Home Family47. வாழ்நாள் முழுக்க உன்ன நான் சுமப்பேன்

47. வாழ்நாள் முழுக்க உன்ன நான் சுமப்பேன்

by Siragugal Novels
17 views

அலாரம் ஒலிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்த மைரா சட்டென எழுந்து கேஷவின் பிடியில் இருந்து நகர்ந்தாள். அவள் அசைவை உணர்ந்து உடனே கண்களைத் திறந்து பார்த்தவன், அறையை விட்டு வெளியேறுவதற்காக அவள் தலைமுடியை சரி செய்வதைக் கண்டான்.

“ இப்ப எங்க கிளம்புற ? “ என்று கேஷவ் கேட்டதும், “ நான் ஒரு  இசை நிகழ்ச்சிய பார்க்க போறேன். நான் அத மிஸ் பண்ண கூடாதுன்னு அலாரம் வெச்சேன். நீங்க முகம் கழுவிட்டு கீழ வாங்க “ என்று சொல்லிவிட்டு மைரா வெளியேறியதும் கேஷவ் பாத்ரூமுக்குள் சென்றான்.

கீழே ஹாலில் ரோஷினி படம் பார்த்துக் கொண்டிருக்க, மைரா அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

“ ரோஷினி, ப்ளீஸ் கொஞ்சம் ரிமோட் கொடு. நான் ஒரு இசை நிகழ்ச்சியை பார்க்கனும். ஒரு மணி நேரம் தான், அதுக்கு அப்புறம் நான் கிளம்பிடுவேன் “ என்று மைரா பணிவோடு அவளிடம் கேட்டாள்.

“ அப்புறம் பாரு மைரா. படம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, நீயும் பாரு. இன்னைக்கு தான் ஓடிடியில் வெளியாகி இருக்கு. இத பார்க்க நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்று டிவியை பார்த்தபடி பதில் சொன்னாள் ரோஷினி.

“ ஓடிடியில இருந்தா அப்புறம் பார்க்கலாம் ரோஷினி “ என்று ,மைரா சொல்ல, ரோஷினி அதை பொருட்படுத்தாமல் படம் பார்த்துக் கொண்டே இருந்தாள். மியூசிக் ஷோவைப் பார்க்க மைரா மிகவும் ஆர்வமாக இருந்தாள், எனவே ரோஷினியுடன் நேரத்தை வீணடிக்கும் யோசனையை கைவிட்டாள்.

“ அர்ச்சனா மா, நான் அம்மாவ சந்திக்கப் போறேன், ஒரு மணி நேரம் கழிச்சு வரேன் “ என்று ஹாலில் இருந்தபடி கூறினாள். எல்லாவற்றையும் கவனித்த கேஷவ், ரோஷினியின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்ற வெறியை உணர்ந்தான், ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மைராவுடன் செல்ல முடிவு செய்தான்.

மைரா வெளியேற விரைவாக அடி எடுத்து வைத்தாள், ஆனால் கால் இடறி தரையில் விழுந்தாள்.

கேஷவின் இதயம் ஒரு நொடி நின்று அவளை நோக்கி விரைந்தான். மைராவின் அலறல் சத்தம் கேட்டு அர்ச்சனா தனது அறையை விட்டு வெளியே வந்து அவளிடம் ஓடி வந்தார். கேஷவ் அவளை அணைத்து சோபாவில் உட்கார வைத்தான்.

“ கெட்சப், என் கணுக்கால், கை வலிக்குது “ என்று மைரா வலியில் சொன்னாள், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கேஷவ் உடனடியாக அவளை தனது காரில் தூக்கி மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றான். வழியெங்கும் மைரா வலியில் முனகிக் கொண்டும், கண்ணீரை அடக்கிக் கொண்டும் இருந்தாள், ஏனென்றால் அவள் அழுவதைப் பார்க்க கேஷவ் வெறுத்தான்.

கேஷவ் அவளை மருத்துவமனைக்குள் தூக்கிச் சென்றான். அதிர்ஷ்டவசமாக அவளது கணுக்காலில் சுளுக்கு மற்றும் முழங்கையில் லேசான சிராய்ப்பு மட்டுமே இருந்தது. அவளுக்கு கணுக்காலில் பேண்டேஜ் கட்டப்பட்டு சிராய்ப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மற்றும் மருத்துவர் வலி நிவாரணியை பரிந்துரைத்தார். அவன் அவளை மீண்டும் காருக்கு அழைத்துச் சென்றான். கேஷவ் தாடையைக் கடித்துக் கொண்டிருப்பதை மைரா பார்த்தாள்.

“ கெட்சப் “ என்று மைரா அழைத்ததும், “ நாம வீட்டுக்கு போனதும் ஒரு நிமிஷம் கூட அவள வீட்ல இருக்க விட மாட்டேன். அளவுக்கு அதிகமா பொறுத்து போயிட்டோம், அவள வீட்ட விட்டு துரத்துறேன். க்ரிஷுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு எனக்கு தெரியும், அப்படியே இருந்தாலும் நான் அவனை சமாளிப்பேன். “ என்று கேஷவ் கொந்தளித்தான்.

“ நீங்க இப்படி எதுவும் செய்ய கூடாது கெட்சப். நான் கீழ விழுந்ததுல அவளோட தப்பு என்ன ? “ என்று மைரா கேட்க, “ நீ மரியாதையா ரிமோட் கேட்ட அப்போவே கொடுத்துருக்கலாம், அப்போ நீ வீட்ட விட்டு வசு அத்தை வீட்டுல ப்ரோக்ராம் பார்க்க போயிருக்க மாட்ட “ என்றான் கேஷவ்.

“ ப்ளீஸ் கெட்சப், கூட்டுக் குடும்பத்துல இது மாதிரி விஷயங்கள் சகஜம், நாம் இத ஊதிப் பெருசாக்க கூடாது. எனக்காக இந்த விஷயத்த இதோட விட்டுடுங்க “ என்று மைரா கெஞ்சியதும், கேஷவ் அவள் கன்னத்தை உள்ளங்கையில் பிடித்து இமைகளில் முத்தமிட்டான்.

“ இத காரணமா சொல்லி நம்ம டூர் பிளான் ரத்து செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன் “ என்று மைரா சொன்னதும், “ இந்த நிலையில உன்னால பயணம் பண்ண முடியுமா? யோசிபோம் அம்மு, ஒரு வாரம் கழிச்சு போகலாம் “ என்றான் கேஷவ்.

“ இல்ல, நாம இந்த வார போறதுக்காக எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம் அதனால ப்ளீஸ் ரத்து செய்ய வேண்டாம். நான் நல்லா இருப்பேன், எனக்கு நடக்க சிரமம் இருந்தா நீங்க இப்போ பண்ண மாதிரி என்ன தூக்கிட்டு நடக்க மாட்டீங்களா ? “ என்று கேட்டாள் மைரா. 

“ என் வாழ்நாள் முழுக்க உன்ன நான் சுமப்பேன் அம்மு ஆனா நீ இப்போ இருக்குறத விட அதிகமா காயப்படுறத நான் விரும்பல. இப்போ இருக்க நிலையில நீ நடந்தா காயம் இன்னும் மோசமாகும் “ என்று கேஷவ் கவலையோடு கூறினான் ஆனால் மைரா அவனிடம், “ ப்ளீஸ் கெட்சப், நான் நல்லா இருப்பேன். இப்படி செய்யாதீங்க கேஷவ் “ என்று அவன் பெயரை சொல்லி சமாதானம் செய்ய முயன்றாள்.

கேஷவ் புன்னகையுடன் அவளை நோக்கி திரும்ப, அவள் கண்களை அழகாக சிமிட்டி தன் யோசனையை வெளிப்படுத்தினாள். கேஷவ்  அவள் அருகில் குனிந்து அவள் உதடுகளை மென்மையாக முத்தமிட்டு பின்னர் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி காரை ஓட்டினான்.

“ நீங்க நான் சொன்னதுக்கு சம்மதிச்சதா நான் எடுத்துக்குறேன் “ என்று மைரா சொல்ல, அதற்கு கேஷவ் சரி என்று தலையை அசைத்தான்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் அவர்களின் பெற்றோரும் ரோஷினியும் தாழ்வாரத்தில் காத்திருந்தனர், காரைப் பார்த்தவுடன் அவர்கள் அதை நோக்கி விரைந்தனர். கேஷவ் கீழே இறங்கி அவளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான்.

கேஷவ் முஷ்டியை மடக்கி ரோஷினியை முறைப்பதை பார்த்த மைரா அவன் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி  தலையை அசைத்தாள்.

“ நீ ஏன் இன்னும் குழந்தை மாதிரி நடந்துக்குற ? ஏன் மனுஷங்க மாதிரி நடக்க மாட்டியா ? “ என்று வசுந்தரா சொன்னதும், “ அம்மா, இது ஒரு விபத்து, நான் மனுஷங்க மாதிரி நடக்கலையா ? இதுக்கு என்ன அர்த்தம் ? “ என்று கேட்டாள் மைரா.

“ அமைதியா இரு அம்மு, அவங்க உன்ன நெனச்சு  கவலைப்படுறாங்க “ என்று கேஷவ் அவளை அமைதிப்படுத்தினான்.

“ ஜாக்கிரதையா இரு மைரா, நீ வலியில இருக்கறத எங்களால பார்க்க முடியல, இன்னும் ரெண்டு நாள்ல நீங்க பயணிக்கப் போறீங்க.” என்று ராஜன் சொன்னதும், “ மாமா, அவ நல்லா இருக்கா. வெறும் சுளுக்கு தான், நாங்க கிளம்புறதுக்கு முன்னாடி  சரியாகிடும்.” என்றான் கேஷவ்.

அவன் சொனந்தை கேட்ட மைரா உடனே, “ ஆமா, எங்க போறோம்னு இன்னும் எனக்கு தெரியாது. அது ஒரு காடா இருந்து அங்க இருக்க மிருகங்கள் எங்கள உயிரோட விட்டா, நான் நிச்சயமா உங்க எல்லாருக்கும் சில காட்டு பூக்கள், மிருகங்களோட தோல், எலும்பு அப்புறம் கொம்பு கெடச்சா கொண்டு வருவேன் “ என்று கிண்டல் செய்தாள்.

“ நீ ரொம்ப பேசுற, வா நான் உன்ன ரூமுக்கு கூட்டிட்டு போறேன், நீ ரஸ்ட் எடுக்கணும் “ என்று சொல்லி கேஷவ் அவளை அறைக்கு அழைத்துச் செல்ல, அர்ச்சனாவும் வசுந்தராவும் மைராவுக்கு இரவு உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு சென்றனர். வசுந்த்ரா அவளுக்கு உணவளித்த போது, கேஷவ் தனது லேப்டாப்பில் ஏதோ பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தான்.

“ அவர் லேப்டாப்புல அப்படி என்ன வேலை செய்துட்டு இருக்காரு ? அவர் கிட்ட கேட்கலாமா ? இல்ல, அவர் சரியான நேரத்துல எனக்கு சொல்றதா சொல்லி இருக்காரு. நான் அதுவர வெயிட் பண்றேன் “ என்று மைரா மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

அர்ச்சனா மருந்துகள் கொடுத்த பிறகு அவரும் வசுதராவும் அறையை விட்டு வெளியேறினர். கேஷவ் அறையில் இரவு உணவை முடித்துவிட்டு மைராவின் அருகில் அமர்ந்ததும் அவள் உடனடியாக தனது தலையை அவன் மடியில் நகர்த்தினாள். கேஷவ் அவளது தலைமுடியை வருடத் தொடங்கி அவள் தூங்க அவள் கைகளை தட்டினான். அவனது அக்கறையை உணர்ந்த மைரா தூங்கிவிட்டாள், கேஷவ் தலையணையில் அவள் தலையை நகர்த்தி ஜன்னலை நோக்கி நகர்ந்தான். க்ரிஷ் காரை நிறுத்துவதைப் பார்த்ததும் கேஷவ் கதவைச் சாத்திவிட்டு வெளியே சென்றான்.

க்ரிஷ் அறைக்குள் நுழையும் முன் கேஷவ் அவனை தடுத்து நிறுத்தியதும் க்ரிஷ் அண்ணனைப் பார்த்து புன்னகைத்தான். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நடந்த அனைத்தையும் கேஷவ் அவனிடம் விளக்கினான். அதை கேட்டதும் கேஷவின் கண்களைப் பார்க்க வெட்கப்பட்ட க்ரிஷ் தலை குனிந்து நின்றான்.

“ எனக்கு உன் மேல கோபம் இல்ல க்ரிஷ் ஆனா உன்  வாழ்க்கைய நீ தான் முடிவு பண்ணணும்னு நினைக்குறேன்.  இது இப்படியே போக முடியாது. அவ உன் வாழ்க்கையில வேணும்னு நீ முடிவு பண்ணா அவள இங்க இருக்க சொல்லலாம் ஆனா உன்னோட முடிவு வேறையா இருந்தா அடுத்த நிமிஷமே என்னால அவள இங்க இருந்து அனுப்ப முடியும் “ என்று சொல்லி கேஷவ் அவன் தோளை தட்டிக்கொடுத்தான்.

“ நான் சீக்கிரம் ஒரு முடிவு எடுக்குறேன் அண்ணா. எக்காரணம் கொண்டும் அவ நம்ம குடும்பத்த காயப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். “ என்று சொல்லிவிட்டு ரோஷினியின் அறைக்கு சென்ற க்ரிஷ், அவள் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். சற்றும் யோசிக்காமல் அவளை அறைந்து படுக்கையின் தலைப்பகுதியில் கழுத்தை நெரித்தான்.

“ நான் உன்ன எதுவும் சொல்றது இல்ல, எதுவும் செய்றது இல்ல அதுக்காக நீ என் குடும்பத்த காயப்படுத்துறத நான் வேடிக்க பார்த்துட்டு இருப்பேன்னு அர்த்தம் இல்ல “ என்று சொல்லி க்ரிஷ்  அவளைத் தரையில் தள்ளினான். அவள் சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து கண்களில் கண்ணிர் சிந்தி இருமினாள்.

“ கடைசியா உன்ன எச்சரிக்கிறேன். உன் பொருட்கள பேக் பண்ணிட்டு எங்க வீட்ட விட்டு போ “ என்று க்ரிஷ் சீறினான்.

“ உன்னையும் உன் குடும்பத்தையும் என்னால என்ன செய்ய முடியும்னு நீ மறந்துட்டனு நினைக்குறேன் க்ரிஷ். உன்னால என்ன அவ்ளோ சுலபமா விரட்ட முடியாது. அப்புறம் நான் அவள காயப்படுத்தல. அந்த முட்டாள் பைத்தியக்காரி அவளாவே தான் விழுந்தா “ என்றாள் ரோஷினி.

“ அவள அப்படிக் கூப்பிடாத, ஜாக்கிரத. உன்னால போக முடியாதுனா அப்போ நீ போக என்ன செய்யணுமோ அத நான் செய்வேன். நீ வேணும்னு முடிவெடுத்து ஒருமுறை தப்பு பண்ணிட்டேன் ஆனா பண்ண தப்ப மறுபடியும் செய்ய நான் முட்டாள் இல்ல “ என்று கூறிவிட்டு க்ரிஷ் கிளம்புவதற்காக கதவைத் திறந்தான், ஆனால் நின்று அவள் பக்கம் மீண்டும் திரும்பினான்.

“ மைரா கிட்ட ஒரு நாளும் பிரச்சன பண்ணாத, அவ வழியில குறுக்கிடாத ஏன்னா, என்ன தவிர என் அண்ணன் அவரோட வாழ்க்கையில அதிகமா நேசிக்குற ஒருத்தி மைரா மட்டும் தான்.    அவர் கிட்ட வம்பு பண்ணா விளைவுகள் முடிவு மோசமா இருக்கும் “ என்று எச்சரித்துவிட்டு க்ரிஷ் வெளியே சென்றதும் ரோஷினி தனது இதயத்தை அமைதிப்படுத்த தண்ணீரைக் குடித்தாள்.

கேஷவ் மைராவின் அருகில் படுத்துக் கொண்டதும், அவன் இருப்பதை உணர்ந்த மைரா தன் தலையை அவன் தோளில் நகர்த்தி அவன் அடிவயிற்றில் தன் கையை வைத்து அணைத்துக் கொண்டாள்.

“ உன்கிட்ட ஏற்பட்டு இருக்க மாற்றங்களை என்னால பார்க்க முடியுது அம்மு. இந்த டூர் நமக்குள்ள எல்லாத்தையும் மாத்தும்னு நம்புறேன். அது மட்டும் இல்ல, நான் என் மனசுல இருக்குறத எல்லாம் சொல்ல முடியும்னு நம்புறேன் அம்மு “ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் தலைமுடியில் முத்தமிட்டான்.

********************

முன்னோட்டம்:

“ நமக்கு குழந்த இருக்க மாதிரி கனவு கண்டியா அம்மு ? நம்ம பொண்ணுக்கு ‘லயா’னு பெயர் வெச்சோமா ? நம்ம  இளவரசிக்கு ஒரு அழகான பெயர், ஆனா நீ ஏன் என்கிட்ட கனவு பத்தி சொல்ல மாட்டேங்குற ? “

 

You may also like

1 comment

காலம் கடந்து காத்திருந்தவனோடு காதல் – Siragugal novels April 16, 2026 - 9:44 am

[…] 47.வாழ்நாள் முழுக்க உன்ன நான் சுமப்பேன… […]

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!