மூன்று ஆண்டுகளுக்கு கடந்து போனதும். அனைவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்ப்பட்டது.
கேஷவின் கே.எம் சொல்யூஷன்ஸ் குறுகிய காலத்தில் மிகப்பெரிய உயரத்தை எட்டியது, அவன் பெங்களூரில் ஒரு கிளையைத் திறந்தான். லயாவின் அகாடமி இசைத் துறையில் ஒரு அடையாளமாக மாறியது. மைரா மற்றும் நைனா மிக பிரபலமானார்கள், மேலும் எந்தவொரு முக்கியமான இசை நிகழ்ச்சிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்கள் அழைக்கப்பட்டனர்.
ஒரு மர்ம பாடகராக கேஷவ் பெரும் ரசிகர்களைக் கொண்டிருந்தான், மேலும் அவனது வீடியோக்கள் அனைத்தும் பல மில்லியன் பார்வைகளை எட்டின.
ஒவ்வொரு முயற்சியிலும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறுவதைக் காண குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மைரா தன் கன்னத்தில் மென்மையாக தட்டியதும் முனகினாள். அவள் கண்களைத் திறக்க முயன்றாள், ஆனால் ஒரு ஜோடி சிறிய உள்ளங்கைகள் அவள் கண்களை மூடியது, மைரா அவற்றைத் தொட்டு புன்னகைத்து அந்த உள்ளங்கைகளை அகற்றி பார்த்ததும் தன் மகள் அருகில் இருப்பதை கண்டு சிரித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ என் லயா குட்டி ஏற்கனவே கண் முழிச்சிட்டீங்களா ? உங்க அப்பா எங்க ? “ என்று மைரா கேட்டதும், “ அம்மா, அப்பா லயாவுக்கு பால் கொண்டு வர போய் இருக்காரு “ என்றாள் லயா.
“ என் லயாவுக்கு பால் வேணுமா “ என்று கேட்டு, மைரா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து லயாவை மடியில் தூக்க எத்தனிக்க, லயா உடனே மறுத்து அவளருகில் அமர்ந்து மைராவின் வயிற்றை தடவிக் கொண்டிருந்தாள்.
“ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு லயா அக்கா ஆயிடுவா “ என்று மைரா சிரித்துக் கொண்டே சொல்ல, “ அம்மா எனக்கு தம்பி வேணும், ப்ளீஸ் “ என்றாள் லயா.
“ லயாவுக்கு தம்பியா இல்ல தங்கச்சியானு வெயிட் பண்ணி பார்ப்போம். இப்போ சொல்லு பல் ப்ரஷ் பண்ணியா ? “ என்று மைரா கேட்க, “ ஹ்ம்ம், அப்பா ப்ரஷ் பண்ணிவிட்டாரு “ என்று லயா பதில் சொன்னாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு கேஷவ் தட்டுடன் உள்ளே வருவதை இருவரும் பார்த்தனர். தட்டை நைட் ஸ்டாண்டில் வைத்துவிட்டு கட்டிலில் மைராவின் அருகில் அமர்ந்து லயாவை மடியில் அமர்த்திக் கொண்ட கேஷவ் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான். அப்போது ஒரு சிணுங்கல் சத்தம் கேட்டதும் சிரித்துக் கொண்டே மைரா உதட்டைப் பிதுக்குவதைப் பார்த்து அவளது உதடுகளை முத்தமிட்டு புன்னகைத்தான்.
பாலைக் கையில் பிடித்துக் கொண்டு மைராவிடம் பேசிக்கொண்டே லயாவை மெதுவாக குடிக்க வைத்தான்.
திடீரென்று குழந்தை வேகமாக உதைக்க மைரா மூச்சிரத்தாள். கேஷவ் அவளது வயிற்றை தொட்டு மெதுவாக தடவிக் கொடுத்தான்.
“ பாப்பா, என் அம்முவ தொந்தரவு செய்யாத. உங்க அக்கா மாதிரி நல்லா குழந்தையா இருக்கணும். நான் சொல்றது சரிதானே லயா? “ என்று கேஷவ் தன் மகளிடம் கேட்க, “ yes அப்பா, நான் நல்ல பொண்ணு “ என்று அவள் பதில் சொன்னாள்.
கேஷவ் அவள் மேலுதடுகளுக்கு மேல் இருந்த பாலைப் பார்த்து சிரித்தான். அவன் கட்டை விரலால் துடைக்க எத்தனிக்க, லயா சட்டையின் கைகளில் துடைத்துக் கொண்டாள். கேஷவ் அவள் முகத்தில் இருந்த முடியை விலக்க, லயா அவன் தோளில் சாய்ந்தாள்.
“ கெட்சப், இது தான் நான் கண்ட கனவு. அடக் கடவுளே, அப்போ என் கனவு எல்லாம் நனவாகும்னு அர்த்தமா? “ என்று மைரா ஆச்சரியத்தோடு கேட்க, “ இருக்கலாம் இல்லனா நம்ம குடும்பத்த பத்தி உனக்கு வர அழகான கனவுகள் மட்டும் நனவாகுது போல. இப்போ போய் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் “ என்று கேஷவ் கூறினான்.
மைராவும் லயாவும் கேஷவின் புதிய பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கேஷவ் காலை உணவை கையில் வைத்துக் கொண்டு மைராவின் அருகில் அமர்ந்து மைராவுக்கு உணவளிக்கத் தொடங்கினான்.
லயா சோபாவில் இருந்து குதித்து டிவி முன் சென்று திரையில் தெரிந்த மர்ம பாடகரின் முகத்தைத் தொட்டாள்.
லயா அவனைப் பின்பற்ற முயன்று தலையை ஆட்டி அவன் பாடலை ரசித்தாள்.
“ இந்த ரகசியத்த எப்பவும் மறைக்க முடியும்னு நினைக்குறீங்களா ? அதுவும் குறிப்பா அந்த மர்ம பாடகர் நீங்க தான்னு தெரியாம லயா உங்கள ரசிக்குறா “ என்று மைரா சொல்ல, “ இத மறைக்குறது அவள ஏமாத்துற மாதிரி இருக்கு. உனக்கு என்ன தோணுது ? என் அடையாளத்த வெளிப்படுத்தனுமா ? “ என்று கேஷவ் அவளிடம் கேட்டான்.
“ நீங்க எனக்கு மர்ம பாடகரா இருக்க விரும்புனீங்கனு நான் ஒத்துக்குறேன் ஆனா இப்போ நாம லயா பத்தி யோசிக்கணும். அவ வளர்ந்துட்டு இருக்கா, குறிப்பா நைட்டு அவள தூங்க வைக்க நீங்க பாடும் போது அவ ஒரு நாள் உண்மைய கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு “ என்று மைரா சொல்லும் போதே லயா டிவியை அணைத்து விட்டு கேஷவை கட்டிப்பிடித்து, “ அப்பா, ப்ளீஸ் லயா பாப்பாக்கு பாடுங்க “ என்று சொன்னாள்.
கேஷவ்:
வா வா என் தேவதையே…
பொன் வாய் பேசும் தாரகையே…
பொய் வாழ்வின் பூரணமே…
பெண் பூவே வா…
“ அவ உங்க நிஜத்தையும், அவ ரசிக்குற அந்த மர்ம பாடகரோட குரலையும் ஒப்பிட்டு கேட்குறா. அவ வளரும் போது நீங்க யார்னு நிச்சயமா கண்டுபிடிப்பா. நீங்க நல்லா பாடுவீங்கனு நம்ம குடும்பத்துல இருக்கவங்க கிட்ட சொன்னா என்ன பண்றது? “ என்று மைரா சொல்ல, “ நீ சொல்றது சரி தான். நான் இத பத்தி யோசிக்கிறேன் “ என்று சொல்லிவிட்டு கேஷவ் லயாவை தூக்கிக்கொண்டு சிஷிமாருவுடன் சிறிது நேரம் விளையாடினான்.
வார இறுதியில் கேஷவும் மைராவும் குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தை செலவிட தங்கள் குடும்ப வீட்டிற்கு சென்றனர். லயாவும் ஆத்விக்கும் க்ரிஷுடன் விளையாடிக் கொண்டிருக்க, நைனா வசுந்த்ரா மற்றும் அர்ச்சனாவுடன் சேர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தாள். மைரா ஹாலில் உட்கார்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிடும் போதும் நைனா தனது மொபைலில் ஒரு அறிவிப்பைப் பார்த்து தனது முஷ்டியை காற்றில் உயர்த்தி கதறினாள்.
“ இப்ப எதுக்கு கத்திட்டு இருக்க ? “ என்று அர்ச்சனா கேட்டதும், “ மைரா, அந்த மர்மப் பாடகர் இன்னைக்கு அவரோட முகத்த வெளிப்படுத்த போறதா சொல்லி இருக்காரு. அய்யோ கடவுளே! கமெண்ட்ஸ் பாரு, மக்கள் அவ்ளோ பேரு அவர பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்காங்க “ என்று நைனா உற்சாகமாக கூறினாள்.
“ எத்தன மணிக்கு ? “ என்று மைரா கேட்க, “இன்னைக்கு சாயங்காலம். அந்த நேரம் எந்த வேலையும் செய்ய கூடாது, போன் கூட பேசக் கூடாது. இத்தன வருஷமா கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்தவர ஒரு வழியா இன்னைக்கு பார்க்க போறோம் “ என்று நைனா சொல்ல, “ அவர பார்த்த அப்புறம் அவரோட ரசிகையா அவர பத்தி பேசுறத நிறுத்துவியா ? “ என்று க்ரிஷ் கேட்டான்.
“ இல்ல, நான் அவரோட ரசிகை, நான் எப்பவும் அப்படி தான் இருப்பேன். அவர் உன்ன விட அழகா இருப்பார்னு நெனச்சு பொறமைப்படுறியா ? ஆனா கவலைப்படாத உன்ன விட மாமா தான் அதிகம் கவலைப்படணும். நான் வெறும் ஒரு ரசிகை மட்டும் தான் ஆனா மைரா அவரோட குரலுக்கு பைத்தியம் “ என்று நைனா பதில் சொன்னதும், அதை கேட்டு கேஷவுக்கு புரை ஏறியது.
மைரா அவன் தலையில் தட்டி அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள். லயா மதனின் மடியிலிருந்து கீழே குதித்து கேஷவிடம் விரைந்ததும் அவன் அவளைத் தன் மடியில் உட்கார வைத்து ஊட்டத் தொடங்கினான்.
மாலையில் முழு குடும்பமும் டிவிக்கு முன் அமர்ந்தனர். நைனா யூடியூப் சேனலைத் திறந்ததும் அதில் லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பார்க்க தயாராக இருந்தனர்.
கேஷவ்வும் மைராவும் லயாவை மடியில் அமர்த்திக்கொண்டு அருகருகே அமர்ந்திருந்தனர். வீடியோ தொடங்கியதும் நிழலுருவமாய் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அருகருகே அமர்ந்திருப்பதை அவர்கள் அனைவரும் கண்டனர்.
“ அவர் இன்னைக்கு தனியா இல்ல. அந்தப் பொண்ணு யாரா இருக்கும்? லவர் இல்ல மனைவியா இருப்பாங்களோ ? இல்ல கூட பாட வந்துருக்காங்களா ? “ என்று நைனா சொல்ல, “ உன் கற்பன குதிரைய நிறுத்து நைனா. அவர் பாட ஆரம்பிச்சிட்டாரு “ என்றான் க்ரிஷ்.
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
டிவியில் மர்ம பாடகரின் பாடலை கேட்டதும் லயா கேஷவியின் மடியிலிருந்து குதித்து அவர் பாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். எல்லோரும் அவர் குரலைப் பாராட்ட, கேஷவ் விரல்களை கசக்கி கொண்டிருந்தான். மைரா அவன் உள்ளங்கையைப் பிடித்து மெல்ல அழுத்தி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ இப்போது அந்தப் பொண்ணு படுவாங்கனு நினைக்கிறேன் “ என்றாள் நைனா அதே போல் மர்ம பாடகரின் அருகில் இருந்த பெண் பாட ஆரம்பித்தார்.
பெண்:
விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே
“ இந்த குரல் மைராவோட குரல் மாதிரியே இருக்கு “ என்று நைனாவும், க்ரிஷும் உடனே சொன்னார்கள். மைரா அவர்களைப் பார்த்துவிட்டு டிவியை நோக்கிப் பார்வையைச் திருப்பினாள். விளக்கின் ஒளி அந்த மனிதன் மீது பிரகாசிக்க, கேஷவ் கிதார் வாசிப்பதைக் கண்டு அனைவரும் மூச்சிரைத்து எழுந்தனர். கேஷவை திரையில் பார்த்ததும் லயா துள்ளிக் குதித்து அலறினாள்.
கேஷவ்:
உன் பேரை சொன்னாலே
நான் திரும்பி பார்க்கிறேன்
இப்போது விளக்குகள் அவனுக்கு அருகில் இருந்த பெண்ணின் மீதும் பிரகாசிக்க அனைவரும் மைராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
மைரா:
உன் பேரை மட்டும்தான்
நான் விரும்பி கேட்கிறேன்
கேஷவ்:
இருவர் ஒருவராய்
இணைந்து விட்டோம்
இரண்டு பெயர் ஏனடி
மைரா:
உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்
உன்னையே கேளு நீ
கேஷவ்:
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா
மைரா :
பல கோடி பெண்களிலே
எதற்கென்னை தேடினாய்
கேஷவ்:
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
மைரா:
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்ச தோன்றுமா
கேஷசவ்:
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
எல்லா விளக்குகளும் பிரகாசித்ததும் கேஷவ் எழுந்து கிதாரை நாற்காலியில் வைத்துவிட்டு புன்னகையுடன் மைராவின் கையைப் பிடித்தான்.
“ என் அன்பான ரசிகர்கள், ஆதரவாளர்கள், சந்தாதாரர்கள் அப்புறம் இத நேரலையில பார்த்துட்டு இருக்கவங்க உங்க எல்லாருக்கும் வணக்கம். என்னோட அடையாளம் தெரியாம கூட இத்தன வருஷமா நீங்க எனக்கு கொடுத்த நிபந்தனையற்ற அன்புக்கு ரொம்ப நன்றி. நான் சில குறிப்பிட்ட பாடல்கள மட்டும் செலெக்ட் பண்ணதுக்கு உங்க எல்லாருக்கும் நிறைய கேள்விகள் இருக்கும். அந்த பாடல்களுக்கு பின்னால ஒரு காரணம் இருந்துச்சு, அந்த ஒரு காரணம் என் மனைவி மைரா. பாட்டும், கிட்டார் வாசிக்குறதும் அவங்களுக்கு ரொம்ப புடிக்கும். சின்ன வயசுல இருந்தே எனக்கு அவங்கள அவ்ளோ புடிக்கும். அவங்க மேல எனக்கு அப்படி ஒரு காதல், பாசம், அக்கறை, அவங்க தான் என் வாழ்க்க. என் காதல அவங்க நிராகரிச்சுடுவாங்கனு பயந்து என் காதல அவங்க கிட்ட நான் சொல்ல பயந்து சொல்லாம ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். அவங்களும் என்ன லவ் பண்ணி இருக்காங்க. இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகி எங்களுக்கு ஒரு குட்டி ப்ரின்சஸ் இருக்கா, எங்க லயா. இன்னொரு ப்ரின்ஸ் இல்ல ப்ரின்சஸ் கூடிய சீக்கிரம் பிறக்க போறாங்க.
என் மனைவிக்கு பாட்டு வெளியிட தான் நான் இந்த சேனல தொடங்கினேன், அவங்க என்னோட எல்லா பாடல்களையும் கேட்டு ரொம்ப ரசிப்பாங்க. என் பாட்டு மேல அவங்களுக்கு அப்படி ஒரு பைத்தியம். நீங்க என்ன நம்ப மாட்டீங்க எங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் நாங்க எங்க காதல சொன்னோம். அவங்களுக்கு புடிச்ச மர்ம பாடகர் அவங்க புருஷன் தான்னு அவங்களுக்கு உண்மைய சொன்னேன். இப்போ நெனச்சா எல்லாம் அவ்ளோ சந்தோஷமா இருக்கு. நான் இப்போ என் அடையாளத்த வெளிப்படுத்தினாலும் நீங்க என் பாடல்களை தொடர்ந்து ஆதரிப்பீங்கன்னு நம்புறேன் “ என்று கேஷவ் பேசி முடித்ததும் மைரா அவனை பார்த்து புன்னகைத்து கேமராவை பார்த்தாள்.
“ உங்க எல்லாரோட அன்புக்கும் ரொம்ப நன்றி “ என்று மைரா சொன்னவுடன், கேஷவ் மைராவை தன் கையால் சுற்றி வளைத்து அவள் கண்களைப் பார்த்து புன்னகைத்தான், அத்துடன் வீடியோ முடிந்தது. உட்கார்ந்திருந்த கேஷவ் மற்றும் மைராவை நோக்கி குடும்பத்தினர் திரும்பினர்.
லயா அப்பா மீது பாய்ந்து அவனையும் மைராவையும் முத்தமிட்டு அந்த உற்சாகத்தில் இருந்து விடுபட்டாள்.
“ இன்னும் ஏதாவது சொல்ல வேண்டி இருக்கா ? ஃப்ரீலான்ஸர், சிபிஐயில் கூடுதல் இயக்குநர், பாடகன் ? வேற என்ன? “ என்று மதன் கேட்க, “ பாடகனா ? கேஷவ் நீ பாடுவியா? எப்படி? “ என்று அர்ச்சனா அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கேட்டார்.
“ நீ யார்கிட்டையும் பேச மாட்ட, உனக்கு கூச்ச சுபாவம்னு நாங்க நெனச்சோம் ஆனா நீ ஒரு பிரபல யூடியூபரா ? “ என்று வசுந்தரா கேட்டார்.
“ மைராராராரா உனக்கு தெரிஞ்சி இருந்து மறைச்சிட்டியா ? “ என்று நைனா கேட்க, “ அவர் எனக்காக அத செய்றாரு அதனால அவர் இத வெளிய சொல்ல விரும்பல ஆனா லயா அவர நிஜத்துலையும், வீடியோவுளையும் ஒப்பிடத் தொடங்கிட்டா. இதுக்கு மேல எங்களால மறைக்க முடியல “ என்று மைரா பதில் சொன்னாள்.
“ அப்போ லயா உண்மைய கண்டுபிடிக்குற மாதிரி இருந்ததால தான் நீங்க சொல்லி இருக்கீங்க ? “ என்று க்ரிஷ் கேட்டான்.
“ அவன் ஏன் மர்ம பாடகராக இருக்க முடிவு செய்தான்னு காரணம் சொல்லிட்டானே அப்புறம் ஏன் நீங்க எல்லாரும் திரும்ப திரும்ப அதே கேள்விய கேட்குறீங்க ? அத விடுங்க, நம் குடும்பத்துல பாடகர்கள் அப்புறம் பிரபலங்கள் இருக்காங்க அதுல நாம நாம் பெருமைப்படனும் “ என்றார் மதன்.
“ கேஷவ், மைரா எப்படி உன்ன விரலுல கட்டி போட்டு வெச்சுருக்கா தெரியல. நான் இத புகாரா சொல்லல ஆனா தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன். உன் முழு உலகமும் அவள சுத்தி மட்டும் தான் சுழலுது, அத உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க எல்லாரும் பார்த்தோம் “ என்று அர்ச்சனா வியப்புடன் கேட்டதும், “ ஏன்னா அவ மைரா, அவள லவ் பண்ண எனக்கு எந்த காரணமும் தேவையில்ல “ என்றான் கேஷவ்.
கேஷவின் கன்னத்தை புன்னகையுடன் தட்டிக்கொடுத்த ராஜன், தன் மகள் மீது கேஷவ் வைத்திருக்கும் அன்பைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
“ ஆனா அவர் நம்ம கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு கண்டிப்பா தண்டன கொடுத்தே ஆகணும். அவர் பொண்டாட்டி கூட நமக்காக ஒரு நேரடி நிகழ்ச்சிய நடத்தனும் “ என்று நைனா சொல்ல, “ கண்டிப்பா ஒரு ஸ்பெஷல் நாள் அப்போ செய்வோம் “ என்றான் கேஷவ்.
லயா கேஷவின் முதுகில் தாவி ஏறி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். பின்னர் தம்பதியினர் லயாவுடன் வீடு திரும்பினர்.
அடுத்த நாள் காலை, கேஷவ் மற்றும் மைரா வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவனை இண்டர்வியூ செய்ய அவர்களின் முன் வாயில் ஊடகங்கள் மற்றும் யூடியூபர்களால் நிரம்பி வழிவதாக பாதுகாவலரிடமிருந்து அழைப்பு வந்தது.
கேஷவ் வெளியே சென்று தன்னை பேட்டி காண கேமரா மற்றும் மைக்குடன் மக்கள் காத்திருப்பதைப் பார்த்தான். அவர்களை பணிவுடன் அழைத்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுக்கு மைராவையும் லயாவையும் அறிமுகம் செய்து வைத்தான்.
கேஷவ் அறைக்குள் நுழைந்ததும், மைரா அவன் காலரை பிடித்து இழுக்க, அவன் அவள் இடுப்பை சுற்றி தன் கைகளை சுற்றினான்.
“ என் மனைவி ரொமாண்டிக்கா இருக்க மாதிரி தெரியுது. இன்னைக்கு வீட்ல இருக்கலாமா ? “ என்று கேஷவ் கேட்க, “ இல்ல, பிரபல யூடியூபர் கேஷவோட முதல் ஆட்டோகிராஃப் வாங்க போற முதல் ஆளு நானா இருக்க விரும்புறேன். கிடைக்குமா ? “ என்று மைரா கேட்டாள்.
விளையாடும் போது லயா தூங்கிவிட்டதை கேஷவ் பார்த்தான். பின்னர் மைராவின் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை அவிழ்த்து, ஒரு பேனாவை எடுத்து அவள் மார்பில் தன் கையெழுத்திட்டான். மைரா அவனது கையைத் தட்டி, அவளது சட்டை பொத்தான்களைப் போட முயன்றான், ஆனால் அவன் அவளைத் தடுத்து ஒரு குட்டி ரொமான்ஸுக்கு அவளை அலமாரி இருந்த அறைக்கு இழுத்து சென்றான்.
கேஷவின் பேட்டி யூடியூப் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் வைரலானது. அவன் ஒரு மாலுக்கு சென்ற போது, மக்கள் அவனை உடனடியாக அடையாளம் கண்டனர், மேலும் அவன் மக்களால் சூழப்பட்டான். மாலில் இருந்து வந்த பாதுகாவலர்கள் தலையிட்டு அவன் மாலில் இருந்து வெளியேற உதவ வேண்டியிருந்தது. பல வருட கடின உழைப்பு மற்றும் பாடுவதற்கான ஆர்வம் அனைத்தும் ஒரே இரவில் பலனளித்தன. அவனை பின்தொடர்பவர்கள் மற்றும் சந்தாதாரர்கள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்தனர், மேலும் இந்த ஜோடி ஒரு தனி ரசிகர் பட்டாளத்துடன் கொண்டாடப்பட்டது, அவர்கள் அவர்களுக்காக ஹேஷ்டேக்குகளை உருவாக்கினர்.
கேஷவ் வீட்டிற்கு வந்ததும், மக்களிடமிருந்து வரும் அனைத்து வாழ்த்துக்களையும் பார்த்துக் கொண்டிருந்த மைரா அவனை கட்டிப்பிடித்தாள்.
“ கெட்சப், இதெல்லாம் நிஜம், நான் கனவு காணலனு சொல்லுங்க, எல்லாமே அவ்ளோ சந்தோஷமா இருக்கு “ என்று மைரா சொல்ல, “ லயா எங்க ? “ என்று அவன் கேட்டான்.
“ அவ நம்ம ரூம்ல விளையாடுறா “ என்று மைரா பதில் சொன்னதும், கேஷவ் அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி சுவற்றில் சாய்த்து அவள் உதடுகளை முத்தமிட்டான். மைரா தன் கைகளை அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து முத்தமிட்டாள்.
“ ஐ லவ் யூ அம்மு, நீ என் வாழ்க்கைய எப்படி மாத்தி இருக்க பார்த்தியா? எல்லாதுக்கு நீ தான் காரணம். இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? “ என்று கேஷவ் கேட்டதும், “ என்ன நாள் ? “ என்று மைரா குழப்பத்துடன் கேட்டாள்.
“ 25 வருஷத்துக்கு முன்னாடி என் வீட்ல, என் வாழ்க்கையில ஒரு தேவத வந்த நாள் இன்னைக்கு தான். இப்போ என்ன பாரு, நீ இப்போ என் மனைவி, என் லவ், என் குழந்தைகளோட அம்மா அப்புறம் என்னோட மிக பெரிய பலம் “ என்று சொல்லி கேஷவ் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவனை முதன்முதலாகச் சந்தித்த அந்த நாளை அவன் மறக்கவில்லை என்று மைராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ 25 வருஷத்துக்கு முன்னாடி நீ என்ன முதன்முறையா கெட்சப் சொல்லி கூப்பிட நாள் இன்னைக்கு தான் “ என்று சொல்லி கேஷவ் அவள் கன்னத்திலும் மூக்கிலும் முத்தமிட, மைராவின் கண்கள் ஈரமாவதை உணர்ந்தாள்.
“ நீ என்ன முதன்முதலா கிஸ் பண்ண அதே நாள் இன்னைக்கு தான் அம்மு “ என்று சொல்லி கேஷவ் மீண்டும் அவளை முத்தமிட ஆரம்பித்தான், இந்த முறை மைரா அவனை இழுத்து அவன் காலரைப் பிடித்து முத்தத்தில் ஆதிக்கம் செலுத்தினாள்.
“ எனக்கு இப்போ எப்படி இருக்குனு சொல்ல வார்த்தையே இல்ல. இந்த பிரபஞ்சத்துல யாரும் நீங்க என்ன லவ் பண்ற மாதிரி யாரையும் லவ் பண்ண மாட்டாங்க. நீங்க ரொம்ப ஸ்பெஷல், என் கெட்சப் நீங்க “ என்று மைரா மகிச்சியோடு சொல்ல, கேஷவ் தரையில் மண்டியிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டு பின்னர் அவளை அறைக்கு அழைத்துச் சென்றான். கேஷவ் மற்றும் மைராவைப் பார்த்ததும், லயா அவனுடன் சேர்ந்து மைராவின் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசத் தொடங்கினர்.
****************************
முன்னோட்டம்:
“ நேத்து தான் நான் உன்ன பால்கனியில இருந்து பார்த்த மாதிரி இருந்துச்சு ஆனா இப்போ நமக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இன்னைக்கு அவங்க என்ன கெட்சப் சொல்லி கூப்பிடும் போது நீ என்ன கெட்சப் சொல்லலி கூப்பிட்டதும் ஞாபகம் வந்துச்சு
