரா தந்தை, மகள் இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
“ அம்மு, பாப்பாவுக்கு பசிக்குது. கத்தி அழுது கூரை கீழ விழுறதுக்கு முன்னாடி பசியாத்து. அப்புறம் நீ தூங்க போகலாம், நான் லயா கூட விளையாடுவேன். சரி தானே ப்ரின்சஸ் ? என்று சொல்லி கேஷவ் லயாவின் மூக்கை தன் கையால் வருட, லயா முகம் சுளித்து தன் விரல்களால் மூக்கை தேய்த்தாள்.
கேஷவ் அவளது குறும்புகளைக் கண்டு புன்னகைத்து லயாவை மைராவின் மடியில் கிடத்தினான். மைரா அவளுக்கு பாலூட்டும் போது அவன் அவளது கால்விரல்களுடன் விளையாடத் தொடங்கினான்.
லயாவுக்கு ஐந்து மாதம் ஆனதும் கேஷவ் மற்றும் மைரா தங்கள் வீட்டிற்குத் திரும்பினர். மைராவும் நைனாவும் அகாடமியில் தங்கள் வேலைக்குத் திரும்பினர். அவர்கள் அத்விக் மற்றும் லயாவை அகாடமிக்கு அழைத்துச் சென்றனர், அர்ச்சனா அல்லது வசுந்தரா தினமும் அவர்களுடன் சென்றார்கள். கேஷவ் வேலை நிமித்தம் வீட்டிலேயே இருந்தான், இல்லையென்றால் மைராவை அகாடமிக்கு அழைத்துச் சென்று லயா மற்றும் ஆத்விக் ஆகியோரை அவர்களின் அம்மாக்களுடன் கவனித்துக் கொண்டான்.
வழக்கம் போல அவர்கள் அகாடமியில் இருந்து திரும்பி வந்ததும் மைரா பாத்ரூமில் புத்துணர்ச்சி பெற சென்றாள். அறையில் கேஷவும் லயாவும் குப்புறப் படுத்தபடி பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். லயா கையில் ஒரு கிலுகிலுப்பை பிடித்து ஆட்டுவதை பார்த்து கேஷவ் அவள் வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டினான். உடனே லயா அவனது தலைமுடியை தன் முஷ்டியில் பிடித்து அவன் முகத்தை லாவினாள்.
“ அச்சோ! அப்பா இன்னும் குளிக்கல ப்ரின்சஸ். கொஞ்ச நேரம் இரு இன்னைக்கு உன்ன நான் குளிக்க வைக்குறேன் “ என்று சொல்லி கேஷவ் அவளது ஆடைகளை அகற்றி விட்டு அவள் தலை முடியை விரல்களால் கோதினான். மைரா ஒரு துண்டுடன் வெளியே வந்ததும் கேஷவ் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
“ நம்ம ரெண்டு பேரையும் தொந்தரவு செய்யாத மாதிரி இன்னைக்கு நைட்டு லயாவ லேட்டா தூங்க வைக்கட்டுமா ? “ என்று கேஷவ் கேட்டதும் மைரா பதிலுக்கு கண்ணடித்து பதில் சொன்னாள்.
அவள் பதிலை கேட்டு உற்சாகமடைந்த கேஷவ் தனது முஷ்டியை காற்றில் உயர்த்தி லயாவை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்றான். அவளை குளிப்பாட்டி விட்டு லயாவை சுற்றி துண்டை போர்த்தினான். மைரா அவளை கேஷவிடம் இருந்து தூக்கிக் கொண்டு அவனைக் குளிக்க அனுப்பினாள்.
அவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு கேஷவும் மைராவும் லயாவின் பொம்மைகள் அனைத்தும் தரையில் வைத்து அவளோடு விளையாடினர். நேரம் 11 ஆகிவிட்டது என்று பார்த்த கேஷவ் லயாவை மைராவின் மடியில் கிடத்தினான்.
“ பாபாவுக்கு பாலூட்டு, கொஞ்ச நேரத்துல அவ தூங்கிடுவா. அதுக்கு அப்புறம் நான் போய் நம்ம படுக்கைய ரெடி பண்றேன். ஆறு மாசம் ஆயிடுச்சு அம்மு, இன்னைக்கு உன்ன முழுசா ரசிக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “ என்று சொல்லி கேஷவ் அவள் கழுத்தில் முகம் புதைக்க், மைரா வெட்கப்பட்டு அவன் முகத்தை அவள் கழுத்திலிருந்து விலக்கினாள். கேஷவ் லயாவை தோளில் போட்டு மெல்ல தட்டிக் கொடுத்தான்.
“ ப்ரின்சஸ் நீ அப்பாவோட செல்லம் தானே ? இன்னிக்கு அப்பாவையும் அம்மாவையும் தொந்தரவு செய்யாம ரெண்டு மணி நேரம் தூங்குங்க. அதுக்கு அப்புறம் உனக்கு எவ்ளோ நேரம் வேணும்னாலும் நான் உன் கூட வெளியாடுவேன், ப்ராமிஸ் “ என்று சொல்லி அவள் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, அவள் முதுகில் மென்மையாகத் தட்டிக் கொடுத்தபடி நடந்தான். மைரா ஒரு புன்னகையுடன் பாத்ரூமுக்குள் நுழைவதைப் பார்த்தவன் தனக்கு ஏதோ இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். சில நிமிடங்கள் கழித்து மைரா அங்கி அணிந்து வெளியே வந்து கட்டிலில் படுத்து கேஷவ் லயாவை தூங்க வைப்பதை பார்த்தாள். ஒரு மணி நேரம் கழித்து லயா தூங்கியதும் கேஷசவ் அவளை தொட்டிலில் படுக்க வைத்து போர்வையால் மூடி அவள் அருகில் ஒரு பஞ்சுபோன்ற பொம்மையை வைத்தான்.
சட்டையைத் தூக்கி எறிந்துவிட்டு படுக்கைக்கு சென்று மைராவின் உதடுகளை முத்தமிட்டான். புன்னகையுடன் முத்தத்தை முறித்து அவளது அங்கியின் ஆடையின் முடிச்சை இழுத்ததும் அவள் லேஸ் உள்ளாடைகள் அணிந்திருப்பதை பார்த்து அவன் ஆசையில் முனகினான்.
“ அழகா இருக்க அம்மு “ என்று கேஷவ் சொல்ல, “ நீங்க உங்க பொண்டாட்டிய மறந்துட்டீங்க போல “ என்று செல்ல கோவம் கொண்டாள் மைரா.
“ உன்ன மறந்திருந்தா என்ன பைத்தியக்காரன்னு சொல்லு. உண்மைய சொல்லனும்னா நீ இவ்ளோ அழகா, கவர்ச்சியா என் கண்ணு முன்னாடி நடக்கும் போது நான் எவ்ளோ கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா ? நான் ஒவ்வொரு நாளும் நைட்டு, பகலா பச்ச தண்ணியில குளிச்சிட்டு இருந்தேன். எத்தன முறை உன்ன தோள் மேல தூக்கி போட்டு கட்டிலுக்கு தூக்கிட்டு வர நெனச்சேன் தெரியுமா ? “ என்று கேஷவ் பதில் சொல்ல, “ யார் உங்கள தடுத்தது? “ என்றாள் மைரா.
“ உன் ஆரோக்கியத்தை விட என் ஆசை எதுவும் ஒரு நாளும் முக்கியமானதா இருந்ததில்லை அம்மு. உன் உடம்பு குணமடையுற வரை நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்கு நாம ஆரம்பிச்ச அப்புறம் மறுபடியும் நிறுத்த மாட்டோம் மைரா. நீ என் பெயர சத்தமா சொல்லி முனகும் போது எனக்கு அவ்ளோ புடிக்கும் ஆனா இன்னைக்கு நீ அமைதியா இருக்கணும்னு நான் விரும்புறேன். நம்ம லயா எழுந்து நமக்கு தொந்தரவா இருக்க நான் விரும்பல. புரிஞ்சிதா அம்மு ? “ என்று கேஷவ் கேட்க, மைரா அவனது தீவிர பார்வையை கண்டு சரி என்று தலையை அசைத்தாள்.
“ நீ யாருடையவ மைரா ? “ என்று கேஷவ் கேட்க, நீங்க கேஷவ், நான் உங்களுக்கு சொந்தமானவ “ என்று மைரா பதில் சொன்னாள்.
அவள் பதிலை கேட்டு கேஷவ் சிரித்துக் கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைத்து அவளை முத்தமிட்டான். தன் உதடுகளில் இருந்து வெளிவந்த முனகலை நிறுத்த மைரா உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவன் தன் உதடுகளை அவள் உதடுகளோடு சேர்த்து அவள் ஆடைகளுக்கு விடுதலை அளித்தான். அவளது தாடையில் இருந்து மார்பு வரை முத்தங்களை பொழிந்தவன், அவளது மென்மைகளை தொடுவதற்கு முன் அவளைப் பார்த்தான். லயா பிறந்த பிறகு அவன் அவளைத் தொடுவது இதுவே முதல் முறை என்பதால் வெட்கத்துடன் கால் விரல்களை மடக்கினாள் மைரா.
கேஷவ் அவள் காது மடல்களில் முத்தமிட்டு அவள் மென்மைகளை மெல்ல வருடினான். உள்ளங்கையில் ஈரத்தை உணர்ந்து கண்களை மூடி முனகினான். அவன் அவளை சுவைக்க ஆரம்பித்ததும் மைராவின் உதடுகளில் இருந்து மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவளது முகம் முழுவதுமாக சிவந்து போனது.
தலையை நிமிர்த்தி கையால் உதடுகளைத் துடைத்துக் கொண்டு கேஷவ் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அவன் அணிந்திருந்த ஆடையை அகற்றிய பிறகு அவளது வயிற்றில் முத்தமிட்டதும் மைரா தன் மழுங்கிய நகங்களை அவன் முதுகில் வைத்து அழுத்தினாள்.
அவளது அடிவயிற்றில் இருந்த தழும்புகளை பார்த்தவன், “ இந்த தழும்பு எவ்ளோ அழகா இருக்கு பாரு. நாம லயாவ இந்த உலகதுக்கு கொண்டு வந்தத நினைவூட்டுற ஒரு அடையாளம் இது “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, “ இந்த தழும்பு அழகா இருக்குனு நீங்க உண்மையா நினைக்குறீங்களா ? “ என்று மைரா அவனிடம் கேட்டாள்.
“ இதெல்லாம் ரொம்ப அழகானது மட்டும் இல்ல, ரொம்ப ஸ்பெஷல் அடையாளங்கள் அம்மு. இந்த அடையாளங்கள நான் ரொம்ப ரசிக்குறேன் “ என்று பதில் சொல்லி கேஷவ் அவளது அடிவயிற்றில் ஒவ்வொரு கோடுகளையும் முத்தமிட்டான்.
மைரா அவனது மனைவியாகவும், அவன் குழந்தைக்கு தாயாகவும் இருப்பதில் பெருமிதம் கொண்டாள்.
அப்படியே தொடர்ந்த அவர்களின் ரொமான்ஸுக்கு பிறகு கேஷவ் மைராவின் நெற்றியிலும் மூக்கு நுனியிலும் முத்தமிட்டான்.
“ எப்படி இருந்துச்சு மைரா ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்க, “ நிச்சயமா நான் இந்த பூமியில இல்ல கேஷவ். இத்தன மாசமா உங்கள மிஸ் பண்ணேன், இனி நமக்கு கிடைக்குற வாய்ப்பு எதையும் மிஸ் பண்ண கூடாது “ என்று மைரா பதில் சொல்ல, கேஷவ் சிரித்தபடி மைராவை சுத்தம் செய்ய பாத்ரூமுக்கு தூக்கி சென்றான்.
“ நல்ல வேளை, லயா இன்னும் எழுந்திருக்கல. அவ நடுவுல எழுந்திருந்தா என செய்றது ? என்னால கற்பனை செய்ய கூட முடியல” என்று மைரா சொன்னதும், “ எழுந்து இருக்க மாட்டா. நம்ம ரெண்டு பேரையும் தொந்தரவு செய்யாம தூங்கினா அவ கூட அதிக நேரம் விளையாடுவேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் “ என்று கேஷவ் பதில் கூறினான். அதற்கு மைரா உடனே, “ கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா ? பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவீங்களா ? “ என்று கேட்டாள்.
“ நான் பாப்பாவ தூங்க சொன்னேன், வேற ஒண்ணுமில்ல அம்மு. அவ எப்போ வேணும்னாலும் எழுந்திருப்பானு நம்புறேன், அதனால சீக்கிரம் போய் டிரஸ் பண்ணலாம்.உனக்கு பசிச்சா சொல்லு, தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிட ஏதாவது கொண்டு வரேன் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டதும், “ இப்ப என்ன தூங்க வைக்க மாட்டீங்களா? “ என்று கேட்டாள் மைரா.
“ நீ எப்பவும் என் முதல் குழந்த அம்மு “ என்று கேஷவ் பதில் அளித்தான்.
இருவரும் உடைகளை அணிந்து கொண்டு அறைக்குத் திரும்பியதும் மைராவைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவள் தலைமுடியைக் கோதிவிட்டு, முதுகில் தட்டிக் கொடுத்து அவளைத் தூங்க வைத்தான்.
லயா ஏழு மாத குழந்தையாக இருந்த போது ஒரு வார இறுதியில் கேஷவ் மற்றும் மைரா அனைவருடனும் நேரத்தை செலவிட குடும்பத்தின் வீட்டிற்கு சென்றனர். மைராவும் கேஷவும் லயாவை வசுந்த்ராவின் வீட்டிற்கு தூக்கிச் சென்றதும் ராஜன் தனது பேத்தியை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டார்.
கேஷவ் தனது வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து அழைப்பை வந்ததும் அதற்கு பதில் சொல்ல போர்டிகோவிற்கு சென்றான். ராஜன் லயாவை தரையில் படுக்க வைக்க, அவள் கேஷவைத் தேடி ஊர்ந்து செல்லத் தொடங்கினாள். வெளியில் இருந்து அவன் குரல் கேட்டு லயா தவழ்ந்து வாசலுக்கு செல்ல, மைரா கேஷவை கூப்பிட்டு தன் மகளைப் பார்க்க சொன்னாள். கேஷவ் புன்னகையுடன் லயாவை தன் தோளில் தூக்கிக்கொண்டு தன் அழைப்பை தொடர்ந்தான், லயா அவனது மீசை, தாடி, தலைமுடியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
“ அப்படியே அப்பா பொண்ணு தான் அவ. கேஷவ் பேசும் போது எப்படி அவன தொந்தரவு செய்யாம அமைதியா பார்த்துட்டுஇருக்கா பாருங்க “ என்று வசுந்தரா சிரித்துக் கொண்டே சொல்ல, “ ஆனா அவளோட அப்பா எப்பவும் எனக்கு தான் முதல்ல சப்போர்ட் செய்வாரு. அவர நான் கண்ட்ரோல் செய்றேன்னு மறந்துட்டீங்க போல. அடுத்த முறை எங்களுக்கு ஒரு பையன் பிறந்த அப்புறம் எங்க டீம் சமநிலையில இருக்கும் “ என்று மைரா பதில் சொன்னதும், வசுந்தரா மைராவின் வார்த்தைகளைக் கேட்டு பெருமூச்சு விட்டு சிரித்தார். கேஷவ் அழைப்பை துண்டித்து லயாவின் நெற்றியில் இருந்த முடியை தன் விரல்களால் கோதிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தான்.
“ தாத்தா, பாட்டி கூட விளையாடலையா ப்ரின்சஸ் ? “ என்று கேஷவ் தன் மகளிடம் கேட்க, லயா கைகளைத் தட்டி அவன் மூக்கைக் கிள்ளினாள். பின்னர் ராஜனும் வசுந்தராவும் லயாவுடன் விளையாடுவதை கேஷவும் மைராவும் பார்த்தனர்.
லயா ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது க்ரிஷும் நைனாவும் அவர்களின் மகன் ஆத்விக்குடன் மைரா மற்றும் கேஷவின் வீட்டிற்கு சென்று குழந்தைகளை ஒன்றாக விளையாட வைத்தனர். அத்விக்கும் லயாவும் ஒரு தட்டில் சில வேகவைத்த காய்கறிகளுடன் அமர்ந்திருந்தனர். அத்விக் அவளுக்கு உணவளிக்க முயற்சிக்க, லயா அவன் கையில் வைத்திருந்த கேரட்டுக்கு வாயைத் திறந்தாள். க்ரிஷ் அவர்களின் அனைத்து தருணங்களையும் பதிவு செய்து கொண்டிருந்தான், பின்னர் க்ரிஷ் மற்றும் கேஷவ் குழந்தைகளை சிறிது நேரம் விளையாட நீச்சல் குளத்திற்கு தூக்கிச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிய போது, அர்ச்சனா ஆத்விக்கிற்கு சிக்கன் சமைத்திருந்தார், எதிர்பாராத விதமாக லயா அவனது தட்டில் இருந்து ஒரு துண்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் ஆனால் அதன் சுவை பிடிக்காமல் முகம் சுளித்து அதை துப்பிவிட்டு அழ ஆரம்பித்தாள்.
மைரா அவளைத் தூக்கி வாயில் இருந்த சிறு துண்டை அகற்ற, கேஷவ் அவளுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, அர்ச்சனா லயாவுக்கு சமைத்து வைத்திருந்த காய்கறிகளை ஊட்டினான்.
“ இவ கேஷவ், மைராவோட பொண்ணு இதுல ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல. அப்படியே அப்பா, அம்மா மாதிரி இருக்கா “ என்று அர்ச்சனா சிரித்தார்.
“ லயா பாப்பாவுக்கு சிக்கன் புடிக்கலையா ? கவலைப்பட வேண்டாம் அப்பா உனக்கு நிறைய வெஜிட்டேரியன் சாப்பாடு சமைச்சு கொடுக்குறேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ அம்மா “ என்று லயா சொல்ல, அவள் சொன்ன முதல் வார்த்தையைக் கேட்டு அனைவரும் உறைந்து போனார்கள். ராஜன் விரைவாக அந்த தருணத்தை பதிவு செய்யத் தொடங்கினார். மைராவும் கேஷவும் லயாவுடன் பேசத் தொடங்கினர்.
“ லயா, அப்பா சொல்லு “ என்று மைரா சொல்ல, “ அம்மா சொல்லு “ என்றான் கேஷவ்.
“ பா “ என்று மட்டும் லயா சொல்ல, மைராவும் கேஷவும் லயாவை முத்தமிட்டனர். தங்கள் மகள் அவர்களை அப்பா மற்றும் அம்மா என்று அழைப்பதைக் கேட்டு இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர்.
பின்னிரவில் அவர்கள் வீவீட்டுக்கு புறப்பட்டதும் லயா மைராவின் மடியில் தூங்க, கேஷவ் காரை ஓட்டிச் சென்றான்.
********************************************
முன்னோட்டம்:
“ இந்த உலகத்தோடு அழகான பொண்ணுங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன் போல “
