சனிக்கிழமை காலையில் எழுந்த மைரா அறையைச் சுற்றி சுழன்று நடனமாடி படுக்கையில் கிடந்த விரிப்புகளை வெளியே எடுத்தாள்.
“ என் கெட்சப் இன்னைக்கு திரும்பி வருவாரு. அவர் 24 மணி நேரம் என் கூட இருப்பாரு “ என்று சொல்லிக் கொண்டே, அவள் தனது மொபைலில் ஒரு பாடலை ஒலிபரப்பி நடனமாடத் தொடங்கினாள், ஆனால் திடீரென்று நடனமாடுவதை நிறுத்தினாள்.
“ மைரா, சரியான முட்டாள் பொண்ணு நீ. இப்படி டேன்ஸ் ஆடி நேரத்த வீணாக்காத. உன் புருஷன வரவேற்க வேண்டாமா? ஆறு நாள் கழிச்சு வரப் போறாரு. அடடா அவர் இல்லாம நான் எப்படி ஆறு நாள் இருந்தேன்? “ என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு தலையணை உறைகள், திரைச்சீலைகளை அகற்றி அழுக்கு துணி பையில் போட்டாள். பாடலை நிறுத்தி விட்டு அறையை சுத்தம் செய்யத் தொடங்கினாள். மைராவை காலை உணவுக்கு அழைக்க அறைக்குள் நுழைந்த அர்ச்சனா, மைரா அறையை சுத்தம் செய்து விரிப்புகளையும் திரைச்சீலைகளையும் மாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
“ மைரா, வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு முடிச்சிட்டு வேலைய பாரு “ என்று அர்ச்சனா சொல்ல, “ இல்ல மா, நான் அப்புறம் சாப்பிடுறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இல்லனா நான் நேரடியா மதியம் லஞ்ச் சாப்பிடுறேன். நான் இன்னைக்கு சூப்பர் மார்க்கெட் கொஞ்சம் போகணும். நைட்டு டின்னர் நான் சமைக்குறேன் “ என்று மைரா பதில் சொன்னாள்.
அவளது உற்சாகத்தைக் கண்ட அர்ச்சனா புன்னகையுடன் தலையை ஆட்டினார். மைரா புத்துணர்ச்சி பெற்று அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று சமைக்க தேவையான சாமான்களை வாங்கினாள். வீடு திரும்பிய மைரா தனது அம்மாவை அழைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக் தயார் செய்ய சொல்லிவிட்டு சமையலுக்கு தயார் செய்ய காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். இந்த எல்லா வேலைகளிலும் மைராவும் கேஷவும் எப்போதும் போல ஒருவரையொருவர் அழைத்து பேசினர். அவள் பேசும் போது அவளது வார்த்தைகளில் அவள் உற்சாகத்தை கேஷவ் உணர்ந்தான்.
மாலையில் கேஷவ் புறப்பட்டுவிட்டானா என்று விசாரிக்க மைரா அவனை அழைத்தாள். அவள் பெயரை பார்த்ததும் புன்னகைத்த கேஷவ் முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தான்.
“ நான் கிளம்ப தயாரா இருக்கேன் அம்மு. எனக்காக நீ ரெடியா இருக்கியா ? “ என்று கேஷவ் கேட்க, “ உங்க கையில குதிச்சு கட்டி புடிக்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கெட்சப். நீங்க flight மிஸ் பண்ணிட கூடாது அதனால சீக்கிரம் வாங்க. கொஞ்சம் நேரம் ஏர்போர்ட்ல வெயிட் பண்ணா அதுல எந்த தப்பும் இல்ல “ என்று மைரா சொன்னாள்.
“ கண்டிப்பா மேடம், இப்ப நான் கிளம்பறதுக்கு முன்னாடி டீமுக்கு சில இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணும், அதனால அப்புறம் கூப்பிடறேன்” என்று கேஷவ் சொன்னதும் மைரா அழைப்பை துண்டித்து அவனுக்கான துணிகளை எடுத்து குளியலறையில் புதிய துண்டை வைத்தாள். சிஷிமாருவைத் தூக்கிச் சென்று மதனிடம் கொடுத்து அவனை சிறிது நேரம் கவனித்துக் கொள்ளச் சொன்னாள். பின்னர் சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு பிடித்த இரவு உணவை இனிப்புடன் சமைக்க ஆரம்பித்து அவற்றை ஹாட் பேக்கில் பேக் செய்தாள்.
“ எல்லாம் தயாரா? “ என்று நைனா கேட்டதும், “ ஆமா, நான் குளிச்சு முடிச்சு கெட்சப் கூப்பிட ஏர்போர்ட் போகணும் “ என்று மைரா பதில் சொன்னாள்.
“ ஏய், வசு ஆண்ட்டி உன்ன இப்பத் தான் கூப்பிட்டாங்க. அவங்களுக்கு ஏதாவது தேவையானு போய்ப் பாரு. நான் கிட்சன் சுத்தம் செய்றேன் “ என்று நைனா சொன்னதும் நேரத்தைப் பார்த்த மைரா வசுந்த்ராவைப் பார்க்க ஓடினாள்.
“ அம்மா, நீங்க என்ன கூப்பிட்டீங்களா ? கெட்சப் கூப்பிட எனக்கு நேரம் குறைவா இருக்கு. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க “ என்று மைரா கேட்டதும், “ மைரா, என் முழங்கால் ரொம்ப வலிக்குது. கொஞ்சம் எண்ணெய் தேய்ச்சு மசாஜ் செய்றியா ? “ என்று கேட்டார் வசுந்தரா.
மைரா விரைவாக ஒரு கிண்ணத்தில் எண்ணெயை சூடாக்கி தரையில் அமர்ந்தாள். வசுந்த்ராவின் கால்களை தன் தொடைக்கு மேல் வைத்து முழங்காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய ஆரம்பித்தாள்.
“ நீங்க ஏன் ஹாஸ்பிடல் வர மாட்டேங்குறீங்க மா. இந்த பிரச்சனைய பார்க்கலாமே. அப்பா எங்க ? “ என்று மைரா கேட்க, “ கேஷவுக்கு ஸ்வீட் வாங்கப் போயிருக்காரு. உன் அப்பா அவருக்குப் பிடிச்ச கடையில வாங்கிட்டு வர பாதாம் பாலும் ஜிலேபியும் கேஷவுக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால அவர் வாங்கப் போயிருக்காரு “ என்றார் வசுந்தரா.
“ ஆனா அவருக்காக நான் சமைச்ச சாப்பாடு அவர் சாப்பிட்ட அப்புறம் தான் நீங்க அந்த ஸ்வீட் கொடுக்கணும் “ என்று மைரா சொல்ல, “ சரி, எனக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்ல. போய் கை கழுவி ரெடியாகு “ என்று வசுந்தரா சொன்னதும் மைரா கிண்ணத்தை சமையலறையில் வைத்துவிட்டு வேகமாக கை கழுவி விட்டு வீட்டுக்கு ஓடினாள். கூந்தலை கொண்டையாகக் கட்டிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டதும், பின்னாலிருந்து அனைக்கப்படுவதை பார்த்து திடுக்கிட்டாள் ஆனால் அவளது அடிவயிற்றில் இருந்த கைகளையும் அவளுக்குப் பிடித்த வாசனையையும் முகர்ந்து புன்னகைத்தாள். அவள் தலையை சாய்த்து கேஷவ் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிடுவதைப் பார்த்தாள்.
கேஷவ் அவளைத் திருப்பிப் பார்க்க, மைரா அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளைக் கட்டி அனைத்துக் கொண்டாள். அவள் தன் முகத்தை அவன் கழுத்தில் புதைக்க, கேஷவ் அவள் கண்ணீர் அவன் தோலில் படுவதை உணர்ந்தான்.
“ அம்மு “ என்று கேஷவ் சொன்னதும், “ உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் “ என்றாள் மைரா.
கேஷவ் அணைப்பில் இருந்து விடுபட்டு அவள் முகத்தை உள்ளங்கையில் பற்றி அவள் நெற்றியில் முத்தமிட்டு கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தான். மைரா அவனை இழுத்து காலரைப் பிடித்து முத்தமிடத் தொடங்கினாள். அவர்கள் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் அனைத்தையும் கொட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முத்தம் கொடுத்ததும் மைரா அவன் முகத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டாள்.
“ எப்படி சீக்கிரம் வந்தீங்க? உங்கள கூட்டிட்டு வர நான் ஏர்போர்ட் கிளம்ப பிளான் பண்ணி இருந்தேன் “ என்று மைரா ஆச்சரியத்தோடு சொல்ல, “ சீக்கிரம் ப்ளைட் புக் பண்ணிட்டு உன்ன சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சேன். நீ எனக்கு போன் பண்ண அப்போ நான் ஏற்கனவே கிளம்பிட்டேன். நான் வசு அத்த கிட்ட உன்ன கூப்பிடச் சொன்னேன். அதுக்கு அப்புறம் உள்ள வந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் “ என்றான் கேஷவ்.
“ குளிக்குறத தவிர எல்லா வேலையும் முடிச்சிட்டேன். நான் குளிச்சிட்டு உங்கள சந்திக்க தயாரா இருக்க நெனச்சேன் ஆனா இப்போ என்ன பாருங்க, எல்லா வேலையும், சமையலையும் முடிச்சு நான் அழுக்கா இருக்கேன். ஆறு நாள் அப்புறம் வந்து அழுக்கு பொண்டாட்டிய பார்த்துருக்கீங்க “ என்று மைரா முகம் சுளித்தாள்.
“ எனக்கு உன் கூட சேர்ந்து அழுக்காக புடிக்கும்னு உனக்கு தெரியாதா ? நீ அழுக்கா இருந்தா என்ன இப்போ ? நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பி நேரா ஏர்போர்ட் வந்தேன், அங்க இருந்து இப்போ வீட்டுக்கு வந்துருக்கேன் அதனால நானும் அழுக்கா தான் இருக்கேன். அப்புறம் என்ன வரவேற்க நீ போர்வை, கர்டைன்ஸ் எல்லாம் மாத்தி இருக்க ஆனா என்ன வரவேற்க சரியான, ஸ்பெஷலான வழி நீ இப்போ இப்படி இருக்குறது தான். நாம ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம் “ என்று சொல்லி கேஷவ் அவளை பாத்ரூமுக்கு தூக்கி சென்று பின்னங்காலால் கதவைச் சாத்தினான். இருவரும் ஆடைகளைக் களைந்துவிட்டு ஷவருக்கு அடியில் நின்றார்கள். அவர்களின் சிறிய காதல் நேரம் முடிந்து, இருவரும் குளித்து முடித்து அறையில் தயாரானார்கள்.
இருவரும் ஹாலை அடைந்ததும் கேஷவ் குடும்பத்தினரை சந்தித்தான். சிஷிமாரு ஓடி சென்று கேஷவைப் பார்த்து வாலை ஆட்டியது. கேஷவ் உடனே அவனைத் தூக்கிக் கொண்டு லேசாகத் தடவிக் கொடுத்தான்.
“ என் அம்மு கூட விளையாடினியா ஷிஷிமாரு ? நீ ரொம்ப குறும்புக்காரன்னு தெரிஞ்சுக்கிட்டேன் “ என்று கேஷவ் சொல்ல, “ இல்ல, அவன் ரொம்ப நல்லவன். அவன கொடுங்க, நாம இப்போ டின்னர் சாப்பிடுவோம் “ என்று சொல்லி மைரா ஷிஷிமாருவை தரையில் படுக்க வைத்தாள்.
அவர்கள் அனைவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர். மைரா அனைவருக்கும் பரிமாறினாள், பின்னர் கேஷவ் அருகில் அமர்ந்ததும் அவன் அவளுக்கு முதல் கவளத்தை ஊட்டினான். மைராவின் கண்களில் கண்ணீர் வழிய அவன் கையால் சாப்பிட்டாள்.
“ உனக்காக ஜிலேபியும் பாதாம் பாலும் வாங்கி இருக்கேன் கேஷவ். ப்ரிட்ஜுல இருக்கு, அப்புறம் சாப்பிடு “ என்று ராஜன் சொன்னதும், “ ரொம்ப நன்றி மாமா “ என்று சொல்லி கேஷவ் சமையலறைக்குள் நுழைந்து ஒரு ஜிலேபியை எடுத்து உடனடியாக சாப்பிட்டான். அதை பார்த்ததும் ராஜன் மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தார்.
கேஷவும் மைராவும் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர். அவன் படுக்கையில் கிடக்க, மைரா அவனை அணைத்துக் கொண்டு அவன் வாசனையை முகர்ந்தாள்.
“ நான் இத மிஸ் பண்ணேன். ஒரு வாரம் தான் கடந்து இருக்கு கெட்சப். இன்னும் 13 வாரம் இருக்கு. நான் பொய் சொல்ல மாட்டேன், ரொம்ப கஷ்டமா இருக்கு, உங்கள விட்டு விலகி இருக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம் “ என்று மைரா மெல்ல கூறினாள்.
“ அது எனக்கு மட்டும் சுலபம்னு நினைக்கிறாயா ? நீ என்ன மிஸ் பண்றனு எனக்குத் தெரியும் அம்மு ஆனா இத பத்தி நாம பேசினோம் தானே ? சீக்கிரம் வர என்னால முடிஞ்ச வர முயற்சி செய்வேன். இந்த 13 வாரங்கள நாம் கடப்போம் “ என்று சொல்லி கேஷவ் அவளை இழுத்து அவள் முகத்திலிருந்து கழுத்து வரை விரலை தடவி அவளது கேமிசோலின் பட்டையில் நின்றான். அவள் தோளில் இருந்த பட்டையை விலக்கி அவளது கழுத்து எலும்பை முத்தமிட்டான்.
“ உன் மேல என் உதடுகள மிஸ் பண்ணியா மைரா ? “ என்று கேஷவ் கேட்டதும், “ ஆமா கேஷவ் “ என்று அவள் பதில் சொன்னாள்.
கேஷவ் அவளது நாடிய மெல்ல லாவிய போது மைரா அவன் பெயரை முனகினாள். மைரா தன் விரல்களால் அவன் தலைமுடியை கோதிவிட்டு அவனை அருகில் இழுத்தாள். கேஷவ் அவளது மென்மைகளை கசக்கி அவளை அணைத்து கட்டிலில் புரண்டு அவள் பிளவை முத்தமிட்டான்.
“ படுக்கைய உடைக்க வேணாம் அப்புறம் என்னால யாரையும் பார்க்க கூட முடியாது “ என்று மைரா சொல்ல, “ படுக்கையில நாம ரெண்டு பேரும் எவ்ளோ காட்டுத்தனமா இருப்போம்னு தெரிஞ்சு நமக்காக சாதாரணமா கட்டில் செலெக்ட் பண்ணி இருப்பேன்னு நினைக்குறியா ? “ என்று கேட்டு கண்ணடித்தான் கேஷவ்.
அவன் சொன்னதை கேட்டு மைரா புன்னகைத்தாள், ஆனால் அவனது உதடுகள் அவளது உச்சங்களை லாவிய போது அவள் உதடுகளில் இருந்து ஒரு சத்தமாக முனகல் வெளிப்பட்டது. இருவரும் வழக்கம் போல தங்களை மறந்து போனார்கள் ஆனால் தங்கள் காதல் லீலை முடிந்த பிறகு கேஷவ் அவள் மீது சரிந்து அவள் கண்களில் வழிந்த கண்ணீரை முத்தமிட்டான்.
“ நான் உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் கெட்சப், நீங்க இல்லாம நான் ஒரு பைத்தியம் மாதிரி இருக்கேன் ஆனா கவலைப்படாதீங்க நான் சரியாயிடுவேன். இது வெறும் 13 வாரம் மட்டும் தான் அப்புறம் நீங்க நான் நல்லா இருக்கணும்னு எல்லாமே செய்றீங்க அதனால என் கோவம், புலம்பல் பத்தி கவலைப்பட வேண்டாம். என்ன நானே சமாளிச்சுக்குவேன் “ என்று மைரா கண்ணீரை விழுங்கியபடி சொன்னாள்.
“ ஐ லவ் யூ அம்மு. நீ எவ்ளோ உணர்ச்சிகள தாங்க வேண்டி இருக்குனு என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனா நீ தான் என் பலம், பலவீனம் அது உனக்கு ஞாபகம் இருக்கட்டும். நீ என் பலமா இருக்கும் போது என்னால எல்லாத்தையும் சிறப்பா செய்ய முடியும், உன் சப்போர்ட் இல்லாம என்னால எதுவும் செய்ய முடியாது. இனிமே அடிக்கடி வீட்டுக்கு வர முயற்சி செய்றேன் ஆனா ப்ளீஸ் அழாத அம்மு “ என்று கேஷவ் அவளை சமாதானம் செய்தான்.
“ ஸாரி கெட்சப் நான் உங்க பலவீனமா இருக்க விரும்பல, ஆனா இது முதல் முறை அதனால நான் ரொம்ப உணர்ச்சிவசப்படுறேன் “ என்று சொல்லி மைரா புன்னகைக்க, கேஷவ் அவள் முகத்தை இறுக்கி கண்களில் முத்தமிட்டு மூக்கை கடித்தான்.
“ எனக்குத் தெரியும் அம்மு, ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்குறோம் அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த கட்டத்த நாம ஒன்னா கடந்து வருவோம். நாம ரொம்ப மிஸ் பண்ணுவோம் ஆனா இன்னும் அதிகமா லவ் பண்ணுவோம் “ என்று கேஷவ் சொன்னதை கேட்டு மைரா ஒரு புன்னகையுடன் ஆம் என்று முணுமுணுத்தபடி அவனை அருகில் இழுத்தாள், அவர்கள் மெதுவாகவும் முழு உணர்ச்சியுடனும் முத்தமிட்டனர்.
காலையில் கண்விழித்த மைரா கேஷவின் மார்பில் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தாள். அவன் விழித்துக் கொண்டு அவளது தலைமுடியை விரல்களால் கோதிக் கொண்டிருந்தான். அவள் அசைவதைக் கண்ட கேஷவ் அவளைத் தன் மேல் இழுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“ சரி, அன்னைக்கு என்ன எப்படி கூப்பிட்ட ? “ என்று கேஷவ் கேட்க, “ நான் உங்கள எப்படி கூப்பிட்டேன் கேஷவா ? “ என்று மைரா கிண்டலுடன் கேட்டாள்.
கேஷவ் சிரித்தபடி அவள் கன்னத்தை மெதுவாக கடித்து அவளை இறுக்கி அணைக்க, மைரா அவள் தலைமுடியை கொண்டையாக கட்டி போர்வையை அவள் உடலை சுற்றி போர்த்தினாள். விரல்கள் ஒன்றோடொன்று விளையாடியபடி அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒரு மணி நேர அரட்டைக்கு பிறகு அன்றைய தினத்திற்கு தயாராக முடிவு செய்தனர்.
நைனாவும் க்ரிஷும் அவனது காரில் வீட்டை விட்டு வெளியேறினர், அவள் அறிவுறுத்தியபடி காரை ஓட்டுமாறு அவள் அவனுக்கு உத்தரவிட்டாள்.
“ என்ன எங்க கூட்டிட்டு போற நைனா? அண்ணா வீட்ல இருக்காரு, அவர் கூட கொஞ்சம் நேரம் இருக்கலாம்னு நெனச்சேன். நான் தவறவிட்ட இத்தன வருஷத்தையும் ஈடுகட்ட விரும்பினேன் “ என்று க்ரிஷ் சொல்ல, “ உங்க அண்ணன் முதல்ல பொண்டாட்டி கூட கொஞ்ச நேரம் இருக்கட்டும், நாம மதியம் அவங்களோட சேர்ந்துக்கலாம் “ என்றாள் நைனா.
நைனா சுட்டிக்காட்டிய இடத்தில் காரை நிறுத்திய க்ரிஷ் அவர்கள் ஒரு அனாதை இல்லத்திற்கு வந்திருப்பதைப் பார்த்தான்.
“ நாம ஏன் இங்க வந்துருக்கோம் நைனா? “ என்று க்ரிஷ் கேட்டான் ஆனா நைனா பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி காரில் இருந்து இறங்கினாள். பின் சீட்டில் வைத்த ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு க்ரிஷை தன்னைப் பின்தொடருமாறு சைகை செய்தாள். அவர்கள் அலுவலகத்தை அடைந்ததும், நைனா மேலாளரிடம் பேசினாள். பின்னர் அவர்கள் ஒரு அறைக்கு அனுப்பப்பட்டனர், அங்கு க்ரிஷ் மற்றும் நைனா குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்தனர்.
பராமரிப்பாளர் குழந்தைகளை அழைத்ததும் அவர்கள் க்ரிஷ், நைனா மற்றும் பராமரிப்பாளர் முன் கூடினர்.
“ ஹலோ குழந்தைங்களே, இவங்க நைனா ஆண்ட்டி அப்புறம் அவர் க்ரிஷ் அங்கிள். இவங்க உங்கள் எல்லாரையும் சந்திக்க வந்துருக்காங்க. நீங்க எல்லாரும் நல்ல குழந்தைங்கனு நான் இவங்க கிட்ட சொன்னதும் ரெண்டு பேரும் உடனே உங்கள பார்க்கணும்னு சொன்னாங்க. க்ரிஷ் அங்கிள் உங்க எல்லாருக்கும் ஒண்ணு வெச்சிருக்காரு “ என்று பராமரிப்பாளர் சொன்னதும் குழந்தைகள் உற்சாகத்தில் கூச்சலிட தொடங்கினர்.
நைனா சாக்லேட் பெட்டியைத் திறந்து க்ரிஷிடம் கொடுத்து, குழந்தைகளுக்கு கொடுக்கும்படி சைகை செய்தாள். க்ரிஷ் முதலில் தயங்கினான், ஆனால் குழந்தைகள் அனைவரும் பெறுவதற்கு உற்சாகமாக இருப்பதைக் கண்டதும், அவன் ஒரு சாக்லேட்டை எடுத்து முதல் குழந்தைக்கு கொடுத்தான். அதைப் பெற்றதில் அந்த குழந்தை உற்சாகமடைந்தான். தன்னிடமிருந்து சாக்லேட் வாங்கிக் கொண்ட குழந்தைகள் புன்னகைப்பதைப் பார்த்து க்ரிஷும் புன்னகைத்தான்.
“ இன்னைக்கு இந்த 55 குழந்தைங்களோட சிரிப்புக்கு நீ தான் காரணம், உன் சிரிப்புக்கு அவங்க தான் காரணம் “ என்று நைனா அவனிடம் கூறினாள்.
பெட்டியில் இன்னும் இரண்டு சாக்லேட்டுகள் மீதமிருப்பதைப் பார்த்த நைனா, ஒன்றை எடுத்து சாப்பிடுவதற்காக கவரை பிரித்தாள், ஆனால் க்ரிஷ் அவளுக்கு ஒரு சாக்லேட்டை வழங்குவதைப் பார்த்ததும் நிறுத்தினாள்.
“ நிச்சயமா எனக்கு சாக்லேட் கொடுக்குறதுல நீ உறுதியா இருக்கியா ? அப்புறம் தினமும் சாக்லேட் கேட்ட என்ன செய்வ ? “ என்று நைனா கேட்க, “ அது உன் முகத்துல சிரிப்ப கொண்டு வரும்னா நான் உனக்காக வாங்கி தரேன் “ என்றான் க்ரிஷ்.
“ என் புருஷனா வாங்கி தருவியா இல்ல நண்பனா வாங்கி தருவியா ? “ என்று நைனா கேட்க, க்ரிஷ் பதில் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு சாக்லேட்டை அவள் உள்ளங்கையில் வைத்தான். நைனா சாக்லேட்டைப் பிரித்து ஒரு துண்டை அவனிடம் நீட்டினாள். அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டனர்.
மதியம் கேஷவ் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தான், மைரா அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். அவன் அவளுக்கு வாங்கித் தந்த சாக்லேட்டை அவள் மென்று கொண்டே வாணலியில் உள்ளவற்றை அவன் கிளறுவதைப் பார்த்தாள். கேஷவ் அவளை தன் பக்கம் திருப்பி அவள் உதட்டோடு சேர்த்து சாக்லேட்டை சுவைத்து முத்தமிட்டான்.
அவள் வெட்கப்படுவதை பார்த்து அவன் கண்ணடித்தான். இருவரும் சேர்ந்து உணவு பாத்திரங்களை மேஜையில் வைத்தனர். நைனாவும் க்ரிஷும் அதற்குள் திரும்பி வந்தனர், அவர்கள் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டனர்.
பின்னர் கேஷவும் மைராவும் தங்கள் அறையில் இருந்தனர், கேஷவ் கட்டிலில் சாய்ந்திருக்க, மைரா அவன் கால்களுக்கு இடையில் மார்பில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். மைரா ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்ததும், மைரா அவன் விரளோடு விளையாடி கொண்டும், நகங்களைக் கடித்துக் கொண்டும் இருவரும் படம் பார்த்தனர்.
மாலையில் அவளை ஐஸ்கிரீம் சாப்பிட வெளியே அழைத்துச் சென்றுவிட்டு கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். கேஷவ் மீண்டும் புறப்பட வேண்டியிருந்ததால் அவர்கள் வீடு திரும்பினர். கேஷவ் குளித்துக் கொண்டிருந்த போது மைரா அவனது ஆடைகளை எடுத்துக்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். கேஷவ் மைரா தேர்ந்தெடுத்த ஆடைகளை புறக்கணித்துவிட்டு மாற்றுவதற்காக ஒரு ஷார்ட்ஸ் மற்றும் பனியனை எடுத்தான்.
“ ஏன் இந்த டிரஸ் போடுறீங்க ? நீங்க ஷார்ட்ஸ் போட்டு டெல்லி போக போறீங்களா ? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தா அத மறந்துடுங்க “ என்று மைரா சொல்ல, “ நான் உன் கூட இன்னொரு நைட்டு தங்குறேன், விடிய காலையில கிளம்புறேன் “ என்று சொல்லி கேஷவ் டிக்கெட் விவரங்களைக் காட்டினான்.
மைரா உற்சாகத்தில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு சுழன்றாள். அவர்கள் இரவை திரைப்படம் பார்த்து அரட்டை அடித்தார்கள். அதிகாலையில் கேஷவ் டெல்லி புறப்பட்டு சென்றான்.
***************
முன்னோட்டம்:
“ ஏய் மைரா, என் மகன ஆட்டி படைக்குரியா ? அவன உன் இஷ்டத்துக்கு ஆட வைக்குரியா ? உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும் ? “
