கார்ப்பரேட் உலகில் ஒரு பிரபலம் என்று போற்றப்படும் தலைசிறந்த தொழிலதிபராக இருப்பதன் எடை எப்போதும் அமைதியைக் கொண்டு வரவில்லை. ஆர்யன் சைதன்யா அதிகாரம், புகழ் மற்றும் அங்கீகாரம் என அனைத்தையும் சம்பாதித்திருந்தான் ஆனால் விதி பெரும்பாலும் அவன் நேசித்தவருடன் அமைதியான வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சியை தர மறுத்தது. அவனது உலகம் வணிகத்தில் மட்டுமல்ல, அவனது தவிர்க்க முடியாத தோற்றத்தைக் கண்டு பொறாமைப்படும் போட்டியாளர்களால் தொடர்ந்து நிழலிடப்பட்டது. பல ஆண்டுகளாக, ஆர்யன் இரண்டு வகை மக்களைக் கையாள்வதில் திறமையானவனாக வளர்ந்தான் அது அவனை அழிக்க முயன்றவர்கள் மற்றும் அவனை கவர்ந்திழுக்க முயற்சித்தவர்கள்.
அவன் எல்லாவற்றையும் சமாளித்தான், வடுக்கள் மற்றும் உத்திகள் மூலம் கற்றுக்கொண்டான். அவனது உயிர்வாழும் திறன்களில் பெரும்பாலானவை சுயமாகக் கற்றுக் கொண்டாலும், ஒரு மனிதர் அவனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்தை விட்டுச் சென்றார், அது முன்னாள் வணிக அதிபரும், ஆர்யன் மிகவும் மதித்த மனிதருமான திரு சந்திரசேகர். ஆர்யன் எதிர்க்கத் துணியாத ஒரு நபர் எப்போதாவது இருந்தால், அது DC குரூப் ஆஃப் பிசினஸின் தலைவரான சந்திரசேகர் தான்.
அவர்களுடைய உறவு, தூரமானதாகவும், சம்பிரதாயமானதாகவும் இருந்தாலும், எப்போதும் பரஸ்பர மரியாதையின் மீது கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று ஆர்யன் மனம் கலங்கியது. சந்திரசேகர் தன்னிடம் ஏதாவது கேட்டு சஞ்சனாவையும், தன் உலகத்தையும் கேள்விக்குறியாக்கி விடுவாரோ என்று பயந்தான். அது ஆரியன் கொடுக்கத் தயாராக இல்லாத விலை – வியாபாரத்திற்காகவோ, யாருக்காகவோ அல்ல.
“சார்” என்றபடி ஆபீஸ் ரூமுக்குள் ரஞ்சித் நுழைந்த போது யோசனையில் ஆழ்ந்திருந்த ஆர்யனின் சிந்தனைகள் தடைபட்டன.
” சொல்லு ரஞ்சித்?” என்று ஆர்யன் தன் எண்ணங்களிலிருந்து நிமிர்ந்து பார்த்து அவனிடம் கேட்டான்.
“ சந்திரசேகர் சார் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன். இன்னைக்கு மதியம் மூணு மணிக்கு அவரோட வீட்ல சந்திக்க போறேன் “ என்று ரஞ்சித் சொன்னதும் , ஆர்யன் மெல்லத் தலையசைத்து, ” இன்விடேஷன் கொடுத்து பார்ட்டிக்கு மட்டும் அழைப்பு கொடு, தனிப்பட்ட விஷயமா எந்த பேச்சு வார்த்தையும் வேணாம் “ என்று தெளிவாக உத்தரவிட்டான்.
“புரியுது சார்.” என்று சொல்லி அத்துடன், ரஞ்சித் அறையை விட்டு வெளியேற, ஆர்யன் மீண்டும் நாற்காலியில் சரிந்து மௌன சிந்தனையில் மூழ்கினான்.
இதற்கிடையில், லிவிங் அறையில், சஞ்சனா சோபாவில் அமர்ந்து, ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். அந்த அமைதியைக் கலைத்த வீட்டு வேலைக்காரர் பாலா, தயக்கத்துடன் வாசலில் வந்து நின்று, “ சஞ்சனா மா, ஆர்யன் சார பார்க்கணும்னு யாரோ ஒரு லேடி வந்துருக்காங்க “ என்றார்.
சஞ்சனா முகம் சுளித்து, ” ஆர்யன் வீட்ல யாரையும் சந்திக்க மாட்டாருன்னு அவங்களுக்கு தெரியாதா ? அவங்க கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்று கேட்டாள் அதற்கு பாலா, ” இல்ல மேடம் “ என்று சொன்னார்.
” அப்போ அவங்கள ஆபீஸ்ல வந்து அவர பார்க்க சொல்லுங்க. சார் இப்போ பிஸியா இருக்காருன்னு சொல்லுங்க “ என்று சஞ்சு சொல்ல பாலா உடனே சரி என்று சொல்லி வெளியேறினார் ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி, “ சஞ்சனா மா, அவங்க சார பார்த்துட்டு தான் போவேன்னு சொல்றாங்க. எவ்ளோ சொன்னாலும் போக மாட்டேங்குறாங்க. ஏதோ அவசரம்னு சொல்றாங்க “ என்று கூறினார்.
வீட்டில் இருக்கும் பொது இப்படி தொந்தரவு செய்யப்படுவதால் எரிச்சல் அடைந்த சஞ்சு, ” யார் அவங்க ? “ என்று பாலாவிடம் கேட்டாள்.
“அவங்க பெயர் சுனிதா சொன்னாங்க ” என்று பாலா சொன்னதும், அந்தப் பெயரைக் கேட்டதும் சஞ்சனாவின் கண்கள் சுருங்கின.
” ஒஹ் அந்த மேடமா ? “ என்றபடி புத்தகத்தை மூடிவிட்டு, “சரி. அவள உள்ள வர சொல்லுங்க. நான் அவ கிட்ட பேசுறேன் “ என்று சஞ்சு சொன்னாள்.
சில கணங்களுக்குப் பிறகு, சுனிதா உள்ளே நுழைந்தாள், அவள் அணிந்திருந்த ஹீல்ஸ் பளிங்குத் தரையில் ஒலி எழுப்பியபடி பிரம்மாண்டமான லிவிங் அறையில் நுழைந்தாள். சஞ்சனா ஏற்கனவே சோபாவில் ஒரு காலை மற்றொன்றின் மீது போட்டு உட்கார்ந்திருந்தாள், அவளது பார்வை குளிர்ச்சியாக, தளராமல் இருந்தது.
” சொல்லுங்க மிஸ் சுனிதா, இங்க எதுக்கு வந்தீங்க ? ” என்று சஞ்சனா கேட்ட போது அவள் குரல் அமைதியாகவும் கூர்மையாகவும் இருந்தது.
” நான் ஆர்யன சந்திக்க வந்தேன்” என்று சுனிதா நம்பிக்கையுடன் பதிலளித்தாள். அதை கேட்ட சஞ்சு, “ நீங்க சொன்னத திருத்தி சொல்லுங்க, அவர் உங்களுக்கு மிஸ்டர் சைதன்யா இல்ல சார் சொல்லுங்க “ என்றாள்.
சஞ்சுவின் வார்த்தையை கேட்டு சுனிதாவின் உதடுகள் குறும்புச் சிரிப்பில் வளைந்தன. ” நீ அவரோட PA தானே? அப்போ உன்னோட அந்த வேலைய மட்டும் பாரு, நான் ஆர்யன் கிட்ட பேசுறேன் ” என்று சொன்னாள். சஞ்சனாவின் கண்கள் இமைக்கவில்லை. ” அவர் கிட்ட என்ன சொல்லனும்னு சொல்லுங்க, நான் அவருக்கு தெரியப்படுத்துறேன் “ என்று கூறினாள் அதற்கு சுனிதா உடனே, “ இது ரொம்ப பர்சனல் “ என்றாள்.
பர்சனல் என்ற வார்த்தையை கேட்டதும் சஞ்சு கோவத்தில் பற்களை கடித்தாள். ” உங்களுக்கும், ஆர்யனுக்கும் இடையில தனிப்பட்ட முறையில பேச எதுவும் இல்ல அதனால ஒண்ணு நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க இல்லாட்டி கிளம்பி போங்க.” என்று உறுதியாக கூறினாள் சஞ்சு.
” அதை முடிவு செய்ய நீ யார் ?” என்று சுனிதா கேட்க, “ அது தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறீங்க ? “ என்றாள் சஞ்சு அமைதியாக.
“நீ அவர் கிட்ட இருந்து விலகி இரு, அது தான் உனக்கு நல்லது. ஆர்யன் எனக்கு தான் சொந்தம். அவர் என்ன லவ் பண்றாரு, எனக்கு ஏற்கனவே ப்ரொபோஸ் பண்ணாரு. அதனால நீ வாய மூடிட்டு அமைதியா இரு. நானே அவர கூப்பிடுறேன் “ என்று சீரிய சுனிதா மாடியை பார்த்தபடி, “ ஆர்யன்… ஆர்யன் “ என்று உரக்க அவனை அழைத்தாள்.
சஞ்சனா அவளை முறைத்துக் கொண்டே நின்றாள். அவளின் தோற்றம் பார்க்க அபாயகரமானதாக இருந்தது. அவள் கண்களுக்கு அப்போது சக்தி இருந்திருந்தால் சுனிதா அப்போதே சாம்பலாகியிருப்பாள்.
” அவர பெயர் சொல்லி கூப்பிடாத, உன்ன நான் எச்சரிக்கிறேன். உனக்கு அவர பார்க்கணும் அவ்ளோ தானே ? இங்கேயே இரு, நான் அவர வர சொல்றேன் “ என்று கர்ஜித்து விட்டு சஞ்சு திரும்பி ஆபீஸ் ரூமை நோக்கி நடந்தாள். ஆர்யன் தனது லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்.
சஞ்சு ஒரு வார்த்தையும் பேசாமல் அவன் மடியில் அமர்ந்து அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளை வளைத்துக் கொண்டாள்.
” என்னடா இது? என் டார்லிங் ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கா ? ” என்று ஆர்யன் சற்றே வேடிக்கையாகக் கேட்டான். அதற்கு சஞ்சு அவனிடம், ” உங்கள சந்திக்க ஒருத்தர் வந்திருக்காங்க ,” என்று கிசுகிசுத்து தன்னுடைய தலையை அவனுடைய தோளில் சாய்த்தாள்.
ஆர்யன் முகம் சுளித்து, “வீட்லயா ? நான் இங்க யாரையும் சந்திக்க மாட்டேனே. அவங்கள போக சொல்லு. வந்து ஆபீஸ்ல என்ன பார்க்க சொல்லு “ என்று கூறினான்.
“நான் கூட சொன்னேன் பா ஆனா அவங்க பிடிவாதமா உன்ன பாத்துட்டு தான் போவேன்னு சொல்றாங்க அதனால நீ வா இந்த ஒரு முறை “ என்று சொல்லி சஞ்சு குனிந்து அவன் கழுத்தில் முத்தமிட்டு அவளுடைய உதட்டுச்சாயத்தின் தடயத்தை விட்டுச் சென்றாள்.
” நீ இப்படியே கிஸ் பண்ணிட்டு இருந்தா அப்புறம் நான் அவங்கள பார்க்க வராம நம்ம ரூமுக்கு உன்ன தூக்கிட்டு போயிடுவேன்” என்று முணுமுணுத்த ஆர்யனின் குரல் தழுதழுத்தது. அதற்கு சஞ்சுவும், ” எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல ஆனா அதுக்கு முன்னாடி உன்ன பார்க்க வெயிட் பண்றவங்கள அனுபிட்டு நம்ம ரூமுக்கு போலாம் “ என்று கூறினாள்.
சஞ்சுவின் வார்த்தையை கேட்டதும், “ அப்படியா ? “ என்று உற்சாகமடைந்த ஆர்யன், “ அப்போ வா போகலாம் “ என்று சொன்னான்.
சஞ்சு அவன் மடியில் இருந்து இறங்கியதும் ஆர்யன் முன்னால் நடக்க, சஞ்சனா அவனை பின்தொடர்ந்தாள், அவள் உதட்டில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது. அவர்கள் லிவிங் அறைக்குள் நுழைந்த கணம், அவன் உறைந்து போனான்.
சோபாவில் அமர்ந்திருந்த சுனிதா சுயதிருப்தியுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டாள்.
ஆர்யன் சஞ்சனாவை நோக்கி லேசாகத் திரும்பினான், அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு தோள்களைக் குலுக்கினாள். ஆர்யன் தாடையைக் கடித்துக் கொண்டு எரிச்சலுடன் கனத்த காலடிகளுடன் முன்னால் நடந்தான். சஞ்சனா சுவற்றில் சாய்ந்து கொண்டு நடக்கப் போவதை ரசிக்க ஆவலாய் இருந்தாள்.
ஆர்யன் கோபத்தில் கண்கள் சுருங்க சுனிதாவின் எதிரே அமர்ந்து, “ நீ ஏன் இங்க வந்த ? “ என்று கேட்டான்.
“ஆர்யன்… தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க-” என்று சுனிதா பேச ஆரம்பித்ததும், “ என்ன அப்படிக் கூப்பிடாத. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க மட்டும் தான் என்ன அப்படி கூப்பிட உரிமை இருக்கு “ என்றான் ஆர்யன்.
“நீங்க கோபமா இருக்கீங்கனு எனக்குத் தெரியும். ஆனா ப்ளீஸ், நான் ரொம்ப வருத்தப்படறேன்.” என்று சுனிதா கூறினாள் அதற்கு ஆர்யன் உடனே, ” மன்னிப்பு கேட்டு முடிஞ்சுதுனா நீ கிளம்பலாம். உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒண்ணுமில்ல.” என்றான் அருவருப்புடன்.
சுனிதாவின் கண்கள், மௌனமாக நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த சஞ்சனாவை நோக்கிச் சென்றன, பின்னர் ஆர்யனை நோக்கித் திரும்பியது.
” நாம தனியா பேசலாமா? தயவு செஞ்சு அவள போகச் சொல்லுங்க ” என்று சுனிதா சொல்ல, ஆர்யனின் முகம் கல்லாக மாறியது. ” என் வீட்ல என்கிட்டே தனியா பேச நீ யாரு ?” என்றான்.
” எதுவா இருந்தாலும் சரி, அது நமக்குள்ள தான் இருக்கனும். எனக்கு ஒரு நிமிஷம் உங்க கிட்ட தனியா பேச அனுமதி கொடுங்க ப்ளீஸ், அவள போக சொல்லுங்க “ என்று சொல்லி சுனிதா எழுந்து அவன் அருகில் செல்ல முயன்றால் ஆனால், ” இன்னொரு அடி எடுத்து வைக்காதே ” என்ற ஆர்யனின் குரல் இடித்தது.
சுனிதா உறைந்து போய் மெதுவாக பின்னால் உட்கார்ந்தாள், அவளுடைய கண்கள் தற்செயலாக அவன் கழுத்தில் இருந்த லிப்ஸ்டிக் அடையாளத்தைப் பிடித்தன. உடனே அவள் முகம் ஆத்திரத்தில் எரிந்தது.
சஞ்சனா ஆர்யனை நோக்கி நடந்தாள் ஆனால் அவள் கண்கள் இன்னும் சுனிதாவின் மீதே நிலைத்திருந்தன.
” பார்த்தியா ? நான் தான் சொன்னேன்ல, அவர் பிஸியா இருக்காருனு அதுவும் இல்லாம யாரையும் அவர் வீட்ல சந்திக்க மாட்டருன்னு கூட சொன்னேன் ஆனா நீ தான் கேட்கல “ என்று சொல்லி சஞ்சு ஆர்யனின் மடியில் அமர்ந்து, ” நான் சொல்றது சரி தானே டார்லிங்?” என்று அவனை பார்த்து வசீகரமான குரலில் கேட்டாள்.
ஆர்யன் ஒரு கணம் திகைத்தாலும், சட்டென்று புன்னகையை மறைத்துக் கொண்டு தலையசைத்து, ” நீ சொல்றது சரி ஸ்வீட் ஹார்ட் “ என்று பதில் சொன்னான்.
சுனிதாவின் கண்கள் அவநம்பிக்கையில் விரிந்தன. ” ஆர்யன் என்ன இது? அவள ஏன் உங்க மடியில உட்கார வெச்சுருக்கீங்க ?” என்று கேட்டாள் அதற்கு ஆர்யன் சஞ்சனாவின் கன்னத்தில் தன் விரல்களை மெதுவாக வருடி புன்னகைத்து, ” என் வீடு, என் …. “ என்று இழுத்த ஆர்யன் சஞ்சுவை பார்த்து கண்ணடித்து விட்டு, “ இங்க என்ன கேள்வி கேட்க நீ யார்?” என்று சுனிதாவை கேட்ட போது அவன் புன்னகை மறைந்தது.
” இப்ப வெளியே போ. கவனமா கேளு, இனி ஒரு நாளும் என் வீடு இல்ல ஆபீஸ் பக்கம் வரக் கூடாது. என் கம்பெனி கூட உனக்கு இருந்த ஒப்பந்தம் எல்லாத்தையும் ரத்து பண்ணிட்டேன் “ என்று ஆர்யன் கர்ஜித்தான்.
சுனிதா எழுந்து நின்று சஞ்சனாவை முறைத்தாள், ஆனால் ஆர்யனின் அசைக்க முடியாத பார்வை அவளை அமைதிப்படுத்தியது. மறுவார்த்தை பேசாமல் அவள் திரும்பி புயலாக வெளியேறினாள்.
ஆர்யன் குறும்புத்தனமாக சஞ்சனாவின் இடுப்பை கிள்ளி அவளை சிலிர்க்க வைத்தான். அந்த ஒலி மென்மையாக இருந்தாலும், சுனிதாவின் கவனத்தை ஈர்க்க முடிந்தது, அவள் கதவுக்கு அருகில் சிறிது நேரம் நின்று அவர்களை பார்த்துவிட்டு பின்னர் வெளியேறினாள்.
சஞ்சனா கண்கள் சுருங்க ஆர்யனை நோக்கித் திரும்பி, ” என்ன ஏன் கிள்ளுனீங்க ?” என்று கேட்டாள்.
” இப்போ நீ என்ன பண்ண ?” என்று ஆர்யன் ஒரு கிண்டல் புன்னகையுடன் கேட்டதும், “நான் என்ன பண்ணேன் ?” என்று அவளும் ஒன்றும் தெரியாதவள் போல அவனை கேட்டாள்.
” என் கழுத்துல உன்னோட லிப்ஸ்டிக் அடையாளத்த விட்டுட்டு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்க போல” என்று தலையை லேசாக சாய்த்து அந்த சிவப்புக் கறையைக் காட்டினான் ஆர்யன்.
சஞ்சுவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ” உனக்கு எப்படித் தெரியும்?” என்று அவனை கேட்டாள்.
“உன்ன பத்தி எனக்குத் தெரியாதுனு நெனச்சியா ? அவள பொறாம பட வெச்சதுல உனக்கு சந்தோஷமா ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ நான் ஏன் அவள பொறாம பட வைக்கணும் ? அவள ஒன்னும் செய்யாம விட்டதுக்கு அவ தான் சந்தோஷப்படனும் “ என்றாள் சஞ்சு.
“அவள பத்தி நாம பேச வேண்டாம், என்ன பார்க்க வந்தவங்கள அனுப்பின அப்புறம் நம்ம ரெண்டு நம்ம ரூமுக்கு போகலாம்னு நீ சொன்ன. இப்போ அவ போயிட்டா அதனால நீ சொன்ன வார்த்தைய காப்பாத்து “ என்று ஆர்யன் உருதோயான குரலில் கூறினான்.
” நான் ஒன்னும் அத மறுக்கலையே ” என்று சஞ்சு ஒரு புன்னகையுடன் சொன்னதும், “ அப்போ வா போகலாம் பேபி ” என்று சொல்லி அவள் பதிலுக்கு காத்திராமல் ஆர்யன் அவளை மணப்பெண் பாணியில் அள்ளிக் கொண்டு சென்றான். அவர்கள் அறையை அடைந்ததும் சஞ்சனா சிரித்துக் கொண்டே காலால் பெட்ரூம் கதவை உதைத்து திறந்தாள். ஆர்யன் உள்ளே நுழைந்து பின்னோக்கி உதைத்து கதவை மூடினான்.
ஆர்யன் அவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்ததும், அவனது உதடுகள் தீவிரமாக அவளது உதடுகளில் மோதின. அவன் அவள் கழுத்துக்கும் தோளுக்கும் நகர்ந்து, அவளது மென்மையான சருமத்தில் செல்லமான காதல் கடிகளை விட்டுச் சென்றான்.
” நீ என்ன கொல்றடி, நான் அப்படியே உன் மேல பைத்தியமா இருக்கேன் ” என்று முத்தங்களுக்கிடையில் ஆர்யன் முணுமுணுத்தான்.
” ஆர்யன் சத்தியமா சொல்றேன், நீ மட்டும் எல்லாருக்கும் தெரியுற மாதிரி என்ன கடிச்சு வெச்ச, நீ எனக்கு கொடுக்குறத நானும் உனக்கு அப்படியே திருப்பி கொடுப்பேன் ” என்று மூச்சு விடாமல் எச்சரித்தாள் சஞ்சனா.
” ஓகே ஸ்வீட் ஹார்ட், நான் ரெடி ” என்று குறும்புச் சிரிப்புடன் பதிலளித்தவன் மீண்டும் அவள் முத்தமிட்டு விழுங்கினான்.
****************************************
முன்னோட்டம்:
“குடிக்க என்ன வேணும் ? ஹாட் சாக்லேட்? காபி ?”
“எனக்கு வேணும்… ஆர்யன்”

1 comment
[…] Chapter 30 […]