Home FamilyChapter 31

Chapter 31

by Siragugal Novels
19 views

ஆர்யனும், சஞ்சுவும் அவர்களின் அறைக்கு சென்றதும் மேன்ஷனின் கதவருகே நின்று கொண்டிருந்த சுனிதா, பாலா பாதுகாவலர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள். சஞ்சு மேன்ஷனில் தங்கி இருப்பதும், ஆர்யானிடம் அவள் கொண்டிருந்த நெருக்கமும் அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பின அதனால் அவற்றுக்கு பதில் அறிய பாலாவிடம் சென்று, ” ஹலோ” என்று சொல்லி புன்னகைத்தாள்.

” சொல்லுங்க ” என்றார் பாலா, அவளை சந்தேகத்துடன் பார்த்தபடி.

” சஞ்சனா இங்க தான் தங்கி இருக்காங்களா ?” என்று சுனிதா கேட்க, உடனே பாலா அதற்கு, “ அத நீங்க  ஏன் கேட்குறீங்க ?” என்று கேட்டார்.

என்ன சொல்வது என்று யோசித்த சுனிதா மீண்டும் புன்னகைத்துக் கொண்டே,  ” ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன். சஞ்சனா அவரோட PA தானே அப்புறம் ஏன் அவங்க இங்க இருக்காங்க ? “ என்று கேட்டாள்.

” அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். நீங்க சார பார்க்க தானே வந்தீங்க ? இப்போ அவர பார்த்தச்சுல கிளம்புங்க “ என்று பாலா கடுமையான குரலில் சொல்ல, “ எனக்கு தேவையான தகவல் சொன்னா நான் உங்களுக்கு பணம் தரேன் “ என்றாள் சுனிதா. அதற்கு சற்று யோசித்த பாலா, “ எவ்ளோ தருவீங்க ? “ என்று கேட்டார்.

சுனிதா உடனே, “ உங்களுக்கு எவ்ளோ வேணும் சொல்லுங்க ? “ என்றாள். பாலா அதற்கு புன்னைகைத்து, “ இருங்க நான் போய் ஆர்யான் சார் கிட்ட கேட்டுட்டு வரேன் “ என்று சொல்லி மேன்ஷனை நோக்கி நடந்தார். அதை கண்ட சுனிதா பீதியடைந்து பாலாவை தடுத்தாள்.        

” அவ்ளோ பயம் இருக்குல ? கிளம்புங்க முதல்ல. வந்துட்டாங்க நல்லா “ என்று எரிச்சலுடன் பாலா சொல்ல, விரக்தியடைந்த சுனிதா காலால் மிதித்து ஆர்யன் மேன்ஷனை விட்டு வெளியேறினாள். வெளியே காரில் அமர்ந்து  கொண்டு மூடி இருந்த கம்பீரமான கதவுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் தன் மொபைலை எடுத்து யாரையோ அழைத்தாள். மறுமுனையில்  இருந்து “ஹலோ” என்று கேட்டதும்,  ” நான் அவர சந்திக்க ஆர்யன் மேன்ஷனுக்கு வந்தேன் ஆனா சஞ்சனா இங்க இருக்கா. அவ இங்க நிரந்தரமா தங்கி இருக்கானு நான் நினைக்குறேன் அது மட்டும் இல்ல .. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்னியோன்யமா இருக்காங்க.” என்று சுனிதா கூறினாள்.

“ஆர்யானோட முகம் எப்படி இருந்துச்சு ? என்ன ரியாக்ட் பண்ணாரு ?” என்று இனந்தெரியாத குரல் கேட்டதும், ” அவர் என்ன பார்க்கக் கூட இல்ல.  என்னோட அக்ரீமென்ட் எல்லாத்தையும் ரத்து பண்ணிட்டாரு. இப்போ எனக்கு வேற வழி இல்ல “ என்று சுனிதா கசப்புடன் பதிலளித்தாள்.

” உனக்கு புது ப்ராஜெக்ட் கிடைக்க நான் ஏற்பாடு செய்றேன். வேற ஏதாவது தகவல் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணியா ? “ என்று அந்த நபர் கேட்க, “அவ இங்க தான் தங்கி இருக்காளானு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணேன் ஆனா எல்லாரும் ஆர்யனுக்கு ரொம்ப விசுவாசமா இருக்காங்க. வாய திறந்து ஒரு விஷயம் கூட சொல்ல மாட்டேங்குறாங்க “ என்றாள் சுனிதா.    

“சரி பரவாயில்ல, இப்போ நீ அந்த  பட்டன் கேமராவ டிரைவர் கிட்ட கொடுத்துட்டு கிளம்பு. எனக்கு வேறு ஏதாவது தேவைப்பட்டா நான் உன்ன திரும்பவும் கூப்பிடுறேன். இன்னைக்கு நைட்டு நான் இந்தியா வரேன் “ என்று  சொன்ன அந்த நபர், “  நல்லா ஞாபகம் இருகட்டும், இதுவர நீ பண்ணது எல்லாமே வெறும் நடிப்பு தான். ஆர்யன் மேல தேவையில்லா எந்த எண்ணமும் கனவுல கூட வெச்சுக்காத. உனக்கு என்ன பத்தி தெரியும், ஆர்யானுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் “ என்று உறுதியான, உணர்ச்சியற்ற குரலில் சொன்னதும் சுனிதா ஒரு நொடி நடுங்கினாள்.

” எனக்குத் தெரியும், இப்போ என்னோட இழப்பு எல்லாத்துக்கும் ஈடுகட்ட சில ப்ராஜெக்ட் எனக்கு கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க அப்புறம் எனக்கு கொடுக்குறதா சொன்ன பணத்தையும் அனுப்புங்க “ என்று சுனிதா கூறியதும், “ எல்லாமே உனக்கு கிடைக்கும் “ என்றார் அந்த நபர்.

“சரி.” என்று சொல்லி அழைப்பை துண்டித்த சுனிதா, தனது உடையில் இருந்த பட்டன் கேமராவை ரகசியமாக கழற்றி, டிரைவரிடம் கொடுத்துவிட்டு வேறு ஒரு காரில் ஏறி சென்றாள்.

ஆர்யன் மற்றும் சஞ்சுவின் அறையில் ஆர்யன் அவளை முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் அணிந்திருந்த சட்டையை வேகமாக கழட்டினான். அவள் அணிந்திருந்த சிவப்பு நிற உள்ளாடையை பார்த்து அவளை பார்த்து கண்ணடித்தான். சஞ்சு எதுவும் சொல்வதற்குள் அவளது உள்ளாடை காற்றில் பறந்தது.

அவன் மெல்ல அவள் மேன்மைகளை கசக்கி சுவைக்க ஆரம்பித்ததும் சஞ்சு தன் முதுகை வளைத்து முனக ஆரம்பித்தாள். அவள் விரல்கள அவன் தலைமுடியை இறுகப்பிடித்தன. சஞ்சு தன் ஆசைகள் தூண்டப்படுவதை உணர்ந்து அவளை அறியாமல் கால் விரல்களை ஒன்றோடு ஒன்று உரசினாள். ஆர்யனின் கால் விரல்கள் அவள் விரல்களோடு சண்டையிட்டு உரசின. அவள் கழுத்து, வயிறு மற்றும் இடையில் முத்தங்களும், காதல் கடிகளும் கொடுத்த பின்னர் மீண்டும் அவள் உதடுகளை முத்தமிட்டான். நீண்ட நேரத்துக்கு பிறகு சஞ்சு மூச்சிரைக்க அவனை நிறுத்தி,  “ஆர்யன், ரொம்ப நேரமா பண்ணிட்டு இருக்கோம். போதும் நிறுத்து “ என்று வெட்கத்தோடு சொன்னாள்.

” எனக்கு இதெல்லாம் போதாது…” என்று அவன் முணுமுணுத்தபடியே அவளை மென்மையாக முத்தமிட்டான். அதற்கு சஞ்சு அவனை முறைத்து, “ உனக்கு எவ்ளோ கொடுத்தாலும் இப்படி தான் சொல்லுவ “ என்று கூறி விளையாட்டாக கண்களை உருட்டினாள்.

ஆர்யன் புன்னகைத்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு அவளருகில் படுத்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

” நான் அமைதியா என் வேலைய பண்ணிட்டு இருந்தேன், நீ தான் வந்து என்ன வசியம் பண்ணி ஆரம்பிச்ச ஆனா இப்போ என் மேல பழி போடுறியா கேடி “ என்று சொன்னான். அதற்கு சஞ்சு, “ சரி சரி விடு, எனக்கு இப்போ தூக்கம் வருது, ரொம்ப களைப்பா இருக்கு “ என்று கூறினாள்.   

சஞ்சுவின் வார்த்தையை கேட்டு ஆர்யன் அவளை அதிர்ச்சியோடு பார்த்து, ” ஏன்டி, உன் மேல் உடம்புல இருக்க டிரஸ் மட்டும் கழட்டி கொஞ்சமா ரொமான்ஸ் பண்ணோம், ஒரு சின்ன  மேக் அவுட் அவ்ளோ தான் இதுக்கே களைப்பா இருக்கா உனக்கு ? “ என்று கேட்டான்.

“ஆமா, நான் ரொம்ப களைப்பா இருக்கேன் ” என்று சஞ்சு சாதரணமாக சொல்ல, ” அப்போ நாம மத்த விஷயம் எல்லாம் பண்ண ஆரம்பிச்சா அப்போ என்ன செய்வ ? “ என்று கேட்டு ஆர்யன் சிரிக்க, “ அய்யோ ஆர்யன், சீ போடா “ என்று அவனை லேசாகத் தள்ளி வெட்கப்பட்டாள். ஆர்யன் சிரித்துக் கொண்டே அவளை அனைத்துக் கொண்டு, ” சரி, தூங்கு. நாம நாளைக்கு ஆபீஸ் போறோம்” என்று சொல்லி போர்வையை இழுத்து இருவர் மீதும் போர்த்திக் கொண்டான். சஞ்சு அவன் அணைப்பில் உறங்கச் சென்றாள், விரைவில் அவனும் அவளை அணைத்தபடி உறங்கினான்.

மெல்ல மெல்ல திட்டங்களை வகுத்து கொண்டிருந்த எதிரிகளின் பார்வையில் அவர்கள் தேடப்படும் இலக்குகளாக இருந்த போதிலும் ஆர்யனும் சஞ்சனாவும் எதை பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தனர் ஆனால் ஆர்யன் மட்டும் ஒரே ஒரு கவலையை கொண்டிருந்தான். அது அவனது எதிரிகளை நினைத்து அல்ல ஆனால் அவன் தனது வழிகாட்டியான திரு சந்திரசேகரை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தை பற்றி மட்டுமே.

பொழுது விடிந்ததும் ஆர்யனின் அலாரத்தின் ஒலி அவர்கள் பகிர்ந்து கொண்ட காதல் கூட்டின் அமைதியைத் துளைத்தது. அவனுடைய கண்கள் சட்டென திறந்தன, உள்ளுணர்வால் தன்னுடைய மொபைலை எடுத்து அதை அமைதிப்படுத்திவிட்டு சஞ்சுவை பார்த்து  புன்னகைத்தான், அவள் அவன் மார்பில் முகம் புதைத்தபடி படுத்திருந்தாள், அவள் விரல்கள் வழக்கம் போல அவன் சட்டையை பிடித்தி இன்னும் அவனது ஆறுதலை நாடினாள்.

அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவன், அவளது பிடியிலிருந்து கவனமாக விடுபட்டு, மிகுந்த கவனத்துடன் அவளை தலையணையில் படுக்க வைத்தான். சஞ்சு உடனே லேசாக அசைந்தாள், இரவு முழுவதும் அவள் வைத்திருந்த கதகதப்பை இழந்தவள் போல் முகம் சுளித்தாள்.

ஆர்யன் பாத்ரூமுக்குள் தயாராக சென்றான். குளித்து முடித்து புதிய சட்டை அணிந்து, ஈரமான தலைமுடியை துடைத்தபடி அவன் வெளியே வந்த போது சஞ்சு விழித்திருப்பதைக் கண்டான். அவள் கட்டிலில் சாய்ந்து சோம்பலாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

ஆர்யன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவளிடம் சென்று தன்னுடைய தலைமுடியை விளையாட்டாக கோதி அவள் முகத்தில் நீர்த்துளிகளை தெளித்தான்.

“அச்சச்சோ! ஆர்யன்!” என்று சொல்லி கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சஞ்சு சிரித்தாள். ஆர்யன் சிரித்தபடி இன்னும் நெருக்கமாக குனிந்து மேலும் நீரை அவள் மேல் தெளித்தான்.

“குட் மார்னிங் ஸ்வீட் ஹார்ட் ” என்று மெதுவாக அவன் சொன்னதும் கைகளை விலக்கி, “ குட் மார்னிங் “ என்று சொல்லி சஞ்சு சிநேகமாகச் சிரித்தாள். அவள் கன்னத்தை மெல்ல வருடியவன், ” சீக்கிரம் ரெடியாகு. நாம ஆபீஸ் கிளம்பனும் “ என்று கூறியதும் சஞ்சு சரி என்று சொல்லி பாத்ரூமுக்கு சென்றாள்.

இருவரும் தயாராகி லிவிங் அறையை அடைந்த பொது அங்கு டாக்டர் ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்தார்.

சஞ்சு வியப்பில் கண் சிமிட்டினாள். “டாக்டர் இவ்ளோ காலையில இங்க வந்துருக்கீங்க, என்ன விஷயம் ? என்று அவள் கேட்க,” ஆர்யன் சார் தான் வர சொன்னாரு “ என்று டாக்டர் கூறினார்.

ஆர்யன் மரியாதையுடன் தலையசைத்து, “குட் மார்னிங் டாக்டர். சஞ்சுவோட தலையில இருக்க கட்டு மாத்திட்டு, அவ ஆபீஸ் போகலாமானு செக் பண்ணி சொல்லுங்க “ என்று சொன்னான்.

சஞ்சு சோபாவில் உட்கார்ந்ததும் டாக்டர் அவள் அருகில் அமர்ந்து அவளது காயத்தை ஆராய்ந்து மருந்து போட்டு கட்டை மாற்றினார்.

” இவங்க இப்போ நல்லா இருக்காங்க சார், காயம் நல்லா ஆறி இருக்கு, இன்னும் ரெண்டு நாள்ல கட்ட கழட்டிடலாம். நீங்க ஆபீஸ் தராளமா கூட்டிட்டு போகலாம் “ என்று டாக்டர் சொன்னதும் ஆர்யன் நிம்மதி அடைந்தவனாகத் தெரிந்தான்.

ஆர்யனும், சஞ்சுவும் டாக்டருக்கு நன்றி சொன்னதும் டாக்டர் புறப்பட்டு சென்றார் அதன் பின்னர் அவர்கள் ஒன்றாக காலை உணவுக்கு உட்கார்ந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஆர்யன் அவளைப் பார்த்தான், அவன் குரல் சீரியஸாக மாறியது. “சஞ்சு, இப்போ நீ ஆபீஸ் வர நான் சம்மதம் சொல்லிட்டேன் ஆனா உனக்கு ரெண்டு ரூல்ஸ் இருக்கு, அத நீ நிச்சயம் பின்பற்றனும் ” என்றான்.

சஞ்சு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, “ என்ன ரூல்ஸ் ? “ என்று அவனிடம் கேட்டாள்.

ஆர்யன் அவளை நேராகப் பார்த்து, “ஒண்ணு, நீ நம்ம தளத்துல மட்டும் தான் இருக்கணும், எனக்கு தெரியாம நீ எங்கேயும் போக கூடாது.   ரெண்டாவது – அடுத்த கொஞ்ச நாளுக்கு கார்ட்ஸ் உன் கூட கார்ல வருவாங்க. இது உன்னோட பாதுக்காப்பு தான் “ என்று அவன் சொல்லி முடித்ததும், “ கொஞ்ச நாளுக்கு அப்புறம் ? “ என்று கேட்டு அவள் முகம் சுளித்தாள்.

” அத பத்தி அப்போ யோசிப்போம் “ என்று ஆர்யன் சொல்ல, சஞ்சு பெருமூச்சு விட்டாலும் சரி என்று சொல்லி தலையசைத்தாள். “ நான் பவி கிட்ட தகவல் சொல்றேன். அவ வருத்தப்படுவா. நாங்க ரெண்டு பேரும் வழக்கமா ஒன்னா தான் லஞ்ச் சாப்பிடுவோம் “ என்று சஞ்சு சொன்னதை கேட்ட ஆர்யன், “ அவங்க புரிஞ்சிக்குவாங்கனு நான் நம்புறேன். உன்னோட பாதுக்காப்பு முக்கியம் ஸ்வீட் ஹார்ட் “ என்றான்.

“எனக்கு புரியுது ” என்று சஞ்சு மெதுவாக சொன்னாள். அவர்கள் உணவு சாபிட்ட பிறகு ஆர்யன் தனது காரிலும், சஞ்சு பாதுகாவலர்களுடன் அவளது காரிலும் அலுவலகம் புறப்பட்டனர்.

அலுவலகத்தில் சஞ்சு தன் அறையை அடைந்ததும்  பவியை அழைத்தாள். சஞ்சுவின் அழைப்புக்கு பதில் அளித்த பவி, ” சஞ்சு! நான் இன்னைக்கு உன்ன பார்க்க வரேன். சாயங்காலம் வந்தா ஓகே வா ? என்று கேட்டாள். அதை கேட்டு சிரித்த சஞ்சு, “ ஏய் நான் ஆபீஸ் வந்துட்டேன் “ என்று கூறினாள்.

சஞ்சு சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த பவி, ” என்ன ? இவ்ளோ சீக்கிரமா ? நீ நல்லா இருக்கியா ?” என்று கேட்டாள். அதற்கு சஞ்சு, ” எனக்கு வீட்ல இருக்க ஒரு மாதிரி இருந்துச்சு, எப்பவும் தூங்கிட்டே இருக்கேன் அதனால ஆபீஸ் வந்துட்டேன் “ என்று சொன்னாள்.

” அப்போ சரி, நாம மதியம் லஞ்ச் சாப்பிடும் போதும் சந்திப்போம் ?”  என்று பவி சொன்னதும், சஞ்சு தயங்கியபடி, ” என்ன மன்னிச்சிடு பவி. பாதுகாப்பு விஷயமா இப்போதைக்கு நான் எங்கேயும் போக கூடாதுனு ஆர்யன் உத்தரவு போட்டு இருக்காரு “ என்று சொன்னாள்.

” ஓ அப்படியா! உங்க அவரு சொல்லிட்டா அப்புறம் என்ன ? நீ ஜாக்கிரதையா இரு. நான் உன்ன அங்க ரூம்ல வந்து சந்திக்குறேன் “ என்று கிண்டல் செய்து சொன்னாள் பவி.  சரி என்று சொல்லி  சஞ்சு அழைப்பை துண்டித்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

மதியம் ஆர்யனின் அறைக்கு அவள் சென்றதும் இருவரும் சோபாவில் அமர்ந்து உணவை சாப்பிட்டனர். அதன் பிறகு ஆர்யன் மாத்திரைகளை அவளிடம் கொடுத்தான். சஞ்சு மாத்திரையை சாப்பிட்ட பிறகு அவன் தோளில் தலை சாய்த்து மெல்லிய பெருமூச்சு விட்டாள்.

” கொஞ்ச நேரம் தூங்குறியா ஸ்வீட் ஹார்ட் ?” என்று ஆர்யன் அவள் கூந்தலை விரல்களால் மெதுவாக வருடியபடி கேட்டான். அதற்கு சஞ்சு, ” இல்ல வேண்டாம், நான் நல்லா இருக்கேன். நான் உன் கிட்ட ஒண்ணு கேட்கலாமா?” என்று கூறினாள்.

“ ஹ்ம்ம் கேளு “ என்று ஆர்யன் சொன்னதும், ” அந்த டேனியல் எங்க ?” என்று சஞ்சு கேட்டாள்.

அவள் கேள்வியால் ஆர்யனின் தாடை லேசாக இறுகியது. ” அன்னைக்கு நைட்டு அவன் தப்பிச்சு போயிட்டான் மா. அவன் எங்க இருக்கான்னு இதுவர தெரியல “ என்று அவளிடம் சொன்னான்.

” அவன் எப்படி இன்னும் நிம்மதியா சுத்திட்டு இருக்கான் ஆர்யன் ? அவன புடிச்சு ஜெயிலுல போட முடியாதா ? “ என்று கேட்ட சஞ்சுவின் குரலில் கோபத்தின் சாயல் இருந்தது. ஆர்யன் ஆறுதலாக அவள் கையை பிடித்து, ” நம்ம ஆபீஸ்ல டேட்டா திருடினதா சொல்லி அவன் மேல கேஸ் போட்டு இருக்கேன். அவன் சீக்கிரம் மாட்டுவான் “ என்று கூறினான்.

” ஒவ்வொரு நொடியும் அவன் கஷ்டப்படுவான்னு நம்புறேன்,” என்று சஞ்சு முணுமுணுக்க, ” அமைதியா இரு மா, அத பத்தி நீ எதுவும் யோசிக்காதா “ என்று ஆர்யன் அவளை அமைதிப்படுத்தினான்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, ” ரம்யா டிசைன்ஸ் கொஞ்சம் அனுப்பி இருக்காங்க. அதுல இருந்து உனக்காக ஒரு டிசைன் நானே செலக்ட் பண்ணிட்டேன். அது உனக்கு பரவாயில்லையா ? “ என்று ஆர்யன் கேட்டதும், அவள் கண்கள் ஒளிர்ந்தன. ” நிஜமாவா ? நீ செலக்ட் பண்ணதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் “ என்று பதில் சொன்னாள்.  அதை கேட்டு புன்னகைத்த ஆர்யன், ” அது உனக்கு பிடிக்கும்னு நம்புறேன்.” என்றான்,

” நீ எது செலக்ட் பண்ணி இருந்தாலும் அது நிச்சயம் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆர்யன் “ என்று சொன்ன சஞ்சு சில நிமிடங்களில் சோபாவில் அமர்ந்தபடி தூங்கிவிட்டாள். ஆர்யன் கவனமாக அவளை அவனது ரிலாக்சேஷன் ரூமுக்கு தூக்கிச் சென்று அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்தான். பிறகு அவளை தொந்தரவு செய்யாமல்  வேலைக்குத் திரும்பினான்.

சஞ்சுவை பார்க்க வந்த பவி அவள் அறைக்குள் இல்லை என்பதை பார்த்து யோசித்தபடி நின்றாள். அப்போது அழைப்பில் பேசியபடி வெளியே வந்த ஆர்யன், “பவித்ரா” என்று கூப்பிட்டான். பவி உடனே திரும்பிப் பார்த்தாள்.

“ சொல்லுங்க பவித்ரா “ என்று ஆர்யன் கேட்டதும், “ சார், நான் சஞ்சுவ பார்க்க வந்தேன் “ என்றாள் பவி. அவளிடம் என்ன சொல்வது என்று யோசித்து புருவத்தை சொரிந்த ஆர்யன் வேறு வழியின்றி, “ அவ மாத்திர போட்டதுல என் ரூம்ல தூங்கிட்டு இருக்கா. அவ எழுந்ததும் உங்க கிட்ட பேச சொல்றேன் “ என்றான்.

பவி சரி என்று சொல்லி விலகி நடக்க ஆரம்பிக்க, ஆர்யன் மீண்டும் அழைத்தான். “ சொல்லுங்க சார்”, என்று பவி கேட்க, ” தேங்க்ஸ்… சஞ்சுவுக்கு நீங்க நல்ல தோழியா இருக்கீங்க. உங்க கூட அவ ரொம்ப சந்தோஷமா இருக்கா “ என்று ஆர்யன் கூறினான்.

“ சஞ்சு என்னோட friend, அவ மேல எனக்கு நிறைய அக்கறை இருக்கு அதனால நீங்க நன்றி எல்லாம் சொல்லாதீங்க. சஞ்சு எனக்கு ஒரு குட்டி தங்கச்சி மாதிரி தான் “ என்று பவி சொன்னாள். அவளின் உண்மையான வார்த்தையை கேட்ட ஆர்யன் தலையசைத்து,”அவளுக்கு உங்கள மாதிரி ஒரு friend கெடச்சதுல எனக்கு சந்தோஷம் “ என்றான்.

பின்னர் தூங்கி எழுந்த சஞ்சு கண்களைக் கசக்கியபடி அறையை விட்டு வெளியேறி ஆர்யனிடம் சென்று, அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவன் மடியில் அமர்ந்தாள்.

” ஏன் என்ன எழுப்பல ?” என்று அவள் இன்னும் தூக்கத்தில் அவனிடம் முணுமுணுத்தாள்.

” நீ நல்லா தூங்கிட்டு இருந்த மா “ என்று  அவள் தலைமுடியைக் கோதியபடி சொன்ன ஆர்யன், ” குடிக்க என்ன வேணும் ?  ஹாட் சாக்லேட்? காபி ?” என்று கேட்டான். அதற்கு சஞ்சு உடனே, “எனக்கு ஆர்யன் தான் வேணும் ” என்று சொல்லி அவன் கழுத்தை நெரித்தாள்.

அவன் சிரித்தபடி அவள் உதட்டில் ஒரு முத்தம் பதித்து, ” போய் பவி கிட்ட பேசு, அவங்க உன்ன தேடி வந்தாங்க. அதுக்கு அப்புறம் நாம கிளம்பலாம் “ என்று சொன்னான்.

“சரி மா ” என்று சிரித்தவள் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவள் அறைக்கு சென்று பவியை தன் அறைக்கு  அழைத்தாள். பவி உள்ளே நுழைந்ததும், ” என்ன மேடம், நல்ல தூக்கமா ? “ என்று கேட்டாள்.

“ உனக்கு யார் சொன்னது ? “ என்று சஞ்சு ஆச்சரியமாக கேட்க, “ சார் தான் சொன்னாரு “ என்றாள் பவி. 

மாத்திர போட்டதால தூங்கிட்டேன் “ என்று சஞ்சு சொல்ல, “ இப்போ எப்படி இருக்கு ? “ என்று கேட்டாள் பவி. அதற்கு சஞ்சு, “ ஹ்ம்ம் இப்போ நல்லா இருக்கேன்.” என்று பதில் சொன்னாள். அப்போது கதவைத் தட்டும் ஓசை கேட்டு பவி கதவை திறக்க பணிப்பெண் ஒரு தட்டுடன் உள்ளே நுழைந்து, ” மேடம் சார் உங்களுக்காக ஹாட் சாக்லேட் அனுப்பி இருக்கிறாரு .” என்று சொல்லி சஞ்சுவிடம் கொடுத்தார்.

” நன்றி, ஒரு காபி கொண்டு வர முடியுமா?” என்று சஞ்சு கேட்க சரி என்று சொல்லி வெளியேறிய பணிப்பெண் சில நிமிடங்களில் காபியை கொண்டு வந்து பவித்ராவிடம் கொடுத்தார்.

“சஞ்சு, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் அவ்ளோ லவ் பண்றாரு. உன் மேல அவ்ளோ அக்கறையா இருக்காரு “ என்று பவி சொல்ல, “ பவி உங்க சார் எல்லாம் செய்வாரு ஆனா லவ் மட்டும் ப்ரொபோஸ் பண்ண மாட்டாரு “ என்று சொல்லி சஞ்சு முகம் சுளித்தாள்.

அதை கேட்ட பவி, ” அவர் இன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணலையா ? “ என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

” இல்ல, அவர் செரியான பழைய ஆளு “ என்று சொல்லி சஞ்சு சிரித்தாள். அதற்கு பவி அவளிடம், “ அப்போ நீ ப்ரொபோஸ் பண்ண வேண்டியது தானே ? “ என்று கேட்டாள். அவளை முறைத்த சஞ்சு, “ ஏன் உங்க சார் சொல்ல மாட்டாரா ? “ என்று கேட்டாள்.

“ ஏய் இதுல என்ன இருக்கு ? யார் சொன்னா என்ன ? “ என்று பவி கேட்க, “ பார்க்கலாம், இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்றேன். அவர் ப்ரொபோஸ் பண்ற மாதிரி இல்லனா அப்போ நானே பண்றேன் “ என்று சஞ்சு சொன்னாள்.   

” நல்லது. ரொம்ப லேட் பண்ணாத. இப்போ நான் கிளம்புறேன்  “ என்று சொல்லிவிட்டு பவி புறப்பட்டு சென்றாள்.

பவி கிளம்பியதும் சஞ்சு தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஒருவேளை காதலை சொல்ல பெரிய ஏற்பாடுகள் எதுவும் தேவையில்லை தான்  ஆனாலும் ஒரு சின்ன மேஜிக் மொமன்ட் இருப்பது அந்த தருணத்தை நிச்சயம் சிறப்பானதாக்கும்.

*************************

முன்னோட்டம்:

“நீ அப்பாவியா? பச்ச மண்ணா ? இந்த அப்பாவி பச்ச மண்ணு என்ன பண்ணும்னு தான் எனக்கு தெரியுமே. நீ என்ன புடிக்குற வேகத்துலேயே உன்ன பத்தி எல்லாம் எனக்கு தெரியும் “

 

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!