Home Family30. இப்போ நான் உங்க மனைவி

30. இப்போ நான் உங்க மனைவி

by Siragugal Novels
20 views

அர்ச்சனாவும் ரோஷினியும் காலடி சத்தம் கேட்டு ஹாலை அடைந்து, மைராவும், கேஷவும் நிறைய ஷாப்பிங் பைகளுடன் உள்ளே நுழைவதைப் பார்த்தனர். அவர்களின் காரைப் பார்த்துக் கொண்டிருந்த வசுந்த்ராவும் அர்ச்சனாவின் வீட்டை அடைந்தார்.

“ எங்க கூட ஷாப்பிங் போகும் போது உனக்காக எதுவும் வாங்க மாட்ட ஆனா இன்னிக்கு அவன் பர்ஸை காலி பண்ணிட்ட மாதிரி தெரியுதே? “ என்று வசுந்தரா சொன்னதும், “ இல்ல, நான் எதையும் வாங்கல. கெட்சப் தான் எல்லாத்தையும் வாங்கினாரு. இந்த வைர மோதிரத்த பாருங்க, அவர் இதையும் வாங்கினாரு, ஆனா நான் தான் இத செலெக்ட் பண்ணேன் அதனால இதோட பெருமை என்ன தான் சேரும் “ என்று சொல்லி கேஷவின் கையைப் பிடித்து இழுத்து, பொறாமையில் எரிந்து கொண்டிருந்த ஒருவரைத் தவிர மகிழ்ச்சியாக இருந்த பெண்களிடம் தங்கள் மோதிரங்கள் இரண்டையும் காட்டினாள்.

“ நிச்சயமா நீ செலெக்ட் பண்ணது சூப்பரா இருக்கு “ என்று அர்ச்சனா சொல்ல, “ மதியம் சாப்பிட்டீங்களா? “ என்று வசுந்தரா கேட்டார்.

மைரா, கேஷவின் அருகில் இருந்து எழுந்து, ஒரு ஆடம்பரமான உணவகத்தில் மதிய உணவு மற்றும் அவர்கள் ஆர்டர் செய்த அனைத்து உணவுகள் மற்றும் இனிப்புகள் பற்றி சொல்லத் தொடங்கினாள். அதோடு அவர்கள் கிளிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்களையும் அவள் காட்டினாள்.

வசுந்தரர் அவர்களுக்கு திருஷ்டி எடுத்த பின்னர் வரவேற்புக்கு தயாராகும் முன் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதித்தார்.

மைரா தூக்கத்திலிருந்து எழுந்து கேஷவ்  யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் விழித்திருப்பதைப் பார்த்தவன், அழைப்பை துண்டித்து சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ இன்னும் ஒரு மணி நேரத்துல நாம கிளம்பணும் அம்மு, ரெடியா இரு. மாமாவும் அத்தையும் வந்து நம்ம ரிசப்ஷன் டிரஸ் கொடுத்துட்டு போனாங்க “ என்று கேஷவ் சொன்னதும், “ உங்களுக்கு பிடிச்சிருக்கா? “ என்று கேட்டாள் மைரா.

கேஷவ் ஆம் என்று சொன்னதும் இருவரும் விரைவாக தயாராகி திருமண மண்டபத்தை அடைந்தனர். அவர்கள் தயாராக தனி அறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விருந்தினர் வந்தவுடன் கேஷவ், மைராவின் அறையைத் தட்டினான். நைனா அதைத் திறந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள், அவன் வெறுமனே ஒரு தலையசைப்புடன் பதிலளித்தான்.

மைரா ஸ்டூலில் இருந்து எழுந்து நிற்க, அவளைப் பார்த்ததும் கேஷவ் உறைந்து போனான். மைரா ஒரு அழகான வெள்ளை மற்றும் நீல நிற டிசைனர் லெஹெங்காவை பொருத்தமான நகைகளுடன் அணிந்திருந்தாள். அவளது கூந்தல் மலர் பரூச்சுடன் மென்மையான அலைகளாக அலங்கரிக்கப்பட்டு அவள் மிகவும் அழகாக இருந்தாள், நைனா தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவனது மயக்கத்தை உடைத்தாள்.

“ நாம போகலாமா அம்மு ? “ என்று கேஷவ் கேட்டான் ஆனால் நைனா குறுக்கிட்டு, “ உங்க அம்முவோட அழக நீங்க பாராட்டுற  வரை இந்த ரூம் விட்டு உங்க அம்மு வர மாட்டா “ என்று சொன்னாள். உடனே மைரா முந்திக் கொண்டு, ‘ இல்ல, இல்ல.. அதலாம் ஒண்ணுமில்ல, நைனா நிறுத்து, ப்ளீஸ் “ என்று சொல்லிவிட்டு கேஷவை பார்த்து, “ கெட்சப் போகலாம். “ என்று சொல்லி அறையை விட்டு வெளியேறினாள்.

இருவரும் மேடையை நெருங்கியதும் கேஷவ் அவள் கையைப் பிடித்து அவள் காதுக்கு அருகில் கொஞ்சம் சாய்ந்து, “ நீ அழகா இருக்க அம்மு. என் இதயம் ஒரு துடிப்ப நிறுத்திடுச்சு “ என்று மெல்ல கிசுகிசுத்தான். மைரா உடனே, “ கெட்சப் இப்படி என்கூட சரசம் பண்றத நிறுத்துங்க இல்ல நானும் பதிலுக்கு செய்வேன் “ என்று சொன்னாள்.

“ சந்தோஷமா செய் “ என்று கேஷவ் சொன்னதும் மைரா மூச்சிரைக்க, கேஷவ் அவளது திறந்த வாய் எதிர்வினையை கண்டு சிரித்தான். அவள் தாடையை நிமிர்த்தி தன் கையைப் பிடிக்கும்படி சைகை செய்தான். மைரா அவனது உள்ளங்கையைப் பிடிக்க முயன்றாள், ஆனால் கேஷவ் அவர்கள் மேடையை நோக்கிச் செல்லும்போது அவர்களின் விரல்களை ஒன்றோடொன்று இணைத்துக் கொண்டான்.

மாற்றப்பட்ட மாப்பிள்ளை பற்றி சில கிசுகிசுக்கள் இருந்தாலும், குடும்பத்தில் யாரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. விருந்தினர் மணமக்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினர். பரிச்சயமான இரண்டு முகங்களைக் கண்ட மைரா, அவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த கேஷவைப் பார்த்தாள்.

வருண் மற்றும் ராகேஷ் தம்பதியினர் மணமக்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினர்.

“ மைரா, உங்க வாழ்க்கையில இவன் கெடச்சதுக்கு நீங்க ரொம்ப  அதிர்ஷ்டசாலி. இவன நல்லா பிடிச்சு வெச்சுக்கோங்க, எந்த காரணத்துக்காகவும் விடாந்தீங்க. உங்க வாழ்க்க எப்பவும் சந்தோஷமா இருக்கும் “ என்று ராகேஷ் சொன்னதை கேட்டு, “ “ உங்க ஃப்ரெண்டுக்கு ரொம்ப புகழ்ச்சி மழையா இருக்கே ? “ என்று சொன்னாள் மைரா. ஆனால் வருண் குறுக்கிட்டு, “ இல்ல, அவர் உண்மைய தான் சொல்றாரு “ என்று கூறினான்.

அவர்கள் மேலும் எதுவும் பேசுவதற்குள் கேஷவ் அவர்களை தடுத்து, “ சரி நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க, நாம அப்புறம் சந்திப்போம் “ என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தான். அவர்கள் மேடையில் இறங்கும் போது தங்கள் புன்னகையை தங்கள் உள்ளங்கைகளால் மறைத்தனர்.

கேஷவும், மைராவும் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர், க்ரிஷ்  வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதையும், யாருடனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதையும் மைரா கவனித்தாள். அது ரோஷினியோடு ஏதாவது சம்பந்தமாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்து புறக்கணித்தாள்.

அவர்கள் வீடு திரும்பிய போது அவர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். மைரா அறைக்குள் நுழைந்ததும், நகைகள் மற்றும் ஆடைகளை கழட்ட அவளுக்கு உதவ யாரையும் அழைக்கவில்லை என்று முகம் சுளித்தாள். பின்னர் சிறிது சிரமத்துடன் எல்லாவற்றையும் தானே கழற்றி இரவு உடை அணிந்து கட்டிலில் உட்கார்ந்து ஹெட் போர்டில் சாய்ந்து கால்களை அழுத்தினாள்.

கேஷவ் தண்ணீர் பாட்டிலுடன் அறைக்குள் நுழைந்து அதை அவளிடம் கொடுத்ததும் மைரா கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.

“ உன் காலுக்கு என்ன ஆச்சு ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் ரொம்ப களைப்பா இருக்கேன். ஷாப்பிங் போனது, அதுக்கு அப்புறம் ரிசப்ஷன் எல்லாம் சேர்ந்து கால் ரொம்ப வலிக்குது “ என்று முனகினாள் மைரா.

அவள் உள்ளங்காலைத் தொட்ட போது அது இப்போது முற்றிலும் சிவந்து போயிருந்தது, அவள் மிகுந்த வலியில் இருந்தாள். கேஷவ்  அவள் கால் அருகே அமர்ந்து மெதுவாக அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்தான். மைரா அவனது செயலால் அதிர்ச்சியாகி தன் கால்களை அகற்ற முயன்றாள், ஆனால் கேஷவ் அவள் கால்களைப் பிடிப்பதை நிறுத்தினான்.

“ கெட்சப், நீங்க என்ன செய்றீங்க ? ப்ளீஸ் என் கால்கள விடுங்க. நீங்க என் கால்கள தொடக் கூடாது “ என்று மைரா சொல்ல, “ அது ஏன்? நான் உன்ன பார்த்துகுறதா சொல்லி இருக்கேன். இப்போ நீ வலியில கஷட்ப்படும் போது நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன் “ என்று கூறினான் கேஷவ்.

“ நீங்க என்ன டாக்டரா? “ என்று மைரா கேட்க, “ உன் வலிய தணிக்க நான் டாக்டரா இருக்க வேண்டிய அவசியம் இல்ல அம்மு. இப்போ நைட் ஸ்டாண்ட் டிராவ திறந்து வலி நிவாரண ஜெல் இருக்கும் அத எடுத்து கொடு “ என்று கேஷவ் சொன்னான். அப்போது மைரா மீண்டும் தன் கால் விரல்களை மடக்கி நெளிந்தாள், ஆனால் கேஷவ்  கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். அவளிடமிருந்து ஜெல்லை வாங்கி அவள் உள்ளங்காலில் சிறிது கசக்கி அவளது வலியை போக்க மசாஜ் செய்து அழுத்த ஆரம்பித்தான்.

“ ஏன் இப்படி செய்றீங்க ? “ என்று மைரா கேட்க, “ நான் இத செய்றது முதல் முறை இல்ல அம்மு. நீ சின்ன வயசுல நிறைய விளையாடுவ, அப்புறம் சோர்வா இருக்கும் போது சோபாவுல உட்கார்ந்து வலிய குறைக்க இப்படி தான் கால் நீட்டுவ. நான் உனக்கு கால் அழுத்திவிடுவேன், நீயும் உடனே நிம்மதியா தூங்கிவிடுவ “ என்று கேஷவ் பழைய நினைவுகளை புன்னகையோடு கூறினான்.

“ ஆனா நான் இப்போ சின்ன பொண்ணு இல்ல. நான் வளர்ந்துட்டேன், இப்போ நான் உங்க மனைவி, அத மறந்துடாதீங்க “ என்று சொல்லி விளையாட்டாக உதட்டை சுளித்தாள். 

“ இப்ப நீ என் மனைவினு பதிவு பண்ணிட்ட அதனால் என் மனைவிக்கு நான் ஏதாவது பரிசு கொடுக்கலாமா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ என்ன பரிசு ? சாக்லேட் தானே? “ என்று உற்சாகமாக கேட்டாள் மைரா.

கேஷவ் ஒரு ஜோடி கொலுசுகளை எடுத்து அவள் காலில் அணிவிக்க சைகையில் அனுமதி கேட்டான். மைராவுக்கு வெட்கமாக இருந்தது, அவளுடைய கன்னங்கள் அவனது செயலுக்கு சிவந்தன. அவள் சரி என்று தலையை ஆட்ட, கேஷவ் அவள் கணுக்காலைச் சுற்றி கொலுசுகளைப் அணிவித்து அதில் இருந்த முத்துக்களை தட்டி ஒலி எழுப்பினான்.

மைரா அதை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்க அவன் ஒரு நகைப் பெட்டியை அவளிடம் கொடுத்தான். மைரா அதில் பட்டாம்பூச்சி டாலருடன் ஒரு அழகான செயினை கண்டாள்.

“ இது ரொம்ப அற்புதமா இருக்கு. ரொம்ப அழகா இருக்கு கெட்சப் “ என்று சொன்னவள், “ இது எனக்காகவா? “ என்று கேட்டாள்.

கேஷவ் அவளை முறைக்க, மைரா நாக்கைக் கடித்துக் கொண்டு ஸாரி என்று முணுமுணுத்துவிட்டு அதை கழுத்தில் அணிந்து கொண்டு அவனைப் பார்த்தாள்.

“ ரொம்ப அழகா இருக்கு அம்மு, என் பட்டாம்பூச்சிக்கு ஒரு பட்டாம்பூச்சி டாலர் “ என்று கேஷவ் சொன்னதும், “ என் பட்டாம்பூச்சிக்கு ஒரு பட்டாம்பூச்சி டாலர்…அய்யோ இப்போ என் வயித்துக்குள்ள நிறைய பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி இருக்கே. மைரா நீ இப்போ தூங்குறது நல்லது “ என்று மனதில் நினைத்தாள். 

அவள் தூங்கும் வரை கேஷவ்  அவள் உள்ளங்காலை வருடியபடி கால் விரல்களை அழுத்தினான். அவள் உறங்கிய பின்னர் அவள் அருகில் படுத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து மைரா அவனை நெருங்கி அவன் இடுப்பைச் சுற்றி தன் கையை சுற்றிக் கொண்டதும் அவன் உதடுகள் புன்னகையாக வளைந்து அவனும் உறங்கினான்.

அதிகாலையில் எழுந்த கேஷவ், மைரா தன் தோளில் தலை வைத்து அவன் இடுப்பில் கை வைத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“ என் அழகான அம்மு “ என்று சொல்லி அவள் நெற்றியை முத்தமிட்டவன், அவளது தூக்கத்தை கலைக்காமல், படுக்கையை விட்டு எழுந்து அன்றைய நாளுக்கு தயாரானான். மைரா கண் விழித்த போது கேஷவ்  அறையில் இல்லை என்றதும் கதவை பூட்டிவிட்டு வேகமாக சேலையில் தயாரானாள். கொலுசுகளின் வித்தியாசமான சத்தம் கேட்டு அனைவரும் மைராவின் பக்கம் திரும்பினர், கேஷவ் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“ மைரா, அது என்ன வித்தியாசமான கொலுசு சத்தம்?” என்று அர்ச்சனா கேட்டதும், “ அத்த, கெட்சப் எனக்கு இந்த கொலுசு, அப்புறம் பட்டாம்பூச்சி டாலர் கூட ஒரு செயின் கல்யாண பரிசா கொடுத்தாரு “ என்று கூறினாள் மைரா.

“ ரெண்டுமே ரொம்ப அழகா இருக்கு, இப்போ உன் கொலுசுல இருந்து வர சத்தம் இந்த வீட்டுக்கு ஒரு வித்தியாசமான அதிர்வ தருது. நான் தான் முதல்ல உனக்கு பரிசு கொடுத்துருக்கணும் ஆனா என் பையன் என்ன முந்திக்கிட்டான் “ என்று சொல்லிவிட்டு அர்ச்சனா தன் அறைக்கு செல்ல, மதன் கேஷவை ஒரு குறும்புச் சிரிப்புடன் பார்த்தார்.

“ உன் அம்மா தான் உனக்கு இங்க போட்டி கேஷவ். இப்போ அவ என்ன செய்றானு பாரு. எனக்கு இப்போ பார்க்க ஒரு அற்புதமான போட்டி இருக்கு “ என்று சொல்லி சிரித்தார். அதை கேட்டதும் காபி குடித்துக் கொண்டிருந்த கேஷவுக்கு புரை ஏறியது. மைரா அவன் தலையைத் தட்டிக் கொடுத்து, “ ஏன் அவசரப்படுறீங்க ? உங்க காபிய யாரும் எடுத்துட்டு போக மாட்டாங்க அதனால மெதுவா குடிங்க “ என்று கூறினாள்.

கேஷவ் அவளை பார்த்து புன்னகைக்க, மதன், க்ரிஷ்  மற்றும் ரோஷினி புதுமண தம்பதி அவர்களுக்குள் பேசிக் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்தனர். அர்ச்சனா ஒரு பெட்டியுடன் திரும்பி வந்து கேஷவ் அருகில் அமர்ந்து, மைராவை இழுத்து தன் அருகில் உட்கார வைத்தார். நிறைய நகைகள் இருந்த பெட்டியைத் திறந்து அதை மைராவிடம் கொடுத்தார்.

“ இத ஏன் எனக்கு குடுக்கறீங்க அத்தை? “ என்று மைரா கேட்க, “ முதல்ல என்ன அம்மான்னு கூப்பிடு அப்புறம் இந்த நகை எல்லாம் என் மூத்த மருமகளுக்காக பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். இப்போ நீ வந்துட்ட அதனால உனக்கு கொடுக்குறேன் “ என்று அர்ச்சனா புன்னகையோடு கூறினார்.

“ நீங்க ரொம்ப ஸ்வீட் ஆனா நான் எவ்ளோ அஜாக்கிரதையா இருப்பேன்னு உங்களுக்கே தெரியும் அதுவும் இல்லாம எனக்கு நகை போடுறது பிடிக்காது அதனால் இதெல்லாம் உங்க கிட்டயே இருக்கட்டும். தேவைப்பட்டா நான் உங்ககிட்ட இருந்து வாங்கிக்குறேன் “ என்று சொன்னாள் மைரா.

“ நீ ஒரு அதிசய பிறவி மைரா. இந்த உலகத்துல எந்த பொண்ணு நகை வேணாம்னு சொல்லுவா “ என்று அர்ச்சனா சொல்ல அதற்கு கேஷவ், “ நீங்க சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தா அவ உங்கள கட்டிப்பிடிச்சு முத்தம் மழை பொழிஞ்சு இருப்பா “ என்று சொல்லி கிண்டல் செய்தான்.

“ இதுவரை நீங்க எனக்கு ஒரு சாக்லேட் கூட வாங்கி கொடுக்கல அங்கிள் “ என்று மைரா அவனை முறைக்க, “ இன்னுமா அங்கிள் சொல்ற ? “ என்று கேட்டார் அர்ச்சனா.

“ அவர் நல்லவராக நடந்துக்குற வரை நான் அவர அப்படித்தான் கூப்பிடுவேன். ஒரு நல்ல மாமியாராக இருந்து எனக்கு சாக்லேட் வாங்கித் தரச் சொல்லுங்க இல்ல அதுவரை நான் சாப்பிட மாட்டேன் “ என்று சொல்லி அடம்பிடித்தாள். 

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த க்ரிஷ் எழுந்து தயக்கத்துடன் மைராவைப் பார்த்து, “ மைரா, நாம ஐஸ்கிரீம் பார்லருக்கு போயி உனக்கு சாக்லேட் வாங்கிட்டு வரலாமா ? நாம  வெளியே போய் ரொம்ப நாளாச்சு “ என்று கேட்டான்.

மைரா அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒரே மாதிரியான ரியாக்ஷனில் இருந்த அர்ச்சனாவையும் மதனையும் பார்த்தாள். அவள் அவனது வாய்ப்பை நிராகரிக்க விரும்பினாள், ஆனால் அப்படி  செய்ய தயங்கினாள், எனவே உதவி வேண்டி அவள் கேஷவைப் பார்த்தாள். அவனும் அவளைக் காப்பாற்ற பிறந்தவன் போல தனது பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து மைராவிடம் கொடுத்தான்.

“ இதோ அவளுக்கு சாக்லேட் கிடைச்சுடுச்சு. கேஷவ், நீ அவளுக்கு சாக்லேட் வாங்கி வெச்சுருந்தா, ஏன் கொடுக்கல ? அவ கேட்குற வர வெயிட் பண்ணிட்டு இருந்தியா ? “ என்று அர்ச்சனா கேட்க, “ அவ இப்போ தான் ரூம் விட்டு வெளிய வந்தா, வந்ததும் நீங்க பாச மழைய பொழிய ஆரம்பிச்சுட்டீங்க அதனால நீங்க முடிக்குர வர வெயிட் பண்ணேன் “ என்றான் கேஷவ்.

அனைத்தையும் பார்த்து கோவத்தில் கொதித்துக் கொண்டிருந்த ரோஷினி, “ அத்தை, எனக்கு க்ரிஷோட நிச்சயதார்த்தம் முடிஞ்சு  கிட்டத்தட்ட ஒரு வருஷமா இதே வீட்டுலதான் இருக்கேன், ஆனா ஒரு தடவை கூட எனக்கு எதுவும் கொடுக்கணும்னு நீங்க நினைச்சது இல்லையா ? ஆனா மைரா இங்க வந்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இவ்ளோ பாச மழை பொழியுறீங்க “ என்று அர்ச்சனாவிடம் கேட்டாள்.

“ நீ சொல்றது தப்பு ரோஷினி. என் ரெண்டாவது மருமகளுக்கும் இதே மாதிரி நகை பெட்டி வெச்சுருக்கேன் ஆனா உனக்கு இன்னும் கல்யாணம் அகல, அதுக்கு முன்னாடி நான் எப்படி கொடுக்க முடியும் ? உனக்கும், க்ரிஷுக்கும் கல்யாணம் ஆனா அடுத்த நாளே உன் பரிசு உன்கிட்ட வந்து சேரும். இத்தன மாசத்துல நான் உன்ன எந்த வேலையும் செய்ய விட்டது இல்ல, உன் மேல எந்த குறையும் சொன்னதும் இல்ல. உங்க ரெண்டு பேரையும் என் பொண்ணுங்களா தான் நான் பார்க்குறேன் “ என்று அர்ச்சனா சொன்னார்.

மைராவிடமிருந்து எந்த பதிலும் வராத போது க்ரிஷ் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேறினான். அலமாரியை ஒழுங்கமைக்க உதவி வேண்டுமா என்று அர்ச்சனா மைராவிடம் கேட்டார், ஆனால் அவள் மறுத்துவிட்டு எல்லாவற்றையும் தானே செய்வதாக சொல்லி தனது அறைக்குத் சென்றாள், கேஷவும் அவளுக்கு உதவினான்.

துணிகளை அலமாரியில் வைத்துக் கொண்டிருந்த மைரா, கேஷவ் ஏதோ சொன்னதை கேட்டு சட்டென்று அவனை பார்த்து, “ நீங்க ஏதாவது சொன்னீங்களா ? “ என்று கேட்டாள்.

“ நீ எங்கேயாச்சும் டூர் போக விரும்புறியானு கேட்டேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ டூர் பத்தி சொல்றீங்களா இல்ல ஹனிமூன் பத்தி சொல்றீங்களா ? “ என்றாள் மைரா கிண்டல் புன்னகையுடன்.

“ நீ இன்னும் ஹனிமூன் போக தயாராகலனு எனக்குத் தெரியும், நானும் உன்ன மாதிரி தான் ஆனா நாம புதுசா கல்யாணம் ஆனவங்க, இப்படி ஒரே ரூம்ல அடைஞ்சு இருக்கணும்னு அவசியம் இல்ல அதனால ஒரு ஒரு மாறுதலுக்கு நீ வெளிய போக விரும்பினா நாம ஒரு டூர் போக பிளான் பண்ணுவோம். சும்மா ஊர் சுத்தி பார்க்கலாம், ஒரு இடம் மாறுதலா இருக்கும் “ என்று கேஷவ் விளக்கம் சொன்னதும், “ என் கூட தனியா வெளிய போக உங்களுக்கு சம்மதமா ? “ என்று மைரா கேட்டாள்.

“ என்கூட போக உனக்கு சௌகரியமா இருக்குமா ? “ என்று கேஷவ் பதிலுக்கு கேட்டான்.

“ நீங்களும் உங்க கேள்வியும், இப்போ எனக்கு வேற வழி இருக்கா என்ன ? கண்டிப்பா உங்க கூட வர தயாரா தான் இருக்கேன். என் சித்ரவதைகளை நீங்க தாங்கிக்க வேண்டியிருக்கும் “ என்று மைரா பதில் சொன்னதும், “ எனக்கும் வேறு வழியில்ல, நீ எங்க போக விரும்புற ? “ என்று கேட்டான் கேஷவ்.

“ என் மனசுல எந்த குறிப்பிட்ட இடமும் இல்ல அதனால உங்க விருப்பப்படி போலாம் ஆனா நான் என்னோட வேலையை கொஞ்சம் முடிக்க வேண்டி இருக்கு. அதனால அடுத்த மாசம் போலாமா ? “ என்று கேட்டாள்.

“ சரி, நான் எல்லாத்தையும் பிளான் பண்றேன். இப்போ நான் கொஞ்சம் வேலை விஷயமா வெளிய போயிட்டு டின்னருக்கு வந்துடறேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா தலையை ஆட்டி அவன் வெளியேறுவதை பார்த்தாள்.

**********************************************

முன்னோட்டம்:

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 19, 2026 - 11:40 am

[…] 30.இப்போ நான் உங்க மனைவி […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!