ரோஷினி மற்றும் அவளது குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றான் க்ரிஷ். ரோஷினியை ப்ரொபோஸ் செய்த கணத்திலிருந்து நடக்கும் அனைத்தையும் தனது அறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாநம் க்ரிஷ். கதவு திறந்து உள்ளே நுழைந்த ரோஷினி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
“ என்ன யோசிக்குற க்ரிஷ் ? மாமாவும் அத்தையும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு நினைக்குறியா ? “ என்று அவள் கேட்டதும், “ ஏன் சம்மதிக்க மாட்டாங்க ? அது அவங்க தப்பில்லை ரோஷினி. நீ என்ன ப்ரொபோஸ் பண்ணதும் நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கணும். கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம்னு நீ சொல்லி இருந்தாலும் நான் உன்ன சமாதானப்படுத்தியிருக்கனும் அப்போ இன்னைக்கு இந்த மாதிரி பிரச்சன் வந்துருக்காது “ என்று சொல்லி க்ரிஷ் பெருமூச்சு விட்டான்.
“ மன்னிச்சிடு எல்லாம் என்னால தான் இப்படி கடக்குது ? “ என்று அவள் வருந்தியதும், “ நான் அப்படிச் சொல்லல. என் அப்பா, அம்மா என் மேல வருத்தமா இருக்காங்க. நான் அவங்கள காயப்படுத்துறேன்னு கஷ்டமா இருக்கு. அவங்க எனக்கு ஒரு பிரெண்ட் மாதிரி இருந்து எனக்கு எல்லா சுதந்திரமும் கொடுத்தாங்க. வசு அத்தையும், ராஜன் மாமாவும் என்ன அவங்க சொந்த மகன் மாதிரியே பார்த்தாங்க, மைரா… அவ என் பெஸ்ட் பிரெண்ட். அவ நம்ம முன்னாடி சிரிச்சா ஆனா அவளும் காயப்படுருக்கானு எனக்குத் தெரியும் “ என்று க்ரிஷ் கூறி மிகவும் வருந்தினான்.
“ அவங்க சீக்கிரம் நம்ம ரெண்டு பேரையும் ஏத்துக்குவாங்க க்ரிஷ். அப்பா ஒரு வாரம் கழிச்சு அத்தையோட பேசறேன்னு சொன்னாரு” என்று ரோஷினி சொன்னதும், “ இல்ல, அது தேவைப்படாது. கேஷவ் அண்ணா அவங்க கிட்ட பேசி அவங்கள சமாதானம் பண்ணி இருப்பாரு அதனால அம்மாவே போன் பண்ணி பேசுவாங்க. என் அம்மா, அப்பா, மாமா, அத்தை, கேஷவ் அண்ணா, மைரா எல்லாரும் ரொம்ப அன்பானவங்க, அவங்களுக்கு யார் மேலையும் காழ்ப்புணர்ச்சி இருக்காது “ என்று க்ரிஷ் தன் குடும்பத்தை சொல்லும் போதே ஒரு புன்னகை அவன் உதட்டில் தவழ்ந்து.
“ எங்களுக்கும் யார் மேலையும் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்ல க்ரிஷ். நீ என்ன ப்ரபோஸ் பண்ண அப்போ என்னோட அத்தையே எங்க எல்லாரையும் அவமானப்படுத்தினாங்க. அது நமக்கு ரொம்ப சந்தோஷமான நாளா இருந்துருக்கணும் ஆனா அத நாம கொண்டாட முடியல. “ என்று ரோஷினி விரக்தியுடன் அவனை பார்த்தாள். க்ரிஷ் உடனே அவள் கையை பிடித்து, “ நான் அப்படிச் சொல்லல ரோஷினி. நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன். மைரா கூட பேசாம என் வாழ்க்கையில ஒரு நாள் நான் இருந்ததில்ல ஆனா இன்னைக்கு நான் அவ கூட பேசவே இல்ல “ என்று சொன்னான் அப்போது அவன் கண்கள கலங்கியது.
“ அப்போ அவ கூட பேச வேண்டியது தானே “ என்று ரோஷினி சொல்ல, “ அவளோட மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கு, வேற யாருக்கும் போன் பண்ணி அவ கிட்ட பேச முடியாது “ என்று க்ரிஷ் வருத்தத்துடன் கூறினான்.
“ க்ரிஷ், உனக்கு பெங்களூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு நாம இங்கேயே செட்டில் ஆகிடலாமா? மாமாவும் அத்தையும் நம்மை ஏத்துக்குனதுக்கு அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் “ என்று ரோஷினி யோசனை சொன்னதும் க்ரிஷ் கோவமடைந்து, “ நிறுத்து ரோஷினி, நாம ஏற்கனவே பேசிட்டோம், நான் என் அப்பா அம்மாவையும், மைராவையும் விட்டுட்டு வர மாட்டேன். கண்டிப்பா என் அப்பா அம்மா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க, நாம அவங்க கூட ஒரே வீட்ல தான் செட்டில் ஆவோம் “ என்று உறுதியாக கூறினான்.
“ உன் ஆசை போல செய்யலாம் க்ரிஷ் ஆனா ஒரு நாள் மைரா கல்யாணம் ஆனதும் நீ அவளை விட்டு நிரந்தரமா போக வேண்டியிருக்கும், அதனால அவளை விட்டு விலகி இருக்கப் பழகு “ என்று ரோஷினி சொன்ன மறுகணம் க்ரிஷ் அவள் பிடியில் இருந்து கையை விடுவித்துக்கொண்டு எழுந்து அவளை விட்டு விலகினான்.
“ உண்ம கசக்க தான் செய்யும் க்ரிஷ் ஆனா இது யதார்த்தம். எல்லாரும் ஏன் உன் மேல இவ்ளோ கோவமா இருக்காங்கனு யோசிச்சியா ? அவங்க வெறுப்புக்கு ஒரே காரணம் நம்ம அவங்க கிட்ட நம்ம லவ் பத்தி சொல்லாதது தான்னு நினைக்குறியா ? “ என்று ரோஷினி கேட்க, “ வேற என்ன காரணம்? “ என்று க்ரிஷ் குழப்பத்துடன் அவளை கேட்டான்.
“ நீ லவ் பண்றனு யூகிச்சு அந்த பொண்ணோட பெயர மைரா கேட்டதா நீ சொன்னது ஞாபகம் இருக்கா ? “ என்று ரோஷினி கேட்டாள் அதற்கு க்ரிஷ், “ ஒரு வேளை அவ விளையாட்டா கேட்டு இருப்பா. அத பத்தி நாங்க சீரியஸா பேசல “ என்றான் க்ரிஷ். அவன் பதிலை கேட்டு சிரித்த ரோஷினி, “ நீ அப்பாவி க்ரிஷ். என்ன நம்பு, அவங்க எல்லாரும் நீ மைராவ கல்யாணம் பண்ணனும்னு தான் விரும்பினாங்க “ என்று கூறினாள்.
“ ஷட் அப் ரோஷினி. மறுபடியும் மைராவ பத்தி எதுவும் தப்பா பேசாத. மைராவுக்கும் உன்ன பிடிக்காது ஆனா அவ உன்ன பத்தி ஒரு முறை கூட மோசமா பேசினது இல்ல. நான் உன்ன ப்ரபோஸ் பண்ண அப்போ கூட அவ தான் முதல்ல நமக்கு வாழ்த்து சொன்னா “ என்று க்ரிஷ் பொறுமை இழந்து காத்த ஆரம்பித்தான்.
“ ஒரு நாள் அவ உன்ன லவ் பண்ணதும், நமக்கு எதிரா அத்த, மாமாவ திருப்பினதும் உனக்கு புரியும். என் வார்த்தைகள நம்பு க்ரிஷ், ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணோட நோக்கம் நல்லாவே தெரியும். அவ தான் நமக்கு எதிரா விளையாடுறானு நான் உறுதியா நம்புறேன் “ என்று ரோஷினி சொன்னதும், “ போய் தூங்குங்க மைரா “ என்றான் க்ரிஷ்.
தன் பெயரை விடுத்து மைராவின் பெயரை அவன் சொன்னதும் ஆத்திரம் அடைந்த ரோஷினி, “ நான் ரோஷினி “ என்று கத்தினாள். தான் செய்ததை உணர்ந்த க்ரிஷ், “ என்ன மன்னிச்சிடு. நீ என் மனச குழப்புற. போய் தூங்கு, காலைல பேசிக்கலாம். எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும், ப்ளீஸ் “ என்று கெஞ்சினான்.
ரோஷினி கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே சென்றதும், க்ரிஷ் தரையில் சரிந்து கட்டிலில் சாய்ந்து மைராவின் நம்பரை டயல் செய்தான், ஆனால் அது இன்னும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அர்ச்சனா வாங்கி கொடுத்த டிசைனர் சல்வார் அணிந்து மைராவும் நைனாவும் தயாரானார்கள். இருவரும் ஹாலை அடைந்ததும் மைரா தன் அம்மாவை அழைத்தாள். மைரா கூப்பிடும் சத்தம் கேட்டு ஓடி வந்த வசுந்த்ரா, அவள் அழகாக தயாராகி இருப்பதை கண்டு திகைத்து நின்றார்.
“ கடவுளே, அந்த ஜீன்ஸ், குர்த்தி, பின்னாடி இவ்ளோ நாள் இந்த அழக ஒளிச்சு வெச்சுருந்தியா ? நீங்க திரும்பி வர்றதுக்கு முன்னாடி நான் உங்கள் அலமாரியை சுத்தம் செய்றேன். இனி உனக்கு புடிச்ச டிரஸ் மட்டும் வாங்குவோம். நான் நிறைய ஷாப்பிங் செய்வேன், உனக்கு நிறைய மேட்சிங் நகை எல்லாம் வாங்குவேன் “ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
“ அம்மா, நாம அப்புறம் பண்ணலாம், ஆனா இப்போ எனக்கு என் மொபைல் வேணும். கெட்சப் பிரெண்ட் பேசின அப்புறம் நான் அத பார்க்கவே இல்ல, ப்ளீஸ் கொடுங்க “ என்று மைரா கேட்க, “ இப்ப எதுக்கு அது வேணும்? போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, மியூசிக் கெல்லு, உனக்கு புடிச்ச பாடகர்கள சந்திச்சு சந்தோஷமா வீட்டுக்கு திரும்பி வா “ என்றார் வசுந்தரா.
“ அம்மா ப்ளீஸ்.” என்று மைரா கெஞ்ச, “ உன் நம்பர மாத்தணும்னு நினைக்கிறேன் “ என்றார் வசுந்தரா. ஆனால் மைரா அதற்கு, “ குழந்தை மாதிரி பண்ணாதீங்க மா. க்ரிஷ் கிட்ட இருந்து எவ்ளோ நாள் நான் ஒளிஞ்சு இருக்க முடியும்னு நினைக்குறீங்க ? ஒரு நாள் அவன நான் சந்திச்சு தான் அகனும். அய்யோ கடவுளே, ஒரு நாள் இல்ல, நான் அவன தினமும் சந்திக்கணும். அதுவும் இப்போ ரோஷினி அவன் பக்கத்துல எப்பவும் இருப்பா. என்னால அவங்கள தவிர்க்க முடியாது “ என்று மைரா யதார்த்தத்தை பேசினாள்.
“ அவன் உனக்கு போன் என்ன பேசுவ ?” என்று மைரா கேட்க, “ இத்தன வருஷமா நான் அவன்கிட்ட பேசின மாதிரி தான் பேசுவேன். இப்ப என்னோட மொபைல கொடுங்க “ என்றாள் மைரா.
அவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த நைனா, “ மைரா சொல்றது சரி தான் அம்மா. அவ அவனை எதிர்கொள்ளட்டும், அப்போ தான் அவ சீக்கிரம் இதுல வெளிய வர முடியும். ஒளிஞ்சு இருக்குறது தீர்வா இருக்காது” என்று கூறினாள்.
பருப்பு ஜாடியில் மறைத்து வைத்திருந்த மொபைலை வசுந்த்ரா கொடுத்ததும் மைரா மொபைலை ஆன் செய்தாள், க்ரிஷ்ஷிடமிருந்து 57 மெசேஜ் மற்றும் 75 மிஸ்ட் கால் அறிவிப்பும் இருப்பதை பார்த்தாள். அவன திரும்ப அழைக்கலாமா என்று தயங்கினாள், ஆனால் அவள் முடிவு எடுக்கும் முன் அவளது மொபைல் அவனிடமிருந்து அழைப்புடன் ஒலிக்கத் தொடங்கியது.
மைரா திரையை நைனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் காட்டினாள். அழைப்பை நிராகரிக்குமாறு வசுந்த்ரா அவளிடம் கெஞ்சினாள், ஆனால் மைரா அதற்கு பதிலளித்து விலகிச் சென்றாள்.
“ கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் மைரா, ஒரு வழியா நீ உன் மொபைல சுவிட்ச் ஆன் பண்ணிட்ட. உனக்கு என்ன ஆச்சு மைரா? நேத்துல இருந்து நான் உன் கூட பேச முயற்சி பண்ணிட்டு இருக்கேன். என்ன மன்னிச்சிடு மைரா, தயவு செஞ்சு என் கூட பேசு. என் அப்பா, அம்மா மாதிரி நீயும் என்ன ஒதுக்காத “ என்று க்ரிஷ் கெஞ்சி வருந்தினான்.
“ க்ரிஷ் , கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, யாரும் உன்ன ஒதுக்கல “ என்று மைரா சொன்னாள் அதற்கு க்ரிஷ் உடனே, “ அப்போ ஏன் மொபைல ஆஃப் பண்ணி வெச்சுருந்த ?” என்று கேட்டான்.
“ நான் என் மொபைல அம்மாகிட்ட கொடுத்தேன், அவங்க தவறுதலா பருப்பு ஜாடியில வெச்சுட்டாங்க. இப்போ அவங்க அந்த ஜாடிய எடுக்கும் போது தான் அதுல மொபைல் இருக்குறத பார்த்தாங்க. நான் உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன் ஆனா அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்ட “ என்று மைரா சமாளித்தாள்.
“ நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மைரா. உன் கிட்ட இவ்வளவு நேரம் பேசாம ரொம்ப கஷ்டமா இருக்கு “ என்று க்ரிஷ் மெல்லிய குரலில் சொன்னதும், “ ஏய்! உன் வருங்கால மனைவி எங்க? என்ன ரொம்ப மிஸ் பண்ணி இப்போ அவ பார்வையில என்ன வில்லி ஆக்கிடாத. இப்போ நீ அவ கூட இருக்கணும், அவளுக்கு நேரம் ஒதுக்கு “ என்று மைரா எடுத்து சொன்னாள்.
“ நான் அவளுக்கு நேரம் கொடுப்பேன், ஆனா அதுக்காக என் குடும்பத்துக்கு நேரம் கொடுக்கக்கூடாதுனு அர்த்தம் இல்ல “ என்று க்ரிஷ் சொன்னதை கேட்டு மைரா அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழுங்கினாள். நைனா மைராவின் இன்னொரு கையைப் பிடித்து அவளை ஆறுதல் படுத்தினாள்.
“ மைரா, நான் உன்கிட்ட நிறைய பேசனும். உனக்கு என்கிட்ட கேட்க நிறைய கேள்வி இருக்கும்னு எனக்கு தெரியும். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல நான் தயாராக இருக்கேன். நான் உன்ன சந்திக்க விரும்புறேன் மைரா.” என்று க்ரிஷ் கெஞ்சினான் அதற்கு மைரா அவனிடம், “ க்ரிஷ், நீ ரோஷினிய ப்ரபோஸ் பண்ணி ஒரு நாள் தான் ஆகுது, அவ உன்னோட கொஞ்ச நேரம் செலவழிக்கணும்னு ஆசைப்படுவா. குறைந்த பட்சம் இப்போ யாருக்கும் பயந்து ஒளிஞ்சு இருக்காம அவ கூட இரு, நாம அப்புறம் பேசுவோம், bye “ என்று மைரா அவசரமாக கூறினாள்.
அவள் வார்த்தையில் இருந்த அவசரத்தை உணர்ந்து, “ எங்கேயாவது அவசரமாபோறியா ? கொஞ்ச நேரம் பேசலாமா மைரா? “ என்று கேட்டான் க்ரிஷ் அதற்கு அவள், “ க்ரிஷ் , நான் நைனா கூட வெளிய போறேன், அவ எனக்காக வெயிட் பண்றா “ என்று சொன்னாள்.
“ எங்க போற மைரா, நீ அதபத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே ? “ என்று க்ரிஷ் கேட்டதும், “ க்ரிஷ் , கடந்த ரெண்டு வருஷத்துல ரோஷினி கூட சேர்ந்து எத்தன படம் பார்த்த ? அத பத்தி என்கிட்டே சொல்லனும்னு தோணுச்சா ? “ என்று மைரா உடனே எதிர் கேள்வி கேட்டாள்.
“ மன்னிச்சிடு நான் அப்படி அர்த்தப்படுத்தல. சரி ப்ளீஸ் மன்னிச்சிடு “ என்று அவன் மீண்டும் மன்னிப்பு கேட்டதும், “ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல க்ரிஷ். கெட்சப் எனக்கு ஒரு இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தாருஅதுக்கு நானும் நைனாவும் கிளம்புறோம் “ என்று சொன்னாள் அதன் பிறகு சில நொடிகள் யோசித்தவள் “ அது மட்டும் இல்ல .. “ என்ற இழுத்தாள்.
மைரா என்ன செய்யப் போகிறாள் என்பதை அறிந்த நைனா அவளைத் தடுக்க முயன்றாள் ஆனால் மைரா கண்களை மூடிக்கொண்டு எல்லாம் சரியாக இருக்கும் என்று நைனாவுக்கு உறுதியளித்தாள்.
“ வேற என்ன மைரா ? நான் உடனே வந்து உன்ன பார்க்க முடியும் ஆனா கொஞ்சம் சமாதானம் ஆக என்ன ரெண்டு நாள் பெங்களூர்ல இருக்க சொல்லி கேஷவ் அண்ணா கண்டிப்பா சொல்லி எச்சரிக்க பண்ணி இருக்காரு “ என்று கூறினான் க்ரிஷ். அதற்கு மைரா, “ எனக்கு புரியுது, நீ 2 நாளுக்கு அப்புறம் திரும்பி வரும்போது அவங்க உனக்கு சாதகமா எல்லாத்தையும் செய்வாங்க. ஆனா நான் சொல்ல வந்தது வேற விஷயம். நான் நாளைக்கு நைனா, அப்பா, அம்மா கூட ஊட்டிக்கு போறேன். ஒரு மாசம் அங்க தங்கியிருப்பேன் “ என்று சொன்னாள்.
“ ஒரு மாசமா? மைரா, நீ என்ன சொலற? ஏன் ஒரு மாசம் போகணும் ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டான்.
“ கெட்சப் அவரோட பிரெண்ட் கிட்ட சொல்லி அவரோட ஸ்கூல்ல ஸ்டுடென்ட்ஸுக்கு ட்ரைனிங் தர வாய்ப்பு வாங்கி கொடுத்துருக்காரு. நான் அங்க தங்கி ஒரு மாசம் அவங்களுக்கு ட்ரைனிங் தர போறேன் “ என்று மைரா சொன்னதும், “ உன்ன நானா எப்படி சந்திக்குறது ? நீ சனி, ஞாயிற்றுக்கிழமையில வருவியா இல்ல நான் உன்ன சந்திக்க அங்க வரலாமா? “ என்று கேட்டான் க்ரிஷ்.
“ இல்ல க்ரிஷ், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் தங்க அனுமதி கொடுத்திருக்காங்க. நைனா கூட இந்த வேலையில் எனக்கு உதசொல்லிவிட்டாள் மைரா.
“ இல்லை மைரா, அது நடக்காது. நான் உன்ன பார்க்கனும். ப்ளீஸ் மைரா, எல்லாத்துக்கும் என்ன மன்னிச்சிடு ஆனா ப்ளீஸ் என்ன தண்டிக்காத “ என்று கெஞ்சினான் க்ரிஷ் அதற்கு மைரா உடனே, “ நான் உன்ன தண்டிக்கல க்ரிஷ், நான் என்னோட வேலையில முதல் அடி எடுத்து வைக்குறேன். தயவு செஞ்சு புரிஞ்சிக்க முயற்சி செய். நீ வேலை விஷயமா வெளியூர் போகும் போது நாம பேசுற மாதிரி தினமும் போன் பண்ணி பேசலாம் “ என்று சொன்னாள்.
மைராவின் வார்த்தையை கேட்டதும் க்ரிஷ் வெட்கப்பட்டான், பதிலுக்கு அவன் எதுவும் சொல்லவில்லை, அதனால் சரி என்று முணுமுணுத்தான். மைரா கூட அதைச் சொன்னதற்காக வருத்தப்பட்டாள், ஆனால் அவர்கள் எல்லா நேரத்திலும் ஒன்றாக இருக்க முடியாது, அவர்கள் முன்பு செய்ததைப் போல தினமும் சந்திக்க முடியாது என்ற தங்கள் வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்வது இருவருக்கும் நல்லது என்று உணர்ந்து, “ bye க்ரிஷ் “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
**********************************************
முன்னோட்டம்:
“ நானும் கேஷவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். நீங்க என்ன பார்த்துருக்க மாட்டீங்க ஆனா எனக்கு உங்கள நல்லா ஞாபகம் இருக்கு மைரா “

2 comments
[…] உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மைரா […]
[…] 12.உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் மைரா […]