மேன்ஷனுக்கு திரும்பிய ரஞ்சித், ஆர்யன் லிவிங் அறையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அதிகம் பரிமாறிக்கொள்ளாமல், ஆர்யனை வெளியே வருமாறு அவன் சைகை செய்தான். சந்திரசேகரின் ஆட்கள் மேன்ஷனில் இருந்த பொருட்களை அடித்து உடைத்த அன்று மேன்ஷனின் பல இடங்களில் மைக்ரோபோன் வைத்ததும், அதன் மூலம் மேன்ஷனில் நடக்கும் அனைத்தையும் கண்காணிப்பதையும் ஆர்யன் மற்றும் ரஞ்சித் அறிந்திருந்தனர் அதனால் பெரும்பாலும் முக்கிய விஷயங்களை மேன்ஷனில் பேசுவதை தவிர்த்தனர்.
தற்போது ரஞ்சித் அவனை தோட்டத்திற்கு அழைத்ததும் ஆர்யன் உடனே அவனுடன் அங்கு சென்றான்.
“என்ன ஆச்சு ரஞ்சித் ?” என்று ஆர்யன் கேட்டதும், ” சார், நீங்க கேட்ட மாதிரி உங்க முகம் மாதிரி மாஸ்க் ரெடி பண்ணியாச்சு, நீங்க இப்போ நம்ம அடுத்த ப்ளான் ஆரம்பிக்கலாம். அப்போ தான் ராஜேஷ் வெளிய வருவான், அப்போ தான் நான் அவன் கடத்த முடியும் “ என்று ரஞ்சித் கூறினான்.
அதை கேட்டதும், ” அப்போ சரி, பிரதீப்புக்கு போன் பண்ணி, ஏர்போர்ட் வந்து எனக்காக வெயிட் பண்ண சொல்லு “ என்றான் ஆர்யன் கூர்மையான கண்களுடன்.
ரஞ்சித் தலையசைத்து, “ ஹ்ம்ம், கண்டிப்பா சார்.” என்று சொன்னதும், “ ஹ்ம்ம், இப்போ வா உள்ள போய் நாடகத்த ஆரம்பிக்கலாம்.” என்று ஆர்யன் சொன்னதும் இருவரும் மேன்ஷனுக்குள் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்ரோபோன் மூலம் கேட்டுக்கொண்டிருந்த மறைமுக பார்வையாளர்களுக்காக அரங்கேற்றப்பட்ட உரையாடலைத் ஆர்யன் தொடங்கினான்.
“ரஞ்சித், நான் டெல்லி போக உடனே ஜெட் ரெடி பண்ணு. அங்க ஒரு பார்ட்னர் ஒருத்தர ஒரு முக்கியமான விஷயமா சந்திச்சு பேசணும் “ என்று ஆர்யன் சொல்ல, ரஞ்சித் உடனே அவனிடம், “ கண்டிப்பா இப்போ போகனுமா சார்?” என்று தயக்கத்துடன் கேட்டான். ஆனால் ஆர்யன், “ஆமா, நான் கண்டிப்பா போகணும் ரஞ்சித் அதனால இன்னைக்கு சாயங்காலம் கிளம்ப எல்லாம் ரெடி பண்ணு “ என்று உறுதியாக சொன்னான்.
” கண்டிப்பா சார், நீங்க சொன்ன மாதிரி ஏற்பாடு செய்றேன் ” என்று சொல்லிவிட்டு ரஞ்சித் வெளியேறினான்.
அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ராஜேஷ், ஆர்யன் டெல்லி பயணம் பற்றி சொன்னதைக் கேட்டதும், அவசரமாக சந்திரசேகருக்கு போன் செய்து விவரங்களைத் தெரிவித்தான்.
ராஜேஷ் சொன்னதை கேட்ட சந்திரசேகர், ” இல்ல ராஜேஷ், அவன் ஏதோ திட்டம் போடுறான். நம்ம மூலமா அவன் மனைவிக்கு ஆபத்து ஏற்படுற நிலமை இருக்கும் போது அவன் நிச்சயமா இங்க இங்கிருந்து போக மாட்டான் “ என்ற உறுதியாக சொன்னார்.
” சார், நானே நேர்ல ஏர்போர்ட் போய் செக் பண்றேன்” என்று ராஜேஷ் சொல்ல, அதை யோசித்த சந்திரசேகர், “ இது நல்ல யோசன அப்படியே செய் “ என்று சொன்னார்.
ராஜேஷ் சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு தனது திட்டத்தை செயல்படுத்த அறையை விட்டு வெளியேறினான்.
அன்று மாலை, பிரதீப் சாதாரண மாஸ்க் அணிந்து, ஆர்யன் அறிவுறுத்தியபடி விமான நிலையத்திற்கு சென்றான். அதே நேரத்தில், ஆர்யனும், ரஞ்சித்தும் விமான நிலையத்திற்கு வந்தனர். ஏற்கனவே அங்கிருந்த ராஜேஷ், தூரத்தில் இருந்து ஆர்யனை உள்ளே நுழைவதை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆர்யன் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான் பின்னர் காத்திருந்த லவுஞ்சில் அமர்ந்தான். சில நிமிடங்கள் கழித்து, பிரதீப் முதலில் பாத்ரூம் சென்றதும், சில நொடிகள் கழித்து ஆர்யன் பாத்ரூமை நோக்கி நடந்தான். உள்ளே, ஆர்யனும், பிரதீப்பும் விரைந்து சட்டையை மாற்றிக் கொண்டனர். ஆர்யன் பிரதீப் அணிந்திருந்த மாஸ்க் அணிந்தான், பிரதீப், ஆர்யனின் முகமூடி அணிந்து வெளியே ரஞ்சித்துடன் தனியார் ஜெட் முனையத்தை நோக்கி நடந்தான். ராஜேஷ், உண்மையான ஆர்யனை கவனமாகப் பின்தொடர்வதாக நம்பினான்.
இதற்கிடையில், வழக்கமான மாஸ்க் அணிந்து ஆர்யன், பாத்ரூமை விட்டு சத்தமில்லாமல் வெளியேறி யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு தனி தனியார் ஜெட் விமானத்தில் ஏறினான்.
விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் தனது ஆட்களில் ஒருவரை அணுகி ஆர்யன் செல்லும் விமானம் குறித்து உறுதிபடுத்த சொல்லி கூறினான். விமான விவரங்களை இருமுறை சரிபார்த்து, ஆர்யன் டெல்லிக்கு விமானத்தில் ஏறியதை உறுதிப்படுத்திய பிறகு, அவன் விமான நிலையத்தை விட்டு வெளியேறி சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்தான்.
அப்போதும் சந்தேகம் கொண்ட சந்திரசேகர், ” டெல்லியில ஆர்யன் போற எல்லா இடத்துக்கும் அவன பின்தொடர ஆளுங்க அனுப்பு “ என்று உத்தரவிட்டார். ஆனால் உண்மையான திருப்பம் ஏற்கனவே விளையாடப்பட்டுவிட்டது. பிரதீப் டெல்லிக்கு பறந்தான், ஆர்யன் திருச்சிக்கு பறந்தான்.
பின்னிரவில் ஆர்யன் சென்ற விமானம் திருச்சியில் தரை இறங்கியது. அவனுக்காக ரஞ்சித் ஏற்கனவே ஒரு கார் ஏற்பாடு செய்திருந்தான். மாஸ்க் அணிந்து தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஆர்யன் காரில் ஏறினான்.
சஞ்சு இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு சென்றதும், பானு மெதுவாக அவள் தலையை மசாஜ் செய்து அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். சஞ்சு அமைதியாக படுக்கையில் படுத்திருக்க, பானு அவள் தலைமுடியை வருடிக்கொண்டே அவள் தூங்கும் வரை அவளை அன்புடன் தட்டி கொடுத்தார். சஞ்சுவின் மூச்சு சீரானதும், அவள் தூங்கிவிட்டாள் என்று பானு மெதுவாக எழுந்து கதவை நோக்கி நடந்து சென்று கதவை மெதுவாக மூடினார்.
கதவு மூடும் சத்தம் சஞ்சுவின் காதுகளை எட்டியது. அவள் கண்கள் மெதுவாகத் திறந்தாள், ஒரு சொட்டுக் கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது.
“ ஸாரி பானு “ என்று மௌனமாக நினைத்தவள், “நான் உங்கள தொந்தரவு செய்ய விரும்பல, அதனால தான் நான் இப்படி தூங்குற மாதிரி நடிக்க வேண்டியிருந்துச்சு. ஆனா… ஏன்னு எனக்கு தெரியல … என் ஆர்யன் இன்னைக்கு என் பக்கத்துல இருக்குற மாதிரி தோணுது. அவர் என் பக்கத்துல நெருக்கமா இருக்கும் போது என் இதயம் எப்பவும் துடிக்குற மாதிரி இப்போ துடிக்குது “ என்று முணுமுணுத்தாள்.
அப்போது மீண்டும் கதவு திறக்கும் மெல்லிய கிறீச் சத்தம் மீண்டும் அவள் காதுகளை எட்டியது. சஞ்சு சட்டென்று கண்களை மூடிக்கொண்டு மூச்சை சீராக்கி தூங்குவது போல் பாவனை செய்தாள்.
அவளருகில் படுக்கை மெல்ல அமிழ்ந்தது, அருகில் ஒருவர் படுத்ததும் அவள் உடல் அந்த மாற்றத்தை உணர்ந்தது. பரிச்சயமான வாசனை, எவ்வளவு பெரிய கூட்டத்திற்கு நடுவிலும் அவளால் அடையாளம் காண காணக்கூடிய அதே நறுமணம் அவளைச் சுற்றி சூழ்ந்தது. ஒரு வலிமையான, பழக்கமான கை அவள் இடுப்பைச் சுற்றி நழுவி அவளை நெருக்கமாக இழுத்தது, அவளுடைய முதுகு உறுதியான மார்பில் அழுத்தியதும் அவள் தீவிரமாக ஏங்கிய கதகதப்பை கொடுத்தது.
“சஞ்சு ஸ்வீட் ஹார்ட், ஐ லவ் யூ பேபி. என்ன மன்னிச்சிடு.” என்ற ஆழமான, கதகதப்பான, வலி நிறைந்த பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்ட போது அவளுடைய மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, கண்ணீர் மட்டும் மௌனமாக வழிந்தோடியது.
” மா, ப்ளீஸ் திரும்பி என்ன பாரு. எனக்கு உன்ன பார்க்கணும், ப்ளீஸ் டி “ என்று என்று அவனுடைய குரல் மென்மையாக உடைந்தது.
“நான் திரும்பி பார்த்ததும் நீ மறைஞ்சு போயிட்டா என்ன செய்றது ?” என்று அவள் குரல் நடுங்கியது.
“உனக்காகவும் நம்ம குழந்தைக்காகவும் நான் உண்மையா இங்க வந்துருக்கேன், ப்ளீஸ் மா, ஐ லவ் யூ.” என்று ஆர்யன் சொன்னதும், மெதுவாக ஆனால் தயக்கத்துடன், அவள் அவனை நோக்கித் திரும்பினாள். அடுத்த கணம் அவளது உணர்ச்சிகளின் அணை உடைந்தது. அவள் அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் விம்மி விம்மி அழுதாள். அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆர்யன் அவள் தலைமுடியைக் கோதிவிட்டான். அவளது நெற்றியிலும் கூந்தலிலும் மென்மையாக மீண்டும் மீண்டும் முத்தமிட்டான்.
“ஷ்ஷ்ஷ்… போதும் ஸ்வீட் ஹார்ட் அழாத, உனக்காக நான் வந்திருக்கேன்” என்று ஆர்யன் கிசுகிசுத்ததும், “ ஐ லவ் யூ ஆர்யன். நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சொல்லி சஞ்சு அவன் சட்டையை கண்ணீரால் நனைத்தாள்.
“நானும் உன்னை மிஸ் பண்ணேன் “ என்று ஆர்யன் சொன்னதும், சஞ்சு அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து ஆழமாக முத்தமிட்டவள், தன் வலியையும் ஏக்கத்தையும் அதில் மொத்தமாக கொட்டினாள். ஆர்யனும் சமமான தீவிரத்துடன் அவளை முத்தமிட்டான். இருவரும் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த உணர்ச்சியில் தங்களை இழந்தனர்.
” ஐ லவ் யூ ” என்று அவள் மீண்டும் கிசுகிசுக்க, “ ஐ லவ் யூ டூ ஸ்வீட் ஹார்ட் ” என்றான் ஆர்யன்.
” மறுபடியும் என்ன விட்டுட்டுப் போவியா ?” என்று கேட்ட அவள் குரல் மெல்லியதாகவும் பயமும் கலந்து இருந்தது. அதை கேட்ட ஆர்யன், “ அத பத்தி காலையில பேசுவோம், இப்ப தூங்கு.” என்று முணுமுணுத்தான்.
ஆர்யன் அவளை அணைத்துக் கொண்டான், அவள் தலை அவன் மார்பில் சாய்ந்திருந்தது. அவர்களின் மூச்சுகள் சீராக, அவர்களின் இதயங்கள் இறுதியாக அமைதியடைந்தன, மெதுவாக அவர்கள் ஒருவருக்கொருவர் அணைப்பில் தூங்கினர்.
காலையின் வெளிச்சம் அறைக்குள் மெல்ல ஊடுருவிச் சென்றது, ஆர்யன் கண் விழித்தபோது, சஞ்சு இன்னும் தன் அணைப்பில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், அவள் மீண்டும் வெறுமையில், தனிமையில் விழிப்பதை அவன் விரும்பவில்லை அதனால் அவன் அசையாமல், அவள் கண்களைத் திறந்ததும் தன்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி, அசையாமல் படுத்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து சஞ்சு உறக்கத்தில் இருந்து அசைந்தாள், அவள் கண்களை திறந்ததும், அவள் பார்வை அவளருகே இருந்த ஆர்யன் மீது விழுந்ததும் அவள் உதடுகள் மெல்லிய புன்னகையாக வளைந்தன. ஆர்யன் குனிந்து அவளது நெற்றியில் ஒரு முத்தம் வைத்து பின்னர் அவள் உதடுகளை மெல்ல முத்தமிட்டான். சஞ்சுவும் பதிலுக்கு அவனை அனைத்து முத்தமிட்டாள்.
“குட் மார்னிங் பொண்டாட்டி ” என்று ஆர்யன் மெல்லிய குரலில் சொன்னதும், “குட் மார்னிங் புருஷா ” என்று அவள் பதிலுக்கு கிசுகிசுத்தாள்.
புன்னகையுடன் ஆர்யன் லேசாக கீழே நகர்ந்து அவள் டாப்ஸின் விளிம்பை தூக்கி அவளது வயிற்றை அன்பாக, அக்கறையாக முத்தமிட்டான்.
” ஹலோ பாப்பா, ஐ லவ் யூ, என்ன மன்னிச்சிடு, அப்பா கொஞ்ச நாள் உன்கூடவும் இல்ல, உனக்கு முத்தம் கொடுக்கவும் இல்ல ஆனா நாம சீக்கிரம் ஒன்னா இருப்போம்,” என்று சொன்ன பிறகு அவன் சஞ்சுவைத் திரும்பிப் பார்த்தான். ” பொண்டாட்டி, இப்போ குளிச்சிட்டு வா, இன்னைக்கு உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் நான் ஊட்டி விடுறேன் ” என்று கூறினான்.
வீட்டில் ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றி, அச்சுறுத்தல்கள், மாயா மற்றும் அவளுடைய வாழ்க்கையை உலுக்கிய எல்லாவற்றையும் பற்றி அவனிடம் கேட்க சஞ்சு ஆசைப்பட்டாள், ஆனால் அப்படி எதை பற்றியும் கேட்காமல் தன்னைத்தானே நிறுத்திக் கொண்டாள். இந்தக் கணம் அவர்களுடையது, அவனுடன் நேரத்தை கழிக்க விரும்பி தனது கேள்விகளை பின்னர் கேட்க முடிவு செய்தாள்.
இருவரும் குளித்து தயாராகி டைனிங் டேபிள் பகுதிக்கு சென்றனர். அங்கு தீபாவும் பானுவும் அவர்களுக்காக காத்திருந்தனர்.
“ஹலோ ஆர்யன் சார்” என்று பானு அன்புடன் வரவேற்றதும், “ஹலோ டாக்டர். எப்படி இருக்கீங்க ? நான் உங்களுக்கு அதிக கஷ்டம் கொடுக்கலனு நம்புறேன் “ என்று பதிலளித்தான் ஆர்யன்.
“நிச்சயமா இல்ல, நீங்க அத பத்தி நினைக்க வேண்டியதே இல்ல “ என்று பானு புன்னகையுடன் கூறினார்.
ஆர்யன் தனக்கு அருகில் இருந்த தீபாவை நோக்கி, “ எப்படி இருக்கீங்க தீபா மா ? “ என்று புன்னகையோடு கேட்டான்.
“சார், நான் நல்லா இருக்கேன். ஒருவழியா இப்போ தான் சஞ்சு முகத்துல சிரிப்ப பார்க்க முடிஞ்சுது “ என்று தீபாவின் குரலில் பாசம் நிரம்பி வழிந்தது.
அதை கேட்டதும் சஞ்சு மெல்ல புன்னகைத்து ஆர்யனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
ஆர்யன் கவலையுடன் பானுவைப் பார்த்தான். ” சஞ்சுவோட உடம்பு ஆரோக்கியம் எப்படி இருக்கு ? என்று கேட்டான்.
“அவங்க எடை குறைஞ்சுட்டாங்க, நிறைய ஊட்டச்சத்து ஆகாரம் எடுத்துக்கணும். நாங்க எவ்ளோ முயற்சி பண்ணாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்காங்க, எப்பவும் யோசனையில பொழுது போகுது “ என்று பானு வருத்தத்துடன் சொன்னதும், “சஞ்சு, என்ன இது?” என்று ஆர்யன் குரலில் கவலை தொனிக்க மெல்லிய குரலில் கேட்டான். பிறகு தீபாவின் பக்கம் திரும்பி, “தீபா மா, ப்ளீஸ் நீங்க சாப்பாடு பரிமாறுங்க.” என்று கூறினான்.
தீபா சாப்பாடு பரிமாறியதும், ஆர்யன் தன் கைகளாலேயே சஞ்சுவுக்கு உணவளித்தான். ஒரு வாரத்தில் முதல் முறையாக அவள் முழுமையாக சாப்பிட்டாள்.
“ரொம்ப தேங்க்ஸ், தீபா மா ” என்று ஆர்யன் சொன்னதும், ” என்ன சார் ? நீங்க எல்லாரையும் எவ்ளோ நல்லா பார்த்துக்குறீங்க அப்போ நான் இது கூட செய்ய மாட்டேனா ? “ என்று சொன்னார் தீபா.
“ஆர்யன், நீயும் சாப்பிடு” என்று சஞ்சு உணவை எடுத்து பதிலுக்கு ஊட்டியாதும், பானு சிரித்துக் கொண்டே, “நானும் இங்க இருக்கேன்னு ஞாபகப்படுத்தட்டுமா?” என்று சொன்னார்.
தீபா அவரை பார்த்துப் புன்னகைத்து, “டாக்டர், வாங்க நாம சாப்பிடலாம்” என்று கூறினார்.
காலை உணவுக்குப் பிறகு, ஆர்யன் சஞ்சுவின் கையைப் பிடித்து அவளை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அவளை ஊஞ்சலில் உட்கார வைத்து மெதுவாக தள்ளி, காலை நேர குளிர்ந்த காற்றை அவள் அனுபவிக்க அனுமதித்தான்.
“சஞ்சு, உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்று ஆர்யன் கேட்க, “என் கனவு வீடு ஆனா நீ ஏன் இத பத்தி என் கிட்ட சொல்லவே இல்ல ? “ சஞ்சு அவனிடம் கேட்டாள்.
” உன்ன சர்ப்ரைஸ் பண்ணலாம்னு தான் சொல்லாம இருந்தேன் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், ” அப்போ ஒரு நாள் நாம இந்த நிலைமைக்கு ஆளாவோம்னு உனக்கு ஏற்கனவே தெரியுமா ? “ என்று கேட்டாள்.
” உனக்கு சர்ப்ரைஸா இத கட்டினேன். அப்புறம் இப்படி ஒரு நாள் வரும்னு நான் எதிர்ப்பார்த்தேன் ஆனா இந்த மாதிரி எதுவம் நடக்காம தவிர்க்க என்னால முடிஞ்ச வர முயற்சி பண்ணேன். இருந்தும் விதி நம்ம வாழ்க்கையில இப்படி ஒரு விளையாட்ட விளையாடிடுச்சு. மாயா அன்னைக்கு நாட்ட விட்டு போக வேண்டியதா இருந்துச்சு ஆனா எல்லாமே தலைகீழா நடந்துடுச்சு. அப்புறம் இந்த வீட்டுக்கு உன்ன நானே கூட்டிட்டு வரணும்னு நெனச்சேன் ஆனா மன்னிச்சிடு அப்படி செய்ய முடியா போச்சு “ என்று வருத்தத்துடன் சொன்ன ஆர்யன் பின்னர் அவளிடம், “ சரி இப்போ சொல்லு, நீ விரும்பின எதையாவது நான் இங்க சேர்க்காம மிஸ் பண்ணிட்டேனா?” என்று கேட்டான்.
சஞ்சு அவனை மெல்லப் பார்த்து, “எல்லாமே சரியா அழகா இருக்கு ஆனா நீ மட்டும் தான் இங்க இல்ல ” என்று வருத்தமாக சொன்னாள். அவள் சொன்னதை கேட்டதும் ஆர்யன் அவளருகில் அமர்ந்தான், சஞ்சு உடனே அவன் தோளில் தலை சாய்த்தாள்.
“ஆர்யன், மறுபடியும் என்னை விட்டுட்டு போறியா?” என்று சஞ்சு மெல்லிய குரலில் கேட்டாள்.
“சஞ்சு, இன்னும் கொஞ்ச நாள் தான் ஸ்வீட் ஹார்ட். நான் உன்ன என்கூட கூட்டிட்டு போயிடுறேன் அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையை தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டாங்க. உன் உயிர பணயம் வைக்க என்னால முடியாது.” என்று உறுதியாக சொன்னான் ஆர்யன்.
“உனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா என்ன செய்றது ?” என்று அவள் குரல் நடுங்க கேட்டதும், ” சுலபமா கொன்னுட்டு போக உன் புருஷன் அவ்ளோ பெரிய கோழைனு நெனச்சியா ? “ ” என்று மெலிதாகச் சிரித்தான். “என்னால உன்னையும் அங்க வெச்சு பாதுகாக்க முடியும், ஆனா நம்ம சுத்தி இருக்க எல்லா பிரச்சினையும் மொத்தமா தீர்க்க விரும்புறேன், அப்படி செய்யும் போது நான் உன்ன பணயம் வைக்க முடியாது.” என்று சொல்லி புரியவைத்தான்.
“ஆனா எவ்ளோ நாள் நாம இப்படி வாழுறது ? “ என்று சஞ்சு கேட்க, “நீ இல்லாம வாழுறது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு உனக்குத் தெரியும் தானே ? என்ன நம்பு, நான் ரொம்ப சீக்கிரம் திரும்பி வருவேன். எனக்கு சில முக்கியமான வேலையெல்லாம் இருக்கு அதனால நான் இன்னைக்கு நைட்டு கிளம்பனும் ” என்று கூறினான்.
ஆர்யன் கிளபுவதை பற்றி சொன்னதும் சஞ்சுவின் கண்களில் கண்ணீர் பெருகியது, ஆனால் அவள் தனது உணர்ச்சிகளை கொண்டு அவனைத் தடுக்க விடவில்லை.
ஆர்யன் அவளைப் பார்த்தான், “ஏதாவது சொல்லு.” என்று சொல்லி காத்திருந்தான்.
“சீக்கிரம் வா. உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன் ” என்று சஞ்சு கூறினாள்.
“அடுத்த முறை நான் இங்கு வரும் போது உன்ன என்கூட கூட்டிட்டு போவேன், இது என்னோட ப்ராமிஸ் ” என்று ஆர்யன் வாக்குறுதி அளித்தான்.
“நீ திரும்பி வரவரைக்கும் உன் அரவணைப்ப கொடு” என்று சஞ்சு கிசுகிசுத்ததும், மறுவார்த்தை பேசாமல் ஆர்யன் அவளைத் தூக்கி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான். அவளை மெல்ல படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தனது சட்டையை கழற்றி அவளை அணைத்துக் கொண்டான். சஞ்சு அவனது வெற்று மார்பில் முகம் புதைத்து அவன் இதயத்தின் அருகே இருந்த சிறிய மச்சத்தை முத்தமிட்டாள்.
” எனக்கு அரவணைப்பு கொடுக்க மாட்டியா ?” என்று ஆர்யன் விளையாட்டாகக் கேட்க, சஞ்சு வார்த்தைகளில் பதில் சொல்லாமல் தன் மேலாடையை கழட்டி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவர்களின் உதடுகள் ஒன்றையொன்று சந்தித்து, ஆழமான, உணர்ச்சி நிறைந்த முத்தத்தில் உருகின. பிரிவிலும் ஏக்கத்திலும் புதைந்து கிடந்த அவர்களின் காதல் மெல்லிய அலைகளாக விரிந்தது.
பின்னர், ஆர்யன் அவளை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக குளித்து, அமைதியான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். மீண்டும் உடையணிந்து, அவர்கள் படுக்கைக்குத் திரும்பினர், ஹெட்போர்டில் வசதியாக சாய்ந்து அமர்ந்தனர்.
“இரு நான் போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று எழுந்தான் ஆர்யன். ஆனால் சஞ்சு அவனை தடுத்து, “வேண்டாம், என்கூட இரு” என்று மென்மையாக கெஞ்சினாள்.
” கொஞ்ச நேரம் தான் மா, சீக்கிரம் வந்துடுறேன் ” என்று உறுதியளித்து சென்று சொன்னபடியே அவள் சாப்பிட கேக் மற்றும் மில்க் ஷேக்கும் கொண்டு வந்து அவளைச் சாப்பிட வைத்தான்.
“சஞ்சு, நீ நல்லா சாப்பிட்டு சந்தோஷமா இருக்கணும்” என்றவன் அவள் உதட்டில் இருந்த ஒரு துண்டை துடைத்தான்.
“நீயும் நல்லா சாப்பிட்டு, நல்லா தூங்கனும். இத்தன நாளா நீ சரியா சாப்பிடலனு தோணுது” என்றவளின் கண்களில் கவலை தெரிந்தது.
“சரி. நான் நல்லா சாப்பிடுவேன். கவலைப்படாத” என்று ஆர்யன் உறுதியளித்தான்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் ஆர்யன் அவளை மெதுவாக தன் மடியில் அமர்த்திக் கொண்டு, அவள் கழுத்து வளைவில் முத்தமிட்டு, அவள் அவனிடம் அமைதியைத் தேடியது போலவே அவளிடம் அவனும் அமைதியைத் தேடினான்.
*****************
முன்னோட்டம்:
“நீ சரியா தூங்கலனு எனக்குத் தெரியும் அதனால நீ நிம்மதியா அசந்து தூங்கும் போது எழுப்ப மனசு வரல. அதான் தொந்தரவு செய்யாம துணங்க விட்டேன் “

1 comment
[…] Chapter 80 […]