Home FamilyChapter 66

Chapter 66

by Siragugal Novels
11 views

மாயாவையும் அவளது தோழிகளையும் விவான் தனது நண்பனின் இரவு விடுதிக்கு அழைத்து சென்ற போது அந்த விடுதி மங்கலான  வெளிச்சத்தில், லேசானா இசையுடன் சலசலத்தது, ஆனால் கூட்டம் சற்று வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. விவான் பெண்களை, பப்பின் உரிமையாளர் – தனது நண்பனுக்கு அறிமுகப்படுத்தினான். ஒரு சுருக்கமான உரையாடலுக்குப் பிறகு, அந்த மனிதன் விடைபெற்றதும், பெண்களும் விவானும் நடன தளத்தை நோக்கி நகர்ந்தனர்.

வழக்கம் போல ரியாவும், லேகாவும் ஒரு நொடியும் வீணாக்காமல்  இரண்டு அழகான அந்நியர்களுடன் விரைவாக ஜோடி சேர்ந்து  இசையின் தாளத்தில் தங்களை மறந்தனர். மாயா தயங்கியபடி  விளிம்பில் நின்றாள். விவான் அவள் கையைப் பிடித்ததும் அவள் விலகத் திரும்பினாள்.

“மாயா, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து டான்ஸ் ஆட மாட்டியா ? வா” என்றான் விவான் புன்னகையுடன். மாயா மெதுவாக தலையசைத்து, அவன் அவளை அழைத்துச் செல்ல அனுமதித்தாள். அவர்கள் சிறிது நேரம் நடனமாடிய பின்னர் பாருக்கு சென்றனர்.

“உங்க எல்லாரையும் திரும்ப ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போக நான் சீக்கிரம் வரேன். நான் திரும்பி வரவரைக்கும் இங்கேயே இருங்க” என்று விவான் வாக்குறுதி அளித்துவிட்டு தனது நண்பனை பார்க்க சென்றான்.

விவான் சென்ற சில நொடிகளில், இரண்டு ஆண்கள் அவர்களை நெருங்கி ரியாவையும், லேகாவையும் நோக்கி தங்கள் கைகளை நீட்டினார்கள், அவர்களும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டு, தங்கள் புதிய தோழர்களுடன் நடன தளத்திற்கு திரும்பினர். மாயா தனித்து விடப்பட்டாள்.

மாயா தனிமையை போக்க ஒரு பானத்தை ஆர்டர் செய்து மெதுவாக குடித்தாள், ஆல்கஹால் அவளுக்குள் ஊடுருவி அவளுடைய பார்வையை மங்கலாக்கியது. ஒரு விசித்திரமான லேசான உணர்வு அவள் தலையில் குடியேறி, தலைசுற்றலை உணர்ந்தவள் முகத்தைக் கழுவு எழுந்து தடுமாறி பாத்ரூமை நோக்கி நடந்தாள்.

இதற்கிடையில், ஒரு தனி அறைக்குள், விவான் ஒரு கண்ணாடி முன் நின்று புது சட்டையை அணிந்தான். தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய உறையை எடுத்து அதைக் கிழித்து தத்ரூபமான மனித முகமூடியை வெளியே எடுத்தான். அவன் அதை தனது முகத்தில் வைத்து கவனமாக, மாற்றம் தடையின்றி இருக்கும் வரை ஒவ்வொரு விளிம்பையும் அழுத்தினான். தனது தலை முடியையும் மாற்றி சீவிய பின் தனது புதிய தோற்றத்தின் பிரதிபலிப்பை கண்ணாடியில் பார்த்தான். அவன் பார்க்க ஆர்யன் போலவே இருப்பதை பார்த்து சிரித்தான்.

” ஹலோ ஆர்யன், இந்த முகத்த தானே மாயா வெறிப்புடிச்சவ மாதிரி விரும்புறா ? என்ன தான் செய்றானு பாக்கலாம் “ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான். அதன் பின்னர் அவன் வெளியே வந்த போது மாயா பாத்ரூமில் இருந்து வெளியேறுவதைக் கண்டான். மாயா நிலை இல்லாமல் தடுமாறி முன்னால் வரும்போதே அவன் அவள் இடுப்பைப் பிடித்து, “ஜாக்கிரத” என்றான் மென்மையாக.

மாயை அவன் தோள்களைப் பற்றிக்கொண்டு அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் கண் சிமிட்டினாள். அவளது மூச்சு இறுகியது. ” ஆர்யன் ? நீ எப்படி இங்க?” என்று கேட்ட அவளுடைய குரல் தழுதழுத்தது, அவளுடைய கண்கள் படபடத்து திறந்திருக்க முயற்சித்தன.

” நான் என் ப்ரெண்ட் ஒருத்தர சந்திக்க வந்தேன். நீ நடக்க சிரமப்படுறத பார்த்தேன்” என்று அவளை அணைத்தபடி மென்மையாக பதிலளித்தான்.

“ஆர்யன், நீ ரொம்ப அழகா இருக்க ” என்று மாயா கிசுகிசுத்து மயக்க நிலையில் புன்னகைத்தாள். அதற்கு விவான், “நீயும் அழகாவும், கவர்ச்சியாவும் இருக்க மாயா” என்றான். அவன் வார்த்தையை கேட்டதும், “நிஜமாவே என்ன பாராட்டுறியா ஆர்யன்?” என்று அவன் அணைப்பில் தடுமாறியபடி கேட்டாள்.

“ஆமா மாயா, நீ எப்பவும் அழகு ஆனா இன்னைக்கு ரொம்ப செக்ஸியா இருக்க “ என்று விவான் ரகசியம் சொல்வது போல ஹஸ்கி குரலில் சொன்னான். உடனே மாயா, ” ஐ லவ் யூ ஆர்யன் “ என்று சொல்லி சட்டென்று அவனை அணைத்துக் கொண்டவள், அவன் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தாள். விவான் அவள் கழுத்தின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு முத்தத்தை ஆழப்படுத்தினான்.

” ரொம்ப ஸ்வீட்டா இருக்க மாயா, எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு “ என்று அவள் உதட்டில் முணுமுணுத்தான்.

“ஆர்யன், தயவு செஞ்சு என்ன விட்டுப் போய்டாத, என் வாழ்நாள் முழுக்க நீ எனக்கு வேணும். உனக்காக நான் எதையும் செய்ய தயாரா இருக்கேன் “ என்று மாயா சொன்னதும், “ என்ன வேணும்னாலும் செய்வியா மாயா ? “ என்று கேட்டான் விவான்.

” செய்வேன் ஆர்யன், அந்த பிச்சைக்காரிய விட்டுடு. உனக்கு நான் இருக்கேன் “ என்று சொல்லி மாயா சொன்னதும் அவன் மீண்டும் அவளை முத்தமிட்டான், அவன் உதடுகள் அவள் கழுத்தை உரச, அவள் அவன் பெயரை முனகியபடி அவன் சட்டையைப் பிடித்தாள்.

“கொஞ்சம் டைம் கொடு மாயா. நான் நிரந்தரமா உன் கிட்ட வருவேன். சத்தியமா சொல்றேன்.” என்று விவான் சொல்ல,

அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் காது மடலை மென்மையாகக் கடித்தாள்.

“என் கூட வா, நான் இப்போ உன் கூட அதிக நேரம் இருக்க விரும்புறேன்.” என்று விவான் சொன்னதும் போதையில் இருந்த மாயா சற்றும் தயங்காமல் தலையசைத்தாள். விவான் அவளை முதல் மாடியில் அவன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த  விருந்தினர் அறைக்கு தூக்கி சென்றான்.

விவான் அவளை நிற்க வைத்து சுவரோடு சாய்த்து அவளுடைய முகம், கழுத்து மற்றும் வெளியே தெரியும் அவளுடைய கழுத்து எலும்புகளில் முத்தமிட்டான். அவள் அணிந்திருந்த கவர்ச்சியான உடை அவனுக்கு எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்கியது. அவனது உதடுகள் அவளது தோலை உரச அவள் சத்தமாக முனகினாள்.

அவளைத் தூக்கிக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றதும், மாயா  அவன் மேல் அமர்ந்து அவன் சட்டையை கைகளால் இழுத்து அவன் மார்பில் முத்தங்களை பொழிந்தாள். பின்னர் மீண்டும் மீண்டும் அவனது உதடுகளை முத்தமிட்டாள். ஆர்யனின் பெயரை அவள் முணுமுணுக்கும் போதெல்லாம் இன்பத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் விவான் சிக்கித் தவித்தான்.

ஆனாலும் அவளது ஸ்பரிசமும், முத்தங்களும், உடலின் உஷ்ணமும் அவனை ஆட்கொண்டன. அவன் அவளை புரட்டிப் படுக்க வைத்ததும் அவன் பார்வை அவளது வளைவுகளில் குடித்தது. இருவரின் ஆடைகளும் தரையை சந்தித்ததும் அவர்களின் உடல்கள் சந்தித்தன. இருவரின் மூச்சு மூச்சுத்திணறல்களாக மாறின, அவர்களின் காமக் கூச்சல்கள் அறை முழுவதும் எதிரொலித்தது.

மாயா இதுவரை அறிந்திராத மிக போதையூட்டும் இரவை அனுபவித்தாள் ஆனால் மதுவும் களைப்பும் ஆக்கிரமித்து அவள்  விரைவில், அவள் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

விவான் ஒரு கணம் அவளைப் பார்த்தான், அவள் உடல் இப்போது அசைவற்று இருந்தது, அவள் முகம் தளர்ந்தது. அவன் எழுந்து, விரைவாக உடையணிந்து, அறையை விட்டு வெளியேறினான். தனி அறைக்குத் திரும்பியவன், ஆர்யனின் முகமூடியைக் கழற்றிவிட்டு, தலைமுடியை மீண்டும் சரி செய்து கொண்டு, தனது அசல் சட்டைக்கு மாறினான்.

கீழே பாரில், ரியாவும் லேக்காவும் சத்தமாக சிரிப்பதைக் கண்டான், இருவரும் முன்பு நடனமாடிய தோழர்களின் மடியில் அமர்ந்திருந்தனர்.

விவான் தனக்குள் சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கி நடந்தான். அவனது விளையாட்டு முடிந்தது, அவனது வஞ்சகம் ஒரு இரவின் நிழலில் புதைந்திருந்தது.

விவான் திரும்பி வந்த போது மதுபான விடுதி அமைதியடையத் தொடங்கியிருந்தது.

“ரியா, லேக்கா, வாங்க போகலாம். மாயா எங்க?” என்று அவர்களிடம் அவன் கேட்டதும், ஓரளவு நிதானமாக இருந்த ரியாவும், லேக்காவும் உடனே அவனை நோக்கித் திரும்பி, “அவ உன் கூட இருக்கான்னு நினைச்சோம்” என்றாள் ரியா குழப்பத்துடன்.

விவானின் புருவம் சுருங்கியது. “நான் என் ப்ரெண்ட பார்க்க போறேன்னு தானே சொல்லிட்டு போனேன் அப்புறம் அவ எப்படி என் கூட இருக்க முடியும்?” என்று பதற்றத்துடன் அவர்களிடம் கேட்டான்.

லேக்கா அவனைப் பார்த்து, “ நிஜமா தான் சொல்றியா ? “ என்று கேட்டாள்.

“ஆமா லேகா. நான் சீரியஸா தான் சொல்றேன். மாயா எங்க ?”  என்று விவான் மீண்டும் கேட்க, “ கொஞ்ச நேரமா நாங்க அவள பார்க்கலை” என்று ரியா ஒப்புக் கொண்டாள், அவள் குரலில் கவலை ஊர்ந்து கொண்டிருந்தது.

“நான் அவள தேடிப் போறேன்” என்று சொல்லிவிட்டு மறுவார்த்தை பேசாமல் விவான் அங்கிருந்து நகர்ந்தான். அவன் ஒரு நாடகத்தை நடத்தி, மூலைகளைச் சரிபார்ப்பது, மதுபான விடுதியின் தாழ்வாரங்களில் மேலும் கீழும் நடப்பது, வாகன நிறுத்துமிடத்தைப் பார்ப்பது. இறுதியில், அவன் தலையை அசைத்தபடி பெண்களிடம் திரும்பினான்.

“அவ இங்க எங்கேயும் இல்ல,” என்று அவன் பெருமூச்சு விட்டு தனது பங்கை நன்றாக நடித்தான்.

அப்போது அங்கு வந்த அவனது நண்பன் – பப்பின் உரிமையாளர் – அவர்களிடம் நிலவிய பதற்றத்தை கவனித்தான்.

“என்ன ஆச்சு ?” என்று அவன் கேட்டதும், “மாயாவ காணும் “ என்றாள் லேக்கா பதட்டத்துடன்.

அதன் உட்பொருளைப் புரிந்துகொண்ட அந்த மனிதன், “ மாடியில கொஞ்சம் கெஸ்ட் ரூம் இருக்கு. அங்க இருக்காங்களா பாருங்க “ என்ற ஒரு யோசனையை முன்வைத்தான்.

விவான் சற்றும் தயங்காமல் ரியாவையும், லேக்காவையும் மாடிக்கு அழைத்துச் சென்றான்.

ஒவ்வொரு அறையாக அவர்கள் சோதனை செய்ய ஆரம்பித்தனர். கடைசியில் லேக்கா ஒரு அறை கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனாள். உள்ளே, மாயா போர்வைக்குள் முழு நிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

“ரியா, விவான் இங்க வாங்க ” என்று லேக்கா பயந்த குரலில் அவர்களை அழைத்தாள். விவான் அந்த அறையை அடைந்ததும்  அவன் முகபாவம் சீரியஸாக மாறியது.

“லேக்கா, அவளுக்கு டிரஸ் பண்ணு. முதல்ல அவள ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போகலாம். எல்லாத்தையும் அப்புறம் பேசுவோம். நான் போய் காரை எடுத்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு விவான் அவசரமாக வெளியேறினான்.

ரியாவும், லேக்காவும் வேகமாக தலையசைத்தபடி அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டனர். மயக்கத்தில் இருந்த மாயாவுக்கு கவனமாக உடை அணிவித்தனர்.

இதற்கிடையில், விவான் தனது நண்பனை சந்தித்து, “ரொம்ப தேங்க்ஸ். அவள என் வலையில கொண்டு வர நீ எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்க, நான் ஆர்யன் தான்னு அவ உண்மையிலேயே நம்பிட்டா. எல்லா  ஆதாரத்தையும் அழிக்க மறக்காத. நான் நாளைக்கு சென்னைக்கு புறப்படுறேன். மத்த விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.” என்று மெல்லிய குரலில் கூறினான். அதன் பின்னர் அவன் காரை எடுத்து வர கிளம்பினான்.

விவான் அறையை அடைந்த போது ரியாவும், லேக்காவும் மாயாவுடன் காத்திருந்தனர். அவன் மாயாவை காருக்கு தூக்கிச் செல்ல, ரியாவும், லேக்காவும் அவனை பின்தொடர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் ரிசார்ட்டுக்குத் திரும்பி அறைக்குள் நுழைந்ததும், விவான் மாயாவை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்தான். பின்னர் அவன் ஹாலுக்கு சென்ற போது ரியாவும், லேக்காவும் பதட்டத்துடன் நின்றிருந்தனர்.

“அவளுக்கு உண்மையிலேயே ஏதாவது ஆச்சான்னு எனக்குத் தெரியல ஆனா ஒன்னு மட்டும் எனக்குத் தெரியும். அபப்டி ஏதாவது நடந்துச்சுனு மாயாவுக்கு தெரிஞ்சா அவ வாழ்க்கைய முடிச்சுக்குவா. கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டா “ என்று விவான் சொன்னதை கேட்டதும், ரியாவின் முகம் வெளிறியது. “இப்ப என்ன செய்றது ?” என்று அவள் கேட்டாள்.

” நான் சொல்றத கேளுங்க. அவ குடிச்சிட்டு மயங்கிட்டா, நாம அவள இங்க கூட்டிட்டு வந்தோம்னு அவ கிட்ட சொல்லுவோம். வேற எதுவும் ஒன்னும் நடக்கல, சரியா?” என்று விவான் சொன்னான் ஆனால் அதற்கு லேக்கா அவனிடம், “அவளுக்கு ஏதாவது ஞாபகம் வந்தா என்ன செய்றது ?” என்று கேட்டாள்.

“அது ஒரு கனவுனு சொல்லுங்க “ என்று விவான் சொல்ல இருவரும் சம்மதித்தனர்.

” எதுக்கும் பாதுகாப்புக்கு காலையில அவளுக்கு மாத்திரை கொடுக்கணும்” என்றாள் ரியா ஜாக்கிரதையாக.

“நான் பார்த்துக்குறேன். மாத்திரையை காலையில அவளோட காபியில கலந்துடுறேன். இப்போ நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. மீதிய காலையில பாத்துக்கலாம்.” என்று விவான் சொன்னதும், தயக்கத்துடன், ரியாவும் லேகாவும் படுக்கையறைக்கு சென்று மாயாவின் அருகில் படுத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் விவான் தன் அறைக்கு சென்று ஷவருக்கு கீழ் நின்றான். முகத்தில் ஒரு விஷமப் புன்னகை படர்ந்தது.

” உனக்கு மாத்திரை வேணுமா மாயா?” என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை திரைச்சீலைகள் வழியாக காலை வெளிச்சம் ஊடுருவிய போது ஏற்கனவே விழித்துக் கொண்டிருந்த ஆர்யன் தன்னருகில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சஞ்சுவைப் பார்த்து புன்னகைத்தான். முன்னால் குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அன்றைய நாளுக்கு ஆயத்தமானான்.

கௌசல்யாவை அழைத்து அறைக்கு காலை உணவை கொண்டுவரும்படி சொல்லிவிட்டு சஞ்சு எழுந்திருக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தான்.

சிறிது நேரத்தில் கௌசல்யா காலை உணவுடன் வந்து அமைதியாக மேஜை மீது வைத்து விட்டு சஞ்சு உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார்.

” என்ன சார் இன்னும் தூங்கிட்டு இருக்கா? எழுப்பி விடுங்க. புள்ளைக்கு பசிக்கும் அதனால நேரத்துக்கு சாப்பிடனும் “ என்று கௌசல்யா சொன்னதும், “ அப்படியா ? சரி இப்போவே எழுப்புறேன் “ என்றான் ஆர்யன்.

” சாப்பிட்டு முடிச்ச அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு தூங்க சொல்லுங்க “ என்று சொல்லிவிட்டு கௌசல்யா சென்ற பிறகு, ஆர்யன் சஞ்சுவின் அருகில் அமர்ந்து, அவளது தலைமுடியை கோதியபடி மெதுவாக தட்டத் தொடங்கினான்.

சஞ்சு மெதுவாக கண்களைத் திறந்து பார்த்த போது, அவன் குளித்து முடித்து உடையணிந்து உட்கார்ந்திருப்பதை பார்த்தாள்.

“எப்ப எழுந்தீங்க?” என்று சோம்பல் முறித்தபடி சஞ்சு கேட்டாள்.

” ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே எழுந்துட்டேன், இப்ப வா, எழுந்து குளிச்சு ரெடியாகு, ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம் “ என்று ஆர்யன் சொல்ல, “இல்ல, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு” என்று முணுமுணுத்தபடி போர்வையை முகத்தில் போர்த்திக் கொண்டாள் சஞ்சு.

“கவலைப்படாத, நான் உனக்கு உதவுறேன்.” என்று மென்மையாக சொன்ன ஆர்யன், அவள் பதிலுக்குக் காத்திராமல் அவளைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றான்.

“ரெடியாகி வா, நான் ப்ளேட் செட் பண்றேன்” என்று அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

சிறிது நேரம் கழித்து, சஞ்சு புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தாள். ஆர்யன் அவளை உட்கார வைத்து காலை உணவை ஒரு கிளாஸ் ஜூஸுடன் பரிமாறினான்.

அவள் உதட்டைப் பிதுக்கி, “எனக்கு சாப்பாடு வேணாம் “ என்று சிணுங்கினாள் ஆனால் ஆர்யன் பொறுமையாக அவளுக்கு ஊட்டினான். அவளது ஒவ்வொரு சிறு புகாருக்கும் புன்னகைத்தான். இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு பால்கனிக்குசென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர். சஞ்சு அவன் மார்பில் வசதியாக சாய்ந்தாள், அவன் கைகள் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்திருந்தன.

” ஒய் பொண்டாட்டி, கர்ப்பமாக இருக்கும் போது ஹனிமூன் போன முதல் ஜோடி நாம தான்னு நினைக்குறேன் “என்றான் ஆர்யன் விளையாட்டுத்தனமான புன்னகையுடன். அதற்கு சஞ்சு, “ஆமா  ஆர்யன், எனக்கும் இப்போ தான் ஞாபகம் வருது “ என்று சொல்லி சிரித்தாள்.

“எப்படி நமக்கு தெரியாம போச்சு ? உனக்கு எந்த அறிகுறியும் தெரியலையா ?” என்று ஆர்யன் கேட்க, “நான் சோர்வா உணர்ந்தேன், ஆனால் எனக்கு பீரியட்ஸ் எப்பவும் ஒழுங்கா வராது அதனால அத பத்தி யோசிக்கவே இல்ல “ என்று சஞ்சு பதில் சொன்னாள்.

” நல்லவேள குழந்தைக்கு ஒன்னும் ஆகல, அதுக்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். இதனால தான் கொஞ்ச நாளா நீ ரொம்ப பலவீனமா இருக்க போல அது கூட சேர்ந்து ஆபீஸ் டென்ஷனும் சேர்ந்துடுச்சு “ என்று முணுமுணுத்தவன் அவளை நெருக்கமாக அணைத்தான்.

“இருக்கலாம் மிஸ்டர் ஹஸ்பண்ட்” என்று புன்னகையுடன் சொல்லி சஞ்சு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளை இன்னும் இறுக்கி அணைத்து ஆர்யன் அவள் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தான்.

***********

முன்னோட்டம்:

“ ஆர்யன் அவரோட வீட்ல இருந்தா நான் எப்படி அவர நேத்து நைட்டு இங்க பார்த்தேன் ? கனவு எப்படி அப்படியே நிஜம் மாதிரி இருந்துச்சு ? “

 

 

You may also like

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!