Home FamilyChapter 42

Chapter 42

by Siragugal Novels
15 views

சந்திரசேகரிடம் பேசிய பிறகு ஆர்யன் தலை குனிந்து யோசனையில் மூழ்கி அமர்ந்திருந்தான். குளித்து முடித்து பாத்ரூமை விட்டு வெளியே வந்த சஞ்சு அவனது முகத்தில் இருந்த அசௌகரியத்தை கவனித்து அவனிடம் சென்று அவன் முகத்தை மென்மையாக உள்ளங்கையில் பற்றினாள்.

“ஆர்யன், என்ன ஆச்சு?” என்று சஞ்சு அவனிடம் மெதுவாகக் கேட்டாள். அதற்கு ஆர்யன், ” ஒண்ணுமில்ல பேபி ” என்று சொல்லி  வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை உதிர்த்தான்.

“ஆர்யன், நீ ஏன் என்கிட்ட இருந்து மறைக்குற ? என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லு “என்று சஞ்சு வற்புறுத்தியதும், அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, ” சந்திரசேகர் சார் இப்போ தான் போன் பண்ணாரு ” என்று மெல்லிய குரலில் சொன்னான்.

“அவர் என்ன சொன்னாரு ?” என்று சஞ்சு பதற்றத்துடன் கேட்டதும், “அவர் காஸ்மெடிக் பிசினஸ்ல பார்ட்னர்ஷிப் செய்ய கேட்டாரு “ என்று ஆர்யன் பதில் சொன்னான். சஞ்சு அவன் அருகில் அமர்ந்து, “ நீ சம்மதம் சொல்லிட்டியா ? “ என்று கேட்க, “ ஆமா, சம்மதம் சொல்லிட்டேன், என்று சொல்லி ஆர்யன் தலை அசைத்தான்.

அவன் முகம் இன்னும் இறுக்கமாக இருப்பதை பார்த்து, ” வேற என்ன சொன்னாரு ?” என்று சஞ்சு அழுத்தமாக கேட்டாள். அவள் கையை பிடித்த ஆர்யன், “ பார்ட்னர்ஷிப்க்கு மூணு கண்டிஷன் இருக்காம், அத பத்தி பேச நாளைக்கு அவர் வீட்டுக்கு லுஞ்சுக்கு வர சொல்லி இருக்காரு “ என்று சொன்ன போது ஆர்யனின் புருவங்கள் சுருங்கின. அவன் கவலையை உணர்ந்த சஞ்சு, ” கவலைப்படாத, அவர சந்திச்சு, என்ன கண்டிஷன் சொல்றாருனு கவனமா கேளு அதுக்கு அப்புறம் நாம யோசிப்போம் “ என்று சொல்லி அவனை அமைதிப்படுத்த முயன்றாள் சஞ்சு.

” நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல சஞ்சு, நாளைக்கு உன்னையும் என் கூட கூட்டிட்டு வர சொல்லி இருக்காரு “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டதும், “என்ன?” என்று சஞ்சு அதிர்ச்சியில்  மூச்சிரைத்தாள்.

” அவருக்கு நம்மள பத்தி எல்லாம் தெரியும்னு நினைக்குறேன்” என்று ஆர்யன் சொல்ல, “ அது எப்படி முடியும் ஆர்யன் ? நம்ம ரகசியம் யாருக்கும் தெரியாம ஜாக்கிரதையா தானே இருக்கோம் ? “ என்று சஞ்சு கவலையுடன் கேட்டாள். அதற்கு ஆர்யன் அவள் கன்னத்தை தொட்டு, “ ரகசியம் எப்பவும் ரகசியமாவே இருக்க முடியாதுல, பாத்துக்கலாம் விடு “ என்று சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “ எல்லாம் சரியாகிடும், நீ கவலைப்படாத ” என்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.

சஞ்சு ஒன்றும் பேசாமல் வெறுமனே தலையை மெல்ல அசைக்க, “ ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட், ஐ லவ் யூ லவ் “என்று சொல்லி ஆர்யன் அவள் கூந்தலின் வாசனையை முகர்ந்தான்.

“ஐ லவ் யூ, இப்ப ரெடியாகுங்க நாம வீட்டுக்குப் போகலாம்.” என்று சஞ்சு பயத்தின் ஊடே புன்னகைத்து சொன்னாள். 

இருவரும் தயாரானதற்குள் ரஞ்சித் அங்கு வந்து சேர்ந்தான், மூவரும் சேர்ந்து ஆர்யன் மேன்ஷனுக்குத் திரும்பினர். வீட்டை அடைந்ததும் ஆர்யன் சஞ்சு பக்கம் திரும்பி. “சஞ்சு, நான் ஆபீஸ் போகல, வீட்ல இருந்து தான் வேலை செய்ய போறேன். ஏதாவது வேணும் இல்ல பேசணும்னா ஆபீஸ் ரூமுக்கு வா “ என்று சொன்னான். “சரி” என்று தலையசைத்து விட்டு சஞ்சு மாடிக்கு செல்ல, ஆர்யன் ரஞ்சித்துடன் ஆபீஸ் ரூமுக்கு சென்றான்.

இருவரும் உள்ளே நுழைந்ததும் மெல்லிய, அவசரமான குரலில் பேசினார்கள்.

” சுரேந்தர், பிரதீப் கிட்ட இருந்து உங்க ரெண்டு பேரோட ரகசியத்த தெரிஞ்சிக்க மாயா ரொம்ப முயற்சி பண்ணி இருக்கா ஆனா அவங்க ரெண்டு பேரும் உறுதியாக இருந்து எந்த விஷயமும் சொல்லாம அவள திருப்பி அனுப்பிட்டாங்க ” என்று ரஞ்சித் கூறினான்.

” அவளோட டிடெக்டிவ் என்ன ஆனான் ?” என்று ஆர்யன் கேட்டதும், “ அவன் நம்ம கஸ்டடியில இருக்கான் சார்” என்றான் ரஞ்சித்.

ஆர்யன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு, “சந்திரசேகர் எல்லா ரகசியத்தையும் தோண்டி கண்டுபுடிச்சிட்டாருனு நினைக்குறேன். அவர் என்னையும் சஞ்சுவையும் நாளைக்கு மதிய லுஞ்சுக்கு அவரோட வீட்டுக்கு வர சொல்லி இருக்காரு “ என்று ஆர்யன் சொன்னதும், ” சஞ்சுவ கண்டிப்பா கூட்டிட்டு போகனுமா ? வீட்ல விட்டு போக முடியாதா ? என்று ரஞ்சித் கேட்டான் அதற்கு ஆர்யன் ” இல்ல ரஞ்சித், எங்கள வீட்டுக்கு பிசினஸ் பார்ட்னர்ஷிப் பத்தி பேச  வர சொல்லல. சஞ்சுவ சந்திச்சு மறைமுகமா மிரட்டுறது தான் அவரோட திட்டம்” என்றான்.

” சஞ்சுவுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டா என்ன செய்றது ? “என்று பதறும் குரலில் கேட்டான் ரஞ்சித். ஆனால் ஆர்யன் மெல்ல தலையை மறுத்து ஆட்டினான். ” அவர் அது மாதிரி எதுவும் இப்போதைக்கு செய்யமாட்டாரு. அந்த நிலமைய நாம சந்திக்க இன்னும் நிறைய நேரம் இருக்கு ஆனா இந்த பிரச்சன தீவிரமடையுறதுக்கு முன்னாடி நாம ஒரு தீர்வ கண்டுபிடிக்கனும் “ என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

” நாம இந்த பிரச்சனைய சரி செய்ற வர சஞ்சுவ கொஞ்ச நாள்  வீட்டுல இருக்க சொல்லலாமா?” என்று ரஞ்சித் கேட்டான். 

” சந்திரசேகர் அவள வெளிய கூட்டிட்டு வர எல்லா வகையிலையும் முயற்சி செய்வாரு, என்ன மாதிரி நெனச்சத சாதிக்குற வெறி அவருக்கு இருக்கு அதனால இந்த யோசனை சாத்தியமில்லாதது “ என்று சொன்ன ஆர்யன், “ நீ அவரோட சீக்ரெட் செல் இருக்க இடம் கண்டுபிடிச்சியா ?” என்று கேட்டான்.

 “இல்ல சார். இன்னும் முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன் ஆனா இதுவர எந்த குறிப்பும் இல்ல” என்று ரஞ்சித் கூறினான்.

ஆர்யன் பெருமூச்சு விட்டான். “நான் பல வருஷமா அவர் கூட நெருக்கமா இருக்கேன் அப்படி இருந்தும் என்னால கூட அத கண்டுபிடிக்க முடியல. பிசினஸ், பழிவாங்குறது இது ரெண்டுலயும் அவர் இன்னும் அதே சூத்திரதாரி தான் “ என்றான் எரிச்சலுடன்.

” நரேன் கிட்ட உதவி கேட்கலாமா ?” என்று ரஞ்சித் யோசனை சொன்னான் அதற்கு ஆர்யன், “அவனுக்கும் தெரியாது ரஞ்சித், நீ முயற்சி பண்ணிட்டே இரு. நாம சீக்கிரம் கண்டுபுடிக்கலாம் “ என்று கூறினான்.

” நான் பாத்துக்கறேன் சார்” என்று ரஞ்சித் சொல்ல, “ நம்ம லாயர் கிட்ட பேசி நாளைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வர சொல்லு. சந்திரசேகர சந்திச்ச அப்புறம் அடுத்தகட்ட நடவடிக்கை பத்தி  ஆலோசிப்போம்” என்றான் ஆர்யன்.

“கண்டிப்பா சார்.” என்று சொல்லி ரஞ்சித் வெளியேற இருந்தான் அப்போது ஆர்யன் அவனை அழைத்து, “ ரஞ்சித், கட்டுமானம் வேல என்ன ஆச்சு ? “ என்று கேட்டான்.

” நாளைக்கு ஆரம்பிக்கலாம் சார்” என்று ரஞ்சித் உறுதி செய்தான். அதை கேட்டு புன்னகைத்த ஆர்யன், “நல்லது. நான் சொன்ன ஒவ்வொரு விவரத்தையும் செக் பண்ணு” என்றான்.

“ஓகே சார்” என்று தலையாட்டி ரஞ்சித் அறையை விட்டு வெளியேறினான்.

சஞ்சு அவளது மொபைலை எடுத்து கொண்டு பால்கனியில் அமர்ந்து பவித்ராவை அழைத்தாள். சஞ்சுவின் பெயரை பார்த்ததும் பதில் அளித்து, ” ஹலோ மேடம், ஆபீஸ் பக்கம் வர ஐடியா இருக்கா ? “ என்று விளையாட்டாக கேட்டு கிண்டல் செய்தாள் பவி. 

சஞ்சு சிரித்தபடி, ” அய்யோ பவி! கொஞ்சம் பிஸியா இருக்கேன் அதனால நாளைக்கு மறுநாள் வருவேன் “ என்று சொன்னாள்.

” அப்புறம் என்ன விஷயம்?” என்று கேட்ட பவியின் குரலில் ஆர்வம் தொனித்தது. அவள் என்ன கேட்க ஆர்வமாய் இருக்கிறாள் என்று உணர்ந்த சஞ்சு, “நாங்க ப்ரொபோஸ் பண்ணிட்டோம் பவி” என்றாள். அப்போது அவள் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகை மலர்ந்தது.

மறுமுனையில் ஒரு பெருமூச்சு இருந்தது. ” அய்யோ கடவுளே, அய்யோ கடவுளே ….சஞ்சு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” என்று உற்சாகமடைந்த பவி, “ இப்போ சொல்லு, யார் முதல்ல லவ் சொன்னது ? “ என்று கேட்டாள்.

” உங்க சார் தான் முதல்ல லவ் ப்ரொப்போஸ் பண்ணாரு அதுக்கு அப்புறம் நான் சொன்னேன் “ என்று சஞ்சு சொன்னதும், அவள் வார்த்தையை கேட்டு மகிழ்ந்த பவி, ” ஒரு வழியா சொல்லிட்டீங்க. அப்புறம் வேற என்ன மேட்டர் ? “ என்று கேட்டாள், அவள் குரலில் கிண்டல் தொனித்தது.

லவ் ப்ரொபோஸ் செய்த பிறகு நடந்த ரொமான்ஸ் நினைத்து சஞ்சு வெட்கத்தில் சிவந்து போனாள். பவித்ராவிடம் அதை பற்றி சொல்லாமல், ” வேற ஒண்ணுமில்ல ” என்றாள்.

” நீ சொல்றது நம்புற மாதிரி இல்லையே “ என்று பவி சந்தேகத்துடன் கிண்டல் செய்ய, “எதுவும் நடக்கல,” என்று சஞ்சு சிரித்தபடி உறுதிப்படுத்தினாள். அவள் வார்த்தையை கேட்ட பவி, ” அப்போ ஏன் நீங்க ரெண்டு பேரும் ஆபீஸ் வரல ? “ என்று மீண்டும் கிண்டல் செய்தாள்.

” மாயாவோட பிரச்சினை தான் பவி. அவ அப்பாவு ஆர்யன் கூட ஒரு பார்ட்னர்ஷிப் பண்ண போறாரு. அது சம்மதமா பேச நாளைக்கு அவர் வீட்டுக்கு எங்க ரெண்டு பேரையும் வர சொல்லி இருக்காரு. அவர் என்ன திட்டம் போடுறாருனு தெரியல “ என்று சஞ்சு பெருமூச்சு விட்டு சொன்னதை கேட்ட பவி, ” கவலைப்படாத, ஆர்யன் சார் எல்லாத்தையும் பாத்துக்குவாரு “ என்று சஞ்சுவுக்கு தைரியம் சொன்னாள்.

” எனக்குத் தெரியும் பவி, நீ என்ன நெனச்சு கவலைப்படுவனு தான் உன்கிட்ட சொன்னேன் அதனால நீயும் என்ன நெனச்சு கவலைப்பட வேண்டாம்.” என்று சஞ்சு சொன்னதும், ” நான் ஏன் கவலைப்படனும் ? உண்மைய சொல்லனும்னா பார்ட்டியில ஆர்யன் சார் உன்ன பார்த்த விதம் அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருப்பீங்கனு எனக்குத் தெரியும். அவர் உன்ன ரொம்ப லவ் பண்றாரு சஞ்சு.” என்றாள் பவி.

” எனக்குத் தெரியும்” என்றாள் சஞ்சு மனம் நிரம்பியபடி.

சஞ்சுவின் வார்த்தையை கேட்டதும், ” இப்ப இப்படி சொல்லு ஆனா அன்னிக்கு பார்டியில என்ன பண்ண ? ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு அவ்ளோ அமர்க்களம் பண்ண “ என்று பவி சொன்னாள். அதற்கு சஞ்சு,  “சரி விடு, ஏதோ ஒரு கோவத்துல அப்படி பண்ணிட்டேன் “ என்று வெட்கத்துடன் ஒப்புக்கொண்டாள்.

” எப்படியோ, இப்போ எல்லாம் சரி ஆயிடுச்சு. உங்க ரெண்டு பேருக்காகவும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் “ என்று பவி சொன்னதும், “ ரொம்ப நன்றி பவி, நான் உன்ன ஆபீஸ் வந்து பாக்குறேன் “ என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். 

அறைக்கு நுழைந்தவளின் பார்வை, ஆழ்ந்த சிந்தனையில் சோபாவில் அமர்ந்திருந்த ஆர்யன் மீது விழுந்தது. அவள் அவனை நோக்கி நகர்ந்து, அவன் மடியில் அமர்ந்து, அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள்.

” என்ன இழந்துடுவியோனு பயமா இருக்கா ?” என்று சஞ்சு கேட்க, ஆர்யன் மறுத்து தலை ஆட்டி, “இல்லை.” என்று பதில் சொன்னான். 

” அப்போ வேற என்ன யோசிக்குற ?” என்று சஞ்சு கேட்டதும், ” யாரையும் காயப்படுத்தாம இதுல இருந்து மீண்டு வர ஒரு வழிய யோசிச்சிட்டு இருக்கேன் “ என்று ஆர்யன் சொன்னதும், அவன் வார்த்தையை பற்றி யோசித்த சஞ்சு அவன் கன்னத்தை உள்ளங்கையில் பற்றி அவன் கண்களில் முத்தமிட்டாள்.

” ஆர்யன், என் உயிர காப்பாத்த நீ எந்த முட்டாள்தனமான முடிவையும் எடுக்க மாட்டனு எனக்கு சத்தியம் பண்ணு. நல்லா ஞாபகம் இருக்கட்டும், நீ ஏதாவது தப்பான முடிவு எடுத்தா நான் அத ஏத்துக்கவும் மாட்டேன், உன்ன மன்னிக்கவும் மாட்டேன்” என்று சஞ்சு உறுதியாக சொன்னதை கேட்டதும், “ சத்தியமா அப்படி எதுவும் செய்ய மாட்டேன், அதே மாதிரி நீயும் எனக்கு சத்தியம் பண்ணு. என்ன நடந்தாலும், நீ தைரியமா என் கூட நிற்கணும், எதுக்காகவும் நம்ம ரெண்டு பேரையும் நீ விட்டுக்கொடுக்க கூடாது. நான் என்ன சொன்னாலும் நீ அத செய்யணும் “ என்று ஆர்யன் சொன்னான்.

” சரிங்க பாஸ், நானும் சத்தியம் செய்றன் ” என்று சொல்லி அவள் புன்னகைத்தபடி அவன் இதயத்தில் கையை வைத்தாள். சற்றும் தாமதிக்காமல் ஆர்யன் அவளை இறுக்கமாக கட்டிப்பிடித்து ஆசையுடன் முத்தமிட்டான். சஞ்சு பின்வாங்க முயன்றாள், ஆனால் அவன் முத்தத்தை ஆழப்படுத்தி, அவள் வாயில் முனகினான். கடைசியில் இருவரும் மூச்சிரைக்க பிரிந்தபோது, சஞ்சு அவன் மார்பில் லேசாக அடித்தான்.

” ஏன்டா, கொஞ்சம் இடைவெளி விட்டு கிஸ் பண்ணா என்ன உனக்கு ? ஏன் இப்படி மூச்சு வாங்க வைக்குற ? “ என்று மூச்சிரைக்க அவனைத் திட்டினாள். அதற்கு ஆர்யன், “ என்னால நிறுத்த முடியல, நான் என்ன செய்றது ? நீ தான் இந்த அளவுக்கு என்ன வசியம் பண்ணி வெச்சுருக்க “ என்று சிரித்தபடி கூறினான்.

சஞ்சு எழுந்து நின்று தன் படபடக்கும் இதயத்தை அமைதிப்படுத்த முயன்றபடி, “நான் தோட்டத்துக்குப் போறேன், பறவைகள பராமரிக்கனும், பாலா அண்ணாவும் இல்ல” என்று கூறினாள். 

” கவலைப்படாத, அதெல்லாம் பார்த்துக்க ஆள் இருக்காங்க “ என்று ஆர்யன் கூறினான் ஆனால் சஞ்சு ” எனக்குத் தெரியும், ஆனா எனக்கு போய் பார்க்கணும் “ என்று கூறி அவனிடம் இருந்து விலகினாள்.

“சரி சரி போ” என்று ஆர்யன் சொன்னதும் சஞ்சு தோட்டத்திற்குச் சென்றாள், அங்கு கௌசல்யா பறவைகளைக் கவனித்துக்கொண்டிருப்பதை கண்டாள்.

“வா கண்ணா” என்று கௌசல்யா அன்புடன் சஞ்சுவை அழைத்தார். ” பாலா அண்ணா எப்போ வருவாரு மா ?” என்று கேட்டபடி சஞ்சு ஒரு கைப்பிடி தானியங்களை பறவைகளுக்கு உணவளித்தாள்.

” அவன் ஒரு வாரத்துல திரும்பி வருவான்னு ரஞ்சித் சொன்னான்” என்று கௌசல்யா பதில் சொன்னதும், “ஓ, சரி. ஆனா அவர் ஏன் திடீர்னு கிளம்பி போனாரு ?” என்று சஞ்சு கேட்டாள்.

“அவன் அம்மாவ பார்க்கப் போய் இருக்கான் மா “ என்று கௌசல்யா சொன்னதும், “சரி மா, நீங்க போய் உள்ள வேலைய பாருங்க, நான் இங்க இருந்து பறவைகள பாத்துக்குறேன் “ என்று கூறி அந்த பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள் சஞ்சு.

சஞ்சு பறவைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்க, ஆர்யன் அவனது ஆபீஸ் ரூமில் அமர்ந்து யாருக்கும் தீங்கு ஏற்படாமல் சந்திரசேகரை எதிர்கொள்ள தனது அடுத்த நகர்வை திட்டமிட்டு கொண்டிருந்தான்.

************************************

முன்னோட்டம்:

“ ஆர்யன், உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா ? இங்க பாரு, என் கழுத்து, கன்னம், தோள்ப்பட்ட எல்லாம் எப்படி கடிச்சு எச்சுருக்க “  

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!