கடற்கரையில் அமைதியாக சிறிது நேரம் நடந்த பின்னர் ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் ரிசார்ட்டுக்குத் திரும்பி இருவரும் அமைதியாக இரவு உணவை முடித்தனர். அதன் பிறகு சஞ்சு படுக்கையறைக்குள் சென்றதும் ஆர்யன் தனது லேப்டாப்பை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து இணையம் வழியாக ரஞ்சித்திற்கு அழைப்பு விடுத்தான்,
“ஹலோ சார்” என்று ரஞ்சித். சொன்னதும், “ஹாய் ரஞ்சித், எப்படி இருக்க, எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு ?” என்று ஆர்யன் கேட்டான்.
“எல்லாம் திட்டப்படி நடக்குது சார். இப்போதைக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த ஜோடி ரிசார்ட்டுக்கு உள்ளேயே தங்கி இருக்காங்க ” என்றான் ரஞ்சித். அதை கேட்ட ஆர்யன், “ஹ்ம்ம்… நல்லது ரஞ்சித். கவனமா இரு. நாளைக்கு கூப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
ஆர்யன் லேப்டாப்பை மூடிவிட்டு படுக்கையறைக்கு சென்றதும் அங்கு இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. மெல்ல கதவை சாத்திவிட்டு அவன் கண்கள் சஞ்சுவை தேடியது.
அப்போது குளியலறை கதவின் கைப்பிடியின் மென்மையான சத்தம் அவனது கவனத்தை ஈர்த்து அவன் திரும்பிப் பார்த்ததும் உறைந்து போனான்.
சஞ்சு குளித்து புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தாள், அவளது ஈரமான கூந்தல் அவள் தோள்களில் சிறிய நீர் முத்துக்களை சொட்டியது. அவன் ரகசியமாக பேக் செய்திருந்த சிவப்பு சாட்டின் இரவு உடையை அவள் அணிந்திருந்தாள். அவளது முழங்கால் வரை மட்டுமே இருந்த அந்த ஸ்லீவ்லெஸ் கவுன் அவனை முற்றிலும் மூச்சடைக்க வைத்தது. அவளுடைய கண்கள் வெட்கத்துடன் தரையை நோக்கின. அவளுடைய கைகள் ஆடையின் விளிம்பில் நடுக்கத்துடன் தடுமாறின.
ஆர்யனின் இதயம் படபடத்தது, அந்தக் காட்சியை ரசிக்க அவன் கண்மணிகள் விரிந்தன. மெல்ல அவளை நெருங்கி அவள் கைகளை மெல்ல தன் கைகளில் பற்றினான். ஒன்றும் பேசாமல் அவளை கண்ணாடி முன் அழைத்துச் சென்று அவளுக்குப் பின்னால் நின்று அவர்களின் பிம்பத்தைப் பார்த்தான், அவள் கண்கள் தரையில் பதிந்திருந்தன, கன்னங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன.
” பொண்டாட்டி, கண்ணாடிய பாரு ” என்றான் ஆர்யன் மெல்லிய குரலில் ஆனால் சஞ்சு மறுத்து தலை அசைத்துவிட்டாள்.
மெல்ல அவள் தாடையை தன் விரல்களால் தொட்டு அவள் தலையை நிமிர்த்தி, “உனக்கு பிடிச்சிருக்கா? இல்லனா போய் வேற மாத்திட்டு வா, எனக்காக எதையும் செய்ய உன்ன நான் வற்புறுத்த மாட்டேன்.” என்று ஆர்யன் மெல்ல கிசுகிசுத்தான் ஆனால் சஞ்சு, ” எனக்குப் பிடிச்சு இருக்கு ” என்று அவளுக்கே கேட்க முடியாத அளவுக்கு முணுமுணுத்தாள்.
அவன் புன்னகைத்து அருகில் குனிந்து, ” உலகத்துல இருக்கற அத்தனை அழகையும் ஒன்னா சேர்த்தா கூட உன் முன்னாடி தோற்று போயிடும்டி. நீ அவ்ளோ அழகா இருக்க. என்ன அப்படியே கட்டி போட்டு வெச்சுருக்க “ என்று அவள் காதில் தனது ஹஸ்கி குரலில் கூறினான்.
அவன் கைகள் அவள் நெஞ்சில் சுற்றி வளைத்து, அவளது காது மடலில் முத்தமிட்டு அவளை தனது கதகதப்பான அணைப்புக்குள் இழுத்தான். அவனது ஸ்பரிசத்தில் அவள் சரணடைந்து கண்களை மூடிக்கொண்டு அவனுக்குள் சாய்ந்தாள். ஆர்யன் அவளது கூந்தலை விரல்களை கொண்டு கோதினான், அவள் கழுத்தின் வளைவிலிருந்து வந்த மலர் வாசனையை உள்ளிழுத்ததும் சஞ்சு தலையைச் சாய்த்து, அவனது ஸ்பரிசத்தை நம்பி, தன்னையே அதிகம் அர்ப்பணித்தாள்.
தன் விரல்களால் அவள் இடையை மெல்ல வருடியவன், அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான். அவன் அவளுக்குப் பக்கத்தில் படுத்திருந்தான், கண்கள் அவளது கண்களில் நிலைத்திருந்தன, அது உடனடியாக ஒரு படபடப்பான பதிலில் விலகிச் சென்றது.
அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி, அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான், பிறகு அவளது தாடை, கழுத்து எலும்பு மற்றும் கீழே முத்தங்களை அவள் மென்மைகளின் சிகரங்களை அடையும் வரை தொடர்ந்தான். பின்னர் தனது டீ ஷர்ட்டை கழற்றி ஓரமாக தூக்கி எறிந்துவிட்டு அவள் உதட்டை முத்தமிட ஆரம்பித்தான். இருவரின் உதடுகளும் ஒத்திசையில் ஏக்கத்துடன் நகர்ந்தன, அவர்களின் நாவு நடனமாடி ஒன்றிணைந்து, உரிமை கோரின.
அவன் கரங்கள் அவளது உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் வரைபடமாக்கி, அவளுடைய வளைவுகளைக் கற்றுக்கொண்டன, அவனது தீண்டலுக்கு கிடைத்த அவளுடைய பதில்களை மனப்பாடம் செய்தன. அவளுடைய நகங்கள் அவன் தோள்களில் அழுத்தி, அவனை நெருக்கமாக அணைத்துக் கொண்டன, அவளுடைய மூச்சு நடுங்கியது, ஆழமானது.
அவளது இரவு உடையின் பட்டையை மெதுவாக அவள் தோளில் இறக்கி, சாட்டின் உடையை அவள் தலைக்கு மேல் இழுத்து, அவளுக்காக அவன் தேர்ந்தெடுத்த உள்ளாடைகளை பார்த்ததும் அவனுக்கு மூச்சு வாங்கியது.
” பேரழகிடி நீ “ என்று முணுமுணுத்த அவனது கண்களில் வியப்பும் ஆசையும் நிரம்பி இருந்தது.
அவளது வெற்று மேனியில் முத்தங்களைப் பொழிந்தான், ஒவ்வொன்றும் முந்தையதை விட மெதுவாக இருந்தது. அவளது கால் விரல்கள் முத்தமிட்டு அவனது உதடுகள் தடத்தை அடையாளப்படுத்தி, படிப்படியாக அவளது தொடைகளை நோக்கி நகர்ந்தன. அவள் அவனை அருகில் இழுத்து அவளுக்கு அடியில் புரட்டிப் போட்டாள். சஞ்சு அவனது முகம், கழுத்து, தோள்பட்டை, மார்பு என அவனது ஒவ்வொரு அங்கத்தையும் முத்தமிட்டாள், அவளுடைய உதடுகள் அவனது மார்பில் இருந்த மச்சத்தைக் கண்டுபித்து அதை ஆழமாக முத்தமிட்டாள், அது அவனை என்ன செய்கிறது என்பதை சரியாக அறிந்திருந்தாள்.
ஆசையின் உறுமலுடன் ஆர்யன் அவளை மீண்டும் உருட்டி அவளைத் தன் அடியில் அமர்த்தினான். அவளது கடைசி உள்ளாடையையும் வேகமாக கிழித்து அவளை முழுவதுமாக ஆடைகளில் இருந்து விடுவித்தான். அவனது ஆடைகள் சில நொடிகளில் தூக்கி எறியப்பட்டன.
அவன் உதடுகள் அவள் மேல் அசைந்து வணங்கி சுவைத்தது. அவன் அவளது மென்மைகளை கசைக்கி, சுவைத்த போது அவளது முகல்கள் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது..
அவர்களின் உடல்கள் ஒன்றாகி, முழுமையாக சொல்லப்படாத தாளத்தில் ஒத்திசைவில் நகர்ந்தன. அவன் தன் உதடுகளால் அவளது சத்தத்தை அடக்கிய போது அவளது முனகல்கள் அவனது முத்தங்களில் உருகின. வெப்பம் அதிகரித்து இறுதியாக அவர்கள் ஒன்றாக உச்சத்தை அடைந்து நடுங்கியபடி இருவரும் ஒட்டிக்கொண்டனர்.
வியர்வையில் நனைந்த அவளது முகத்தில் ஒட்டியிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
” ஐ லவ் யூ பொண்டாட்டி “ என்று ஆர்யன் சொன்னதும், “ ஐ லவ் யூ ஆர்யன் “ என்றவளின் உதடுகள் அவன் நெற்றியில் மென்மையாக பதிந்தன.
அவர்களின் நெற்றிகள் தொட்டதும், அவர்களின் மூச்சுக்கள் கலந்தன. அவள் உடல் அமைதியடையும் வரை காத்திருந்த ஆர்யன் பின்னர் நகர்ந்து அவள் அருகில் படுத்தான். இருவரும் வியர்வையில் பளபளக்க மூச்சிரைத்துக் கொண்டிருந்தனர். அவளை அருகில் இழுத்து இறுக்கமாக அணைத்து அவள் தலையின் பக்கவாட்டில் முத்தமிட்டான்.
ஆர்யன் மெதுவாக அவளை குளியலறைக்கு தூக்கிச் செல்லும் வரை இருவரும் அனைத்துக் கொண்டு ஓய்வெடுத்தனர். ஷவரின் சூடான நீருக்கு கீழ், அவர்களின் உடல்கள் மீண்டும் பதிலளித்தன, அவை முழுமையாக செலவழிக்கப்படும் வரை ஒருவருக்கொருவர் தேவைக்கு சரணடைந்தனர்.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கழித்து, ஆர்யன் குளியலறையில் இருந்து வெளியே வந்தான், சஞ்சுவை ஒரு குளியல் அங்கியால் சுற்றியபடி தனது கைகளில் தூக்கிக் கொண்டு நடந்தான். களைப்பில் அவளது கைகால்கள் நடுங்க அவன் அவளைப் படுக்கையில் கிடத்தினான்.
” நான் களைச்சு போயிட்டேன் ” , என்று சஞ்சு கண்களை பாதி மூடியபடி முணுமுணுத்ததும், “ தூங்கலாம்” என்றான் ஆர்யன் மென்மையாக.
போர்வையால் அவளை மூடி அவளருகில் படுத்து மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தவன், “குட் நைட்” என்று சொன்னான் அதற்கு சஞ்சு, ” இன்னும் கொஞ்ச நேரத்துல குட் மார்னிங் சொல்லணும்” என்று தூக்கம் கலந்த புன்னகையுடன் முணுமுணுத்தாள்.
” இன்னைக்கு நாம வெளிய எங்கேயும் போக வேணாம் அதனால எவ்ளோ நேரம் வேணும்னாலும் தூங்கு “ என்று ஆர்யன் சொன்னதும், சரி என்று சொல்லலி அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
இரவின் அமைதியில் தொலைந்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்கச் சென்றனர்.
காலை வெளிச்சம் மாயாவின் ஆடம்பரமான வரவேற்பறையில் ஊடுருவியது, ஆனால் அவளுடைய மனநிலை பிரகாசமாக இல்லை. சோபாவில் கால்களை மடக்கி உட்கார்ந்திருந்த அவள் முகத்தில் விரக்தி படர்ந்திருந்தது, அவளுடைய மொபைல் அவளுக்கு அருகில் பயனற்று இருந்தது.
ஆர்யனும் சஞ்சுவும் தங்கியிருந்த ஒதுக்குப்புறமான ரிசார்ட்டுக்குள் நுழைய அவளுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. அவள் எதிர்பார்த்ததை விட அந்த இடம் இறுக்கமான செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்படிருந்தது. அவர்களை பற்றிய எந்த தகவுலும் கிடைக்கவில்லை.
“ஹனிமூன் போனா, ரூம் உள்ளேயே இருப்பாங்களா ?அப்படி என்ன அவனுக்கு, அவள விட்டு இருக்க மாட்டானா ? “ என்று மாயா மனதில் நினைத்துக் கொண்டு பொருமினாள்.
கோபக்கார முதலாளியை சமாதானப்படுத்தும் நம்பிக்கையில் ஒரு பணிப்பெண் அமைதியாக சூடான காபி தட்டுடன் வந்தாள். ஆனால் அவர் அந்த தட்டை மேஜை மீது முழுமையாக வைக்கும் முன்பே மாயா அதைத் தள்ளிவிட்டாள். கோப்பை கவிழ்ந்தது, ஆவி பறக்கும் காபி தரையில் சிதறியது.
” மரியாதையா இங்க இருந்து போ. நான் கூப்பிடாம என் முன்னாடி வராத” , என்று மாயா சீறினாள். பயந்து நடுங்கிய அந்த பணிப்பெண் உடனே, “ஸாரி மேடம்” என்று திக்கித் திக்கி வெளியே ஓடினார்.
ஒரு நொடியையும் வீணாக்காமல் மாயா தன் மொபைலை எடுத்து ஆர்யனைக் கண்காணிக்க நியமித்தவனை அழைத்தாள்.
“ஹலோ? ரிசார்ட்டுக்குள்ள வேலை செய்ற யாராவது கெடச்சாங்களா ? ” என்று கடுமையாகக் கேட்டாள் மாயா. அதற்கு அந்த நபர், ” இல்ல மேடம், எல்லாரையும் உள்ளேயே இருக்க வெச்சுருக்காங்க, யாருமே வெளிய வரல “ என்று சொன்னார்.
” அவ்ளோ பாதுக்காப்பு ஏற்பாடு பண்ணி இருக்கானா ? “ என்று பல்லைக் கடித்துக் கொண்டு எரிச்சலுடன் கேட்ட மாயா உடனே அழைப்பை துண்டித்து பிரதீப்புக்கு டயல் செய்தாள்.
பிரதீப் அழைப்புக்கு பதில் சொல்லி, “சொல்லு மாயா” என்று கேட்டதும், ” ஆர்யன் ரிசார்ட்ட விட்டு வெளிய வரல ” என்று அவள் கர்ஜித்தாள். அதற்கு பிரதீப், ” கண்டிப்பா வர மாட்டாரு. மாயா, அவங்க ஹனிமூன் போயிருக்காங்க. அவர் ஏன் வெளியே வரனும் ?” என்று பதிலளித்தான்.
“வாய மூடு பிரதீப். கொஞ்ச நேரம் ஆர்யன ரிசார்ட்ல இருந்து வெளிய கூட்டிட்டு வர ஏதாவது வழி தேடு.” என்று மாயா விரக்தியில் அலறினாள் ஆனால் அவன், “அதெல்லாம் முடியாது மாயா” என்று சொன்ன போது அவன் குரல் எப்போதும் போல அமைதியாக இருந்தது.
“ஏன்?” என்று கேட்ட மாயாவின் குரலில் விரக்தி கொப்பளித்தது.
“அவங்க வெளிஉலக தொடர்பு இல்லாம போய் இருக்காங்க, மொபைல் போன் இல்ல, எந்த தொடர்பு இல்லாம போய் இருக்காங்க. ரிசார்ட் வெளி உலகத்துல இருந்து தனியா துண்டிக்கப்பட்டு இருக்கு. அவர் திரும்பி வரவரைக்கும் எங்களால அவர தொடர்பு கொள்ள முடியாது” என்றான் பிரதீப்.
” அவர் எப்போ திரும்பி வருவாரு ?” என்று மாயா கோவத்தின் உச்சத்தில் கேட்டதும், “இன்னும் ரெண்டு நாள்ல இருக்கலாம்.” என்றான் பிரதீப்.
பிரதீப் சொன்னதை கேட்டதும் மாயாவின் முகபாவம் இருண்டது. “நான் அவள மட்டும் கொல்ல நெனச்சேன் ஆனா அவ மேல அவர் இவ்ளோ பைத்தியமா இருந்தா அவங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவேன். அவங்க ரிசார்ட்டை விட்டு கிளம்புற வர நான் வெயிட் பண்றேன் “ என்று மாயா சொன்ன போது அவள் குரல் விஷமாக மாறியது. அவள் சொன்னதை கேட்ட பிரதீப் அமைதியாக, “சரி” என்று பதில் சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அழைப்பை துண்டித்த மாயா விரக்தியில் மொபைலை அறையின் சுவற்றில் வீசினாள். பின்னர் அவள் தனது ஆட்களைத் தொடர்புகொண்டு, ஆர்யன் மற்றும் சஞ்சு ஆகியோர் ரிசார்ட்டை விட்டு வெளியேறிய தருணத்தில் அவர்களைக் கொலை செய்வதற்கான திட்டமிடலைத் தொடங்குமாறு உத்தரவிட்டாள்.
இதற்கிடையில், பிரதீப் ரஞ்சித்தை அழைத்து ஆபத்தான செய்தியை தெரிவித்தான்.
“ஹ்ம்ம்… இத நான் எதிர்பார்த்தேன் பிரதீப், இப்போ நாம அங்க இருக்க அந்த ஜோடிய பாதுகாக்கனும் “ என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.
” அப்போ அதுக்கு சீக்கிரம் ப்ளான் பண்ணு ரஞ்சித்.” என்று பிரதீப் சொன்னதை கேட்டு, ” நிச்சயமா பண்றேன். அப்புறம் பிரதீப், மாயாவோட ரூமை ஆய்வு செய்ய நம்ம செக்யூரிட்டி ஹெட் ஆபீஸ் வருவாரு. அவ ஏதாவது ஹேக்கிங் கருவி வெச்சுருக்காளானு நாம உறுதிப்படுத்தனும் “ என்று கூறினான் ரஞ்சித்.
“சரி. அவர் ஆபீஸ் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்து. நான் அவர் கூட சேர்ந்து எல்லாம் சரியா இருக்கானு பார்க்குறேன் “ என்று பிரதீப் சொன்னதை கேட்டு, “கண்டிப்பா பிரதீப். நானும் அங்க வர முயற்சி செய்றேன் இல்லனா அந்த வேலைய நீயே பார்த்துக்கோ “ என்றான் ரஞ்சித்.
பிரதீப் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
ஆர்யன் மற்றும் சஞ்சுவின் படுக்கை அறையில் சூரிய ஒளியின் சூடான கதிர்கள் திரைச்சீலைகள் வழியாக எட்டிப் பார்த்தன. சஞ்சு மெல்ல அசைந்து அவள் கைகள் ஆர்யனின் தலையணையை சுற்றி வளைத்தன. அவள் படுக்கையில் தனியாக, மென்மையான போர்வையால் மூடப்பட்டிருந்தாள். அவள் தனியாக இருப்பதை உணர்ந்து கொட்டாவி விட்டபடி மெல்ல எழுந்து பாத்ரூம் நோக்கி நடந்தாள்.
புத்துணர்ச்சியுடன் குளித்து முடித்து, தொடைகளுக்கு எட்டாத ஆர்யனின் சட்டைகளில் ஒன்றை அணிந்து அவள் வெளியே வந்தபோது, சமையலறையிலிருந்து வீசிய சுவையான நறுமணம் அவள் கவனத்தை ஈர்த்தது. அதை நோக்கி இழுக்கப்பட்டவள், உள்ளே ஆர்யன் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து, மேல் வெற்று உடலுடன், காய்கறிகளை வாணலியில் சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
” குட் ஆஃப்டர்நூன், பொண்டாட்டி ” என்று ஆர்யன் திரும்பிப் பார்க்காமல் சொன்னதை கேட்டு, “ நீ என்ன திரும்பி கூட பார்க்கலையே அப்புறம் நான் உன் பின்னாடி இருக்கேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று புன்னகையுடன் கேட்டவள் அவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.
“உன் வாசனை எனக்கு தெரியாதா ? “, என்றபடி அவன் திரும்பி அவளை முன்னால் இழுத்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை சமையலறை மேடை மேல் தூக்கி அமர்த்தி தன் கைகளுக்குள் அவளை சிறைப்படுத்தினான்.
” என் சட்டை உனக்கு அழகா இருக்கு ” என்று ஹஸ்கி குரலில் சொன்னவன் பின்னர் அவளை பார்த்து, ” ஆனா இப்போ எனக்கு என் சட்டை திரும்ப வேணும், சீக்கிரம் கொடு ” என்றான். அவன் வார்த்தையை கேட்டு அதிர்ச்சியில் மூச்சிரைத்த சஞ்சு, ” என்ன விளையாடுறியா?” என்று கேட்டு சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“இல்லம்மா, நான் சீரியஸா சொல்றேன். என் சட்டையைக் கொடு, இல்லனா நானே எடுத்துக்கறேன்” என்று சொல்லி குறும்புச் சிரிப்புடன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.
“சரி, நீ திருப்பிக் கொடுக்க வேணாம் ஆனா நீ இவ்ளோ அழகா இருந்தா ஏதாச்சும் பண்ணனும் தானே ? “ என்று ஆர்யன் மெல்லிய குரலில் சொல்ல, “ என்ன பண்ணனும் ? “ என்று குழப்போது கேட்டாள் சஞ்சு.
ஆர்யன் முன்னால் குனிந்து சட்டையின் மேல் பட்டனை பற்களால் கடித்து இழுத்தான். அவிழ்த்த பட்டனின் திறப்பில் முகம் புதைத்து அவள் மார்பில் ஒரு முத்தம் பதித்தவன், பிறகு ஒரு குறும்பு புன்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்து, “முதல்ல கொஞ்சம் சாப்பாடு சாப்பிடலாம். அப்புறம் மறுபடியும் ஆரம்பிக்கலாம் ” என்றான்.
” காட்டுமிராண்டி, வரவர உனக்கு சேட்ட அதிகம் ஆயிடுச்சு ” என்று சஞ்சு அவனை சொல்ல, ” உனக்காக மட்டும் தான் இந்த விசேஷ குணம் “ என்று சொல்லி ஆர்யன் கண்ணடித்தான்.
” சரி சொல்லு என்ன சமைச்சிருக்க ?” என்று வெட்கத்தை மறைத்துக் கொண்டு பேச்சை மாற்ற முயன்றாள் சஞ்சு.
” வெஜ் புலாவ், ப்ளூபெர்ரி பை, ஒயிட் சாஸ் பாஸ்தா அப்புறம் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்.” என்று ஆர்யன் சொன்னதும், “வாவ்! ஆனா ஏன் இவ்ளோ சமைச்ச ? “ என்று சஞ்சு கேட்டாள்.
“என் பொண்டாட்டி ரொம்ப சோர்வா இருக்கா, நிறைய எனெர்ஜி தேவைப்படுது,” என்று அவர் ஒரு கிண்டல் புன்னகையுடன் கூறி அவன் அவளை மீண்டும் தூக்கி கொண்டு டைனிங் டேபுளுக்கு அழைத்துச் சென்றான்.
” உட்காரு ஸ்வீட் ஹார்ட், நான் போய் எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு, “நான் உனக்கு உதவி செய்றேன் “ என்றாள் சஞ்சு ஆனால் ஆர்யன் அவளை தடுத்து, “இல்ல, நானே கொண்டு வரேன் “ என்று வலியுறுத்தினான்.
தான் தயாரித்த அனைத்தையும் அவளுக்கு பரிமாறினான். சஞ்சு ஒவ்வொரு குவளையையும் சுவைத்து, சுவைகளில் மெதுவாக முனகினாள். ஆர்யனால் அவளது அழகான முகபாவனைகளைக் கண்டு சிரிப்பதை நிறுத்த முடியவில்லை.
“ஆர்யன், இது செம்ம டேஸ்டா இருக்கு “ என்று சஞ்சு சொன்னாள் ஆனால் ஆர்யனின் பார்வை அவள் உதடுகளின் ஓரத்தில் இருந்து சாஸ் மேல் நிலைத்திருந்தது,
“என்ன பார்க்குற ? நீ சாப்பிடலையா?” என்று அவனது முறைப்பைக் கவனித்துக் கேட்டாள் சஞ்சு. ஆர்யன் எதுவும் பேசாமல் குனிந்து அவள் உதடுகளில் ஓரத்தில் இருந்த சாஸை மெதுவாக லாவினான்.
” சரியா தான் சொன்ன, ரொம்ப டேஸ்டா இருக்கு” என்று முணுமுணுத்தான்.
************
முன்னோட்டம்:
” இவ்ளோ மாசம் ஆச்சு ஆனா இன்னும் வெட்கப்படுறடி நீ “

1 comment
[…] Chapter 59 […]