மாயா தன் அறையில் உட்கார்ந்திருந்தாள், அவள் மனம் பதற்றத்தில் நிறைந்திருந்தது. அவளுடைய மொபைல் ஒரு செய்தி அறிவிப்புடன் ஒலித்தது, அவள் அந்த செய்தியை பார்த்ததும் அவளுடைய கண்கள் கோவத்தில் சுருங்கின. முந்தைய நாள் இரவு ஆர்யனும், சஞ்சுவும் பவித்ராவின் வீட்டை விட்டு வெளியேறும் புகைப்படம் கண்டு அவள் உதடுகள் சந்தேகத்தில் வளைந்தன.
ஆர்யன் மற்றும் சஞ்சனாவைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் வெளிக்கொணர அவள் ஒரு தனியார் டிடெக்டிவ்வை நியமித்திருந்தாள். ஒரு நொடியையும் வீணாக்காமல் அவரை அழைத்தாள்.
” ஹலோ, அவள பத்தி தகவல் கிடைச்சுதா ?” என்று மாயா குரல் கடுமையாய் கேட்டாள்.
“ஆமா மேடம், அவங்க அப்பா, அம்மா இப்போ உயிரோட இல்ல ஆனா அவங்க மாமா இன்னும் உயிரோட இருக்காரு, அவருக்கு ஒரு மகன் இருக்கான். ஆர்யன் சஞ்சனாவ எப்படி சந்திச்சாருனு சரியான விவரங்கள அவங்களால மட்டும் தான் சொல்ல முடியும். ஆர்யன், சஞ்சு அவங்க ரெண்டு பேர பத்தி எல்லா தகவுலும் ரொம்ப ரகசியா வெச்சுருக்காங்க. ஆர்யானோட ஆளுங்க எல்லா இடத்துலையும் இருக்காங்க. நான் எந்த தகவலும் கண்டுபுடிக்குறதுக்கு முன்னாடி அவங்க தடுக்குறாங்க “ என்று டிடெக்டிவ் சொன்னதும் எரிச்சல் அடைந்த மாயா, “நான் வரேன். அவளோட மாமாவ சந்திக்க போலாம் ” என்றாள்.
” கண்டிப்பா மேடம். நான் உங்களுக்கு அவரோட அட்ரெஸ் அனுப்புறேன். நீங்க அவர் கிட்ட பேசி முடிக்குறவர நான் அவர் வீட்டுக்கு பக்கத்துல உங்களுக்காக வெயிட் பண்றேன் “ என்று டிடெக்டிவ் கூறியதும், மாயா அழைப்பை துண்டித்து விட்டு ஆர்யன் மற்றும் சஞ்சாவின் வாழ்க்கையில் அப்படி என்ன ரகசியம் இருக்க கூடும் என்ற யோசனையில் ஆழ்ந்தவளாய் அமர்ந்திருந்தாள்.
ஆர்யனின் கடற்கரை வீட்டில், கடுமையான சூரிய ஒளி திரைச்சீலைகள் வழியாக பாய்ந்து, ஆர்யனின் தூக்கத்தைக் கெடுத்தது. அவன் அசைந்து மெல்லக் கண்களைத் திறந்த போது சஞ்சனா அவன் மீது சாய்ந்து படுத்திருந்தாள், அவளது வெற்று தோல் அவனது தோலை அழுத்தியது. அவளது இருப்பின் கதகதப்பு அவன் உடலெங்கும் ஒரு சக்தியை அனுப்பியது. அவள் தலைமுடியை மெல்ல ஒதுக்கிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அருகில் இழுத்தான்.
அருகில் இருந்த அவனது வாட்சை எடுத்து நேரம் பதினொன்று ஆகிவிட்டது என்பதை பார்த்து அவள் முதுகில் தன் விரல்களை வருடியபடி மெதுவாக அவளை எழுப்ப முயன்றான். சஞ்சு அசைந்து மெல்ல கண்களைத் திறந்து, தலையை நிமிர்த்தி ஆர்யனின் கனிவான பார்வையைச் சந்தித்தாள்.
“குட் மார்னிங், லவ்,” என்று ஆர்யன் சொன்ன போது அவனது குரல் தூக்கத்தில் கரகரத்தது. “குட் மார்னிங்,” என்று முணுமுணுத்த அவளின் குரல் இன்னும் தடுமாறியது, வெட்கத்துடன் அவள் அவனுடைய மார்பில் சாய்ந்தாள்.
” தினமும் காலையில இப்படி எழுந்திருக்கனும்னு ஆசைப்படுறேன்” என்று சொல்லி புன்னகையுடன் ஆர்யன் அவள் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான். பதிலுக்கு அவள் அவனுடைய வெற்று மார்பில் முத்தமிட்டு விலகி அவன் அருகில் படுத்தாள். ஆர்யன் தன்னுடைய கைகளை அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவனுடைய தலையை அவள் நெஞ்சில் வைத்து சௌகரியமாக படுத்தான்.
” உனக்குப் பசிக்கலையா?” என்று ஆர்யன் கேட்டான், அவன் விரல்கள் அவள் இடையில் வட்டங்களை வருடின.
” ரொம்ப பசிக்குது, ஆனா எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும்,” என்று சொல்லி சஞ்சு கொட்டாவி விட்டாள். “ அப்போ ரெண்டு பேரும் எதையாவது சாப்பிடுவோம், அதுக்கு அப்புறம் மறுபடியும் தூங்குவோம் “ என்று ஆர்யன் யோசனை சொன்னான்.
தயக்கத்துடன், சஞ்சு அவன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள், அவள் தன் உடலை சுற்றி போர்வையை சுற்றி கொண்டு படுக்கையிலிருந்து இருந்து இறங்கினாள். ஆர்யனால் அந்தக் காட்சியைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சிரித்தபடி அவள் கையை பிடித்து நிறுத்தினான்.
“இப்ப எதுக்கு சிரிக்குறீங்க?” என்று சஞ்சு அவனைத் திரும்பிப் பார்த்தாள் கேட்டாள். ” ஏன் இப்போ இப்படி வெட்கப்படுற ? அதுவும் ஏன் இப்படி போர்வைய இப்படி உடம்ப சுத்தி போர்த்தி வெச்சுருக்க ? “ என்று கேட்டு அவளை கிண்டல் செய்து சீண்டினான்.
” எனக்கு வெட்கமா இருக்கு ஆர்யன் “ என்று சஞ்சு சொன்ன போது அவள் கன்னங்கள் வழக்கம் போல சிவந்து இருந்தன. ஆர்யன் தனது புருவத்தை உயர்த்தி, ” அப்போ நான் பார்க்காத ஏதாவது இன்னும் மறைச்சு வெச்சுருக்கியா என்ன ? என்று மீண்டும் அவளிடம் கேட்டான் அதற்கு சஞ்சு அவனிடம், “ நீ மிச்சம் வெச்சியா என்ன ? “ என்று கேட்டு கண்களை உருட்டினாள்.
” தெரியுதுல ? அப்புறம் எதுக்கு இப்படி போர்த்திட்டு இருக்க ? என்று சொன்னவன் அவள் கையை மெல்ல இழுத்து, “ இப்போ எதுக்கு இப்படி வெட்கப்படுற ? என்ன பார்த்து பேசுடி “ என்று சொன்னான். ஆனால் சஞ்சு அவனை பார்க்காமல், ” போடா, நீ முதல்ல டிரஸ் போடு “ என்று சொன்னாள்.
” நான் என்ன உன்ன மாதிரியா வெட்கபட ? “ என்று ஆர்யன் ஒரு புன்னகையுடன் பதிலளித்தான். அவன் பதிலை கேட்ட சஞ்சு, ” எனக்குப் பசிக்குது. நான் முதல்ல குளிக்கப் போறேன். நீ இப்படியே நிர்வாண சாமியார் மாதிரி சுத்திட்டு இரு “என்றாள்.
சஞ்சு சொன்னதை கேட்ட ஆர்யன் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு, “ அடிப்பாவி ! நான் நேத்து தான் ஆரம்பிச்சு இருக்கேன் அதுக்குள்ள என்ன சாமியார் சொல்ற ? “ என்று அவளிடம் கேட்டான்.
” சரி, இப்ப என்னை விடு ” என்று சஞ்சு முனுமுனுத்தாள்.
“ இப்போ உன்ன போக விடுறேன் ஆனா சாப்பிட்டு முடிச்ச அப்புறம் நாம திரும்பவும் ஆரம்பிக்கலாம் “ என்று சொல்லி அவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான், சஞ்சு புன்னகைத்துக் கொண்டே, போர்வையை இறுக்கமாக பிடித்தபடி பாத்ரூமுக்குள் சென்றாள். நீண்ட நேர, சூடான குளியலுக்குப் பிறகு, அவள் வெளியே வந்த பிறகு ஆர்யன் குளிக்க சென்றான்.
சஞ்சு ஆடை அணிந்து தயாரான பின்னர் அறையை சுற்றி பார்த்தாள். அறை முழுவதும் அவர்களின் ஆடை, அவள் அணிந்திருந்த நகை, வாடிய மலர்கள், உருகிய மெழுகு என அலங்கோலமாக இருந்தது. ஆடை மற்றும் நகையை எடுத்து வைத்து விட்டு, அறையை சுத்தம் செய்த பின்னர் கண்ணாடி முன் நின்று தலை உடியை உலர்த்திக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து ஒரு டவலை மட்டும் இடுப்பை சுற்றி கட்டிக்கொண்டு வெளியே வந்த ஆர்யன், அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அதன் பின்னர் சாதாரண டிராக் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து தயாரானான்.
” வா, கீழ போகலாம்” என்று ஆர்யன் சொன்னதும் இருவரும் டைனிங் ஹாலுக்கு சென்றனர். பணிப்பெண்கள் உணவை பரிமாற இருவரும் ஒன்றாக காலை உணவை சாப்பிட்டனர்.
” நாம இன்னைக்கு ஆபீஸ் போகலையா?” என்று சஞ்சு கேட்க, ” எந்த ஆபீஸ்?” என்று கேட்டான் ஆர்யன். அவன் பதிலை கேட்டு அதிர்ச்சியான சஞ்சு, “என்ன?” என்று கேட்டாள். அதற்கு ஆர்யன் சிரித்துக் கொண்டே, ” இப்போ என் மனசு, எண்ணம் எல்லாத்துலையும் நீ மட்டும் தான் இருக்க, வேற எதுவும் இல்ல. அதனால நாம ஆபீஸ் போகல. ரஞ்சித் எல்லாத்தையும் பார்த்துக்குவான் “ என்று கூறினான்.
ஆர்யனின் வார்த்தையை கேட்டு தலை அசைத்த சஞ்சு, “நாம எப்போ வீட்டுக்கு போவோம் ?” என்று கேட்டாள்.
” நாளைக்கு போகலாம். இப்போ சாப்பிட்ட அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கலாம். சாயங்காலம் பீச் போகலாம், அப்புறம் நைட்டு கண் முழிச்சி வொர்க் அவுட் பண்ணுவோம் “ என்று கண்ணடித்தபடி கூறினான். உணவை முடித்துக் கொண்டு இருவரும் தங்கள் படுக்கைக்குத் திரும்பி விரைவாக தூங்கினர். ஆர்யனின் தூக்கம் ஒரு மொபைல் எச்சரிக்கையால் தடைபட்டது. அவன் அதை படித்த போது, “ மாயா, சுரேந்தர் வீட்ல இருக்கா, ஏற்கனவே எச்சரிக்க பண்ணிட்டேன் “ என்று ரஞ்சித்திடம் இருந்து செய்தி வந்திருந்தது. அதைப் படித்துவிட்டு அவன் மீண்டும் உறங்கச் சென்றான்.
மாயா தன் பாதுகாவலர்களுடன் சுரேந்தரின் வீட்டை அடைந்தாள். அவளது தனியார் டிடெக்டிவ் அவரது அடையாளத்தை மறைக்க சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தார். சுரேந்தர் கதவைத் திறந்து, தன் வீட்டு வாசலில் காவலர்களுடன் நின்றிருந்த பெண்ணை பார்த்தார்.
” நீங்க யாரு, உங்களுக்கு என்ன வேணும் ? “ என்று சுரேந்தர் உறுதியான குறலில் கேட்டார். “ என் பேரு மாயா, எனக்கு உங்க கிட்ட இருந்து சில தகவல் தெரியனும் “ என்று மாயா நம்பிக்கையுடன் முன்னால் சென்று கூறினாள். அவள் வீட்டுக்குள் சென்று சோபாவில் அமர்ந்ததும் பிரதீப் அவள் முன்னால் அமர்ந்தான்.
” உங்களுக்கு என்ன தாங்கவல் தெரியனும் ? நீங்க யாருனு கூட எங்களுக்கு தெரியாது “ என்று பிரதீப் சொன்னதும், மாயாவின் பார்வை இருவரையும் சற்று ஆராய்ந்தது.
“சஞ்சனா உங்க தங்கச்சி பொண்ணு தானே ? எனக்கு அவள பத்தி கொஞ்சம் தகவல் தெரியனும் “ என்று மாயா சொன்னாள். “ இத நீங்க சஞ்சனா கிட்டே கேட்டு இருக்கலாமே “ என்ற சுரேந்தரின் பதில் அமைதியாக, ஆனால் நிராகரிப்பதாக இருந்தது.
“ஆர்யன் சஞ்சனாவ எப்படி சந்திச்சாரு ?” என்று மாயா நேரடியாக கேட்டாள் ஆனால் சுரேந்தர் உடனே, “ எங்களுக்குத் தெரியாது.” என்று அசராமல் பதில் சொன்னார்.
மாயா விரக்தியில் பெருமூச்சு விட்டாள். ” நான் நேரடியாக உங்க கிட்ட பேசுறேன். ஆர்யன் உங்களுக்கு நிறைய பணம் கொடுத்தாருனு எனக்கு தெரியும். அது மட்டும் இல்ல சஞ்சனாவோட சொத்து எல்லாம் உங்களுக்கு கொடுத்தாங்கனு கூட எனக்கு தெரியும். ஆர்யன் கிட்ட இருந்து சஞ்சனாவ பிரிக்க எனக்கு உதவி செய்யுங்க அதுக்கு உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன் “ என்று மாயா அவர்களிடம் கூறினாள்.
ஆனால் அவள் வார்த்தையை கேட்டதும் சுரேந்தரின் முகம் இறுகியது. ” உங்க பணம் எங்களுக்குத் தேவையில்ல. நீங்க கிளம்பலாம்.” என்று கோவமாக கூறினார். மாயா தனது முயற்சியை கைவிடாமல் பிரதீப் பக்கம் திரும்பி, ” பிரதீப், உனக்கு அவ மேல ஆச இருந்துச்சுனு எனக்கு தெரியும். என் கூட சேர்ந்து எனக்கு உதவி செய். சஞ்சு உனக்கு கிடைக்க என்ன உதவி செய்றேன் “ என்று சொன்னாள். ஆனால் பிரதீப், ” எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை” என்று தெளிவாக கூறினான்.
” நீங்க யாருக்கும் பயப்படத் தேவையில்ல.” என்று மாயா கூறினாள் அவள் மேலும் எதுவும் பேசுவதற்குள் குருகிட்ட சுரேந்தர், “நீங்க வருவீங்கனு எங்களுக்கு ஏற்கனவே தகவல் வந்துடுச்சு. ஆர்யன் சாருக்கு உங்க டிடெக்டிவ் பத்தி தெரியும். உங்க ஆதாயத்துக்காக என் உயிரையோ இல்ல என் மகனோட உயிரையோ நான் பணயம் வைக்க மாட்டேன். சஞ்சனா, ஆர்யன் சார் கூட சந்தோஷமா இருக்கா. அவ வாழ்க்கைய நான் கெடுக்க மாட்டேன்.” என்று எரிச்சலுடன் கூறினார்.
” நீங்க எனக்கு உதவி செய்ய மறுத்தா கூட எப்படியும் நான் ஆர்யன சொந்தமாக்குவேன் ஆனா நீங்க எனக்கு உதவி செஞ்சா உங்களுக்கு பலன் கிடைக்கும் அதனால யோசிச்சு சொல்லுங்க “ என்று மாயா மீண்டும் சொன்னாள். அதற்கு, “யோசிக்க ஒண்ணுமில்ல “ என்று சொன்ன பிரதீப். பின்னர் அவளிடம், ” ஆர்யன் நீங்க நினைக்குறதுக்கும் மேல. உங்களுக்கு இலவசமா ஒரு புத்திமதி சொல்றேன் கேளுங்க. சஞ்சனாவுக்காக அவர் எந்த எல்லைக்கும் போவாரு. அவங்க ரெண்டு பேரும் நீங்க நினைக்குற அளவுக்கு சாதாரணம் இல்ல, விலகி இருங்க “ என்று எச்சரித்தான்.
” விட்டுக் கொடுக்க நானும் அவ்ளோ சாதாரண ஆளு இல்ல “ என்று மாயா அதற்கு பதிலடி கொடுத்தாள்.
அவள் வார்த்தையை கேட்டு சுரேந்தர் மற்றும் பிரதீப் இருவரும் சிரித்தனர்.
” இங்க வேலை செய்ற எல்லாருமே ஆர்யன் சாருக்கு விசுமாசமானவங்க. அதுவும் இல்லாம உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா, எனக்கு சஞ்சனா சந்தோஷமா இருக்கணும். அவ வாழ்க்கைய அழிக்க நான் எதையும் செய்ய மாட்டேன். என் மகனும் செய்ய மாட்டான்.” என்று சுரேந்தர் உறுதியாக கூறினார்.
” இப்போ போய் உங்க டிடெக்டிவ் இருக்காரா பாருங்க, சத்தியமா சொல்றேன் இதுக்கு அப்புறம் நீங்க அவர மறுபடியும் சந்திக்கவே மாட்டீங்க “ என்று பிரதீப் சொன்னதும், ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தாள் மாயா. சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள அவள் டிடெக்டிவ்வை தொடர்பு கொண்ட போது அவர் மொபைல் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என தானியங்கி குரல் கேட்டது.
மாயாவின் முகத்தை பார்த்து, ” நான் சொன்னதும் சரி தானே? இனிமே இங்க வராதீங்க ” என்று சொல்லி பிரதீப் சிரித்தான்.
ஆத்திரமும் தோல்வியும் அடைந்த மாயா கண்களில் ஏமாற்றத்துடன் அங்கிருந்து புறபட்டு சென்றாள்.
ஆர்யனின் பாதாள சிறையில் மாயா நியமித்த தனியார் டிடெக்டிவ்வின் அலறல் கான்கிரீட் சுவர்களில் எதிரொலித்தது.
” சார், தயவு செஞ்சு என்ன விட்டுடுங்க ” என்று டிடெக்டிவ் கெஞ்சினார் ஆனால் ரஞ்சித் பதற்றமில்லாமல் சிறை கம்பிகளுக்கு வெளியே நின்று, ” ஸாரி தம்பி, இப்போ உன்ன விட முடியாது அதானால சத்தம் போடாம இரு. உனக்கான நேரம் வரும் போது உன்ன போக விடுறேன், அதுவர நீ எவ்ளோ சத்தம் போட்டாலும் வெளிய யாருக்கும் கேட்காது “ என்று கூறினான்.
” சார், சார், ப்ளீஸ்-சார்!” என்று டிடெக்டிவ் மீண்டும் கெஞ்சினார் அதற்கு ரஞ்சித், “ஷ்ஷ்ஷ்” என்று அவரை மௌனமாக்கினான். ” இனி சத்தம் போட கூடாது இல்ல உன்ன மொத்தமா சத்தம் போடாத மாதிரி பண்ணிடுவேன் “ என்று எச்சரித்தான். அதன் பின்னர் காவலர்களை அழைத்து, “ இவனுக்கும் நமக்கும் எந்த பிரச்சனையும் இல்ல அதனால நல்லா பார்த்துக்கோங்க, ரெண்டு வேளை சாப்பாடு கொடுங்க “ என்று அறிவுறுத்தினான்.
********************************************
முன்னோட்டம்:
“ அது சரி, உனக்கு எத்தன குழந்தைங்க வேணும் ?
“ ரெண்டு குழந்தைங்க வேணும், உன்ன மாதிரியே ஒரு பொண்ணு, ஒரு பையன் “

1 comment
[…] Chapter 40 […]