பார்ட்டி நடந்த அன்று இரவு ஆர்யன் மேன்ஷனை விட்டு வெளியேறிய மாயா நேராக கிளப்பிற்கு சென்றாள். அங்கு அவளுடைய தோழிகள் ரியா மற்றும் லேகா ஏற்கனவே அவளுக்காக காத்திருந்தனர். அவர்களை ஒரு பார்வை கூட பார்க்காமல் பார்டெண்டரிடம் சென்று, “எனக்கு ஏதாவது ஸ்ட்ராங்கா கொடுங்க” என்று கேட்டு அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட ஷாட் குடித்தாள்.
அப்போது அவளுடைய மொபைல் ஒலிக்க, அவள் “ ஹலோ “ என்று வெறுப்பான குரலில் பதிலளித்தாள்.
” மாயா, நீ எங்க இருக்க?” என்று சந்திரசேகரின் கவலையான குரல் கேட்டதும், “அப்பா, தயவு செஞ்சு என்ன தனியாக விடுங்க. எனக்கு இப்போ கொஞ்சம் தனிமை வேணும் “ என்று கத்தினாள். அதற்கு அவர், “மாயா, நான் சொல்றத கேளு, நீ வீட்டுக்கு வா நாம பேசலாம். அப்பா இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்குறேன் “ என்று அவளை சமாதானம் செய்ய முயன்றார் ஆனால் அவள் “நீங்க கவலைப்படாதீங்க, இனி இத நான் பார்த்துக்குறேன், ” என்றாள்.
“மாயா, ப்ளீஸ். நான் சொல்றத கேளு ” என்று சந்திரசேகர் கெஞ்சினார் ஆனால் அவள், “ நிறுத்துங்க அப்பா. இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க “ என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் குடிக்க ஆரம்பித்தாள்.
ரியா அவளை நெருங்கி, “மாயா, என்ன ஆச்சு ?” என்று கேட்டதும், ” இன்னைக்கு ஆர்யனோட முதல் கல்யாண நாள், பார்ட்டி அதுக்காக ஏற்பாடு பண்ணி இருந்தான் “ என்றாள் மாயா கசப்புடன்.
அவள் சொன்னதை கேட்டு ரியாவும் லேகாவும் அதிர்ச்சியடைந்தனர்.
“அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சா ? ஆனா அத ஏன் ரகசியமா வெச்சுருந்தான் ? “ என்று லேகா வியப்புடன் கேட்டதும், “சும்மா நாடகம் போடுறான்னு நினைக்குறேன் ” என்று ரியா முணுமுணுத்தாள்.
” இல்ல, அவன் மீடியா எல்லாரையும் வர சொல்லி எல்லார் முன்னாடியும் இத சொன்னான். என் அப்பாவுக்கும் சமீபத்துல தான் இது தெரிஞ்சி இருக்கு “ என்று மாயா சொல்ல, “அப்போ உன் அப்பா உன்கிட்ட சொல்லலையா?” என்று ரியா கேட்டாள்.
“அவர் ஒரு பிளான் பண்ணி இருக்காரு ஆனா அதுக்கு முன்னாடி ஆர்யன் முந்திகிட்டான் “ என்று மாயா கடுப்புடன் சொன்னதும், “ஸாரி மாயா, அவன் பின்னாடி போறத நிறுத்த சொல்லி நாங்க உனக்கு பல முறை சொன்னோம். அதுக்கு பதிலா உன் வாழ்க்கையில கவனம் செலுத்து ” என்று லேகா மென்மையாக சொல்லி புரியவைக்க முயன்றாள்.
“ உன்ன உண்மையா லவ் பண்ண தயாரா இருக்க ஒருத்தர கண்டுபிடி மாயா. நீ சந்தோஷமா இருக்க பாரு “ என்று ரியாவும் சொல்ல, ” விவான் பத்தி கொஞ்சம் நெனச்சு பாரு, அவன் இன்னும் உன் மேல அக்கறையா இருக்கான். இப்போ உடனே முடிவு எடுக்க வேணாம் ஆனா கொஞ்ச நாள் நிதானமா இரு அப்புறம் முடிவு எடு “ என்று லேகா சொன்னாள்.
தன் தோழிகளின் வார்த்தையை கேட்ட மாயா, “ வாய மூடுங்க, ஆர்யனையும், அவளையும் நான் சும்மா விடமாட்டேன். அவன் எனக்கு கிடைக்கலனா வேற யாருக்கும் கிடைக்க கூடாது. நான் அவன கொன்னுடுவேன் “ என்று சீறினாள்.
“மாயா! நீ இப்போ குடிச்சு இருக்க. முட்டாள்தனமா பேசாத, சும்மா இரு “ என்று ரியா அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.
மாயா அவர்களை பொருட்படுத்தாமல் பார்டெண்டரிடம் மேலும் பானங்கள் கேட்டு குடிக்க ஆரம்பித்தாள். சற்று தொலைவில் இருந்து நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விவான் தன் நண்பனிடம் ஒரு சிறிய பொட்டலத்தை கொடுத்து, பெண்கள் மூவரின் பானத்தில் கலக்கும்படி சொல்லிவிட்டு பெண்களை அணுகினான்.
“ஹாய் மாயா” என்று விவான் சொல்ல, அவள் அவனை அலட்சியம் செய்தாள்.
“ஹாய் விவான், அவ கொஞ்சம் வருத்தத்துல இருக்கா. நீ தப்பா எடுத்துக்காத “ என்று ரியா சொன்னாள். அதை கேட்டு, “புரியுது.” என்று சொல்லி விவான் மாயாவிடம் திரும்பி, “நான் ஏதாவது உதவி செய்ய முடியும்னா சொல்லு. எதுவா இருந்தாலும் உன் சந்தோஷத்துக்காக செய்றேன் ” என்று கூறினான்.
நேரம் செல்லச் செல்ல பெண்கள் மூவருக்கும் போதை அதிகரித்தது.
” போதும் மூணு பேரும் வழக்கத்த விட அதிகமா குடிச்சிட்டீங்க “ என்று விவான் அவர்களை நிறுத்த முயன்றான் ஆனால் மாயா, “ கடைசியா ஒரு ஷாட் விவான்,” என்று கேட்டு போதையில் தடுமாறினாள்.
“சரி. ஒன்னு மட்டும். அதுக்கு மேல கேட்கக் கூடாது “ என்று விவான் சொன்னதும், “ நீ நல்லவான் விவான்” என்று ரியா சிரித்தாள்.
விவான் பார்ட்டென்டரை பார்த்து மூவரின் பானத்திலும் அவன் கொடுத்த போதை மருந்தை கலந்து கொடுக்க ஜாடை காட்டினான். பெண்கள் அதை குடித்ததும் விரைவில் தள்ளாடத் தொடங்கினர், விவான் அவர்களை காரில் ஏற உதவி, பின்னர் அவர்களை லேகாவின் அழைத்துச் சென்றான். அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, மெதுவாகப் படுக்க வைத்தான்.
“குட் நைட், மூணு பேரும் நல்லா தூங்குங்க. காலையில எழுந்ததும் எனக்கு போன் பண்ணுங்க” என்று விவான் சொன்னதும், “குட் நைட் விவான். ரொம்ப தேங்க்ஸ்” என்று லேகா முணுமுணுத்தாள்.
விவான் வெளியே சென்று அவர்கள் முழுமையாக மயக்கமடையும் வரை காத்திருந்தான். பின்னர் உள்ளே சென்று மாயாவை அடுத்த அறைக்கு தூக்கி சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.
“என்ன மன்னிச்சிடு மாயா பேபி, ஆர்யனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு தெரிஞ்ச அப்புறமும் உன்னால அவன விட முடியாதுனா அப்போ நானும் உன்ன மாதிரி தான். ஆர்யன் உனக்கு கிடைக்கலனா நீ அவன கொல்ல நினைக்குற ஆனா நான் கொஞ்சம் வித்தியாசமானவன். நான் உன்ன கொல்ல மாட்டேன், ஆனா உன்ன எனக்கு சொந்தமாக்குவேன். போர், காதல் ரெண்டுலையும் எல்லாமே நியாயம் தான். ஹேப்பி முதல் இரவு மாயா ” என்று சொல்லி மாயாவின் மயக்க நிலையைப் பயன்படுத்திக் கொண்டான். பின்னர் முன்பு போலவே அவளுக்கு ஆடை அணிவித்து, வெளியேறுவதற்கு முன்பு அவளை மற்றவர்களுடன் மீண்டும் படுக்க வைத்தான்.
அவன் வெளியே சென்று தனது நண்பனை சந்தித்ததும், “என்ன பண்ண விவான்?” என்று அவன் நண்பான் கேட்டான்.
” ரொம்ப நாள் முன்னாடியே செய்யாம விட்டத இப்போ பண்ணிட்டேன் “ என்று விவான் சொல்ல, “ அவ கண்டுபிடிச்சிட்டா என்ன செய்வ ?” என்று அவன் நண்பன் கேட்டான்.
“வாய்ப்பே இல்லை. மாயாவுக்கு சந்தேகம் வந்தாலும் அது என் மேல இருக்காது, இப்போ என்ன திரும்பவும் கிளப்புக்கு கூட்டிட்டு போ “ என்று விவான் கூறினான்.
விவான் கிளப்புக்குத் திரும்பி இரவை அங்கேயே கழித்தான். மறுநாள் மதியம், ரியாவும் லேகாவும் எழுந்து புத்துணர்ச்சி பெற்று மாயா இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர்.
“மாயா, எழுந்திரு” என்று ரியா அழைத்ததும், மாயா அசைந்து எழுந்து உட்கார்ந்தாள், ஆனால் அடிவயிற்றில் ஏற்பட்ட வலியால் துடித்தபடி சட்டென்று படுத்துக் கொண்டாள்.
“மாயா, என்ன ஆச்சு ?” என்று ரியா கேட்க, மாயா அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு “வலிக்குது ” என்றாள்.
“ஒருவேளை உனக்கு பீரியட்ஸ் வரப்போகுதா ” என்று லேகா கேட்டதும், “இல்ல, கொஞ்ச நாள் முன்னாடி தான் வந்துச்சு “ என்றாள் மாயா.
“சரி நீ குளிச்சிட்டு வா அதுக்கு அப்புறம் டாக்டர்கிட்ட போவோம்.” என்று லேகா சொல்ல, மாயா மெல்ல தலையசைத்துவிட்டு பாத்ரூம் நோக்கி நடந்தாள். குளித்து உடை மாற்றி உடை மாற்றிய பிறகு அமைதியாக உட்கார்ந்தாள்.
“ இந்த வலி புது மாதிரி இருக்கே, நேத்து நைட்டு என்ன நடந்துச்சு ? “ என்று மாயா வியந்தாள்.
“லேகா, எப்படி வீட்டுக்கு வந்தோம்?” என்று மாயா கேட்டதும், “ நாம நிறைய குடிச்சிட்டோம். நான் கொஞ்சம் சுயநினைவோட இருந்தேன் ஆனா நீங்க ரெண்டு பேரும் போதையில மயங்கிட்டீங்க. விவான் நம்ம மூணு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு கிளம்பினான். நாம எழுந்த உடனே போன் பண்ண சொன்னான் “ என்று லேகா கூறி, விவானின் எண்ணை டயல் செய்த போது ஒரு பெண் பதில் சொன்னாள்.
“ஹலோ, யார் நீங்க ? நான் விவான் கிட்ட பேசலாமா?” என்று லேகா கேட்டதும், “ அவன் தூங்குறான், அப்புறம் பேச சொல்றேன் ” என்றாள் அந்தப் பெண்.
” எங்க இருக்கான் அவன்?” என்று லேகா மீண்டும் கேட்க, “அவன் நைட்டு கிளப்புல தங்கிட்டான், இன்னும் இங்க தான் இருக்கான் “ என்று அந்த பெண் கூறினாள்.
லேகா அழைப்பை துண்டித்ததும் அந்தப் பெண் விவானிடம் திரும்பி மொபைலை கொடுத்தாள்.
” ரொம்ப நன்றி “ என்று விவான் சொன்னதும், “ நீயே ஏன் பேசல? ” என்று அந்த பெண் கேட்டாள்.
“அதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம். பணத்த எடுத்துட்டு கிளம்பு. யாராவது கேட்டா, நான் நைட்டு முழுக்க கிளப்புல தங்கி இருந்தேன்னு சொல்லு “ என்று விவான் சொன்னான். அவள் தலையசைத்து பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.
லேகாவின் வீட்டில், “ என்ன ஆச்சு ?” என்று மாயா கேட்க, “ நம்ம மூணு பேரையும் வீட்ல விட்டுட்டு அவன் கிளப்புக்கு போய் இருக்கான். யாரோ ஒரு பொண்ணு தான் பேசினா. அவன் இன்னும் தூங்கிட்டு இருக்கான்னு சொன்னா.” என்று லேகா விளக்கமாக சொன்னாள்.
“ அப்போ அவன் எங்கள இங்க விட்டுட்டு கிளம்பி போயிட்டான். ஒருவேளை நான் தான் அதிகமா யோசிக்கிறேன் போல. இது சாதாரண வலியா தான் இருக்கும் “ என்று மாயா மனதில் நியாயப்படுத்திக் கொண்டு தனது மொபைலை பார்த்த போது அவளுடைய தந்தையிடம் இருந்து நூற்றுக்கணக்கான மிஸ்ட் கால்ஸ் மற்றும் மெசேஜ் இருந்தது.
” இப்போ உன்னோட அடுத்த பிளான் என்ன மாயா?” என்று லேகா கேட்டதும், “அவன் ARCயோட 50%shares அவளுக்கு கொடுத்துட்டான். அவளோட மாமா பையன CEOவா நியமனம் பண்ணிட்டான். ரொம்ப புத்திசாலித்தனமா விளையாடி இருக்கான் ஆனா நான் பார்ட்னர்ஷிப் கையெழுத்து போட்டு இருக்கேன். நான் ARC டவர்ஸ்ல இருந்து வேலை செய்வேன். நான் ஏதாவது பெருசா செய்வேன். அவள ஒவ்வொரு நிமிஷமும் அழ வைப்பேன். அவளே ஆர்யன விட்டு போவா. நான் தான் மிசஸ் ஆர்யனா இருக்க முடியும் “ என்று பற்களை கடித்து சொன்னாள்.
“மாயா, ஆர்யன் விஷயத்துல நீ போதுமான நேரத்த வீணடிச்சுட்டனு புரியலையா ? நீ DC குழுமத்தோட CEO இப்போ. உன் அப்பா உனக்கு இளவரசன் மாதிரி ஒரு மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணுவாரு, கொஞ்சம் யோசிச்சுப் பாரு.” என்று லேகா சொன்னதும், “லேகா, இன்னும் ஒரு வார்த்தை பேசுன, இது தான் நாம சந்திக்குறது கடைசி முறையா இருக்கும் ” என்று மாயா எச்சரித்தாள்.
” சரி, டென்ஷன் ஆகாத, எனக்கு தோணுன விஷயத்த சொன்னேன். நான் எப்பவும் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் “ என்று லேகா சமாதானம் செய்தாள்.
“இந்த வாரம் உங்க கூடவே இருப்பேன்” என்று முடிவு செய்து அவர்களிடம் சொன்ன மாயா பின்னர் தனது தந்தையை அழைத்து தனது திட்டங்களை அவரிடம் தெரிவித்தாள். தோழிகளுடன் நேரம் செலவழித்தால் நன்றாக இருக்கும் என்று நம்பிய சந்திரசேகர், அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஒப்புக்கொண்டார்.
ஆர்யனும் சஞ்சனாவும் தங்கள் பாதுகாவளர்களின் பலத்த பாதுக்காப்புடன் கோயிலை சென்றடைந்தனர். அவர்களின் திருமணம் பற்றி தெரிய வந்த பிறகு மீடியா அவர்களை பின்தொடர ஆரம்பித்ததால் கோவிலுக்குச் செல்வதற்குக் கூட பாதுக்காப்பு தேவைப்பட்டது. ஆனால் கோவிலுக்குள் சென்ற பிறகு ஒளிரும் கேமராக்கள் மற்றும் மீடியா ஆட்களிடம் இருந்து விலகி இருவரும் அமைதியின் ஒரு அரிய தருணத்தை அனுபவித்தனர்.
பூஜை மற்றும் பிரார்த்தனையை முடித்துவிட்டு, கோவில் வளாகத்தின் நிழலான மூலையில் இருவரும் அமைதியாக அமர்ந்தனர்.
சஞ்சனா ஆர்யன் பக்கம் திரும்பி மெல்லிய புன்னகையுடன் அவன் நெற்றியில் விபூதியை வைத்தாள். பதிலுக்கு ஆர்யன் ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து கவனமாக அவள் உச்சி வகுட்டில் வைத்தான்.
” எனக்கு ஒரு மாதிரி எல்லாமே வித்தியாசமா இருக்கு, இப்போ தான் கல்யாணம் ஆனா மாதிரி இருக்கு “ என்று சஞ்சு சொல்ல, “எனக்கும் அப்படித்தான் இருக்கு “ என்றான் ஆர்யன்.
“நாம ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு இப்போ தான் முதல் முறை வந்துருக்கோம் “ என்று சஞ்சு அவனையே பார்த்துக் கொண்டே சொன்னாள். அதை கேட்ட ஆர்யன், “சந்தோஷமா இருக்கியா ?” என்று கேட்டான்.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… அதே சமயம் பயமாவும் இருக்கு ” என்று சஞ்சு சொன்னதும், “ஏன்?” என்று புருவங்கள் லேசாக சுருங்க கேட்டான்.
” தெரியல “ என்று சஞ்சு தோள்களை குலுக்கினாள். ஆர்யன் தன் விரல்களால் அவளது கன்னத்தை வருடி, ” ஒண்ணும் ஆகாது. கவலைப்படுறதுக்கு பதில் நம்ம சந்தோஷமா நிகழ்காலத்த அனுபவிப்போம் “ என்று கூறினான் ஆர்யன்.
பின்னர், அவர்கள் வீடு திரும்பியதும் கௌசல்யா விருந்து சமைத்து அவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்தார். அவர்கள் உள்ளே நுழைந்தபோது பாரம்பரிய உணவுகளின் நறுமணம் காற்றை நிரப்பியது.
” நேத்து என்னால உங்களுக்கு எதுவும் சமைச்சு கொடுக்க முடியல அதனால இன்னைக்கு விருந்து ஏற்பாடு பண்ணிட்டேன் என்று சொல்லி கௌசல்யா உணவை மேஜை மீது வைத்தார்.
” ரொம்ப நன்றி மா ” என்று சொல்லி சஞ்சு புன்னகைத்ததும், கௌசல்யா அவளை வியப்புடன் பார்த்து, “சஞ்சனா, நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க “ என்று கூறினார்.
ரஞ்சித் பின்னாலிருந்து சிரித்துக் கொண்டே, “சஞ்சு, இத்தனை நாளா நீ சின்ன பொண்ணு மாதிரி இருந்த ஆனா இன்னைக்கு திடீர்னு பெரிய மனுஷி மாதிரி இருக்க “ என்று சொன்னான்.
சஞ்சனா போலிக் கோபத்துடன் திரும்பி, ” அண்ணா நீங்களுமா?” என்று கேட்டாள்.
அவர்கள் அனைவரும் ஒன்றாக பேசி சிரித்து மதிய உணவை சாப்பிட்டு முடித்ததும் ஆர்யனும் சஞ்சனாவும் தங்கள் அறைக்குத் திரும்பினர்.
சஞ்சனா தன் நகைகளை பெட்டியில் வைக்க நகர்ந்தபோது, ஆர்யன் அவளை பின்னால் இருந்து அணைத்து அவள் தோளில் தன் தாடையை வைத்துக் கொண்டு, ” இப்படி அழகா டிரஸ் பண்ணிட்டு வந்து கோவிலுக்கு போலாம்னு சொல்லி என்ன ரொம்ப சோதிச்சிட்ட. எவ்ளோ நேரம் வெயிட் பண்றது ? “ என்று கேட்டு சிணுங்கினான். அதற்கு சஞ்சு சிரித்து, “என்ன? நான் களைப்பா இருக்கேன் அதனால இப்ப தூங்கப் போறேன்.” என்று சொன்னாள்.
அவள் வார்த்தையை கேட்டதும் ஆர்யனின் பிடி விளையாட்டாக இறுகியது. ” களைப்பா இருந்தா, இன்னும் கொஞ்சம் அதிகம் களைப்பாயிட்டு தூங்க போலாம். என் பொண்டாட்டி இவ்ளோ அழகா டிரஸ் பண்ணி இருக்கா, இந்த அழகா ரசிக்கலனா எவ்ளோ பெரிய பாவம் தெரியுமா ? “ என்று அவன் கேட்க, ” ஒரு பாவமும் இருக்காது, நேத்து நைட்டு நாம தூங்க எவ்ளோ லேட் ஆச்சு தெரியுமா ? “ என்று உறுதியாகச் சொன்னவள், அவன் பிடியிலிருந்து விடுபட முயன்றாள்.
“அது நைட்டு கொண்டாட்டம், இப்போ பகலுல ஒரு கொண்டாட்டம் நடத்துவோம்.” என்று சொல்லி அவளை கட்டிலுக்கு தூக்கி சென்றான். அங்கு அவர்களின் சிரிப்பும் கிசுகிசுப்புகளும் நெருக்கத்தின் மற்றொரு பகிரப்பட்ட தருணத்தில் கரைந்தன. பின்னர் இருவருமே ஆழ்ந்த, திருப்தியான தூக்கத்தில் மூழ்கினர். அமைதியான பிற்பகல் அவர்களுடைய ரகசிய கொண்டாட்டத்தை நெருக்கமாக வைத்திருந்தது.
*********************
முன்னோட்டம்:
” ஐஸ் கிரீம், ஸ்வீட் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு சஞ்சு மா, ஐஸ் கிரீம் கொண்டு வர சொல்லட்டுமா ? “

1 comment
[…] Chapter 54 […]