நாட்கள் வேகமாக சென்றது லயா தற்போது பத்து குழந்தையாக இருந்தாள்.
மைரா லயாவை ஒரு அழகான இளஞ்சிவப்பு ஃபிராக் அணிய் செய்ததும் கேஷவ் லயாவைத் தூக்கிக் கொண்டு மைராவைத் தயாராக சொன்னான். கேஷவ் லயாவுக்கு அழகான ஷூ அணிவித்து, அவளது தலைமுடியை சீவி, சிறிய ரோஜாக்கள் கொண்ட அழகான ஹேர்பேன்ட் அணிய வைத்தான்.
“ ஆஹா, எங்க லயா, குட்டி தேவதை மாதிரி ரொம்ப அழகா இருக்கா “ என்று சொன்ன கேஷவ், மைரா டிசைனர் சேலையில் தயாராக இருப்பதைப் பார்த்து விசில் அடித்து அவளைப் பார்த்து கண்ணடித்தான். கேஷவ் லயாவை தூக்கி தன் தோளில் உட்கார வைத்து மைராவின் இடுப்பை சுற்றி வளைத்து அவள் கன்னத்தை முத்தமிட்டான். அவர்கள் காரில் ஏறியதும் லயாவை மைரா மடியில் அமர்த்திக் கொண்டிருக்க, லயா கையில் ஒரு பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் மதன் வீட்டை அடைந்ததும் முழு குடும்பத்தினரும் அவர்களை வரவேற்றனர்.
க்ரிஷ் மற்றும் கேஷவ் இருவரையும் ஒரே மாதிரியாக அழைப்பது வழக்கம் என்பதால் கேஷவைப் பார்த்ததும் அத்விக் அப்பா என்று கத்தினான். லயா, ஆத்விக்கைப் பின்தொடர்ந்து, க்ரிஷை அப்பா என்றும், நைனாவை அவனை போலவே அம்மா என்றும் அழைத்தாள். கேஷவ் மற்றும் மைரா ஆத்விக்கிற்கு முத்தமிட்டு, பேட்டரியில் இயங்கும் ஜீப் மற்றும் பல பொம்மைகளை அவனுக்கு பரிசளித்தனர்.
“ குட்டி ஆத்விக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அதனால கிளம்பலாம், நாம பார்ட்டி ஹாலுக்கு போகணும் “ என்று கேஷவ் சொன்னதும், அவர்கள் இரண்டு கார்களில் புறப்பட்டனர். க்ரிஷ் கேஷவ் காரை பின்தொடர்ந்து அவர்கள் ஒரு கட்டிடத்தை அடைந்தனர். கேஷவ் அவர்கள் அனைவரையும் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றதும் மைரா ஒரு டாக்மென்ட்டை நைனாவிடம் கொடுத்தாள். அந்த இடம் ஆத்விக் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதை நைனா கண்டாள்.
“ லயா மியூசிக் அகாடமியோட ரெண்டாவது கிளைக்கு மைரா, நைனாவுக்கு வாழ்த்துக்கள். இன்னைக்கு நம்ம ஹீரோ ஆத்விக் திறப்பு விழாவ நடத்துவாரு “ என்று கேஷவ் அறிவித்ததும், அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். க்ரிஷும், நைனாவும் ஆத்விக்கின் கையைப் பிடித்து விளக்கேற்றி கட்டிடத்தைத் திறந்து வைத்தனர்.
“ இந்த கிளைய நிர்வாகம் செய்ய ஊழியர்கள நியமிக்கலாம், அவங்க தனியா நடத்த தயாரா இருக்க வர கொஞ்சம் மாசம் நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கோங்க “ என்று கேஷவ் சொல்லிக் கொண்டிருந்த போது ஆத்விக் அழ ஆரம்பித்தான். க்ரிஷ் அவனது தலைமுடியை கோதி வெளியே கொண்டு சென்றான்.
“ என் பையனுக்கு என்ன ஆச்சு? உன் அப்பா உனக்காக வாங்கின ஜீப் ஓட்ட நீ அவசரப்படுறியா? “ என்று க்ரிஷ் கேட்க, “ அப்பா, கார்… “ என்று ஆத்விக் அழுதான்.
“ நாம கேக் கட் பண்ணிட்டு வீட்டுக்கு போனதும் ராத்திரி பூரா கார் ஓட்டுவோம். சரியா சேம்ப்பியன் ? “ என்று க்ரிஷ் அவனை சமாதானம் செய்தான்.
அவர்கள் பார்ட்டி ஹாலுக்கு சென்றதும் க்ரிஷும், நைனாவும் ஆத்விக்கின் கையைப் பிடித்து கேக் வெட்டினர். அவர்கள் ஆத்விக் மற்றும் லயாவுக்கு முதல் துண்டை ஊட்டினர், அதன் பிறகு அனைவரும் ஆத்விக்கிற்கு கேக் ஊட்டினர். விருந்தினர்களைப் பார்த்து அழுது கொண்டிருந்த ஆத்விக்கை அமைதிப்படுத்த கேஷவ் அவனை தூக்கிக் கொண்டு பார்ட்டி ஹாலை விட்டு வெளியே சென்றான். க்ரிஷும், நைனாவும் விருந்தினரைக் கையாண்டனர், இறுதியாக இரவில் தாமதமாக குடும்பம் வீடு திரும்பியது. அப்போது அத்விக் விழித்துக் கொண்டு ஜீப்பை ஓட்ட க்ரிஷ் அவனை கவனித்துக் கொண்டான்.
லயா 11 மாத குழந்தையாக இருந்த போது ஒரு நாள் மைரா வீட்டில் அவளை கவனித்துக் கொண்டிருந்தாள், கேஷவ் ஏதோ வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தான். மாலையில் திரும்பி வந்தவன் லயா மெத்தையில் தூங்கிக் கொண்டிருப்பதையும், மைரா பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தான். கேஷவ் அவள் அருகில் அமர்ந்து ஒரு ஃபைலை அவளிடம் கொடுத்தான்.
“ நம்ம லயாவோட பிறந்த நாளுக்கு ஏதாவது விசேஷமான, மறக்க முடியாத விஷயம் பண்ணலாம்னு இருக்கேன், ஆனா நம்ம லயா சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் நாம சேர்ந்து பேசி தான் முடிவு பண்ணுவோம். இப்போ என் மனசுல ரெண்டு யோசனை இருக்கு. நீ உன்னோட முதல் மேடை நிகழ்ச்சியும், தனியா வேலை செய்ய ஆரம்பிச்சது ஊட்டியில தான் அதனால அங்க லயா அகாடமியோட இன்னொரு கிளை தொடங்கலாமா ? அங்க பில்டிங் கட்ட இடம் நம்ம கிட்ட தயாரா இருக்கு “ என்று கேஷவ் சொன்னதை கேட்டுவிட்டு, “ இன்னொரு யோசனையும் என்னனு சொல்லுன்ங்க அதுக்கு அப்புறம் முடிவு செய்வோம் “ என்றாள் மைரா.
“ ஒரு சின்ன சாப்ட்வேர் கன்சல்டன்சி கம்பெனி இப்போ நஷ்டத்துல இருக்கு அதனால அத விற்க அந்த உரிமையாளர் முடிவு பண்ணி இருக்காரு. இந்த file அவரோட கம்பெனிக்கு அவர் எதிர்ப்பார்க்குற விலை சம்மந்தமான விவரம் இருக்கு “ என்று கேஷவ் சொன்னதும், “ நீங்க இந்த கம்பெனி வாங்கி நடத்த ஆரம்பிச்சா சாப்ட்வேர் அப்புறம் ஹேக்கிங் கன்சல்டன்சி ரெண்டுமே செய்ய முடியும் தானே அதனால இத யோசிக்காம எடுத்து செய்யலாம் ஆனா நம்ம கிட்ட அவ்ளோ பணம் இருக்கா ? “ என்றாள் மைரா.
“ இருக்கு அம்மு ஆனா நாம நம்ம சேமிப்புல இருந்து 50% மட்டும் தான் முதலீடு செய்வோம், மீதி தொகைய பேன்க் மூலமா கடன் வாங்குவோம் “ என்று கேஷவ் சொல்ல, “ நான் உங்க கூட இருக்கேன். நீங்க பெரிய ஆளா வரணும் “ என்று மைரா புன்னகையோடு சொன்னாள்.
கேஷவ் அவளை பார்த்து சிரிக்க, லயா விழித்துக் கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர். கேஷவ் லயாவை தூக்கி நெற்றியில் முத்தமிட்டான்.
“ ப்ரின்சஸ் அப்பா செம்ம பசியில இருக்கேன் ? உனக்கு பசிக்குதா ? “ என்று கேஷவ் கேட்டதும், லயா ஆம் என்று தலையை ஆட்டி தன் மூக்கைப் பிடுங்குவது போல் நடித்து அவனுக்கு உணவளிக்க நீட்டினாள். கேஷவ் உடனே மென்று விழுங்குவது போல் பாவனை செய்தான். லியா சிரித்துக் கொண்டே அவன் மூக்கைப் பிடுங்கி வாயில் போட்டு உதட்டைப் பிதுக்கினாள்.
“ அப்பாவுக்கு இன்னும் பசிக்குது, லயாவோட கன்னம் வேணும் “ என்று கேஷவ் சொன்னதும், லயா மறுத்து தலையை அசைத்து, உள்ளங்கைகளை கன்னங்களில் வைத்து சாப்பிடகூடாது என்று மறைத்தாள். கேஷவ் அவள் கைகளை விலக்கி லேசாக கடித்து விட்டு பதிலுக்கு லயாவின் நன்றாக கடி வாங்கினான்.
“ அம்மாவும், பொண்ணும் என் கன்னத்தில் கடிச்சு அடையாளம் கொடுக்க எப்பவும் தயாரா இருப்பீங்க “ என்று கேஷவ் சொன்னதும், “ நீங்க ரெண்டு பேரும் மூக்கையும் கன்னத்தையும் சாப்பிட்டு முடிச்சா நாம சாப்பிடலாம் “ என்றாள் மைரா.
கேஷவ் லயாவை தூக்கி கொண்டு உணவருந்துவதற்காக டைனிங் டேபிள் நோக்கி சென்றான்.
அவர்கள் ஆர்வமாக காத்திருந்த லயாவின் முதல் பிறந்த நாள் வந்தது.
பிறந்தநாளுக்கு முந்தைய இரவு கேஷவ் மற்றும் மைரா ஒரு கேக்கை தயார் செய்துவிட்டு அவர்கள் தூங்குவதற்கு முன்பு ஹால் மற்றும் படுக்கை அறையை பலூன்கள் மற்றும் பொம்மைகளால் அலங்கரித்தனர். அதிகாலையில் எழுந்து அவர்களுக்கு இடையில் தூங்கிக் கொண்டிருந்த லயா எப்போது எழுந்திருப்பாள் என்று காத்திருந்தனர். தூக்கத்தில் அவள் அசைவதை பார்த்த கேஷவும் மைராவும் அவள் கன்னங்களில் முத்தமிட்டனர்.
“ ஹேப்பி பர்த்டே ப்ரின்சஸ் “ என்று இருவரும் வாழ்த்த, லயா கண்களைக் கசக்கிக் கொண்டு உட்கார்ந்து, அறை முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி நின்றாள். கேஷவ் அவளைத் தூக்கி பலூன்களைப் பறிக்க அழைத்துச் சென்றான், சிறிது நேரம் விளையாடிய பிறகு அனைவரும் தயாராகி தங்கள் குடும்பம் குட்டி இளவரசிக்காக காத்திருந்த ஹாலுக்கு சென்றனர்.
அனைவரும் லயாவை வாழ்த்தி பரிசு மழை பொழிந்தனர். கேஷவ் கேக்கை லயாவின் முன் வைத்து அவளுக்கு கொஞ்சம் ஊட்டினான். ஒவ்வொருவராக அவளுக்கு ஊட்டிக் கொண்டிருக்க, உற்சாகமாக லயா கேக்கை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“ லயா, நீ அப்பாவுக்கு ஊட்ட மாட்டியா ? “ என்று கேஷவ் கேட்டதும், லயா தன் விரல்கள் நிறைய க்ரீம் மற்றும் கேக்கைக் காட்டினாள். கேஷவை தொடர்ந்து மைரா கொஞ்சம் சாப்பிட்டாள். லயா எழுந்து தள்ளாடியபடி நடக்க, கேஷவ் அவளைப் பிடித்துக் கொண்டதும் அவள் தன் கையால் அனைவருக்கும் ஊட்ட ஆரம்பித்தாள். வீட்டின் தளம் முழுவதும் கேக் மற்றும் கிரீம் நிரம்பியிருந்தது, அதைவிட லயாவின் முகம், கைகள் மற்றும் கால்கள் கேக்கால் பூசப்பட்டிருந்தன. க்ரிஷ் எல்லாவற்றையும் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தான்.
லயா ஒரு பெரிய கேக் துண்டை எடுத்துக்கொண்டு க்ரிஷைப் பார்த்தாள்.
“ அப்பா. “ என்று அவள் அழைத்ததும், “ நம்ம ப்ரின்சஸ் பாருங்க, அப்பா அவளுக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான் “ என்று சொல்லி க்ரிஷ் அவள் முன் குனிந்ததும் லயா கேக்கை க்ரிஷின் வாயிலும் முகத்திலும் தடவினாள்.
கேஷவ், மைரா மற்றும் லயா ஆகியோர் அவன் வாங்க முடிவு சேய்ந்த கம்பெனிக்கு சென்றனர். கேஷவ் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட்ட பின்னர் மைராவையும் லயாவையும் வீட்டில் இறக்கிவிட்டு, பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று நிறுவனத்தின் ஆவணங்களை பெயர் மாற்றத்துடன் பதிவு செய்தான். வீடு திரும்பியவன் புதிய தொடக்கத்திற்காக அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினான்.
“ நீ என்ன பெயர் செலெக்ட் பண்ணி இருக்க கேஷவ் ? லயாவா ? “ என்று மதன் கேட்க, “ இல்ல பா, KM சொல்யூஷன்ஸ் லிமிடெட் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.
“ KM, கேஷவ் மைரா ஆஹா சூப்பர் “ என்று நைனா சொன்னதும் குடும்பத்தினர் கேஷவ் மற்றும் மைராவை வாழ்த்தினர். மாலையில் மைரா லயாவை விசேஷமாக ஆர்டர் செய்யப்பட்ட வான நீல ப்ரின்சஸ் கவுன் அணிய வைத்து தயார் செய்தாள். லயாவை நகைகளாலும், கேஷவ் தனது இளவரசிக்காக வடிவமைத்த சிறிய தங்க கிரீடத்தாலும் அலங்கரித்தாள்.
மைராவும் கேஷவும் லயாவுக்கு பொருத்தமான உடையணிந்து பார்ட்டி ஹாலுக்கு சென்றனர். பார்ட்டி ஹால் முழுவதும் FROZEN திரைப்படம் சார்ந்த கருப்பொருளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை முழுவதுமாக பார்த்த லயா கைதட்டினாள்.
“ லயாவுக்கு இது புடிச்சு இருக்கு. கொஞ்ச நேரம் இவள தூங்க வெச்சு நல்ல வேல பண்ணி இருக்கோம் “ என்று மைரா சிரித்தாள்.
கேஷவும் மைராவும் கேக் வெட்டி லயாவுக்கும், ஆத்விக்கும் ஊட்டினார்கள். ராஜனும் மதனும் ஆத்விக் மற்றும் லயாவை தூக்கிக்கொண்டு பொம்மைகள், பலூன்களைப் பார்க்க, குழந்தைகள் அவர்களுடன் விளையாட உற்சாகமாக இருந்தனர். இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பிய போது லயா தூங்கிவிட்டாள். மைரா உடை மாற்றி வெதுவெதுப்பான துணியால் துடைத்து அவளை தொந்தரவு செய்யாமல் தூங்க வைத்தாள்.
கேஷவும், மைராவும் உடை மாற்றி கட்டிலில் அமர்ந்து லயாவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ இந்த உலகத்தோடு அழகான பொண்ணுங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன் போல “ என்று கேஷவ் சொல்ல, “ இந்த அழகான, ஹாட்டான மனுஷன் எனக்கு புருஷனா கிடைக்க நானும் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கேன் “ என்றாள் மைரா.
கேஷவ் அவள் கன்னத்தை மெல்ல முத்தமிட்டு பின்னர் அவள் கன்னத்தை பற்றி அவள் உதட்டை முத்தமிட்டான். இருவரும் மனநிறைவுடன் தங்கள் மகளை நோக்கி பார்வையை திருப்பினார்கள்.
***********************************
முன்னோட்டம்:
“ 25 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்ல, என் வாழ்க்கையில ஒரு தேவத வந்த நாள் இன்னைக்கு தான். இப்போ என்ன பாரு, நீ இப்போ என் மனைவி, என் லவ், என் குழந்தைகளோட அம்மா அப்புறம் என்னோட மிக பெரிய பலம் “
