மைரா அறைக்கு வெளியே பதற்றத்துடன் நடந்து கொண்டிருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவள் சட்டென நின்று, நைனா புன்னகையுடனும் வெட்கத்துடனும் வெளியே நடந்து வருவதைக் கண்டாள்.
மைரா ஓடிச்சென்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு, “ ஏய், நீ சிரிக்கிறியா ? என்ன ஆச்சு ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்க, “ அவன் வருத்தப்படுறதா நான் நெனச்சேன் ஆனா இல்ல, அவன் உணர்ச்சிவசப்பட்டு இருக்கான் “ என்று நைனா பதில் சொன்னாள்.
“ ஆனா உன் கன்னம் ரெண்டும் ஏன் சிவந்து இருக்கு ? “ என்று மைரா கிண்டலாக கேட்க, நைனா தன் கன்னங்களைத் தட்டிக்கொடுத்து மைராவை தன்னுடன் இழுத்தாள். மைராவும் புரிந்துகொண்டு நைனாவின் இடுப்பை கிள்ளினாள். ரிசப்ஷன் முடிந்து அனைவரும் நள்ளிரவில் வீட்டை அடைந்தனர்.
கேஷவ் மற்றும் மைரா மட்டும் தங்கள் வீட்டிற்கு காரில் சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும், கேஷவ் கதவை தாழ்ப்பாள் போட்டு அவளை முத்தமிட ஆரம்பித்தான்.
அவன் விரல்கள் அவளது துப்பட்டாவைப் அவிழ்த்ததும், அது தரையில் விழுந்தது. இருவரும் முத்தத்தில் ஆதிக்கம் செலுத்த முயன்று சமமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தனர், மைரா அவன் அணிந்திருந்த பிளேசரை தரையில் தள்ளிவிட்டு அவனது சட்டை பட்டன்களை அவிழ்க்க தொடங்கினாள்.
அவன் படிக்கட்டுகளை நோக்கி நகரத் தொடங்கினான், அப்போது மைரா வெற்றிகரமாக அவனது சட்டையை அகற்றினாள். கேஷவ் அவளது ப;ப்லௌசை விடுவிக்க பின்புற முடிச்சை இழுத்து அவளை படுக்கை அறைக்கு அழைத்து செல்ல, தன் கைகளில் அள்ளிக் கொண்டான். அவர்கள் முத்தத்தை உடைத்ததும், அவன் அவளது கழுத்து மற்றும் நெஞ்சில் முத்தங்களை கொடுக்க ஆரம்பித்தான்.
கதவை உதைத்து திறந்து அவளை நிற்க வைக்க அவர்கள் மூச்சிரைத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்களின் கைகள் மீதமுள்ள ஆடைகளை அவிழ்ப்பதில் மும்முரமாக இருந்தன.
இருவரும் படுக்கையை நோக்கி நகர்ந்ததும், கேஷவ் மைராவை படுக்கையில் தள்ளிவிட்டு அவளது கழுத்தை தன் ஆள்காட்டி விரலால் வருடினான்.
“ நீ இன்னைக்கு நிறைய தப்பு பண்ணி இருக்க அம்மு, நீ எனக்கு ரொம்ப ஆசை காட்டி 6 மணி நேரம் கிஸ் பண்ணாம பட்டினி போட்டு வெச்சுட்ட. நான் பொய் சொல்லி உன்ன ஏமாத்தி ரூமுக்கு வர சொன்ன வர நீ என்ன ஒரு முறை கூட கட்டிப்பிடிக்கல, இன்னைக்கு பாட்டு பாடி என்ன சர்ப்ரைஸ் பண்ணிட்ட, நீ என் கண்ண பார்த்து பாட்டு பாடி, என் இதயம் ஒரு துடிப்பை நிறுத்தி, இருக்க. இதெல்லாம் பெரிய குற்றம். ரிசப்ஷன் ,முடிஞ்ச அப்புறம் உன்ன கட்டிப்பிடிக்க நான் துடிச்சிட்டு இருந்தேன் ஆனா நீ அப்படியே என்ன பார்க்காம நடந்து போயிட்ட. உன்ன எப்படித் தண்டிக்குறது ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டதும், மைரா தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ என்ன மன்னிச்சிடுங்க கெட்சப், தயவு செஞ்சு உங்க அப்பாவி பொண்டாட்டிய மன்னிச்சிடுங்க. இன்னைக்கு நான் பார்க்க எப்படி இருந்தேன்னு நாம பேச வேண்டாமா ? இப்போ பேசலாமா ? “ என்று மைரா அவன் முகத்தை விரலால் வருடி கேட்டாள்.
“ நீ பார்க்க ஒரு தேவதை மாதிரி இருந்த, நான் உன்ன நாள் முழுக்க பார்த்துட்டே இருக்க முடியும், ஆனா நாம ரொமான்ஸ் பண்ணும் போது, நீ என் பெயர சொல்லி முனகிட்டு இருக்கும் போது இன்னும் ரொம்ப அழகா இருப்ப “ என்று சொல்லி அவன் அவள் இடுப்பை கசக்க, மைரா அவனது முரட்டுத்தனமான ஸ்பரிசத்திற்கு சீறினாள்.
“ இந்த இடுப்ப எப்படி வளைச்சு நடந்த அம்மு ? என்ன கிண்டல் செய்ய தானே அப்படி நடந்த ? நீ சரியான வசியக்காரி மிஸஸ் கேஷவ் “ என்று கேஷவ் சொல்ல, “ அதனால தான் நாம ரூமுக்கு வரவரைக்கும் கூட உங்களால வெயிட் பண்ண முடியலையா ? “ என்று கேட்டாள் மைரா.
“ என்ன கிண்டல் பண்றதுல நீ ஜெயிச்சிட்டனு, நீ மறைமுகமா சிரிச்சிட்டே ரூம் விட்டு வெளிய போன அப்போவே எனக்கு தெரிஞ்சிடுச்சு. அந்த நிமிஷத்துல இருந்து நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “ என்று சொன்ன கேஷவ் அவள் அணிந்திருந்த நெக்லசை கழற்றி தரையில் எரிந்து, அவள் கம்மலை கழற்றத் தொடங்குவதற்கு முன்பு அவளது காது மடல்களில் முத்தமிட்டான்.
கேஷவ் அவள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் முத்தமிட ஆரம்பித்த போது மைரா அவனுக்கு அடியில் நெளிந்தாள். ஒரு கிழிசல் சத்தம் கேட்ட மைரா, தனது கிழிந்த உள்ளாடைகள் தரையில் கைவிடப்பட்டதை கண்டாள்.
அவன் தன் விரல்களை அவளது விரல்களோடு ஒன்றிணைத்து, தன் உதடுகளால் அதிசயங்களை காட்ட ஆரம்பித்தான்.
படுக்கையிலிருந்து இறங்கிய கேஷவ் தனது எஞ்சிய ஆடைகளுக்கு முழுவதுமாய் விடுதலை அளித்தான்.
அவன் இன்னும் நெருக்கமாக குனிந்து அவளை முத்தமிட ஆரம்பித்ததும், அவன் தோளைப் பிடித்துக் கொண்டு மைரா முனகினாள். இருவரும் தங்கள் காதல் உலகில் தங்களை மறந்து இருந்தனர். இருவரும் உச்சத்தை அடைந்ததும், கேஷவ் அவள் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டபடி அவள் மீது சரிந்தான்.
“ எப்படி இருந்துச்சு மைரா? “ என்று கேஷவ் கேட்க, “ என் சக்தி எல்லாத்தையும் நீங்க எடுத்துட்டீங்க, இப்போ எனக்கு தூக்கம் வேணும் “ என்று பதில் சொன்னாள்.
கேஷவ் சிரித்துக் கொண்டே அவளை சுத்தம் செய்து கட்டிப்பிடித்து தூங்க வைத்தான்.
காலையில் க்ரிஷும், நைனாவும் அவளது மொபைலில் இருந்து அவளது சிறுவயது புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ மைரா உன்ன தவிர வேற யார் கூடவும் ப்ரெண்டா இருக்குறத நீ ஒருநாளும் விரும்பலனு எனக்குத் தெரிஞ்ச அப்போ நான் உன்ன அவ்ளோ வெறுத்தேன் “ என்று நைனா சொல்ல, “ ஆனாலும் நீ அவ கூட ப்ரெண்ட் மட்டும் இல்ல எனக்கு பெரிய போட்டியா மாறிட்ட “ என்றான் க்ரிஷ்.
“ அதுக்கு காரணம் உன் அண்ணன். விதி ஒருத்தரோட வாழ்க்கையில எப்படியெல்லாம் விளையாடுது பாரு. பல வருஷம் அப்புறம் அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க “ என்று நைனா புன்னகையோடு கூறினாள்.
“ வருஷங்களா ? “ என்று க்ரிஷ் குழப்பத்தோடு கேட்டான் ஆதற்கு நைனா அவனிடம், “ ஆமா, ஆனா நான் இப்போ எதையும் சொல்ல மாட்டேன். மைரா இல்ல அவளோடு அழகான ஹங்க் (hunk) மூலம் நீ தெரிஞ்சிக்குவ “ என்று நைனா சொன்னாள்.
“ என்னது அழகான ஹங்க்கா ? “ என்று க்ரிஷ் ஆச்சரியத்தோடு கேட்க, “ ஆமா, நான் அவர அழகான ஹங்க் தான் சொல்லுவேன். மைராவ கிண்டல் செய்ய எனக்கு அவர் மேல ஈர்ப்பு இருக்குனு சொல்லுவேன், ஆனா அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு தான். இப்போ நான் அவள கிண்டல் செய்றது இல்ல, ஏன்னா இப்போ அவ அவர் மேல பைத்தியமா இருக்கா “ என்று சொல்லி நைனா சிரித்தாள்.
“ நீ எப்பவாச்சும் என் மேல பைத்தியமா இருந்து இருக்கியா ? நான் அழகா இல்லையா? “ என்று க்ரிஷ் மெல்ல தயங்கியபடி கேட்டான்.
“ ரோஷினி உன் கூட ஒட்டிக்கிட்டே இருக்குறத பார்க்கும் போது அப்படியே அவள கிழிக்கனும் நெனச்சேன் ஆனா என்னால முடியல ஆனா இப்போ யாராச்சும் உன்ன நெருங்க நெனச்சா கொன்னுடுவேன். அப்புறம் என்ன கேட்ட நீ அழகா இல்லையானா ? உன் அண்ணன் மைராவோட ஹங்க், நீ என் ஹங்க், அதனால தான் எனக்கு உன்ன புடிக்கும் “ என்று நைனா பதில் சொன்னாள்.
“ புடிக்குமா ? “ என்று க்ரிஷ் மீண்டும் கேட்க, “ ஆமா, நீ முழுசா தயாராகுற வரை எனக்கு உன்ன புடிச்சி இருக்குனு மட்டும் தான் சொல்லுவேன் பேபி “ என்று நைனா கூறினாள்.
“ பேபியா ? “ என்று மனதில் நினைத்த க்ரிஷின் காதுகள் சிவந்தன, அவன் தன் புன்னகையை மறைக்க அவளிடமிருந்து விலகினான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, க்ரிஷ் அதைத் திறந்ததும் அர்ச்சனா புன்னகையுடன் உள்ளே நுழைந்து நைனாவின் அருகில் அமர்ந்தார்.
“ கேஷவ், மைராவோட புது வீட்டுக்கு போக பிளான் பண்ணி இருக்கோம் நைனா. நீயும் க்ரிஷும் ரெடியாகுங்க நாம 30 நிமிஷத்துல கிளம்பறோம் “ என்று அர்ச்சனா சொன்னதை கேட்டு, “ நாம வர்ற போறோம்னு மைரா கிட்ட சொல்லிட்டீங்களா ? “ என்று நைனா கேட்டாள்.
“ இல்ல, இது அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் “ என்று அர்ச்சனா சொல்ல, “ ஆனா அவங்க இருக்குற இடம் நமக்கு தெரியாது அத்த “ என்றாள் நைனா.
“ என்ன அம்மா சொல்லி கூப்பிடு, உங்க அப்பாவுக்கு அட்ரெஸ் தெரியும். நேத்து கேஷவ் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்துருக்காரு “ என்று அர்ச்சனா சொன்னார்.
“ சர்ப்ரைஸ் கொடுக்க போறோமா ? தப்பான நேரத்துல நாம அங்க போனா என்ன செய்றது ? ரெண்டு பேரும் காதல் நோய் புடிச்சு இன்னும் ஹனிமூன் நாட்கள சந்தோஷமா அனுபவிச்சிட்டு இருக்காங்க. நிச்சயம் தர்மசங்கடமா போகும். ஆனா நம்ம குடும்பத்துக்கு என்ன ஆச்சு ? எதுவும் செய்றதுக்கு முன்னாடி நல்லா யோசிப்பாங்க அப்புறம் எப்படி இன்னைக்கு யோசிக்காம போக பிளான் பண்றாங்க ? அந்த காதல் ஜோடிய நாம தொந்தரவு செய்வோம்னு இவங்களுக்கு தோணலையா ? “ என்று நைனா மனதில் ஆயிரம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ நீ என்ன யோசிக்குற நைனா? “ என்று கேட்டு அர்ச்சனா அவள் தோளை தட்ட, “ நம்ம மைராவுக்கு, மாமாவுக்கு என்ன பரிசு வாங்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். அத பத்தி அப்புறம் யோசிக்கிறேன், இப்போ நான் ரெடி ஆகுறேன் “ என்று நைனா பதில் சொல்ல, க்ரிஷும், அர்ச்சனாவும் அறையை விட்டு வெளியேறினார்கள்.
நைனா உடனே கதவைப் பூட்டிவிட்டு மைராவை அழைத்தாள் ஆனால் மைரா பதிலளிக்கவில்லை. பின்னர் அவள் கேஷவின் எண்ணை டயல் செய்தாள், அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து அவனது மொபைல் ஒலித்தது.
தூரத்திலிருந்து மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டு மைரா தூக்கத்தில் முனகினாள்.
“ கெட்சப், உங்க மொபைல் அடிக்குது, போய் பதில் சொல்லுங்க “ என்று மைரா தூக்க கலந்த குரலில் சொன்னாள். ஆனால் கேஷவ் தன் காலை அவள் மீது போட்டு அவள் கழுத்தில் முத்தமிட்டு உறங்கிக் கொண்டிருந்தான். இடைவிடாத மொபைல் ஒலிப்பதை கேட்ட மைரா கேஷவின் காலை தள்ளிவிட்டு போர்வையை மார்போடு அணைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
“ கெட்சப் நீங்க இப்போ எழுந்திருக்குறது தான் நல்லது. நான் களைப்பா இருக்கேன் அதனால உங்களுக்கு யார் போன் பண்றாங்கன்னு போய் பாருங்க “ என்று மைரா எரிச்சலுடன் சொல்ல, கேஷவ் கீழே இறங்கி ஒரு டவலை இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு, மைரா அவளைச் சுற்றி போர்வையுடன் நிற்பதைக் கண்டான், ஆனால் அவளது அதிர்ச்சியான முகத்தைப் பார்த்தான்.
அவள் அதிர்ச்சிக்கான காரணத்தை அறிய அவள் என்ன பார்க்கிறாள் என்று அவனும் கவனித்த போது, அவர்களின் ஆடைகள் கிழிந்து தரையில் சிதறிக் கிடந்தன.
தரையில் கிடந்த அவனது பேண்ட்டிலிருந்து மொபைலை எடுத்து நைனாவிடம் இருந்த வந்த அழைப்பை மைராவிடம் காட்டினான்.
“ என் பின்னால வாங்க “ என்று சொல்லி அவள் கதவைத் திறந்து பார்த்த போது அவன் சட்டை தரையில் கிடந்தது. அவனை முறைத்துப் பார்த்தவள் மாடிப்படியில் தன் ப்லௌசை பார்த்தாள்.
“ என் துப்பட்டாவும் உங்க பிளேசரும் எங்க ? “ என்று அவள் அதிர்ச்சியோடு கேட்க, “ அது ஹால்ல இருக்கும், வா போய் தேடலாம் “ என்றான் கேஷவ்.
மைரா தனது மொபைலை எடுத்து நைனாவிடம் இருந்து வந்திருந்த அழைப்புகளை பார்த்து விட்டு, அவளை மீண்டும் அழைத்தாள்.
“ நைனா, என்ன ஆச்சு ? எதாவது பிரச்சனையா ? “ என்று மைரா கேட்டதும், “ எனக்குத் தெரியாது, ஆனா நீங்க தான் அத முடிவு செய்யனும். குடும்பம் மொத்தமும் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாரா இருக்காங்க. நீயும், உன் ஹங்கும் பிஸியா இருந்தா என்ன செய்றது ? அதனால உன்ன எச்சரிக்க பண்ண தான் போன் பண்ணேன். ரெண்டு பேரும் சர்ப்ரைஸுக்கு ரெடியா இருங்க “ என்று நைனா சொன்னதை கேட்டு, “ ரொம்ப நன்றி நைனா, ஐ லவ் யூ “ என்றாள் மைரா.
அவளது வார்த்தைகளைக் கேட்ட கேஷவ் முனகியபடி மைராவை பின்னால் அடித்தான். மைரா அழைப்பை துண்டித்து பதிலுக்கு அவன் கையில் அடித்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவள், அவர்கள் செய்த குளறுபடிகளைக் கண்டு பெருமூச்சு விட்டாள்.
“ கெட்சப், நம்ம குடும்பம் நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வராங்களாம் அதனால சீக்கிரம் நீங்க எல்லாத்தையும் சுத்தம் பண்ணுங்க. அய்யோ கடவுளே, நாம தான் வீட்ட இப்படி பண்ணோமா ? “ என்று மைரா முனகினாள்.
“ நாம என்ன பண்ணோம்னு மறந்து போற அளவுக்கு நீ காட்டுமிராண்டித்தனமா இருந்த. எனக்கு ரொம்ப குளிருது அதனால நானும் உன் கூட போர்வைக்குள்ள வரட்டுமா ? “ என்று கேட்டு கேஷவ் புன்னகைக்க, மைரா அவனைத் தள்ளிவிட்டாள். இருவரும் சேர்ந்து ஹாலில் இருந்து தங்கள் படுக்கையறைக்கு துணிகளை சேகரிக்கத் தொடங்கினர். மைரா குளிக்க பாத்ரூமுக்குள் நுழைய, கேஷவ் பக்கத்து அறையில் தயாரானான். மைரா சுத்தம் செய்யத் தொடங்கியதும், கேஷவ் அவளுக்கு விரைவான காலை உணவை தயாரித்தான்.
“ எல்லாருக்கும் மதியம் லஞ்ச் சமைக்க மளிகை சாமான் வாங்கிட்டு வரேன் “ என்று கேஷவ் சொன்னான் ஆனால் மைரா அவனை தடுத்து, “ இல்ல, நாம அவங்கள பார்த்து ஆச்சரியப்படனும் அதனால நாம தயாரா இருக்க முடியாது. அவங்க வந்தவுடனே சாப்பாடு ஆர்டர் செய்வோம். நம்ம ரெண்டு பேரையும் பத்தி எல்லார் கிட்டையும் முழுசா சொல்ல விரும்புறேன். எல்லாரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க “ என்று மைரா கூறினாள்.
“ நீ சொல்ற மாதிரி செய்வோம் ஆனா நான் எல்லாருக்கும் மர்ம பாடகரா மட்டும் இருக்க விரும்புறேன். நான் உனக்காக அத செய்றேன், அது அப்படியே இருக்கனும்னு நான் விரும்புறேன். அது உனக்கு மட்டும் தெரியனும்னு நான் விரும்புறேன் “ என்று கேஷவ் சொல்ல, மைரா புன்னகைத்தாள், அவர்கள் ஷிஷிமாருவுக்கு உணவளிக்க கொல்லைப்புறத்தை அடைந்தனர்.
மைரா அவனை போர்டிகோவிற்கு அழைத்துச் சென்றாள், அவர்கள் அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு கார்கள் வாயிலுக்கு முன்னால் நின்றன. கேஷவும், மைராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆச்சரியப்படுவது போல் நடித்து அவர்களை நோக்கி விரைந்தனர்.
“ என்ன ஆச்சரியமா இருக்கு ? “ என்று கேஷவ் சொன்னான்.
“ அய்யோ கடவுளே, நீங்க எனக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கீங்க “ என்று மைராவும் சொன்னாள்.
அவர்களின் நடிப்பை பார்த்த நைனா, “ ரெண்டு பேரும் என்னமா நடிக்குறாங்க ? “ என்று மனதில் நினைத்தாள்.
மைரா அனைவரையும் கட்டிப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
“ இவன பாருங்க, என் ப்ரெண்ட் ஷிஷிமாரு, கெட்சப் இவன எனக்கு பரிசா கொடுத்தாரு. நான் உங்களுக்கு எல்லாத்தையும் காட்டுறேன், ஆனா அதுக்கு முன்னாடி நாங்க சில விஷயங்கள உங்க கிட்ட சொல்லணும் “ என்று மைரா கூறினாள்.
கேஷவ் ஜூஸை எல்லோருக்கும் கொடுத்துவிட்டு மைரா உட்கார்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்தான்.
“ எங்க கல்யாணம் நீங்க பண்ணி வெச்ச நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் இல்ல “ என்று மைரா சொன்னதும், தன் தோளில் இருந்த கேஷவின் கையில் சாய்ந்திருந்த மைராவை, அர்ச்சனாவும் வசுந்தராவும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.
கேஷவ் ஒரு மர்ம பாடகர் என்பதைத் தவிர எல்லாவற்றையும் மைரா அவர்களுக்கு விளக்கினாள். நைனாவைத் தவிர மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்து போனார்கள். அர்ச்சனாவின் கண்களில் கண்ணீர் வர, மைரா அவர் முன் மண்டியிட்டு அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“ நான் ஒரு மோசமான அம்மா. என் பையன் இத்தன வருஷம் கஷ்டப்படுறத நான் எப்படி பார்க்காம இருந்தேன்? “ என்று சொல்லி அர்ச்சனா அழுதார்.
“ மன்னிச்சிடுங்க. அண்ணனும், மைராவும் வாழ்க்கையில அனுபவிச்ச எல்லாத்துக்கும் நான் தான் காரணம் “ என்று க்ரிஷும் வருந்தினான்.
“ க்ரிஷ் உன் அன்பையும் அக்கறையையும் பயன்படுத்தி உன்ன இப்படி நடத்தினத நீ எங்க கிட்ட சொல்லி இருக்கணும் கேஷவ். நீ வளர ஆரம்பிச்சு, அதனால அமைதியா இருக்கனு நாங்க நெனச்சது எங்க தப்பு தான் ஆனா உனக்கு க்ரிஷ் மேல இருந்த அக்கறைய பார்க்கும் போது நீ கஷ்டப்படுறனு எங்களால யூகிக்க முடியல “ என்று மதன் வேதனையோடு சொன்னார்.
“ என்ன மன்னிச்சிடு கேஷவ் “ என்று அர்ச்சனா சொல்ல, “ அம்மா, நடந்தது நடந்து போச்சு, ஆனா இப்போ விதி எங்கள ஒன்னா சேர்த்துடுச்சு, நாங்க சந்தோஷமா இருக்கோம் “ என்று கேஷவ் கூரினான்.
“ அமைதியா இரு அர்ச்சனா. ஆரம்பத்துல இருந்தே அவங்க லவ் பண்றது தெரிஞ்சு இருந்தா, இப்போ ரெண்டு பேரும் நேசிக்குற அளவுக்கு லவ் பண்ணி இருப்பாங்களா தெரியல. எல்லாமே ஒரு காரணத்துக்காக தான் நடக்குது, நம்ம பசங்க சந்தோஷமா இருக்காங்க, அத பார்த்து நானா சந்தோஷமா இருக்கணும் “ என்று வசுந்தரா அர்ச்சனாவுக்கு ஆறுதல் சொன்னார்.
“ நீ எங்க மைரா வாழ்க்கையில கெடச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கேஷவ். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பொருத்தமானவங்க “ என்று ராஜன் மனதார கூறினார்.
அப்போது க்ரிஷ் நைனாவைப் பார்த்தான், அவள் ஏற்கனவே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தலையை அசைத்து புன்னகையுடன் சைகை கொடுக்க, நைனா க்ருஷ் மீதான தன் காதலை எல்லோரிடமும் கூறினாள். இப்போது மொத்த குடும்பமும் எல்லாம் தெரிந்து கொண்டு பார்ட்டி மனநிலையில் இருந்தார்கள்.
“ வாங்க நாம வீட்ட சுத்தி பார்க்க ஆரம்பிப்போம் “ என்று சொல்லி மைரா, அர்ச்சனாவையும் வசுந்தராவையும் இழுத்துக் கொள்ள, மற்றவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். சுற்றிலும் காட்டியபோது அவள் உற்சாகத்தில் நிறைந்திருந்தாள். கேஷவ் மைராவின் மேல் கொண்ட காதலை அறிந்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கேஷவ் மற்றும் க்ரிஷ் குடும்பத்திற்கு உணவு ஆர்டர் செய்தனர், மைராவும் நைனாவும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். வசுந்தராவும் அர்ச்சனாவும் குளத்தில் கால்களை நனைத்து விளிம்பில் உட்கார்ந்தார்கள். மதனும் ராஜனும் தோட்டத்தைப் பார்ப்பதிலும், தோட்டக்காரனுடன் பேசுவதிலும் மும்முரமாக இருந்தனர்.
கேஷவ் திரும்பி வந்து பார்த்த போது தன் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாக இருந்தனர். கேஷவ் புன்னகைப்பதைப் பார்த்து மைரா புருவத்தை உயர்த்தினாள், அவன் பதிலுக்கு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
*****************
முன்னோட்டம்:
“ நைனா, நான் உன்கிட்ட பேசல, ஆனா எனக்கு க்ரிஷ் மேல இருக்க அதே அக்கறை உன் மேலையும் இருக்கு. அவன பார்த்துக்குற மாதிரி உன்னையும் பார்த்துக்குறேன்னு உனக்கும் நல்லாவே தெரியும். இப்போ நீ சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா, என் பாப்பா பசியில இருக்கா. நாங்க வந்ததுல இருந்து வாசனைய முகர்ந்துட்டு இருக்கா “

1 comment
[…] 83. நான் ஒரு மோசமான அம்மா […]