Home Family79. நீ என்ன லவ் பண்றியா நைனா?

79. நீ என்ன லவ் பண்றியா நைனா?

by Siragugal Novels
14 views

கேஷவ் தனது மொபைலை எடுத்து ரோஷினியின் அப்பாவுக்கு ஸ்பீக்கர் கால் மூலம் டயல் செய்தான்.

“ மாமா வீட்டுக்கு போயிட்டீங்களா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஆமா கேஷவ், நாங்க சரியான நேரத்துக்கு வந்துட்டோம் “ என்று ரோஷினியின் அப்பா பதில் சொன்னார்.

“ நல்லது, உங்க பொண்ணு எப்படி இருக்கா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ அவ வருத்தமா இருக்கா ஆனா அவ காலப்போக்குல சரியாகிடுவா. கொஞ்ச நேரம் அவள தூங்க சொல்லி இருக்கேன் “ என்று ரோஷினியின் அப்பா பொய் சொல்லலி சமாளித்தார்.

“ அவளுக்கு வேலை ஏற்பாடு செய்யட்டுமானு கேட்க அவகிட்ட பேச நெனச்சேன் “ என்று கேஷவ் சொன்னதும், “ அது தேவையில்ல கேஷவ். கொஞ்ச நாள் அவ வீட்ல இருக்கட்டும். நான் அப்புறம் கூப்பிடறேன் “ என்று ரோஷினியின் அப்பா சொன்னதும் கேஷவ்  அழைப்பை துண்டித்து ரோஷினியின் தந்தை மொபைல் எண்ணை வருணுக்கு மெசேஜ் செய்து அதைக் கண்காணிக்க சொன்னான்.

வருண் ஆபீஸ் ரூமுக்கு சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தான்.

“ அவ அப்பா சென்னையில இருக்காரு. அவர் ஏர்போர்ட் பக்கத்துல இருக்க ஒரு ஹோட்டலுல தான் தங்கி இருக்காரு “ என்று வருண் சொன்னதும் கேஷவ் இன்ஸ்பெக்டரை பார்த்து, “ மிஸ்டர் ஆனந்த், அவங்கள கண்காணிக்க ஆளுங்களையும், ரோஷினிய கண்டுபிடிக்க ஒரு குழுவை அனுப்ப முடியுமா? “ என்று கேட்டான்.

“ கண்டிப்பா உடனே செய்றேன் “ என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, “ என் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேணும். இன்னும் கொஞ்ச நாள்ல என் தம்பி கல்யாண ரிசப்ஷன் இருக்கு அதுல எந்த பிரச்சனையும் வர கூடாது. உங்களுக்கு அதிகாரப்பூர்வமா ஆர்டர் தேவைப்பட்டா நான் கமிஷனர் கிட்ட பேசுறேன். ஆனா அவள புடிக்குற வரை இத எனக்காக தனிப்பட்ட முறையில நீங்க செய்யணும் “ என்று கேஷவ் அவரிடம் கேட்டுக்கொண்டான்.

“ நான் பார்த்துக்குறேன், ரோஷினிய பத்தி விவரங்களையும், ஆதாரங்களையும் தெரிஞ்சிக்க நான் உங்க அசிஸ்டன்ட் கிட்ட பேசுறேன் “ என்று இன்ஸ்பெக்டர் ஆனந்த் சொல்ல, கேஷவ் சரி என்று சொன்னான்.

இன்ஸ்பெக்டர் விடைபெற்று சென்றதும் க்ரிஷும், நைனாவும் கேஷவை கேள்வி கேட்க தயங்கியபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், க்ருஷ் தன் கேள்வியை கேட்டான்.

“ அண்ணா இன்ஸ்பெக்டர் ஏன் உங்கள சார்னு கூப்பிடுறாரு, நீங்க எப்படி போலீஸ் ஆபீசருக்கு ஆர்டர் கொடுக்க முடியும்? லேப்டாப் எப்படி உங்களுக்கு கிடைச்சது ? வருண் உங்கள ஏன் பாஸ் சொல்லி கூப்பிடுறாரு ? “ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான் க்ரிஷ்.

“ ஏன்னா அவர் என்னோட பாஸ், சி.பி.ஐ. துணை ஆணையர் “ என்று வருண் அவனுக்கு பதில் சொன்னான்.

கேஷவ் பற்றி வருண் சொன்னதை கேள்விப்பட்ட க்ரிஷும், நைனாவும் அதிர்ச்சியடைந்தனர். க்ரிஷ் பயத்தில் விழுங்கிவிட்டு இருக்கையின் விளிம்பில் அமர்ந்தான். நைனா அதிர்ச்சிக்கு அப்பால் இருந்தாள் ஆனால் மைரா எந்த எதிர்வினையும் இல்லாமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள்.

“ வருண், நீ கிளம்பலாம், அவள சீக்கிரம் கஸ்டடியில கொண்டு வரணும் “ என்று கேஷவ் உத்தரவிட்டதும், வருண் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். க்ரிஷும், நைனாவும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.

“ உங்க வேலையைப் பத்தி ஏன் சொல்லல? காலேஜ் முடிஞ்சு நீங்க சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனில நீங்க வேலை பார்க்குறீங்கன்னு நினைச்சோம் “ என்று க்ரிஷ் கேஷவிடம் கேட்டான்.

“ என்னோட வேலை காரணமா என் குடும்பம் ஆபத்துல இருக்குறத நான் விரும்பல. இப்போ நாம அடுத்த விசாரணைய தொடங்கலாமா ? நீங்க பண்ண பல விஷயங்களுக்கு என் மனைவிக்கு  விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கு “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு, க்ரிஷ் தன் கவனத்தை மைராவிடம் திருப்பினான்.

“ மைரா, ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு, அன்னைக்கு நான் கடைசியா சொன்னத தவிர எல்லாமே சத்தியமா உண்மை தான். நான் உன்ன தெரியாம நிறைய காயப்படுத்தி இருக்கேன் ஆனா இப்போ நான் என் தப்பு எல்லாத்தையும் உணர்ந்துட்டேன் அதுக்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்குறேன், ஸாரி “ என்று க்ரிஷ் கூறினான்.

“ நான் உன்ன மன்னிக்குறேன், ஆனா நீ பண்ணத நான் ஒருநாளும்  மறக்க மாட்டேன். நீ இந்த பிரச்சனைய வேற மாதிரி கையாண்டிருக்கலாம். உன்னோட ஈர்ப்பு, லவ், பொறாம இதனால நான் ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கனும் ? நான் யார் மேலையும் வெறுப்ப காட்டுற ஆள் இல்ல ஆனா நாம பழைய நாட்கள் மாதிரி  ஒரு நாளும் இருக்க முடியாது. நான் என் வாழ்க்கைய வாழுறேன், நீ வழியில வாழு “ என்று மைரா பதில் சொன்னாள்.

“ ப்ளீஸ் மைரா அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடு. இத்தன நாளா உன்ன இழந்ததுக்கு அழறத தவிர இவன் வேற ஒன்னும் செய்யல. க்ரிஷ் உண்மையாவே உன்ன மிஸ் பண்றான், உனக்காக தான் எல்லாத்தையும் செய்தான் “ என்று நைனா அவளிடம் கெஞ்சினாள்.

“ ஒரு விஷயத்த செய்றத விட சொல்றது ரொம்ப சுலபம் நைனா. சரி நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்குறேன். இப்போவாச்சும் உனக்கு என்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் ஏதாவது இருக்கா ? “ என்று மைரா கேட்டாள்.

“ இல்ல மைரா, நாங்க எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டோம் “ என்று நைனா உடனே பதில் சொன்னாள்.

“ உங்க கல்யாணம் பத்தி சொல்லுங்க ? ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? இந்த காதல் கதைய எல்லாம் என்கிட்ட  சொல்ல கூடாது ஏன்னா இப்போ என் திறமை என்னனு நீங்க யூகிச்சு இருப்பீங்க “ என்று கேஷவ் சற்று கோவமாக கேட்டான்.

“ நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணல. மைரா காணாம போன அன்னைக்கு நான் க்ரிஷ ஒரு பூங்காவுல பார்த்தேன். அவன் அழுதுட்டு இருந்தான். அப்புறம் அவன் கிட்ட என்ன ஆச்சுனு கேட்ட அப்போ தான் அவன் எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான். நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறேனு என் அப்பா,அம்மா கவலையா இருந்தாங்க. என் அம்மா அவங்க அண்ணன் பையன கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்ன கட்டாயப்படுத்துனாங்க. எல்லா பிரச்சினையையும் தீர்க்கவும், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யவும் நாங்க கல்யாணம் பண்ணிகிட்டோம் “ என்று நைனா உண்மையை கூறினாள்.

“ உன் மாமா பையன கல்யாணம் பண்ணிக்காம இருக்கவும், என்ன காப்பாத்தவும் தான் நீ இவன கல்யாணம் பண்ணியா ? நல்லது, உன்ன மாதிரி ஒரு friend கிடைச்சுதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வாழ்க்கையிலையும், கெட்சப் வாழ்க்கையிலையும் நடந்த ஒரு விஷயத்த சொல்றேன். நாங்க ரெண்டு பேரும் பல வருஷமா லவ் பண்ணிட்டு இருந்துருக்கோம் ஆனா எங்க முட்டாள்தனத்தால அத உணரத் தவறிட்டோம். இப்போ இத்தன வருஷத்துக்கு அப்புறம் நாங்க எங்க காதலை உணர்ந்து மனசு விட்டு பேசிட்டோம் “ என்று மைரா சொன்னாள்.

“ இதுவர நடந்தது நடந்ததாவே இருக்கட்டும், அது எதையும் மாத்த முடியாது. இதுவரைக்கும் நடந்ததும், நீங்க ரெண்டு பேரும் பண்ண எதுவும் உங்க நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அழிக்க விடாதீங்க. ஒரு உறவுல வெளிப்படைத்தன்மை ரொம்ப  தேவைப்படுது, அது மட்டும் இல்ல இந்த கல்யாணம், இந்த உறவோட அர்த்தம் என்னனு தெரிஞ்சி இருக்க அளவுக்கு உங்க ரெண்டு பேருக்கும் முதிர்ச்சி இருக்குனு நினைக்கிறேன் “ என்று கேஷவும் கூறினான்.

“ இப்போ நீ சொல்ல ஏதாவது இருக்கா ? யோசிச்சு பாரு, அதுவரைக்கும் நான் ஷிஷிமாரு பார்க்க போறேன். கெட்சப் நம்ம எல்லாருக்கும் டின்னர் ஆர்டர் செய்ய முடியுமா. வருண் என்ன இங்கு கூட்டிட்டு வர அவசரத்துல நான் சாப்பிடவே இல்ல. எனக்கு பசிக்குது “ என்று மைரா கூறினாள்.

மைரா கொல்லைப்புறம் செல்ல, கேஷவ் உணவு ஆர்டரை செய்தபடி அவளைப் பின்தொடர்ந்தான். சிஷிமாரு குரைத்து வாலை ஆட்டியபடி மைராவையும் கேஷவையும் பார்த்தது. மைரா அவனை தூக்கியதும் ஷிஷிமாரு அவள் முகத்தை நக்க ஆரம்பித்தான்.

கேஷவ் சுவரில் சாய்ந்து மைரா மற்றும் ஷிஷிமாருவின் தருணங்களை பதிவு செய்து கொண்டிருந்தான்.

“ கெட்சப், நம்ம வாழ்க்கைக்கு நான் ஒரு முடிவு எடுத்தா அதுல  உங்களுக்கு சம்மதமா ? “ என்று மைரா கேட்டதும்,

“ அம்மு, நம்ம வாழ்க்கை சம்மதமா முடிவு எடுக்க, தீர்மானிக்குற உரிமை உனக்கு இருக்கு. நான் கூட உன்கிட்ட சில விஷயங்கள பத்தி பேசணும் ஆனா நாம தனியா இருக்கும் போது அத பத்தி அப்புறம் பேசுவோம் “ என்று கேஷவ் அவளிடம் கூறினான்.

அவன் வார்த்தைகளை கேட்ட மைரா, “ தனியாவா? அந்த வக்கிர மனசுல என்ன ஓடுது கேஷவ் ? “ என்று கேட்டாள்.

“ இந்த முறை பெல்ட்டுக்கு பதிலா டை பயன்படுத்தலாமானு  யோசிக்குறேன். நீ என்ன சொல்ற ?” என்று கேட்டு கேஷவ் கண்ணடித்ததும், மைரா ஷிஷிமாருவை கூடையில் வைத்து விட்டு கேஷவிடம் சென்று அவன் கையை கிள்ளி முறைத்தாள்.

“ இதுக்கு அர்த்தம் உங்களுக்கு சம்மதமா மிஸஸ் கேஷவ்? “ என்று கேஷவ் அவனது ஹஸ்கி குரலில் கேட்க, “ உள்ள போய் உங்க  தம்பியும், என் உயிர் தோழியும் என்ன செய்றாங்கனு பார்ப்போம் “ என்றாள்.

க்ரிஷ் மற்றும் நைனாவுக்கு எதிரே கேஷவும், மைராவும் அமர்ந்திருந்தனர். கேஷவ் மைராவின் கையை தன் தொடையில் வைத்து அவள் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்தான்.

“ எல்லாத்தையும் சொல்லிட்டோம் அண்ணா “ என்று க்ரிஷ் சொன்னான்.

“ சரி எல்லாத்தையும் பேசியாச்சு, இப்போ உங்க கல்யாணத்த பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க ? நீங்க உங்க வசதிக்காக, ஆதாயத்துக்காக கல்யாணம் பண்ணி இருக்கலாம் ஆனா உங்க வாழ்நாள் முழுக்க இப்படியே இருக்க முடியாது. எல்லா வகையிலையும் உங்களுக்கு ஆதரவா இருக்க ஒரு துணை உங்க ரெண்டு பேருக்கும் வேணும் அதனால எதிர்காலத்த பத்தி என்ன முடிவு பண்ணி இருக்கீங்க “ என்று க்ரிஷ் அவர்களிடம் கேட்டான்.

“ நான் போதுமான அளவு கஷ்டப்பட்டுட்டேன், இப்போ நான் ஒரு உறவுக்கு தயாரா இல்ல, ஆனா நான் நைனாவ கைவிடுவேன்னு  அர்த்தம் இல்ல. காதல், நட்பு இந்த வார்த்தை எல்லாம் என் வாழ்க்கையில போதுமான சேதத்த ஏற்படுத்திடுச்சு, அதனால இந்த உறவுகளோட பெயர் சொல்லி நான் அவள கட்டி வைக்க தயாரா இல்ல, ஆனா அவ என் பொறுப்பு. அவ தயாரா இருந்தா இந்த கல்யாண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நான் தயாரா இருக்கேன் ஆனா எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும். நான் ரொம்ப உடைஞ்சு போய் இருக்கேன். இன்னும் உண்மைய சொல்லனும்னா என்ன குணப்படுத்த எனக்கு உதவி தேவை, அதனால அவளோட விருப்பம் என்னவா இருந்தாலும் அத மதிச்சு சம்மதிப்பேன் “ என்று க்ரிஷ் தனது நிலைப்பாட்டை கூறினான்.

“ நான் உன்கிட்ட ரொம்ப வெளிப்படையா இருந்தேன் நைனா. நான் எல்லாத்தையும் உன்கிட்ட தான் சொல்லி இருக்கேன். கடந்த காலத்துல நான் நினைச்சது எல்லாமே வெறும் மாயை தான் அத உனக்கு நினைவுப்படுத்த விரும்புறேன். ஆரம்பத்துல இருந்தே நான் லவ் பண்ணது கெட்சப் தான். என் மனசுல இருக்குறத லேட் பண்ணாம சொல்ல சொல்லி நீ தான் எனக்கு அறிவுரை சொன்ன ? நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை நைனா, அப்புறம் வருத்தப்பட வேணாம். நீ இப்பவே லேட் பண்ணிட்டனு நான் நினைக்குறேன். உன் வாழ்க்கையில நான் ஏற்படுத்தின சேதத்துக்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன். என்ன மன்னிச்சிடு “ என்று மைரா உருக்கமாக சொன்னாள்.

“ கல்யாணம் ஆகி பல வருஷதுக்கு அப்புறம் நல்ல அனுபவம் அப்புறம் போதுமான முதிர்ச்சி இருக்கவங்க கூட இப்போலாம் நிலையான கல்யாண வாழ்க்கைய வாழுறது இல்ல. பல புருஷன், பொண்டாட்டி பிரிஞ்சு போறத நாம பார்க்குறோம். அப்போ நீங்க மூணு உங்க எதிர்காலத்த தீர்மானிக்குற அளவுக்கு பக்குவம் இல்லாத சின்ன பசங்களா தான் இருந்தீங்க. ஸ்கூல், காலேஜ்ல படிக்கும் போது நிறைய பேருக்கு ஈர்ப்பு எற்படுறது சகஜம் தான். ஆனா, மைரா, நைனா, நீங்க ரெண்டு பேரும் உங்க உணர்வுகள அந்த நபர் மேல திணிக்காம, உங்கள நீங்களே காயப்படுத்திக்குற  அளவுக்கு பக்குவத்தோட இருந்துருக்கீங்க. கால தாமதமா இருந்தாலும் இப்போ உங்க எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு. இங்க யாரும் யாரையும் காயப்படுத்தல, யாரோட  உணர்வுகளையும் புண்படுத்துல. எல்லாமே சரியா நடக்குது. உங்க நட்பு பத்தி வெறுக்குறத நிறுத்துங்க. உங்க நட்பு உண்மையானது, நீங்க எல்லாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறையா இருந்துருக்கீங்க, அத எப்பவும் சந்தேகப்பட வேணாம் “ என்று கேஷவ் அவர்களுக்கு புரிய வைத்தான்.

ஆனால் நைனா மட்டும் அவன் வார்த்தையின் முழு அர்த்தத்தை புரிந்து கொண்டு, “ என் மொபைலை ஹேக் பண்ணீங்களா ? “ என்று கேட்டாள்.

“ அப்படி பண்ணதுக்கு நான் கொஞ்சம் கூட வருத்தப்படல. அது என்னோட வேல அதன் மூலமா உன்ன பத்தி எல்லாமே தெரிஞ்சிகிட்டேன் “ என்று கேஷவ் பதில் சொன்னான்.

அவர்களின் உரையாடலை கேட்டு குழப்பமடைந்த க்ரிஷ், “ என்ன நைனா? இந்த கண்ணாமூச்சி விளையாட்டாலா இனி எந்த பிரச்சனையும் வேண்டாம். நாம எல்லாரும் இந்த வாழ்க்கைக்கு போதுமான அளவு கஷ்டப்பட்டுட்டோம். என்னனு சொல்லு “ என்று நைனாவிடம் கேட்டான்.

“ அது கடந்த காலத்துல நடந்த விஷயம் க்ரிஷ். எனக்கு உன் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு, இல்ல இல்ல .. எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் ஆனா மைரா உன்ன லவ் பண்றது தெரிஞ்சதும் நான் மனச மாத்திக்கிட்டேன். அப்புறம் மைரா அவளோட வாழ்க்கையில கஷ்டப்பட்ட அப்போ நான் உன்னை வெறுக்க ஆரம்பிச்சேன், ஆனா உன் அண்ணா அவள கல்யாணம் பண்ண அப்புறம் மைரா சந்தோஷமா இருக்கனும்னு நான் விரும்பினேன் அதனால உன் மேல இருந்த எல்லா வெறுப்பையும் விட்டுட்டேன். கொஞ்ச நாள் அப்புறம் தான் மைரா அவளோட உண்மையான லவ் பத்தி உணர ஆரம்பிச்சா. அவ என்கிட்ட எதையும் மறைக்க மாட்டா ஆனா அது என் வாழ்க்கையில எதையும் மாத்தல ஏன்னா உனக்கும் ரோஷினிக்கும் ஏற்கனவே நிச்சயம் ஆயிடுச்சு “ என்று சொல்லி நைனா பெருமூச்சு விட்டாள்.

“ உன் அப்பா, அம்மா உனக்கு ஏற்பாடு பண்ண மாப்பிள்ள யாரையும் கல்யாணம் பண்ண நீ ஏன் சம்மதிக்கல? “ என்று மைரா கேட்டாள் ஆனால் கேஷவ் குறுக்கிட்டு, “ இத பத்தி நீங்க தனியா பேசுங்க அது தான் சரியா இருக்கும் “ என்று சொல்லி மைராவின் கையைப் பிடித்துக் கொண்டான். அவர்கள் இருவரும் ஆபீஸ் ரூமுக்குள்  நுழைந்தனர். நைனா தன் விரல்களை கசக்கி தடுமாறிக் கொண்டிருந்தாள், அவள் இதுவரை சொன்ன வார்த்தைகளைக் கேட்ட க்ரிஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்தான்.

“ நீ ஏன் அந்த மாப்பிள்ளை யாரையும் வேணாம்னு சொன்ன ? “ என்று க்ரிஷ் மெல்லிய குரலில் கேட்டான்.

“ நான் பல வருஷத்துக்கு முன்னாடியே உன்ன மறந்துட்டேன், உன் மேல எனக்கு எந்த உணர்வும் இல்லனு நெனச்சேன் நான் அது தப்புனு புரிஞ்சிகிட்டேன். பல வருஷம் அப்றமும் விதி மைராவையும் உன் அண்ணனையும் ஒன்னு சேர்த்த மாதிரி என்  விதி என்ன உன் கிட்ட கொண்டு வந்துடுச்சு. இப்போ நான் சொன்னதுக்காக உன்ன இந்த கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறேன்னு அர்த்தம் இல்ல. அதே மாதிரி நீ சிக்கலான சூழ்நிலையில் இருந்த அப்போ நான் உன்ன பயன்படுத்தினேன்னு  அர்த்தம் இல்ல. பிரச்சனைய சரி செய்யவும், மைராவ காப்பாத்தவும்  மட்டும் தான் நான் உன்ன கல்யாணம் பண்ண சம்மதிச்சேன் அதனால நான் இப்போ சொன்னத எல்லாம் மறந்துடு, உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் நான் ஏத்துக்குறேன் “ என்று நைனா கூறினாள்.

அவள் சொன்னதை கேட்டு திகைத்து போன க்ரிஷ், “ நீ என்ன லவ் பண்றியா நைனா? நான் ஒரு நல்ல மனுஷன் இல்ல, நான் நம்ம எல்லாரோட வாழ்க்கையிலையும் பிரச்சினைய மட்டும் தான் ஏற்படுத்தி இருக்கேன். என் மேல பாசம் வெச்சுருந்த எல்லாரையும் நான் காயப்படுத்தி இருக்கேன் “ என்று அவளிடம் சொல்லி கண்ணீர் சிந்தினான்.

“ காதல் நல்லது, கெட்டது பார்க்காது, நம்ம புத்தி யார வேணாம்னு சொல்லுதோ அவங்க மேல தான் நம்ம மனசு பைத்தியமா இருக்கும். நீ இவ்ளோ பிரச்சனைய ஏற்படுத்தி எல்லாரையும்  காயப்படுத்துனது எல்லாம் உண்மை தான் ஆனா எல்லாத்துக்கும் மேல உனக்கும், மைராவுக்கும் நடுவுல இருந்த நட்பு எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. உனக்கு அவ வேற யார் கூட பேசுனாலும் புடிக்காது, பொறாமைப்படுவ ஆனா அதுக்கு பின்னால ஒரு உண்மையான அக்கறை இருந்துச்சு, அதனால தான் மைராவால கூட உன்ன முழுசா வெறுக்க முடியல. அது மட்டும் இல்ல நீ அவகிட்ட நடந்துகிட்டதுக்கு காரணம் தெரிஞ்சிக்க விரும்பினா. உன் ப்ரெண்ட் மேல இவ்ளோ அக்கறையா இருக்கும் போது, நீ நிச்சயமா உன் மனைவி மேல நிறைய அக்கறையா, பாசமா, காதலா இருப்பனு நான் நம்புறேன். நீ அவள நல்லா பார்த்துக்குவ, இந்த உலகத்துல இருக்க எல்லாத்தையும் விட நீ அவள லவ் பண்ணுவ “ என்று நைனா உருக்கமாக சொன்னதும், க்ரிஷ் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நைனாவின் கையைப் பிடித்தான்.

“ ஸாரி, நான் காயப்படுத்தாத ஒரே ஆள் நீ தான்னு நெனச்சேன் ஆனா இப்போ நான் அதிகமா காயப்படுத்தி இருக்குறது உன்ன தான்னு புரியுது “ என்று க்ரிஷ் சொல்ல, “இல்ல, எனக்கு உன்ன புடிக்கும்னு யார் கிட்டயும் சொன்னதே இல்ல. இப்பவும் கூட உன் அண்ணன் என் மொபைல ஹேக் பண்ணதால அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு “ என்றாள் நைனா.

“ நான் இன்னைக்கு எப்படி பட்டவனா இருக்கேன்னு உனக்குத் தெரியுமா? நான்.. நான் துண்டு துண்டா மனசு உடைஞ்சு போய் இருக்கேன் நைனா. நானும் உன்ன விரும்ப ஆரம்பிச்சாலும் நான் காயப்படுத்த மட்டும் தான் செய்வேன். என் மேலையும், என் வாழ்க்க மேலையும் நான் மொத்தமா நம்பிக்கை இழந்துவிட்டேன். “ என்று க்ரிஷ் மெல்லிய குரலில் சொன்னான்.

“ உன்ன மறுபடியும் பழைய மாதிரி நான் மாத்துறேன், உன்ன புதுப்பிக்குறேன் க்ரிஷ் “ என்று நைனா சொல்ல, அதை கேட்ட க்ரிஷ், “ மறுபடியும் நான் தோற்று போயிட்டா என்ன செய்றது ? உன் வாழ்க்கைய அழிச்சதுக்கு என்ன நான் ஒரு நாளும் மண்ணிக்க மாட்டேன் “ என்று சொன்னான்.

“ எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, நாம புதுசா ஆரம்பிக்கலாம், மெதுவா குணமடைவோம், கொஞ்சம் கொஞ்சமா நம்ம உறவுல முன்னேறுவோம், எதிர்காலத்த ஒன்னா உருவாக்குவோம், வாழ்க்கைய சிறப்பா அமைக்கலாம் “ என்று நைனா அவனுக்கு உறுதியளிக்க, “ நான் ஒரு நல்ல மனுஷனா மாறுவேன்னு நீ என்ன நம்புறியா ? “ என்று கேட்டான்.

“ நீ இப்ப நல்ல மனுஷனா இல்லனு நினைக்குறியா ? நீ மரணத்த பத்தி பயப்படாம, உன்ன சுத்தி இருக்கவங்கள பாதுக்காக்க சாகக் கூட தயாரா இருக்குறதா சொன்ன நிமிஷத்துல நீ நல்ல மனுஷனா மாறிட்ட அதனால நான் உன்ன நம்புறேன், உனக்கும் என் மேல நம்பிக்க இருந்தா நமக்கு ஒரு வாய்ப்பு கொடு, இல்லனா நான் கட்டாயப்படுத்த மாட்டேன், நாம பிரிஞ்சிடலாம் “ என்று நைனா அவனிடம் எடுத்து சொன்னாள்.

“ நான் உன்ன விட்டு போனா உன் வாழ்க்கையில நீ வேற ஒருத்தர கல்யாணம் பண்ணி வாழுவியா ? “ என்று க்ரிஷ் கேட்க, “ என்னால அத பண்ண முடிஞ்சு இருந்தா நான் அத ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே பண்ணி இருப்பேன் ஆனா விதி என் தலையில வேற எழுதி இருக்குனு எனக்கு புரியுது “ என்றாள் நைனா.

“ உனக்கும், உன்னோட காதலுக்கும் நான் தகுதியானவனா நான்  மாற எனக்கு அவகாசம் வேணும், அது வர வெயிட் பண்ணுவியா ? “ என்று க்ரிஷ் அவளிடம் கேட்டான்.

“ அப்போ நீயும் உன் முயற்சிய கைவிடமாட்டனு எனக்கு சத்தியம் செய் “ என்று நைனாவிடம் பதிலுக்கு கேட்டதும், “ சத்தியமா முயற்சி பண்றத நிறுத்த மாட்டேன், ப்ளீஸ் எனக்கு உதவி செய். எனக்கு ரொம்ப வலிக்குது நைனா, நான் இதுல இருந்து வெளிய வர விரும்புறேன், தயவு செஞ்சு எனக்கு உதவி செய் “ என்று க்ரிஷ் கேட்டதும், நைனா அவனை அணைத்துக் கொள்ள, க்ரிஷும் அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டான்.

“ நாம ஒரு மனநல ஆலோசகர போய் சந்திக்கலாம். நம்ம எதிர்காலத்த உருவாக்குற ஒவ்வொரு அடியிலையும் நான் உனக்கு துணையா இருப்பேன் “ என்று நைனா சொன்னதும், க்ரிஷ் அவளுக்கு நன்றி சொல்ல, நைனா அவன் முதுகில் தட்டி புன்னகைத்தாள்.

**********************************

முன்னோட்டம்:

“ எல்லா வாரமும் ஞாயிற்றுக்கிழம இல்லனா உங்களுக்கு எப்போ டைம் கிடைச்சாலும் நீங்க என்ன பார்க்க வரணும். நீங்க தினமும் எனக்கு போன் பண்ணனும், அப்புறம் ஒரு நாளைக்கு முறைஞ்சது 10 மெசேஜ் அனுப்பனும். இத நீங்க ஒரு நாள் தவற விட்டா கூட நான்  ஒரு நாள் சாப்பிட மாட்டேன் “

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!