காலைச் சூரியன் ஆர்யன் மேன்ஷனின் மீது பொன்னிற நிறத்தைப் அழகாக பரப்பியது, அதன் கதிர்கள் பெரிய ஜன்னல்களின் திரைகளின் வழியாக ஊடுருவி படுக்கையில் படுத்திருந்த சஞ்சனாவின் கண்ணீர் வடிந்த முகத்தில் விழுந்தன. அவள் கன்னங்களில் இருந்த துயரத்தின் உலர்ந்த சுவடுகள் அவள் மனம் அனுபவித்த அமைதியற்ற இரவின் சான்றாக இருந்தது.
ஒரு காலத்தில், அவள் வாழ்க்கை சுதந்திரமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்ததாக இருந்தது. எதிர்காலத்திலும் அவளின் வாழ்க்கை அப்படி தான் இருக்கும் என்று அவள் நிறைய கனவு கண்டாள்.
ஒரு பெரிய மேன்ஷனில் அவள் சிக்கி கொண்டு, அவள் வாழக்கையில் இருந்த சுதந்திரம், அமைதி, சந்தோஷம் என அனைத்தையும் இழந்துவிடுவாள் என்று மூன்று மாதங்களுக்கு முன்பு யாராவது அவளிடம் சொல்லி இருந்தால் அவள் அவர்களை பார்த்து சிரித்திருப்பாள். ஆனால் விதி அவளது வாழ்க்கையில் ஒரு குரூரமான நகைச்சுவையை விளையாடியது. அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் யதார்த்தம் அவள் கற்பனை செய்ததை விட கடுமையாக தாக்கியது.
போர்வையை உதறிவிட்டு பால்கனியின் தரையில் அமர்ந்து தனது முழங்கால்களைச் சுற்றி கைகளைக் கட்டிக்கொண்டு சஞ்சனா தூரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த மேன்ஷனின் பிரம்மாண்டம் மிக பிரம்மிப்பாக இருந்தது. வெளி உலகம் மற்றும் யதார்த்தத்திலிருந்து விலகி, தனக்கே உரித்தான ஒரு தனி உலகம் போல அந்த மேன்ஷன் இருந்தது. அதன் உயர்ந்த சுவர்களுக்கு அப்பால் அவளால் எதையும் பார்க்க கூட முடியவில்லை. ஆனாலும், அவள் இருந்த அறையின் பால்கனியில் இருந்து தோட்டத்தை பருகும் போது அழகாக பூத்து குலுங்கிய பூக்களும், சுற்றிலும் கீச்சிடும் பறவைக் கூட்டங்களும் மட்டுமே அவள் மனதுக்கு அமைதியைத் தந்தன. மூச்சுத் திணற வைக்கும் வாழ்வில் ஆறுதலின் சிறு துணுக்குகளாக அந்த காலை நேர காட்சிகள் மட்டுமே அவளுக்கு கிடைத்த கணங்களாக இருந்தது.
தனது வாழக்கையை பற்றியும், இதில் ஏதேனும் மாற்றம் நடைபெறுமா என்றும் யோசித்து கொண்டிருந்தவள் அவள் அறையில் இருந்த பாத்ரூமுக்கு சென்றாள். ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் ஒரு அறை போல இருந்த பாத்ரூம் கண்ணாடி முன் நின்று தன் முகத்தை பார்த்தவள் தலையா அசைத்துவிட்டு குளித்து தயாரானாள்.
தனது அறையை விட்டு வெளியேறியவள் அவள் எப்போதும் செல்வது போல நேராக தோட்டத்திற்கு சென்றாள். அங்கிருந்த பறவைகளுக்கு உணவளித்த பின்னர், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய சுயத்தோடு இருப்பதை அந்த நேரத்தில் மட்டுமே உணர்ந்தாள்.
பறவைகள் மற்றும் பூக்களை பார்த்து தன்னை மறந்திருந்த அவளின் எண்ண ஓட்டம் கௌசல்யாவின் குரல் இடைமறித்தது. கௌசல்யா, பல ஆண்டுகளாக மேன்ஷனில் வாழ்ந்து வந்த ஒரு வயதான பணிப்பெண். அவர் சஞ்சனாவை தனது சொந்த மகளைப் போலவே நடத்தினார். கெளசல்யா மட்டுமே சஞ்சனாவுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
” சஞ்சனா மா, சார் ரெடி ஆயிட்டாரு. ப்ரேக்பாஸ்ட் சாப்பிட டைனிங் ரூம்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு மா, வாங்க போகலாம் “ என்று சொல்லி கௌசல்யா அழைத்ததும், சஞ்சனா மௌனமாக அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றாள்.
ஆர்யன் கையில் செய்தித்தாளுடன், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் இருக்கையில் அமர்ந்திருந்தான். ஆர்யனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த சஞ்சனா தனது பார்வை அவளுக்கு முன்னால் இருந்த தட்டில் மட்டுமே இருப்பதை உறுதி செய்தாள்.
“ சார், நான் ப்ரேக்பாஸ்ட் பரிமாறட்டுமா ?” என்று தயக்கத்துடன் கேட்ட கௌசல்யாவின் குரல் தான் அந்த அறையில் இருந்த நிசப்தத்தை கலைத்தது.
“ஹ்ம்ம், பண்ணுங்க ” என்று சொல்லி ஆர்யன் லேசாகத் தலையை அசைத்தான்.
கனத்த மௌனத்தில் அவர்கள் இருவரும் சாப்பிட தொடங்கினர். ஆர்யன் மட்டும் அவளை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் சஞ்சனா அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. சாப்பிட்டு முடித்ததும் வழக்கம் போல ஒன்றும் பேசாமல் ஆர்யன் எழுந்து அலுவலகம் கிளம்பி சென்றான்.
ஆர்யன் புறப்பட்டு சென்றதும் சஞ்சனா, கௌசல்யாவை நோக்கித் திரும்பினாள். “அம்மா, நான் என்னோட friend ஒருத்தர சந்திக்க வெளியே போறேன். யாருக்கும் தெரியாம போய்ட்டு சாயங்காலம் வந்துடறேன் “, என்று சஞ்சனா சொன்னதும் கௌசல்யாவின் முகம் வெளிறி போனது. “ சஞ்சு மா, நீ கண்டிப்பா போய் தான் ஆகணுமா ? சார் நீ வெளிய எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லி இருக்காரு. ஐயாவுக்குத் தெரிஞ்சா-” என்று கௌசல்யா பதறினார் ஆனால் சஞ்சனா அவரின் கையை பிடித்து அமைதிப்படுத்தினாள்.
” அம்மா நான் சீக்கிரம் திரும்பி வருவேன், நீங்க கவலைப்படாம இருங்க “, என்று சொல்லி விட்டு சஞ்சனா தனது அறைக்கு சென்று சட்டென தயாரானாள்.
பல மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக சஞ்சனா வெளியே சென்றாள். வெளயுலகத்தையும், அதன் காற்றையும் சுவாசித்தவள் தனது தோழியை சந்திக்க விரைந்து அவள் வீட்டுக்கு சென்றாள் ஆனால் அவள் அங்கு சென்ற போது வீடு காலியாக இருந்தது. அதை பார்த்து அவள் ஏமாற்றம் அடைந்தாள். ஒரு சில வினாடிகள் உறைந்து நின்றவள் பின்னர் அவளுடைய தோழி எங்கே போனாள் என்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தாள் ஆனால் யாருக்கும் அவளது தோழியை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. கனத்த இதயத்துடன் வேறு வழி இல்லாமல் மேன்ஷனுக்கு திரும்பினாள்.
அவள் வெளியே சென்ற செய்தி ஆர்யனுக்கு தெரிந்தால் சிக்கலாகும் என்று உணர்ந்து வேண்டுமென்றே ஆர்யனை சந்திப்பதை தவிர்க்க எண்ணி, அவன் அலுவலகத்தில் இருந்து வரும் முன்னே இரவு உணவை சீக்கிரமே சாப்பிட்டாள். பின்னர் அவள் தன் அறைக்குச் சென்று ஜன்னலில் சாய்ந்து நின்று கொண்டு வெளியே வெறித்துப் பார்த்தாள். கார் எஞ்சின் உறுமல் அந்த நிசப்தத்தைக் குலைத்தது, ஆர்யன் வீடு திரும்புகிறான் என்பதை உணர்ந்து அவள் இதயம் இறுகியது. ஒரு கறுப்பு நிற லம்போர்கினி அவென்டேடார் கார் வாயில் வழியாக வேகமாக சறுக்கி நின்றது. ஆர்யன் காரில் இருந்து இறங்கினான்.
அவன் வருகையை நினைத்து பீதியடைந்த சஞ்சனா தனது அறையில் இருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
கனத்த காலடியின் ஓசை அந்த தளம் முழுவதும் எதிரொலித்தது. சத்தம் அவளை நெருங்க நெருங்க சஞ்சனா கண்களை இன்னும் இறுக மூடினாள். கதவு பலத்த சத்தத்துடன் திறந்தது. சஞ்சனாவின் அறையில் நுழைந்த ஆர்யன், சுவிட்சை ஆன் செய்த போது அறை முழுவதும் வெளிச்சம் பரவியது ஆனால் அவன் முகம் கோபத்தில் இருண்டிருந்தது.
அவன் அணிந்திருந்த ப்ளேசரை கழட்டி தரையில் தூக்கி எறிந்தவன் அவன் படுக்கையை நோக்கி புயலாக சென்றான். சஞ்சனா தனது உடலை முழுவதுமாய் போர்வையால் மூடி இருந்தாள். ஆர்யன் கோவத்தில் போர்வையை இழுத்து அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான்.
” இப்படி தூங்குற மாதிரி நடிக்குறத நிறுத்து ! நீ முழிச்சு இருக்கணு எனக்கு நல்லா தெரியும் “ என்று ஆர்யன் கர்ஜித்தான்.
சஞ்சனா அவன் பிடியில் சிக்கி இருந்த அவள் கையை விடுவிக்க தவித்தாள். “என்னை விடுங்க ” என்று அவள் கெஞ்சினாள் ஆனால் அவள் வார்த்தைக்கு செவிசாய்க்காமல், “ இன்னைக்கு நீ எங்க போயிருந்த ? ” என்று ஆர்யன் கேட்டான்.
அவன் கேள்வியால் கோவமடைந்த சஞ்சனா, “ அது உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் “, என்று அதே அளவு கோவத்துடன் கத்தினாள்.
அவள் பதிலை கேட்ட ஆர்யனின் தாடை கோவத்தில் இறுகியது. ” இந்த மேன்ஷன விட்டு நீ வெளிய போக கூடாதுனு நான் சொல்லி இருக்கேன்ல ? அப்படி இருந்தும், என் அனுமதி இல்லாமல் வெளியே போக உனக்கு எப்படி தைரியம் வந்துச்சு ? உன்னோட பாதுகாப்புக்காகத் தான் உன்ன வீட்லயே இருக்க சொல்றேன், அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது ? “ என்று ஆர்யன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான்.
” நீங்க சொல்ற ரூல்ஸ் எல்லாம் follow பண்ண நான் ஒன்னும் உங்க அடிமை இல்ல, நீங்களும் இத புரிஞ்சிக்கோங்க “ என்று சஞ்சனா பதிலடி கொடுத்தாள், அவளுடைய குரலில் பலத்த எதிர்ப்பு இருந்தது.
அதுவரை யாரும் அவனை எதிர்த்து பேசி பார்த்திராத ஆர்யன், அவள் வார்த்தையை கேட்டு அவன் கண்கள் இருண்டன. ” இதுவரைக்கும் எனக்கு எதிரா பேசுற தைரியம் ஒருத்தருக்கு கூட வந்தது இல்ல ஆனா நீ … “ என்று சொன்ன ஆர்யன் தனது கோவத்தை அடக்க வெகுவாக முயற்சி செய்தான்.
” என்னை ஏன் ஒரு பணயக் கைதி மாதிரி பிடிச்சு இங்க அடச்சு வெச்சுருக்கீங்க ? “ என்று சஞ்சனா தனது விரக்தி அனைத்தையும் வெளிக்காட்டினாள்.
” நான் உன்ன எந்த விதத்துலயும் காயப்படுத்துல சஞ்சனா, அந்த எண்ணமும் எனக்கு இல்ல. அப்படி இருக்கும் போது நான் சொல்றத ஏன் கேட்க மாட்டேங்குற ? ” என்று ஆர்யன் சீறினான்.
” எனக்கு இங்க அடைஞ்சு இருக்க வேணாம். நான் திரும்பவும் வெளியே போவேன், கண்டிப்பா போவேன், என்ன உங்களால தடுக்க முடியாது.” என்று சஞ்சனா உரக்க கத்தியதும் ஆர்யன் அவனது பொறுமையை மொத்தமாக இழந்தான்.
“ நான் உனக்கு சொல்லி புரிய வைக்க முயற்சி பண்ணி வெறுத்து போயிட்டேன். இதுக்கு மேலையும் நீ பிடிவாதம் பண்ணா அப்போ உனக்கு தண்டன கொடுத்து தான் ஆகனும் “ என்று ஆர்யன் சொன்னான். அவன் வார்த்தையை கேட்டு சஞ்சனா எந்த எதிர்வினையும் ஆற்றும் முன், ஆர்யன் அவளை படுக்கையில் தள்ளி விட்டு அவள் மீது பாய்ந்தான்.
” பாஸ்டர்ட், என்ன விடு “, என்று சஞ்சனா அவன் உடல் எடையை தாங்க முடியாமல் அலறினாள். ஆர்யனின் மூச்சு கோபத்தில் அனலாய் கொந்தளித்தது. அவனது கோபம் அவன் கண்ணை மறைத்தது.
” என்ன செய்றீங்க ஆர்யன் ? தயவு செஞ்சு என்னை விட்டு விலகி போங்க, இப்படி பண்ணாதீங்க “, என்று சஞ்சனா கெஞ்ச, அவள் குரலில் பீதி எழுந்தது.
ஆனால் அவன் நிறுத்தவில்லை. அவனிடம் போராடி கொண்டிருந்தவளின் மணிக்கட்டை இறுகப் பிடித்தான், அந்தப் போராட்டத்தில், அவள் அணிந்திருந்த இரவு உடையின் துணி கிழிந்தது. அவளது அலறல் அந்த அறையை நிறைத்தது, ஆனால் ஆர்யன் அதைக் கேட்க முடியாத அளவுக்கு ஆத்திரத்தால் குருடாகிவிட்டான்.
அவள் நகர முடியாதபடி தனக்கு கீழே ஆர்யன் பிடித்தான், அவனது பலம் அவளது சிறிய உடலை ஆக்கிரமித்தது. அவனது உதடுகள் அவளது உதடுகளில் மோத, அவளது கண்ணீரின் சுவை அவன் வாயில் கசப்பாக இருந்தது.
சஞ்சனாவின் கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் வழியா ஆரம்பித்தது. அவள் விம்மல் அவன் மார்பில் அழுந்த, அவனுக்கு அடியில் அவள் நெளிந்தாள். அவள் கழுத்தில் தழும்புகள் தெரியும் அளவுக்கு முத்தமிட்டு கடித்தான், ஒவ்வொரு வினாடியும் அவனது பிடி இறுகியது, அவளுடைய மென்மையான தோலில் தனது விரக்தியை வெளிப்படுத்தினான்.
யதார்த்தம் புரிந்து அவன் என்ன செய்கிறான் என்பத அவன் உணர்ந்த போது அவன் உடலும், மனமும் நடுங்க தொடங்கியது.
மெல்ல தனது முகத்தை நிமிர்த்தி அவன் அவளைப் பார்த்த போது, அவள் உடல் நடுங்கி கொண்டிருந்தது. சஞ்சனா அவனை பார்க்காமல் அவளது முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தாள், அவளது கண்ணில் இருந்து கண்ணீர் மௌனமாக வழிந்தது. தான் செய்ததை உணர்ந்ததும் ஆர்யனுக்கு நெற்றியில் இருந்து வியர்வை வழிந்தது.
” உன்னால எனக்கு இந்த மாதிரி ஒரு காரியத்த எனக்கு செய்ய முடிஞ்சுது ஆர்யன் ? நீ ஒரு அரக்கன் “ என்று சஞ்சனா பேசும்போது குரல் உடைந்தது.
ஆர்யன் உடனே அவளிடம் இருந்து விலகினான், அவனது மூச்சு நிலையற்றதாக மாறி அவன் தடுமாறினான். படுக்கையில் இருந்து இறங்கியவன் தள்ளாடியபடி சோபாவில் சரிந்தான். சஞ்சனாவை அப்படி ஒரு நிலைக்கு தள்ளியதை நினைத்து விரக்தியில் தலைமுடியைப் பிடித்துக் கொண்டான். அவன் தனது கட்டுப்பாட்டை இழந்து அவளை காயப்படுத்திவிட்டான் என்று நொறுங்கி போனான்.
சஞ்சனா படுக்கையில் சுருண்டு போர்வையை தன்னை சுற்றி இறுகப் பற்றிக் கொண்டு அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுதாள்.
தன்னைதானே சபித்து கொண்டு முகத்தை உள்ளங்கையால் தடவிய பின்னர் ஆர்யன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான். அந்த அறையில் இருந்த ஒரு மேஜைக்குச் சென்று, அதன் டிராவில் இருந்து காயத்திற்கு போதும் மருந்தை எடுத்துக் கொண்டு மீண்டும் சஞ்சனாவிடம் படுக்கைக்குத் திரும்பினான்.
” என்னால இதுக்கு மேலையும் ..நான் உண்மையா நெனச்சு இருந்தா என்னால இதுக்கு மேலையும் பண்ணி இருக்க முடியும் ஆனா நான் வேணும்னே உன்ன இப்படி காயப்படுத்தனும்னு நினைக்கல சஞ்சனா. ப்ளீஸ் எழுந்திரு, நான் உனக்கு இந்த மருந்த போட்டு விடுறேன் “ என்று சொன்னவனின் குரலில் வருத்தம் நிறைந்திருந்தது. அனால் வேதனையில் தவித்துக் கொண்டிருந்த சஞ்சனா அவன் முகத்தை கூட பார்க்காமல், “ கெட் அவுட் மிஸ்டர் சைதன்யா ” என்று உமிழ்ந்தாள்.
அவள் கழுத்தில் இருந்த காயங்களை ஏற்கனவே பார்த்தவன் அதற்கு மறந்து போடா வேண்டும் என்று பெருமூச்சு விட்டு, ” தயவு செஞ்சு மறுபடியும் என் பொறுமையை சோதிக்காத சஞ்சனா “, என்று கூறி அவள் போர்வையை விலக்க காத்திருந்தான் ஆனால் அவள் பதிலளிக்காதபோது, அவர் போர்வையை இழுத்து, அவளுடைய தோலில் வீங்கிய தழும்புகளுக்கு மருந்தை மெதுவாகத் தடவினான். அவனது ஸ்பரிசத்தில் அவள் உடல் நடுங்க தொடங்கியது. அவன் மருந்து போட்டு முடித்ததும் மீண்டும் அவளை போர்வையால் போர்த்தி தயங்கியபடி குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான். அதன் பின்னர் மறுவார்த்தை பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.
சோர்வு அவளை நிம்மதியற்ற தூக்கத்தில் தள்ளிய வரை சஞ்சனா தலையணையில் முகத்தை புதைத்து அழுதாள்.
இதற்கிடையில், சஞ்சனாவின் அறை இருந்த தளத்துக்கு மேல்தளத்தில் இருந்த தனது அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்த ஆர்யன் அவளது அறை ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் மனம் ஒரு நிலை இல்லாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
” நான் ஏன் இப்படி பண்ணேன் ? ” என்று முணுமுணுத்தபடி விரக்தியடைந்து தன் விரல்களால் தலைமுடியை கோதினான்.
சஞ்சனாவின் மிரண்ட முகம் அவன் மனதில் பளிச்சிட்டது. அவள் அவனை எதிர்த்து போராடிய விதம், அவள் தோலில் அவன் ஏற்படுத்திய காயங்கள், அவன் உதடுகளின் ஓரத்தில் வழிந்த ரத்தம் என் அனைத்தையும் நினைத்து பார்த்த போது அவன் இதயம்நொறுங்கி போனது. அவனது வாழ்க்கையில் அப்படி ஒரு வலியை அதற்கு முன் அவன் உணர்ந்ததே இல்லை என்பது போல அவன் மனம் வருத்தம், வலி மற்றும் வேதனையால் வலித்தது.
“முட்டாள், ஆர்யன் ” என்று தன்னைத்தானே சபித்துக் கொண்டவன், “ ” இனி நான் அவ முகத்துல எப்படி முழிப்பேன் ? நான் பண்ண பாவத்த எப்படி சரி செய்வேன் ? “ என்று உடைந்து போனான்.
“ நான் இந்த அளவுக்கு வேதனையில இருக்கேன் அப்போ சஞ்சனா எவ்ளோ கஷ்ட்டப்பட்டு இருப்பா, இப்போ எவ்ளோ வேதனையில இருப்பா ? “ என்று அவளை நினைத்து வேதனைப்பட்டான்.
குற்றவுணர்ச்சி அவனை உறுத்திக்கொண்டிருக்க பால்கனியில் இருந்த சோபாவில் அவன் சரிந்தான். அவளது அழுகுரல் அவன் காதுகளில் எதிரொலித்து அவனை அலைக்கழித்தது. அவளது சிறிய உடல் அவனுக்கு அடியில் நடுங்கிய நினைவு அவனது ரத்தத்தை உறைய வைத்தது.
அன்றிரவு அவன் தூங்கவில்லை. அதற்கு பதிலாக, அவன் அங்கேயே அமர்ந்திருந்தான். ஒருபோதும் சரிசெய்ய முடியாத ஒன்றை செய்து விட்டதை, அவளது மனது உடைத்துவிட்டதையும் உணர்ந்து இரவு முழுவதும் வேதனைப்பட்டான்.
***********************
முன்னோடோம்:
” ஒருத்தி இவ்ளோ அழகா டிரஸ் பண்ணிட்டு அவர் முன்னாடி போய் நிக்குறேன் ஆனா மனுஷன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறாரு. என் கிட்ட ஒரு நாள் வசமா சிக்குவீங்க அப்போ பாத்துக்குறேன் ஆர்யன் உங்கள. இப்போ நான் கொண்டு வர இந்த காபி உங்க மனநிலைய சரி பண்ணுதானு பார்க்கலாம் “

1 comment
[…] Chapter 1 […]