மைரா தனது அம்மாவின் வீட்டிற்குள் நுழைந்ததும் வசுந்தராவும், ராஜனும் புன்னகையுடன் வரவேற்றனர்.
“ எங்களை மறந்துட்ட போல ? “ என்று வசுந்தரா சொல்ல, “ வழக்கமான அம்மாங்க மாதிரி சொல்றீங்க. உங்க பொண்ணு புருஷன் கூட வாழணும்னு சொல்லிட்டு இருந்தீங்க ஆனா இப்போ நான் அந்த வாழ்க்கைய வாழும் போது, நான் உங்கள மறந்துட்டனு புகார் சொல்றீங்க “ என்று கண்களை உருட்டினாள் மைரா.
“ நான் சும்மா கிண்டல் பண்ணேன். உன்னையும், கேஷவையும் பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க ரெண்டு பேரு மேலையும் யார் கண்ணும் பட கூடாது. இப்போ வா வேலைய தொடங்குவோம். ஒரு ரூம் முழுக்க உன்னோட பொருள் தான் நிரம்பி இருக்கு. தேவையில்லாத பொருள் எல்லாத்தையும் நீயே தூக்கி போடு இல்ல உன் வீட்டுக்கு எடுத்துட்டு போ “ என்று வசுந்தரா கூறினார்.
இருவரும் நைனாவின் குரலைக் கேட்டதும், மைரா அவளை கட்டிப்பிடித்துக் கொண்டாள். பின்னர் மூவரும் சேர்ந்து ஒரு அறைக்கு சென்றனர். அந்த அலங்கோலமான அறையைப் பார்த்து மைரா உறுமினாள். முதல் பெட்டியை வெளியே எடுத்தவள், அதில் கல்லூரி புத்தகங்களைப் பார்த்து அதை தன் அப்பாவிடம் பழைய புத்தகக் கடையில் விற்கச் சொன்னாள். அடுத்த பெட்டியில் அவளது பழைய துணிகள் இருந்தன, அதேபோல் அறையில் இருந்த பாதி பொருட்களை அவள் அப்புறப்படுத்தினாள்.
நைனா ஒரு பெரிய பெட்டியை சுட்டிக்காட்டியதும், அவர்கள் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்து அப்புறப்படுத்த வெளியே இழுத்தனர். அதில் தான் பள்ளியிலிருந்து பயன்படுத்திய பொருட்களைப் பார்த்து மைரா புன்னகைத்தாள். பல வரைபட வேலைப்பாடுகள் இருந்தன, அவற்றை ஒவ்வொன்றாக அகற்றியபோது அதன் அடியில் ஒரு அழகான காட்டேஜ் இருப்பதைக் பார்த்து மெல்ல அதை எடுத்து தரையில் வைத்தாள்.
“ இது உன் ஸ்கூல் கண்காட்சிக்காக க்ரிஷ் செஞ்ச ப்ராஜெக்ட் தானே? “ என்று வசுந்தரா கேட்க, “ ஆமா மா, நாம அன்னைக்கு நைட்டு சாப்பிட வெளியே போனோம் அப்புறம் நான் தூங்கிட்டேன் ஆனா அவன் எனக்காக இதை செஞ்சு கொடுத்தான் “ என்றாள் மைரா.
அந்த காட்டேஜை உற்றுப் பார்த்தவளின் முகத்தில் ஒரு குழப்பம் தோன்றியது. ஊட்டியில் தங்கியிருந்த போது எடுத்த படங்களை பார்க்க தனது மொபைலை எடுக்க மைரா ஹாலுக்கு விரைந்தாள். புகைப்படங்களை திறந்து பார்த்த மைரா, காட்டேஜ் முன்னால் அவள் நின்று கொண்டிருந்த போது நைனா எடுத்த படங்களில் ஒன்றை பார்த்தாள். அவர்கள் தங்கி இருந்த காட்டேஜ் பல வருடங்களுக்கு அவளது அறிவியல் கண்காட்சிக்கு செய்திருந்த மினியேச்சர் காட்டேஜ் போலவே இருந்தது. நைனாவும் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“ இது எப்படி சாத்தியம்? இது நிச்சயமா தற்செயலா இல்ல எதேற்சியா நடந்த மாதிரி இருக்க வாய்ப்பு இல்ல “ என்று மைரா சொல்ல, “ ஊஞ்சல், வாசல் கேட், சுவர் டிசைன் அதோட கலர் கூட அதே மாதிரி இருக்கு பாரு “ என்று நைனா அதிர்ச்சியோடு சொன்னாள்.
“ நைனா, நான் வீட்டுக்கு போறேன், க்ரிஷ் திரும்பி வந்துருப்பான், நான் அவன் கிட்ட இதபத்தி கேட்கணும் “ என்று சொல்லிவிட்டு, அந்த ப்ராஜெக்டை கையில் பிடித்துக்கொண்டு மைரா வீட்டுக்கு விரைந்தாள். க்ரிஷ் திரும்பி வந்து தனக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்தான்.
“ க்ரிஷ் “ என்று மைராமெல்ல அழைத்ததும், க்ரிஷ் அவள் குரல் கேட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“ மைரா, நீ வீட்ல தான் இருக்கியா? வேலைக்குப் போயிருப்பனு நினைச்சேன். சரி, நான் சமைச்சிட்டு இருக்கேன், முடிச்சதும் ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம். நான் அவ்ளோ நல்லா சமைக்க மாட்டேன் ஆதனால உனக்கு ஸ்பேசிலா வேணும்னா நான் ஆர்டர் பண்றேன் “ என்று சொன்னான் க்ரிஷ்.
ஆனால் அவன் சொன்ன எதற்கு பதில் சொல்லாமல், “ இந்த ப்ராஜெக்ட் நீ செஞ்சியா ? “ என்று மைரா நேரடியாக கேட்டாள்.
க்ரிஷ் வேலையை நிறுத்திவிட்டு அவள் கையில் இருந்த ப்ராஜெக்டை பார்த்தான். அவன் தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பிக் கொண்டதும், அது அவளுக்கு பதிலைக் கொடுத்தது, இருப்பினும் அவன் வார்த்தையால் பதில் சொல்வதற்காக காத்திருந்தாள்.
“ இல்ல “ என்று க்ரிஷ் முணுமுணுத்ததும், “ யார் இதைச் செஞ்சது ? “ என்று கேட்டாள்.
“ கேஷவ் அண்ணா தான் நைட்டு முழுக்க கண் முழிச்சு இந்த ப்ராஜெக்டை முடிச்சிட்டு, காலைல தூங்க போறதுக்கு முன்னாடி என் ரூம்ல வெச்சாரு “ என்று க்ரிஷ் சொன்னதும், மைரா தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தாள். அவள் அங்கிருந்து புறப்படத் தயாரானாள், ஆனால் நின்று, அவர்களின் பல வருட நட்பின் பொருட்டு குரலில் ஒரு சிறிய நம்பிக்கையுடன் அவனிடம், “ என்னோட மத்த ஸ்கூல் ப்ராஜெக்ட், டிராயிங் அதெல்லாம் யார் செஞ்சது ? “ என்று கேட்டாள்.
“ அந்த வேலை எல்லாம் செய்றதுல எனக்கு ஆர்வமும் இல்ல, செய்யவும் அவ்வளவா தெரியாது அதனால என்னோட வேலையும் சேர்த்து அண்ணா தான் செய்வாரு “ என்று க்ரிஷ் சொன்னதும், மைராவுக்கு அருவருப்பாக இருந்தது.
தன்னைத் தானே சபித்துக் கொண்டவள், மேற்கொண்டு விவாதத்திற்கு இடமளிக்காமல் வெளியேறினாள். தனது அம்மாவின் வீட்டை அடைந்ததும், நைனாவை தனது அறைக்கு இழுத்துச் சென்று கண்களில் கண்ணீருடன் படுக்கையில் அமர்ந்தாள்.
“ மைரா, அவன் என்ன சொன்னான்? “ என்று நைனா கேட்டதும், “ கெட்சப் எனக்காக இத பண்ணி இருக்காரு ஆனா க்ரிஷ் எனக்காக செஞ்சதா நெனச்சு அவன பாராட்டினேன். அவன் சொன்னது எல்லாமே பொய், நான் நெனச்சது எல்லாமே பொய்யா மாறிட்டு இருக்கு. நைனா எனக்குப் பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு, இவ்ளோ முட்டாளா இருந்துருக்கேன்னு என்மேல எனக்கே அவ்ளோ கோவம் வருது “ என்று சொல்லி மைரா விரக்தியடைந்தாள்.
“ அப்படி நினைக்காத மைரா. அவன் உன்கிட்ட பொய் சொன்னது உன் தப்பு இல்ல. நீ அவன உன் பெஸ்ட் ப்ரெண்டா நெனச்ச ஆனா அவன் உன்கிட்ட பொய் மட்டும் தான் சொல்லி இருக்கான். அதனால அவன புறக்கணிச்சு உன் புருஷன் மேல மட்டும் கவனம் செலுத்து, அவர புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகுது, உனக்கு குறஞ்சது 20 வருஷமா அவர தெரியும், நேத்து நைட்டு நீங்க ரெண்டு பேரும் கிஸ் பண்றத நான் பார்த்தேன். அது ஏதோ அந்த நேரத்துல ஒரு வேகத்துல நடந்த மாதிரி எனக்கு தெரியல “ என்று சொன்ன நைனா, “ அவர் உனக்கானவர்னு, உங்க வாழ்க்கைக்கு நீ ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு உனக்கு தோணலையா ? “ என்று கேட்டாள்.
“ ஆமா, கிடைக்குற ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் எனக்கு ஸ்பேசிலா மாத்துறாரு. ஒவ்வொரு நாளும் ஒரு புது நாளா, அவரோட புது பக்கத்த எனக்கு காட்டுறாரு. எங்க கல்யாண வாழ்க்கைக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்க அவர் எனக்கு எல்லா காரணுமும் கொடுத்து இருக்காரு. உண்மைய சொல்லனும்னா என்னையே அறியாம நான் ஏற்கனவே அத பண்ணிட்டு தான் இருக்கேன். நானும் ஒரு சாதாரண மனுஷி தான், மத்தவங்கள மாதிரி, என் வாழ்க்கையில் நானும் சந்தோஷமா இருக்க விரும்புறேன் ஆனா என்னால அத செய்ய முடியுமா? இல்ல நான் பேராசைப்படுறேனா ? அவருக்கு இப்படி ஒரு எண்ணம் இல்லனா என்ன செய்றது ? இன்னொரு முறை நான் மனசு உடைஞ்சு போற சூழ்நில வந்தா என்னால தாங்க முடியாது நைனா. என் மனசு ஒரு கண்ணாடி மாதிரி நெனச்சு அவர் என்ன தாங்குறாரு ஆனாலும் எனக்கு பயமா இருக்கு “ என்று சொன்ன போது மைராவின் குரல் நடுங்கியது. உடனே நைனா அவள் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டாள்.
“ உன் மனசு சொல்றத கேளு, அது நிச்சயமா உன்ன ஏமாத்தாது. இன்னும் சொல்ல போனா உன் கெட்சப் உன்ன ஏமாத்த மாட்டாரு. அவர என்ன செஞ்சாலும் நம்பு, சந்தோஷத்த நோக்கி போற வாழ்க்க பாதையில இருந்து பின்வாங்காத. அத எதிர்த்துப் போராடு, அப்புறம் இதெல்லாம் உன்னோட பேராசைனு நினைக்குறத நிறுத்து. அவர் ஒன்னும் உனக்கு அந்நியன் இல்ல மைரா, அவர் உன் புருஷன், ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழ ரெண்டு பேருக்கும் எல்லா உரிமையும் இருக்கு “ என்று சொன்னாள் நைனா.
“ இப்போ சொன்ன விஷயம் புதுசு இல்ல நைனா, இது எல்லாம் ஏற்கனவே என் மனசுக்கும், புத்திக்கும் நடுவுல நடக்குற போராட்டம் தான் “ என்று மைரா சொன்னதும் நைனா அவளை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
“ நீ அவர லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா இல்ல ஏற்கனவே உன் கெட்சப்ப லவ் பண்றியா ? ப்ளீஸ், கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது, இல்ல இவ்ளோ குறைஞ்ச நாள்ல லவ் வராதுனு சொல்லாத. பார்த்த உடனே லவ் வரும்னா ஒரு மாசத்துல தராளமா லவ் வரலாம் “ என்று நைனா கூறினாள்.
“ எனக்குத் தெரியல, எனக்கு அவர் மேல தோனுற இந்த உணர்வுக்கு நான் எந்தப் பெயரையும் வைக்க விரும்பல நைனா. அவர் கூட இருக்குற ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்புறேன், இது என் வாழ்க்கையில எப்பவும் வேணும்னு விரும்புறேன். சரி, நாம இதுக்கு மேல இத பத்தி பேச வேணாம் “ என்று மைரா சொன்னாள்.
“ சரி நாம இப்போ பேச வேணாம் ஆனா இதுல இருந்து நீ எப்பவும் ஓட முடியாது, ஒரு நாள் நாம இதைப் பத்தி பேசுவோம் “ என்று நைனா குறும்பு சிரிப்புடன் சொன்னாள்.
மைரா நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அருகிலிருந்த குட்டி காட்டேஜை பார்த்துப் புன்னகைத்தாள்.
“ ஆனா இந்த காட்டேஜ் எப்படி ஒரே மாதிரியா இருக்கு ? “ என்று மைரா கேட்க, “ உன் புருஷன் இல்ல ராகேஷ் சார் கிட்ட தான் இத பத்தி கேட்கணும் ஆனா உன் கெட்சப் கிட்ட கேளுனு தான் அன்ன சொல்லுவேன் “ என்று நைனா சொல்ல மைரா தலையை ஆட்டி புன்னகையுடன் காட்டேஜை தொட்டாள்.
நைனா வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பிறகு கேஷவ் திரும்பி வருவதற்காக மைரா ஹாலில் காத்திருந்தாள். ராஜன் ஒரு தின்பண்ட பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து அதை மைராவிடம் கொடுத்தார். அவள் எதையோ நினைத்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.
“ என்ன யோசிக்குற மைரா? எதாவது பிரச்சனையா ? “ என்று ராஜன் கேட்டதும், “ இல்ல பா, ஆனா எனக்கு உங்க உதவி வேணும் “ என்று சொன்னாள் மைரா.
“ என் பொண்ணுக்காக எதுவும் செய்வேன். நான் என்ன செய்யணும்னு சொல்லு? “ என்று ராஜன் கேட்டதும், “ நாளை மறுநாள் உங்க மாபிள்ளையோட பிறந்த நாள், அன்னைக்கு நீங்க அவர பிஸியா வெச்சுருக்கணும். 12 மணிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீட்டுக்கு வந்தா போதும். நான் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்றேன் “ என்று மைரா சொன்னதும், “ வேல முடிஞ்சுதுனு நெனச்சுக்கோ. ஷாப்பிங் செய்ய உனக்கு ஏதாவது உதவி வேணுமா ? “ என்று கேட்டார்.
“ இல்ல, அத நானே பார்த்துக்குறேன். நைனாவ என்கூட கூட்டிட்டு போறேன் “ என்று சொன்னாள் அப்போது கேஷவிடம் இருந்து அழைப்பு வந்ததும் அவள் உடனடியாக அதற்கு பதிலளித்தாள். 10 வினாடிகள் மட்டுமே பேசியவளின் மூக்கு கோவத்தில் சிவந்தது.
“ என்ன ஆச்சு ? “ என்று வசுந்தரா கேட்க, “ உங்க பையன் வீட்டுக்கு வந்துட்டாரு ஆனா என்ன கூட்டிட்டு போக வராம என்ன கிளம்பி வர சொல்லிட்டாரு. அவருக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? “ என்று மைரா சொன்னதை கேட்டதும், “ நீ என்னவோ பல கிலோமீட்டர் தள்ளி இருக்க மாதிரி பேசுற. சுவர் ஏறிக் குதிச்சா உன் வீட்டுக்கு போகலாம் அத விட்டுட்டு என் பையன பத்தி குறை சொல்லிட்டு இருக்க. போய் அவன பாரு, அவன் உன்ன மிஸ் பண்ணி இருப்பான் “ என்று வசுந்தரா அவள் சொன்ன வார்த்தையை அவளுக்கே சொல்லி கிண்டல் செய்தார்.
மைரா தன் அம்மா சொன்ன வார்த்தையை அப்படியே மிமிக்ரி செய்துவிட்டு வீட்டை நோக்கி ஓடினாள். அவள் கேஷவை பார்த்து சண்டையிட தயாராக தங்கள் அறைக்குள் நுழைந்தாள், ஆனால் அவனது காயமடைந்த கையைப் பார்த்ததும் அவளுடைய வார்த்தைகள் தொண்டையில் இறந்தன.
********************************
முன்னோட்டம்:
“ இப்படி புடவை கட்டி, உன்னோட இந்த அழகான இடுப்ப காட்டி இப்படி என் பொறுமையா சோதிக்குறது ரொம்ப மோசம் அம்மு “

1 comment
[…] 40.உன் கெட்சப்ப லவ் பண்றியா ? […]