கடற்கரையில், அஸ்தமன சூரியனின் தங்க கதிர்கள் ஆர்யனையும் சஞ்சுவையும் ஒரு சூடான பிரகாசத்தில் குளிப்பாட்டியது. அருகில் அலைகள் மெதுவாக மோதும் சத்தம் கேட்க, இருவரும் கரையோரமாக கைகோர்த்து நடந்து கொண்டிருந்தார்கள். சிறிது தூரம் நடந்த பின்னர் இருவரும் கரையோரம் அமர்ந்தார்கள், சஞ்சு ஆர்யனின் மார்பில் சாய்ந்து கொள்ள, ஆர்யன் அவளை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டான்.
“சஞ்சு,” என்று மெல்லிய குரலில் அவளை அழைத்த ஆர்யன், “ உனக்கு ஏதாவது கனவு இருந்தா, அத பத்தி சொல்லு “ என்று கேட்டான். அவன் கேள்வியை கேட்டதும் சஞ்சு ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். ” நான் ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ தான் கனவு கண்டேன் ஆர்யன். எனக்கு ஒரு வேலை, கல்யாணம், குழந்தைங்க இப்படி ஒரு சாதாரண வாழ்க்கை தான் ஆசைப்பட்டேன். பெருசா கனவு எதுவும் இல்ல “ என்று சொன்னாள் சஞ்சு.
“ பெருசா கனவு இல்ல சரி ஆனா உனக்கு ஏதாவது ஆச இருக்கா, ஏதாவது ஒரு விஷயம் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு விரும்பி இருக்கியா ? “ என்று ஆர்யன் கேட்டதும், “ ஹ்ம்ம்… ஒரு ஆச இருந்துச்சு. எனக்கு ஒரு கனவு வீடு மனசுல எப்பவும் இருக்கும் “ என்று உடனே சொன்னாள். அதை கேட்டதும், “ அப்போ அத பத்தி சொல்லு “ என்று ஆர்யன் அவளை உற்சாகப்படுத்தினான்.
” ஒண்ணும் பெரிசா இல்ல பா. மூணு பெட்ரூம் இருக்க ஒரு வீடு, ஒரு கிட்சன், நம்ம குழந்தைங்க படிக்க ஒரு தனி ரூம், நாம ஒன்னா படம் பார்க்க, பசங்க விளையாட ஒரு மல்டிமீடியா ரூம் அப்புறம் ஒரு குட்டி பூஜை ரூம். வீட்ட சுத்தி நிறைய செடி வளர்க்கணும், பறவைங்க இயற்கையா வந்து தங்க பானை நிறைய கட்டி வைக்கணும். அப்புறம் தோட்டத்துல ரெண்டு ஊஞ்சல் இருக்கணும். ஆனா இப்போ எனக்கு அந்த ஆச கூட இல்ல. இப்போ எனக்கு இருக்க ஒரே ஆச, யார் தொந்தரவும் இல்லாம, எந்த பிரச்சனையும் இல்லாம உன் கூட சேர்ந்து வாழனும், வேற எதுவும் எனக்கு வேணாம், ஆனா எனக்கு பயமா இருக்கு “ என்று சஞ்சு சொன்னதும் ஆர்யன் அவள் கன்னங்களை மெல்ல வருடி அவள் நெற்றியில் மென்மையாக ஒரு முத்தமிட்டான்.
கவலையில் தரையை பார்த்து அமர்ந்திருந்தவளை, ” என்ன பாரு பேபி “, என்று ஆர்யன் கிசுகிசுத்தான். சஞ்சு அவனை பார்த்ததும், “ நாம ரெண்டு பேரும், நம்ம குழந்தைங்க கூட சந்தோஷமா வாழ்வோம், என்ன நம்பு “ என்று ஆர்யன் உறுதியாக கூறினான்.
“ஐ லவ் யூ” என்று சஞ்சு சொன்னதும், ஆர்யனின் முகத்தில் ஒரு கனிவான புன்னகை பரவியது. ” சரி, இப்ப சொல்லு. உன்னோட கனவு வீட்ல ஏன் ரெண்டு ஊஞ்சல் வேணும் ? “ என்று அவள் தலைமுடியோடு விளையாடியபடி கேட்டான் ஆர்யன். அதற்கு மெலிதாகச் சிரித்த சஞ்சு, ” எனக்கு ஒண்ணு… நம்ம குழந்தைங்களுக்கு ஒண்ணு “ என்று சொன்னாள்.
சஞ்சுவின் பதிலை கேட்டு புன்னகைத்த ஆர்யன், ” அதுவும் சரி தான், அப்போ எத்தன குழந்தைங்க வேணும் ? என்று அவளிடம் கேட்டான். அதற்கு சஞ்சு சட்டென, “ரெண்டு குழந்தைங்க வேணும், ஒரு பையன், ஒரு பொண்ணும் உன்ன மாதிரியே “ என்று கூறினாள் ஆனால் ஆர்யன் அதை மறுத்து, “ முடியாது, எனக்கு உன்ன மாதிரி தான் வேணும் “ என்று சொன்னான்.
சஞ்சு முகம் சிவந்து தன் பார்வையை அகற்றி, “ சரி, அத அப்புறம் பார்க்கலாம், எனக்கு வெட்கமா இருக்கு “ என்று கூறினாள். அவள் தாடையை மெல்ல நிமிர்த்தி, ” எப்ப தான் நீ என்கிட்ட வெட்கப்படாம இருக்க போற ? ஆனா நீ இப்படி வெட்கப்பட்டு பேசுறது எனக்கு ரொம்ப புடிக்கும், ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் “ என்றான் ஆர்யன்.
சஞ்சு விளையாட்டாக அவன் கையை தட்டி, ” சும்மா இரு ஆர்யன். இப்போ உன்னோட கனவுகள் பத்தி சொல்லு “ என்று கேட்டாள்.
ஒரு கணம் அலைகளை உற்றுப் பார்த்துவிட்டு அவளை நோக்கித் திரும்பிய ஆர்யன், ” எனக்கு எப்பவுமே ஒரு வெற்றிகரமான தொழிலதிபரா இருக்க மட்டும் தான் ஆச இருந்துச்சு, ஆனா இப்போ, எனக்கு அதோட சேர்த்து உன் கூட ஒரு அமைதியான, சந்தோஷமான வாழ்க்கைய வாழ விரும்புறேன் “ என்று ஆர்யன் சொன்ன போது அவள் விரல்கள் அவனது விரல்களைக் கண்டடைந்தன. ” நீ ஏற்கனவே ஒரு பெரிய தொழிலதிபரா இருக்க அப்புறம் நாம நிச்சயம் சந்தோஷமா இருப்போம் “ என்று சஞ்சு கூறியதும், ஆர்யன் குனிந்து அவளை மென்மையாக முத்தமிட்டான்.
” நீ தண்ணியில விளையாடலையா ?” என்று ஆர்யன் கேட்க, சஞ்சு இல்லை என்று தலை அசைத்து, அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டு, ” இல்லை. எனக்கு உன் கூட இப்படியே இருக்கணும் “ என்று மெல்லிய குரலில் கூறினாள். ஆர்யன் உடனே அவளை இறுக அணைத்துக் கொண்டான். ” என்ன நடந்தாலும் நான் உன்ன விடமாட்டேன் சஞ்சு. ஒருவேள நான் உன்ன விட்டா அப்போ நான் உயிரோட இல்லனு புரிஞ்சிக்கோ ஆனா அப்பவும் நீ தைரியமா இருந்து, சந்தோஷமா வாழ்க்கைய வாழனும் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும் சஞ்சு திடீரென்று அவனுடைய சட்டை காலரை பிடித்து இழுத்து தன்னுடைய உதடுகளை அவன் உதடுகளில் பதித்தாள், அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
சில நொடிகள் முத்தமிட்ட பிறகு அவள் விலகியதும் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். ” நீ என்ன விட்டு போறதாவோ இல்ல நீ இல்லாம என்ன வாழவோ இன்னொரு முறை சொன்ன அவ்ளோ தான் சொல்லிட்டேன். நீ இல்லாம நான் ஒரு நொடி கூட வாழ மாட்டேன். நானும் செத்துப் போவேன். ரெண்டு பேரும் ஒன்னா வாழ்வோம் இல்ல ஒன்னா செத்து போவோம் “ என்று சஞ்சு கோவமாக சொன்னாள். ஆர்யன் உடனே அவளை இறுகப் பிடித்துக் கொண்டு, “கவலைப்படாத, நாம நல்லா வாழ்வோம்” என்றான். அதன் பின்னர் அவன் எழுந்து நின்று கையை நீட்டி,” சரி… வா, வாக்கிங் போகலாம்.” என்று அவளை அழைத்தான்.
குளிர்ந்த காற்று தங்கள் மௌனத்தை எடுத்துச் செல்ல இருவரும் அமைதியாக நடந்தனர். சிறிது நேரம் கழித்து, அவர்கள் வீடு திரும்பினர். இரவு உணவை விளையாட்டுத்தனமான கேலியுடனும், சிரிப்புடனும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி கொண்டு சாப்பிட்டனர். அதன் பின்னர் வரவேற்பறையில் இருந்த சோபாவில் கட்டி அணைத்தபடி ஒரு காதல் திரைப்படம் பார்த்தனர். வெளியே நிலவிய குளிரான வானிலை அவர்களுக்கிடையேயான கதகதப்பை மேலும் அதிகப்படுத்தியது.
ஆர்யன் அவள் கையை எடுத்து மெதுவாக ஒவ்வொரு விரலிலும் பின்னர் உள்ளங்கையிலும் முத்தமிட்டான். சஞ்சு தன் முதுகை அவன் மார்பில் சாய்த்து படுத்திருந்தாள், அப்போது அவன் அவளது வெற்றுத் தோளில் மற்றும் தாடையில் முத்தம் கொடுத்து அவளது முதுகெலும்பில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தினான்.
சஞ்சு தனது தலையை லேசாக பின்னால் சாய்த்து அவனுக்கு மேலும் அணுகல் கொடுத்தாள். அவன் கைகள் அவள் சட்டைக்குள் நழுவி அவள் இடுப்பை மென்மையாக பிடித்துக் கொண்டன. அவர்களின் மூச்சு வேகமெடுக்க, இருவரும் ஆசையில் தள்ளப்பட்டனர்.
ஒரு வார்த்தையும் பேசாமல் ஆர்யன் அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டான். சஞ்சு இயல்பாக தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டாள், இருவரின் உதடுகளும் உணர்ச்சி பொங்க முத்தமிட்டன, நாக்குகள் ஆசையின் அனல் பறக்கும் நடனத்தில் சிக்கிக்கொண்டன. இருவரும் படுக்கையறைக்குச் செல்லும் வழியிலேயே அவர்களின் உடைகள் தரையில் உதிர்ந்தன. அதைத் தொடர்ந்து பகிரப்பட்ட உணர்ச்சியின் இரவு, அங்கு முனகல்கள் மௌனத்திற்கு பதிலாக காதல் தொடு மொழியில் பேசப்பட்டது. ஆர்யன் அவளை முழுமையாக ஆராதனை செய்தான். அவள் மேனியின் ஒவ்வொரு வளைவையும் முத்தமிட்டான். இரவு முழுவதும் எதிரொலித்த காதல் மற்றும் இன்பத்தின் சிம்பொனியில் அவர்களின் உடலும் ஆன்மாவும் ஒன்றாக சரணடைந்தது.
DC இல்லத்தில், தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு, மாயா தனது படுக்கையறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு மாயமான அவளது டிடெக்டிவ் பகிர்ந்த புகைப்படத்தை வெறுமையாக வெறித்துப் பார்த்தாள். அதில், ஆர்யன் சஞ்சுவை தன் இரு கரங்களில் சுமந்து கொண்டிருந்தான், அவனது முகம் காதலால் மென்மையாக இருந்தது. இருவரும் பவித்ராவின் வீட்டை விட்டு புறப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முந்தைய நாள் மாலை சுரேந்தர் வீட்டிலிருந்து வீடு திரும்பிய மாயா, வெளியே வர மறுத்து, அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள். அவள் உணவையோ தண்ணீரையோ கூட மறுத்துவிட்டாள். காலையில், அவளுடைய கண்களுக்குக் கீழே இருந்த கருவளையங்கள் அவளுடைய வெளிறிய தோலுக்கு எதிராக கூர்மையாகத் தெரிந்தன.
அன்றிரவு நரேனும் அவள் அப்பாவும் வீட்டில் இல்லாததால் வீட்டின் நிலைமை இருவருக்கும் தெரியவில்லை. காலையில் சந்திரசேகர் வீட்டுக்கு திரும்பி வந்ததும், மாயா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று பணிப்பெண்கள் உடனடியாக அவரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சந்திரசேகர், தனக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காததற்காக பணிப்பெண்களை கடுமையாக சாடினார், பின்னர் மாயாவை சந்திக்க மாடிக்கு விரைந்தார்.
மாயாவின் அறைக் கதவைத் தட்டினார், ஒவ்வொரு நொடியும் அவர் தட்டும் வேகத்தின் சத்தம் அதிகரித்துக் கொண்டே போனது. பல வேண்டுகோள்களுக்குப் பிறகு, இறுதியாக கதவு திறந்து, மாயா உடைந்த நிலையில் வெளியே வந்தாள். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவள் அவருடைய அணைப்பில் அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.
” மாயா, என்ன செய்ற ? நான் தான் எல்லாத்தையும் பார்த்துக்குறேனு சொன்னேன்ல அப்புறம் ஏன் இப்படி உன்ன நீயே காயப்படுத்திக்குற ? “ என்று சந்திரசேகர் கேட்க, “அப்பா, எனக்கு வாழ விருப்பம் இல்ல, எனக்கு உயிரோட இருக்க வேணாம் “ என்று சொல்லி மாயா அழுதாள், அவள் குரல் நடுங்கியது.
“வாய மூடு, மாயா! இன்னொரு முறை இப்படி பேசாத, உன் அப்பா மேல உனக்கு நம்பிக்க இல்லையா ? “ என்று சந்திரசேகர் கேட்டார். அதற்கு மாயா அவரிடம், அவளிடம் இருந்த புகைப்படங்களை அவரிடம் காட்டிய போது அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தது. “இந்த போட்டோவ பாருங்க பா. ஆர்யன் அவ மேல பைத்தியமா இருக்காரு, அவள தவிர வேற எதுவும் அவருக்கு தெரிய மாட்டேங்குது. என்ன ரொம்ப காயப்படுத்துறாரு பா, என்னால தாங்க முடியல “ என்று சொல்லி கதறி அழுதாள்.
சந்திரசேகர் முகம் இறுக்கமாக இருக்க, அவள் கையிலிருந்த போட்டோவை வாங்கி கீழே போட்டார். ” மாயா, நான் சொல்றத கேளு, இந்த போட்டோ எல்லாம் என் ஆளுங்க கிட்ட இருந்து எனக்கு ஏற்கனவே கெடச்சுது. ஆர்யன் அவளோட உறவை பத்தி ரொம்ப தீவிரமா இருக்கான் “ என்று கூறினார்.
“பார்ட்டியில நீங்க ஆர்யன் கிட்ட பேசினீங்களா பா?” என்று மாயா நம்பிக்கையுடன் கேட்டாள். அதற்கு சந்திரசேகர் அவளிடம், ” நான் பேச முயற்சி பண்ணேன். நம்ம உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக நான் ஆசைப்படுறேன்னு சொன்னேன் ஆனா அவன் புத்திசாலி, என் நோக்கத்தைப் புரிஞ்சிக்கிட்டு என்ன பேச விடாம, அதுக்கு பதிலா புத்திசாலித்தனமா பார்ட்னர்ஷிப் பத்தி பேசினான். அவன் ரொம்ப தந்திரசாலி மாயா அதனால நாம கொஞ்சம் பொறுமையா தான் இத கையாளனும். அப்பா சொல்றத கேளு “ என்று கூறினார்.
மாயா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “அவ இருக்குற வரை ஆர்யன் எதுக்கும் சம்மதிக்க மாட்டாரு. அவள அவர் வாழ்க்கையில இருந்து துரத்தி அடிக்கணும் பா.” என்று கோவத்துடன் சொன்னாள் அப்போது சந்திரசேகர் அவள் முகத்தை மெல்ல வருடி.” இத என் கிட்ட விட்டுடு. எனக்கு தெரியாம நீ எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது, சரியா?” என்று சொன்னார் அதற்கு மாயா சரி என்று மெல்ல கூறினாள்.
“ இப்போ போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு அதுக்கு அப்புறம் நல்லா தூங்கு. இனி உன்ன இப்படி பார்க்க நான் விரும்பல.” என்று சொல்லி சந்திரசேகர் தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டார்.
” ஸாரி அப்பா, இனி இப்படி செய்யவே மட்டேன் “என்று மாயா பலவீனமான குரலில் சத்தியம் செய்தாள். அவள் பதிலை கேட்டு, ” சரி, நீ கவனமா இரு. எனக்கு சில வேலைகள் இருக்கு நான் அப்புறம் வந்து உன்ன பாக்குறேன் “ என்று கிளம்புவதற்கு முன் அவர் கூறினார், இருப்பினும் அவரது இதயம் கவலையால் கனத்திருந்தது.
அவரது வீட்டில் இருந்த அலுவலக அறைக்கு சென்றவர் ஆர்யன் பற்றிய நினைப்பில் மூழ்கி இருந்தார். “ என்ன மன்னிச்சிடு ஆர்யன், உன்ன பத்தியும் சஞ்சனாவ பத்தியும் தெரிஞ்ச அப்புறம் மாயாவ சமாதானப்படுத்த தான் விரும்பினேன் ஆனா ஒவ்வொரு முறையும் அவ உன்ன நெனச்சு அழறத என்னால பார்க்க முடியல. முதல்ல நான் ஒரு அப்பா, என் மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அவ தான் என்னோட உலகம். என்ன மன்னிச்சிடு ஆர்யன், எனக்கு வேற வழி இல்ல “ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.
இதற்கிடையில், ஆர்யனின் கடற்கரை வீட்டில் சஞ்சு முதலில் உறக்கத்தில் இருந்து கண் விழித்தாள். அவள் மார்பில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த ஆர்யனைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தாள். அவனுடைய கலைந்த தலைமுடியை விரல்களால் வருடியபடி அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டாள்.
அவளது மென்மையான முத்தத்தை உணர்ந்த ஆர்யன் தன் தாடியை அவள் மார்பில் தேய்க்க, அவளுக்கு அந்த கூச்ச உணர்வு சிரிப்பை வரவழைத்தது.
“ஆர்யன், என்ன பண்ற ?” என்று சிரித்தபடி அவன் பிடியில் இருந்து சஞ்சு விடுபட முயன்றாள். அப்போது, “குட் மார்னிங் டார்லிங் ” என்று அரைத் தூக்கத்தில் முணுமுணுத்தான் ஆர்யன்.
“குட் மார்னிங்” என்று சொன்னவள் அவனை லேசாகத் தள்ளி, ” இப்ப என்ன விடு. நான் ரெடியாக போறேன் ” என்று சொன்னாள். அதற்கு, “ஹ்ம்ம், சரி. வீட்டுக்கு போகலாம். நான் உன்ன வீட்ல விடுறேன் “ என்று சொல்லி அவன் பிடியை தளர்த்தினான் ஆர்யன்.
” இன்னிக்கு ஆபீஸ் போறீங்களா?” என்று கேட்டபடி தரையில் கிடந்த உடைகளை எடுத்தாள் சஞ்சு.
“ஆமா மா, நிறைய வேலை இருக்கு. நான் இன்னிக்கு போறேன். நாளையில இருந்து நீ ஆபீஸ் வரலாம் “ என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு சம்மதம் சொல்லி குளிக்க பாத்ரூமுக்கு சென்றாள். அப்போது ஆர்யனின் மொபைல் ஒலிக்க ஆரம்பித்தது. திரையில் சந்திரசேகரின் பெயரை பார்த்ததும் அவன் உடனே பதில் அளித்து, “சார், குட் மார்னிங். எப்படி இருக்கீங்க?” என்று பணிவுடன் கேட்டான்.
“குட் மார்னிங் ஆர்யன்” என்று சந்திரசேகர் சொன்னதும், ” உங்கள பார்ட்டி அன்னைக்கு இருந்து சரியான வழியனுப்பி வைக்க என்னால முடியாம போச்சு, ஸாரி ” என்று ஆர்யன் சொன்னதும், “ எனக்கு புரியுது ஆர்யன், அப்புறம் அன்னைக்கு நாம பேசின பார்ட்னர்ஷிப் பத்தி நீ என்ன நினைக்குற ? நாம ஆரம்பிக்கலாமானு கேட்க தான் போன் பண்ணேன் “ என்று சந்திரசேகர் கூறியதும், “எனக்கு ஆட்சேபணை இல்ல சார். நீங்க எந்த பிசினஸ் பார்ட்னர்ஷிப் பண்ண விரும்புறீங்கன்னு சொல்ல முடியுமா?” என்று ஆர்யன் கேட்டான்.
சந்திரசேகர் சற்றும் யோசிக்காமல், ” உன்னோட காஸ்மெடிக்ஸ்ல பிசினஸ்ல பார்ட்னர்ஷிப் பண்ணலாம் உனக்கு சம்மதமா ?” என்று சந்திரசேகர் முன்மொழிந்தார். ஆர்யன் நெற்றியைத் தேய்த்தபடி முகம் சுளித்தான். ஆனாலும் தற்போது வேறு வழியின்றி, ” சரிங்க சார். டாகுமென்ட் ரெடி பண்ண ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும். அதுல உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதுன்னு நம்பறேன்?” என்று சொன்னான் ஆர்யன்.
” நிச்சயமா இல்ல ஆர்யன் ஆனா நீ ரெடி பண்ண போற அக்ரீமென்ட்ல சேர்க்க வேண்டிய ரெண்டு உத்தியோகபூர்வ நிபந்தனையும், என்னோட ஒரு தனிப்பட்ட நிபந்தனையும் அதுல சேர்க்கணும் ” என்று சந்திரசேகர் மேலும் கூறினார். அதை கேட்டதும், “ அந்த மூணு நிபந்தன என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா ? “ என்று ஆர்யன் கேட்டான்.
” அத பத்தி பேச நான் உன்ன நேர்ல சந்திக்க விரும்புறேன் “ என்று சந்திரசேகர் சொல்ல, ” நிச்சயமா சந்திக்கலாம் சார், தேதியும் இடமும் சொல்லுங்க ” என்றான் ஆர்யன்.
” நாளைக்கு மதியம் 1 மணிக்கு, என் வீட்டுல லஞ்ச் சாப்பிட வா “ என்று சந்திரசேகர் சொன்னதும், “நான் வரேன் சார்” என்றான் ஆர்யன். அதற்கு சந்திரசேகர் உடனே, “ உன்னோட PA சஞ்சனாவ கூட்டிட்டு வா “ என்று உறுதியாக சொன்னார். அதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஆர்யன், “சார்…” என்று பதில் சொல்ல தயங்கினான்.
” நான் உன்ன நாளைக்கு பார்க்குறேன் ஆர்யன் “ என்று சொல்லி சந்திரசேகர் அழைப்பை துண்டித்ததும் ஆர்யன் மொபைலை வெறித்துப் பார்த்தான்.
இதற்கிடையில் சந்திரசேகரின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த மாயா, “அப்பா, ஆர்யன் மதியம் லஞ்ச் சாப்பிட நம்ம வீட்டுக்கு வர சம்மதம் சொன்னாரா ? “ என்று உற்சாகத்துடன் அவரிடம் கேட்டாள்.
“ஆமா மாயா” என்று சந்திரசேகர் சொன்னதும், ” அப்பா, அவளையும் ஏன் கூப்பிட்டீங்க?” என்று மாயா குழப்பத்துடன் கேட்டாள்.
” மாயா, கவனமா கேளு, நான் மறுபடியும் சொல்றேன் – நீ கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்க, நான் சொல்றத மட்டும் நீ சரியா செய். ஆர்யன் சாதாரண ஆள் இல்ல, அவன கட்டுப்படுத்துறது அவ்ளோ சுலபம் இல்ல. அவன் என்ன மதிக்கிறான் ஆனா புடிச்சவங்கள பாதுகாக்குற விஷயத்துல அவனோட அப்பாவ விட இரக்கம் இல்லாதாவன் ஆர்யன். என்னால அவன நேரடியா கட்டாயப்படுத்த முடியாது. நான் அவன் கூட விளையாட்டை கவனமாக விளையாடனும் “ என்று சந்திரசேகர் சொன்னதை கேட்டதும், ” புரியுது பா. ரொம்ப தேங்க்ஸ்” என்று சொன்ன மாயாவின் கண்களில் நம்பிக்கை மின்னியது.
” என் பொண்ணுக்காக நான் எதுவும் செய்வேன் ” என்று சந்திரசேகர் அவள் தலையைத் தட்டிக் கொடுத்தார்.
*********************************************
முன்னோட்டம்:
” ஏன்டா, கொஞ்சம் இடைவெளி விட்டு கிஸ் பண்ணா என்ன உனக்கு ? இப்படி மூச்சு வாங்க வைக்குற “

1 comment
[…] Chapter 41 […]