Home FamilyChapter 29

Chapter 29

by Siragugal Novels
21 views

ரஞ்சித் அணைத்து ஏற்பாடும் செய்த ஒரு மணி நேரம் கழித்து, மருத்துவமனையில் டாக்டர்கள் பயன்படுத்தும் லிப்ட் அவர்கள் புறப்படுவதற்கு தயாராக இருப்பதாக ரஞ்சித் ஆர்யனிடம் தெரிவித்தான்.

சஞ்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆர்யன் லிப்டை நோக்கி நடந்தான். இருவரும் காரில் ஏறி, பின் இருக்கையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்தனர், ரஞ்சித் பயணிகள் இருக்கையில் அமர்ந்தான். கௌசல்யா வீட்டில் ஏற்பாடுகளைச் செய்வதற்காக முன்னதாகவே கிளம்பிவிட்டார்.

அவர்கள் மேன்ஷனை அடைந்ததும், கௌசல்யா அவர்களை ஆரத்தியுடன் வரவேற்றார். இருவரும் தங்கள் அறையை அடைந்ததும், சஞ்சு சுற்றும் முற்றும் பார்த்து நிம்மதியாக, பிரகாசமாக புன்னகைத்தாள்.

” எனக்கு முதல்ல குளிக்கனும் ” என்று சஞ்சு சொல்ல, ” ஹ்ம்ம்… நானும் குளிக்கணும் ” என்றான் ஆர்யன்.

சஞ்சு முதலில் குளித்து முடித்து உடை மாற்ற அலமாரியை நோக்கி நடந்தாள். அவள் உடை அணிந்து தயாராகி கொண்டிருந்த போது வேகமாக குளித்து முடித்து குளியலறையில் இருந்து இடுப்பில் வெறும் ஒரு துண்டுடன் வெளியே வந்தான் ஆர்யன். அவனும் உடை மாற்ற அலமாரி இருந்த அறைக்குள்  சென்ற போது அவனை பார்த்த சஞ்சு சட்டென்று திரும்பி கண்களை மூடிக்கொண்டாள். அதை கவனித்த ஆர்யன் அவள் அருகில் சென்று, “ என்ன பண்ற ஸ்வீட் ஹார்ட் ? “ என்று கிசுகிசுத்து அவள் காதில் மெல்ல காற்றை ஊதினான்.    

“ஆர்யன், போய் டிரஸ் போடு !” என்று அவள் கிரீச்சிட்டதும், “ ஏய் நான் டவல் கட்டி இருக்கேன்டி “ என்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு திரும்பவும் இல்லை, கண்களை திறக்கவும் இல்லை.

” ஆர்யன் மேல ஒன்னும் போடாம இருக்க “ என்று சஞ்சு சொல்ல, “ சரி இப்போ அதுக்கு என்ன ? “ என்று கேட்டு ஆர்யன் அவள் காதை லேசாக சீண்டினான்.  

” அய்யோ கடவுளே ! போடா போய் சட்டைய போடு “ என்று சஞ்சு சொன்னதும் அதிர்ச்சியடைந்த ஆர்யன், “ என்னது போடாவா ? “ என்று கேட்டு அவளை வேகமாக திருப்பினான் ஆனாலும் சஞ்சு கண்களை மூடி இருந்தாள்.  

“சஞ்சு… கண்ண திற ” என்று ஆர்யன் ஹஸ்கி குரலில் சொன்னான் ஆனால் சஞ்சு, “ முடியாது “ என்று கூறி மறுத்துவிட்டாள். தன் புன்னகையை அடக்கிக் கொண்டிருந்த ஆர்யன், ” அப்போ நாம இப்படியே இருந்தா பரவாயில்லையா உனக்கு ?” என்று கேட்டு கிண்டல் செய்தான்.

சஞ்சு கண்களைத் திறந்து மெல்ல அவனை பார்த்தாள். அவள் கன்னங்கள்  வெட்கத்தில் சிவந்திருந்தன. ஆர்யன் மெல்ல குனிந்து அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான், அவனது பற்கள் அவள் தோலை விளையாட்டாக கடித்தன. அவளை அந்த நிலையில் பார்க்கும் போது அவனின் கட்டுப்பாடு எல்லாம் பனியாய் உருகியது.

” நீ இப்படி வெட்கப்படும் போது எனக்கு அப்படியே உன் மேல பைத்தியம் ஆகுது. சரி, இப்போ சொல்லு, நான் உன்ன கட்டிப்புடிக்கட்டுமா?” என்று ஆர்யன் கேட்க சஞ்சு அவனுக்கு ஒரு சிறிய தலையசைப்பை பதிலாக அளித்தாள். உடனே ஆர்யன்  அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான். அவனது வெற்று மார்பு அவளது முன்புறத்தை அழுத்தியது, அவனது தோலின் கதகதப்பு அவளை முழங்கால்களில் பலவீனப்படுத்தியது. அவளது கைகள் இயல்பாகவே அவளை அறியாமலேயே அவன் முதுகைத் தேடி அவனை இறுக அணைத்துக் கொண்டன.

அவளது கன்னங்கள் அவன் மார்பில் உரச, அவள் விரல்கள் அவன் தோலில் உரசியது. அவளது அணைப்பு அவன் உடலில் ஹார்மோன்களை தட்டி எழுப்ப  ஆர்யனால் தாங்க முடியாமல் அணைப்பை இறுக்கினான்.

“டார்லிங்…” என்று அவன் கிசுகிசுக்க, சஞ்சு பதில் சொல்ல முடியாமல் வெறுமனே, “ஹ்ம்ம்?” என்றாள். 

” உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுதா ? “ என்று ஆர்யன் கேட்டதும், அவன் நெஞ்சில் கண்களை மூடியபடி புன்னகைத்த சஞ்சு, ” ஹ்ம்ம் ஆமா, நீ எனக்கு இன்னும் நெருக்கமா இருக்குறத உணர்றேன். உன்னோட கதகதப்பு ரொம்ப நல்லா இருக்கு “ என்று சொன்னாள்.

சஞ்சுவின் வார்த்தையை கேட்ட ஆர்யன், ” என்னோட கட்டுப்பாடு எல்லாத்தையும் நீ உடைக்குற ஸ்வீட் ஹார்ட் “ என்று மூச்சுவிடாமல் கிசுகிசுத்தான்.

ஆர்யன் மெல்ல அணைப்பில் இருந்து பின்வாங்கி அவள் உதடுகளில் முத்தமிட்டான் ஆனால் சஞ்சு அவனை விடத் தயாராக இல்லை. அவள் கைகள் அவன் தலைமுடியை பிடித்து அருகில் இழுத்து மீண்டும் அவனை முத்தமிட்டாள். அவளின் அந்த துணிச்சலான முத்தம் ஆர்யனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது, அவன் அவளை ஆழமாக, உணர்ச்சியுடன் முத்தமிட அனுமதித்தான். இறுதியாக அவர்கள் பிரிந்த போது, மூச்சிரைக்க அவன் தன் நெற்றியை அவளது நெற்றியில் சாய்த்து, “நான் போய் டிரஸ் பண்ணிட்டு வரேன்” என்று கிசுகிசுத்தான்.

சஞ்சு வெறுமனே புன்னகைத்தாள், அவள் கன்னங்கள் இன்னும் சிவந்திருந்தன, அவளுடைய இதயம் இன்னும் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

ஆடை அணிந்து அலமாரி அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன், சஞ்சு சோபாவில் அமர்ந்து அவனுக்காக காத்திருப்பதைக் கண்டான். அவன் நெருங்கியதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

” உனக்கு இப்போ தூங்கனுமா ?” என்று ஆர்யன் அவளருகில் அமர்ந்து கேட்டான். அதற்கு சஞ்சு ” இல்ல, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் “ என்று மென்மையான குரலில் சொன்னாள்.

அவள் தோளைச் சுற்றி மெல்ல அணைத்துக் கொண்டு, ” சொல்லு, நீ எதைப் பேசணும் ? “ என்று ஆர்யன் கேட்டான்.

சஞ்சு ஒரு கணம் தயங்கிய பின், ” என் மேல கோபப்படாதீங்க, சரியா? நான் சுனிதாவ சந்திக்க விரும்புறேன்.” என்று சஞ்சு கேட்டதும், ஆர்யனின் முகபாவம் சட்டென்று மாறியது. “என்ன?” என்று அவன் அதிர்ச்சியில் அவளை கேட்டான். ஆர்யன் கோவம் கொள்ளும் முன் அவன் கையை பிடித்து, ” தயவு செஞ்சு, என் மேல கோவப்படாதீங்க ஆர்யன் “ என்று அவள் விரைவாக சொன்னாள்.

அவன் நீண்ட மூச்சை இழுத்துவிட்டான், அமைதியாக இருக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிந்தது. “சஞ்சு, நீ இப்போ தான் குனமாகிட்டு வர, இப்போ இதெல்லாம் அவசியம்னு நினைக்குறியா ? “ என்று ஆர்யன் அமைதியாக கேட்டு அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான் ஆனால் சஞ்சு, “ ஆமா, எனக்கு அவள சந்திக்கணும் “ என்று உறுதியாக சொன்னாள்.

சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன், “ இன்னொரு முறை கொஞ்சம் நல்லா யோசிச்சு பாத்துட்டு அப்புறம் சொல்றியா ? “ என்று ஆர்யன் கேட்டான் ஆனால் சஞ்சு சிறிதும் யோசிக்காமல், “ இல்ல, நான் உறுதியா இருக்கேன் “ என்று பதில் சொன்னாள்.   

முழுவதுமாக அவளை நோக்கித் திரும்பிய ஆர்யன் அவளை ஒரு நொடி உற்றுப் பார்த்துவிட்டு, ” சரி ஆனா உடனே இல்ல. உனக்கு முழுசா சரியான அப்புறம் அடுத்த வாரம் பார்க்கலாம் சரியா?” என்று கேட்டான். சஞ்சு அதற்கு மெல்ல தலையசைத்து, “சரி. நீ இன்னைக்கு ஆபீஸ் போகலையா?” என்று கேட்டாள்.

 “இல்ல பேபி” என்றவன் அவள் தலைமுடியை லேசாக கோதினான்.

“ஏன் போகல ?” என்று சஞ்சு கேட்க, ” நான் ஆபீஸ் போனாலும் என் மனசு உன்ன பத்தியே நெனச்சுட்டு இருக்கும். என் மனசு இங்க சிக்கித் தவிக்கும் போது உடல் ரீதியாக அங்க இருக்குறதுல  எந்த அர்த்தமும் இல்ல அதனால நீ முழுசா குணமடையுற வர நான் இங்கேயே இருப்பேன்.” என்றான் ஆர்யன். 

சஞ்சு அவன் மேல் தலையைச் சாய்த்து புன்னகைத்தாள். “நான் நல்லா இருக்கேன் ஆர்யன். நாம ரெண்டு பேரும் ஆபீஸ் போகலாம்.” என்று சொன்னாள். அவள் சொன்னதை கேட்டதும், “ ” என்ன ? முடியவே முடியாது “ என்று  சொல்லி தலையை மறுத்து வேகமாக ஆட்டினான் ஆர்யன். ” நீ வீட்ட விட்டு காலடி எடுத்து வைக்க கூடாது. இதுல எந்த மாற்றமும் இல்ல “ என்று ஆர்யன் உறுதியாக சொன்னதும், ” ப்ளீஸ், ஆர்யன் “ என்று கெஞ்சினாள் ஆனால் ஆர்யன் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“ சரி, இன்னைக்கு ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுக்கலாம் அப்புறம் நாளைக்கு ஆபீஸ் போகலாம். சரியா?” என்று சஞ்சு மீண்டும் ஒரு முறை முயற்சிக்க அதற்கு, “பார்ப்போம்” என்றான் ஆர்யன். ஆனால் சஞ்சு அவனை முறைத்து, ” இல்ல, நாம நாளைக்கு ஆபீஸ்  போறோம். இது தான் என் முடிவு ” என்று அவனை மிரட்டினாள்.

ஆர்யன் சிரித்துக் கொண்டே அவளை அருகில் இழுத்து அவள் கழுத்தில் தன் கையை சுற்றி வளைத்து அவள் தலையின் பக்கவாட்டில் ஒரு முத்தம் பதித்தான். ” இப்போதைக்கு நீ வீட்டுக்கு வரணும்னு சொன்ன அதனால உன்ன கூட்டிட்டு வந்தேன் அதனால இப்போ போய் குட்டித் தூக்கம் போடு” என்று அவன் சொல்ல, சஞ்சு தலையசைத்துவிட்டு படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.  

இதற்கிடையில், ஆர்யன் தனது அலுவலக வேலையை பார்க்க ஆபீஸ் ரூமுக்கு சென்று ரஞ்சித்தை அங்கு அழைத்தான். 

” ரஞ்சித், போய் மிஸ்டர் சந்திரசேகர நேருல சந்திச்சு பார்ட்டிக்கு வர சொல்லி இன்விடேஷன் கொடு “ என்று ஆர்யன் சொன்னதும், ” கண்டிப்பா சார், நாளைக்கே போய் அவர சந்திக்குறேன். அப்புறம் நரேன் இன்னைக்கு நைட்டு இந்திய திரும்பி வரான் “ என்று ரஞ்சித் சொன்னதை கேட்டதும்  ஆர்யனின் முகம் லேசாக மலர்ந்தது. ” ரொம்ப நல்லது. அவனையும் வர சொல்லு ” என்று ஆர்யன்  சொன்னான். அப்போது தயங்கிய ரஞ்சித், “ சார், அவன் தனியா வரல. அவளும் அவன் கூட வரா “ என்றான்.  

இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஆர்யன் லேசாக சிரித்தான். “எதிர்பார்த்தது தான் ரஞ்சித்,  கவலைப்படாத. அவனுக்கு இன்விடேஷன் கொடு பாத்துக்கலாம் “ என்றான். 

” சரிங்க சார். அப்புறம் கௌசல்யா அம்மா கிட்ட மதிய லஞ்ச் ரெடி பண்ண சொல்லட்டுமா ? “ என்று ரஞ்சித் கேட்க, ” இல்ல, இன்னிக்கு சமைக்க வேண்டாம்னு சொல்லு. நான் பார்த்துக்குறேன் ” என்றான் ஆர்யன். அதை கேட்ட ரஞ்சித் மெல்ல சிரித்துக் கொண்டே, “ அப்படியே சொல்றேன் சார் “ என்று சொல்லி வெளியேறினான்.

தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான் ஆர்யன்.

” சார், திடீர்னு என்ன ஆச்சு ? நான் வேணும்னா உங்களுக்கு உதவி செய்யட்டுமா ? “ என்று கௌசல்யா கேட்டார் ஆனால் ஆர்யன், ” இல்ல, பரவாயில்ல. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.” என்று புன்னகையோடு சொன்னான்.

சஞ்சுவுக்கு பிடித்த கிரீமி பாஸ்தா, மாக்கரோன்கள் மற்றும் சத்தான சாலடுகள் மற்றும் சூடான சூப் ஆகியவற்றைத் தயாரிக்கும் வேலையில் அவன் ஈடுபட்டான்.

ஆர்யன் சமைத்து முடித்ததும், கௌசல்யாவை அழைத்து, ” நான் முடிச்சிட்டேன் மா, நீங்க எல்லாத்தையும் டேபிள் மேல வைங்க ப்ளீஸ் “ என்று கூறிவிட்டு படுக்கையறைக்குத் திரும்பிய போது, சஞ்சு இன்னும் நன்றாக தூங்குவதைக் கண்டான். அவள் அருகில் அமர்ந்தவன், அவள் முகத்தில் இருந்த முடியை மெதுவாக விலக்கி, “  சஞ்சு, மதிய சாப்பிட நேரம் ஆகுது, எழுந்து முகம் கழுவிட்டு வா ஸ்வீட் ஹார்ட் “ என்று மெல்ல சொன்னான்.

“எனக்குப் பசிக்குது ஆர்யன்” என்று அரைத் தூக்கத்தில் சஞ்சு முணுமுணுத்தாள். அதை கேட்டு சிரித்த ஆர்யன், ” எனக்கு தெரியும் பேபி, இப்போ சீக்கிரம் வா நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணி இருக்கேன் “ என்று கூறினான். அதை கேட்டதும் சஞ்சு உடனே எழுந்து அமர்ந்தாள். அவள் கண்கள் இன்னும் தூக்கத்தால் கனத்திருந்தன, ஆனால் ஆர்வமாக, ” என்ன சர்ப்ரைஸ் ?” என்று கேட்டாள். 

” கீழ வா. நான் உனக்காக அங்க வெயிட் பண்றேன் “ என்று சொல்லி ஆர்யன் அறையை விட்டு வெளியேறி டைனிங் ஹாலில் அவளுக்காக காத்திருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, சஞ்சு பிரகாசமாக அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள்.

” இப்போ சொல்லுங்க என்ன சர்ப்ரைஸ் “ என்று அவள் உற்சாகத்துடன் கேட்டதும் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த உணவை நோக்கி ஆர்யன் கைகாட்டினான்.

” சாப்பாடு தான் சர்ப்ரைஸா ? என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்.

“ஆமா “ என்று சிறு புன்னகையுடன் தலையசைத்த ஆர்யன், ” ஆனா உண்மையான சர்ப்ரைஸ் என்னனா – நான் தான் இதையெல்லாம் உனக்காக சமைச்சேன் ” என்று கூறினான்.

அவநம்பிக்கையில் அவள் தாடை லேசாகத் தொங்கியது. ” நீ சமைச்சியா ? நெஜமா இத நீ சமச்சியா ? ஆர் யூ சீரியஸ்?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.

” நெஜமா நான் தான் சமைச்சேன், இப்போ இதையெல்லாம் ருசிச்சு எப்படி இருக்குன்னு சொல்லு” என்று சொல்லி ஒரு தட்டை அவளிடம் கொடுத்து உணவை பரிமாறினான்.

சஞ்சு சாப்பிடும் முன் ஆழமாக மூச்சை இழுத்து நறுமணத்தை உள்ளிழுத்தாள். பின்னர் உணவை சாப்பிட ஆரம்பித்ததும் அதன் சுவையில் அவள் கண்கள் கிட்டத்தட்ட உடனடியாக ஒளிர்ந்தன.

“ஆர்யன் அட கடவுளே! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னால இவ்ளோ நல்லா சமைக்க முடியும்னு எனக்குத் தெரியாது. ரொம்ப ரொம்ப நன்றி. செம்ம ருசியா இருக்கு !” என்று அவனை பாராட்டி கொண்டே சாபிட்டாள்.

அவளது எதிர்வினையில் தெளிவாக திருப்தியடைந்தவனாக ” தேங்க்யூ ஸ்வீட் ஹார்ட் ” என்றான் ஆர்யன்.

இருவரும் ஒன்றாக மதிய உணவை அனுபவித்து சாப்பிட்டனர், ஒவ்வொரு கவளையிலும், ஒவ்வொரு புன்னகையிலும் அவர்களுக்கிடையேயான அன்பும், அரவணைப்பும் அதிகரித்தது. சாப்பிட்டு முடித்ததும், அவன் அவள் மீது காட்டிய பாசமும் அக்கறையும் பார்த்து சஞ்சுவால் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அந்தக் கணத்தில், அவள் தன் அரவணைப்பில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணும் எளிய மகிழ்ச்சியுடன் உலகில் எந்த மகத்தான ஒன்றையும் கூட ஒருபோதும் ஒப்பிட முடியாது என்று ஆர்யனுக்குத் புரிந்தது.

***********************

முன்னோட்டம்:

” ஆர்யன் சத்தியமா சொல்றேன், நீ மட்டும் எல்லாருக்கும் தெரியுற மாதிரி என்ன கடிச்சு வெச்ச, நீ எனக்கு கொடுக்குறத நானும் உனக்கு அப்படியே திருப்பி கொடுப்பேன்  “

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!