Home FamilyChapter 43

Chapter 43

by Siragugal Novels
16 views

பிரகாசமான சூரியனின் காலைக் கதிர்கள் ஜன்னலைத் தொட்டு, திரைச்சீலைகள் வழியாக நழுவி, காதல் பறவைகள் படுத்திருந்த வெற்றுப் படுக்கையின் மீது விழுந்தன. அதிர்ஷ்டவசமாக அறைகள் ஒலி புகாதவையாக இருந்ததால் பாத்ரூமில் இருந்து வந்த முனகல் சத்தம் அறைக்கு வெளியே யார் காதுகளுக்கும் எட்டவில்லை.

ஆர்யனும் சஞ்சுவும் தங்கள் காலை நேர உடற்பயிற்சியில் தொலைந்து போய் இருந்தார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு இருவரும் அங்கி அணிந்து பாத்ரூமில் இருந்து அடுத்தடுத்து வெளியே வந்தனர். வாஷ் ஜெல்லின் புதிய வாசனை அவர்களைச் சுற்றி நீடித்திருந்த மறுக்க முடியாத அன்பின் நறுமணத்துடன் கலந்திருந்தது. ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த சஞ்சுவின் சிவந்த கன்னங்கள், அவர்களின் காலை நேர காதல் கதைகளை உரக்க சொன்னது.

கண்ணாடி முன் நின்றவள் அதிர்ச்சியாகி, ” ஆர்யன், உனக்குப் பைத்தியமா ? உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல தெரியுமா  “ என்று சஞ்சு முனகியபடி தன் மேலாடையை சரி செய்தாள்.

” நான் என்ன பண்ணேன் ஸ்வீட் ஹார்ட் ?” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டான் ஆர்யன். அதற்கு சஞ்சு அவனை முறைத்து, “மதியம் சந்திரசேகர் சார் வீட்டுக்கு நான் ஹூடி போட்டுட்டு வரணுமா ? “ என்று கேட்டாள்.

” நிச்சயமா இல்ல, பேபி ” என்று சொல்லி ஆர்யன் சிரித்தான். அவனை மீண்டும் முறைத்த சஞ்சு, “ என் கழுத்து, தோள்பட்டை, கன்னத்த எப்படி கடிச்சு வெச்சுருக்க பாரு ” என்று சொல்லி அவள் கழுத்து மற்றும் தோள்களை சுட்டிக்காட்டினாள்.

” அதெல்லாம் நான் உன்மேல வெச்சுருக்க காதலோட அடையாளம், அத பார்க்கும் போது எனக்கு பெருமையா இருக்கு, இருந்தாலும் அத மறைக்க நான் உனக்கு உதவி செய்றேன், என் கிட்ட வா டார்லிங் “   என்று ஆர்யன் கிண்டலடித்தபடி அருகில் சென்றாள் ஆனால் சஞ்சு, “ இல்ல, நானே அத பண்ணிக்குறேன். இன்னைக்கு நாள் முழுக்க நீ என் பக்கத்துல வர கூடாது “ என்று சொல்லி அவனை பின்னுக்கு தள்ளினாள்.

” எனக்கும் அத செய்யணும்னு மறந்துடாத. என்னோட இந்த பயந்த சுபாவமா இருந்த வீட்டு பூனை கொஞ்ச நாளைக்கு முன்னாடி காட்டு பூனையா மாறிடுச்சு, அதனால எனக்கும் உன்னோட  கன்சீலர் வேணும்” என்று சொல்லி சிரித்து, அவன் உடலில் இருந்த அடையாளங்களை காட்டினான்.

” வாயை மூடு சேட்ட புடிச்ச குரங்கு,” என்று சொல்லி சஞ்சு சிரிக்காமல் இருக்க முயன்றாள். ஆனால் அவள் வார்த்தையை கேட்ட ஆர்யன், ” ஏய் என்ன சேட்ட புடிச்சவன்னு சொல்லாத, இல்லனா மறுபடியும் குளிக்க வேண்டியிருக்கும்” என்று ஆர்யன் விளையாட்டாக எச்சரித்தான்.

” சந்திரசேகர் சார் நம்ம ரெண்டு பேரையும் அவர் வீட்டுக்கு வர சொல்லி இருக்காரு, அத பத்தி உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா ? “ என்று சஞ்சு கேட்க, ” அதையெல்லாம் நெனச்சு பயந்துட்டு உன்கூட இருக்க எனக்கு கிடைக்குற பொன்னான நேரத்த என்னால வீணடிக்க முடியாது பேபி. எனக்கு ஒவ்வொரு நொடியும் உன்கூட திருப்தியா வாழனும் “ என்று சொல்லி அவளை அருகில் இழுத்தான். சஞ்சு அவன் வார்த்தையில் மகிழ்ந்து, “ஐ லவ் யூ ஆர்யன்” என்று கிசுகிசுத்து அவன் அணைப்பில் உருகினாள்.

“ஐ லவ் யூ சஞ்சனா. ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட் ” என்று ஆர்யன் பதிலுக்கு கிசுகிசுத்தான்.

“சரி, எனக்குப் பசிக்குது. நான் டிரஸ் பண்றேன், நாம சீக்கிரம் கீழ போகலாம் “என்று சஞ்சு சொல்ல, “சரி” என்று ஆர்யன் புன்னகைத்தான்.

இருவரும் விரைவாக உடைகளை அணிந்து கொண்டு கீழே சென்றனர், அங்கு ஏற்கனவே ரஞ்சித் காத்திருந்தான்.

“குட் மார்னிங் சார்” என்று லேசாக புன்னகைத்து வரவேற்றான் ரஞ்சித்.

“குட் மார்னிங் ரஞ்சித்” என்றான் ஆர்யன்.

” சார், நம்ம சந்திரசேகர் சார் வீட்டுக்கு போகும் போது  செக்யூரிட்டி ஏற்பாடு செய்யட்டுமா? நாம ஏதாவது பாதுகாப்பு பிளான் பண்ணலாமா?” என்று ரஞ்சித் கேட்டதும், ” இப்போ ப்ளான் வேணாம் ரஞ்சித், கார்ட்ஸ் பின்தொடர்ந்து வரட்டும் ஆனா அவர் வீடுக்குள்ள நாம மூணு பேரு மட்டும் தான் போவோம். அவர் இப்போ உடனே எந்த அவசர நடவடிக்கையும் எடுக்க மாட்டாரு அதனால நாம அவசரப்பட வேணாம் “ என்று ஆர்யன் உறுதியாக கூறினான்.

” சரி சார். 11.30 மணிக்கு கிளம்பி 12.40 மணிக்கு போய்ச் சேருவோம்” என்று ரஞ்சித் சொன்னதும், “ அவருக்கு ஒரு பூங்கொத்து வாங்கிடு “ என்று ஆர்யன் சொன்னான்.

” நான் ஏற்கனவே வாங்கிட்டேன் சார், அப்புறம் லண்டன் கிளைண்ட் கிட்ட இருந்து போன் வந்துச்சு, அவங்க ப்ராஜெக்ட்டுக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க. இங்கிலாந்து முழுக்க நம்ம காஸ்மெடிக் விளம்பரப்படுத்த அக்ரீமென்ட் கையெழுத்து போட அவங்க தயாரா  இருக்காங்க. இந்த டீல் இறுதி பண்ண, அவங்களோட தலைமை நிர்வாக அதிகாரி அப்புறம் அவங்க மார்க்கெட்டிங் மேனேஜர சந்திக்க நீங்க லண்டன் போக வேண்டி இருக்கும் “ என்று ரஞ்சித் விளக்கமாக கூறினான்.

ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, “நாளைக்குள்ள அவங்களுக்குத் பதில் சொல்லுவோம் ரஞ்சித்” என்றான் ஆர்யன்.

காலை உணவை முடித்த பிறகு, ஆர்யனும் சஞ்சுவும் லிவிங் அறைக்கு சென்றனர். ஆர்யன் சீரியஸான முகபாவத்துடன் அவளை நோக்கித் திரும்பி, “சஞ்சு” என்று மெதுவாக அழைத்தான்.

“ஹ்ம்ம் சொல்லு ” என்று சஞ்சு சொல்ல, ” நான் சொல்றத கேளு, இன்னிக்கு நடக்க போற லஞ்ச் மீட்ல பார்ட்னர்ஷிப் பத்தி பேச போறது குறைவா தான் இருக்கும். உன்ன மிரட்டறது தான் அதிகமா இருக்கும் ” என்றான் ஆர்யன் கவனமாக. அதற்கு சஞ்சு சட்டென, “எனக்குத் தெரியும்,” என்று பதிலளித்தாள்.

” என்ன சொல்ற ? “ என்று ஆர்யன் வியப்புடன் கேட்டதும், ” என்கிட்ட பேச இல்ல உன்ன விட்டு போக சொல்லி என்ன மிரட்ட தான் என்ன வர சொல்லி இருக்காருனு எனக்கு தெரியும் “ சஞ்சு சொன்ன போது அவள் குரல் உறுதியாக இருந்தது.

” சரி, அப்போ அவங்க என்ன சொன்னாலும் நிதானமா இரு, அந்த இடத்திலேயே எந்த முடிவுக்கும் வர வேண்டாம்” என்று ஆர்யன் அறிவுறுத்தினான். அவன் கவலையை புரிந்து கொண்ட சஞ்சு, “கவலைப்படாத ஆர்யன். என்னால சமாளிக்க முடியும்” என்று தீர்மானமான பார்வையுடன் அவனுக்கு உறுதியளித்தாள் சஞ்சு.

” சரி, நாம் தயாராகலாம்.” என்று ஆர்யன் கூறினான்.

ஆர்யன் வழக்கம் போல கோட் சூட் அணிந்து தயாரானான். அதே நேரம் சஞ்சு ஒரு மிருதுவான வெள்ளை சட்டையுடன், முழங்கால் நீள ஸ்கர்ட் அணிந்து தயாரானாள். அவளுடைய கூந்தல் ஒரு ப்ரூச்சால் பாதி பின்புறமாக பின்னப்பட்டிருந்தது, மீதமுள்ளவை மென்மையான அலைகளாக அவளுடைய தோள்களில் விழுந்தன.

இருவரும் தயாராகி லிவிங் அறைக்கு சென்ற போது அங்கு ரஞ்சித் அவர்களுக்காக காத்திருந்தான். அவன் அவர்களை காருக்கு அழைத்துச் செல்ல, ஆர்யனும் சஞ்சுவும் உள்ளே அமர்ந்ததும் DC இல்லத்தை நோக்கிய பயணம் அமைதியாக இருந்தது. பதற்றம் அவர்களை சுற்றி நிலவியது.

சஞ்சு பதட்டத்துடன் விரல்களை கசக்குவதை கவனித்த ஆர்யன்  அவள் கையை பிடித்து மென்மையாக அழுத்தினான். சஞ்சு கண்களை மூடிக்கொண்டு, படபடக்கும் இதயத்தை அமைதிப்படுத்த ஆழமாக மூச்சு விட்டாள். பின்னர் அவள் மீண்டும் கண்களை  திறந்து அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள்.

” ரிலாக்ஸ், நான் உன் கூட இருக்கேன் ” என்று ஆர்யன் மெல்லிய குரலில் சொல்ல, “எனக்குத் தெரியும்,” சஞ்சு பதிலுக்கு கிசுகிசுத்தாள்.

” என் சஞ்சனா ரொம்ப தைரியமானவ, அவ்ளோ சீக்கிரம் விட்டுக்கொடுக்க மாட்டா ” என்று சொல்லி ஆர்யன் கண்ணடித்ததும், “ஆமா, நான் ஒரு நாளும் உன்ன விடமாட்டேன். நீ என்னோட ஆர்யன், எனக்கு மட்டும் தான் சொந்தம் “ என்றாள் சஞ்சு. அவள் வார்த்தையை கேட்டு புன்னகைத்த ஆர்யன், ” நான் உனக்கு மட்டும் தான் ” என்று உறுதியாக சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

சஞ்சு அவன் தோளில் சாய்ந்ததும், ஆர்யன் அவளை பாதுகாப்பாக அனைத்துக் கொண்டான். மீதமுள்ள பயணம் ஆறுதலான மௌனத்தில் கழிந்தது, இருவரின் விரல்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தன.

பசுமையான தோட்டங்கள், பளபளக்கும் நீச்சல் குளம் மற்றும் இணைக்கப்பட்ட பார் ஆகியவற்றால் சூழப்பட்ட DC இல்லத்தின்  பெரிய இரும்பு கதவுகள் திறந்து ராயல் லம்போர்கினி நுழைந்தது.  சஞ்சு தனக்கு அருகில் சற்று விறைப்பாக இருப்பதை உணர்ந்த ஆர்யன் மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில் அவள் கையை அழுத்தினான்.

அவர்களை சந்திரசேகரின் PA நுழைவு வாயிலில் நின்று, “ வெல்கம் சார் “ என்று வரவேற்றார். அதற்கு “தேங்க்ஸ்” என்றான் ஆர்யன் பணிவாக.

” சார் உங்களுக்காக தோட்டத்துல காத்துட்டு இருக்காரு,ப்ளீஸ் வாங்க ” என்று சொல்லி PA முன்னிலை வகிக்க, சஞ்சு, ரஞ்சித்,  ஆர்யன் அவரை பின்தொடர்ந்தனர். தோட்டத்தில், சந்திரசேகர் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆர்யனை இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.

” வா ஆர்யன், நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்றார் சந்திரசேகர். “தேங்க்யூ சார்” என்றான் ஆர்யன் புன்னகையுடன். ஆர்யனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த சஞ்சு மற்றும் ரஞ்சித்தை பார்த்தவர், ” ஹலோ மிஸ் சஞ்சனா, வெல்கம் ரஞ்சித்” என்று சந்திரசேகர் அவர்களையும் வரவேற்றார்.

ரஞ்சித்தும் சஞ்சுவும் தங்கள் இருக்கைகளில் அமர்வதற்கு முன்பு பணிவான வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது மாயா நீச்சல் உடையின் மேல் இடுப்பில் ஒரு துண்டை சுற்றிக்கொண்டு நீச்சல் குளத்திலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தாள்.

” ஹலோ அப்பா. வாங்க ஆர்யன். உங்கள எங்க வீட்ல் சந்திக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ” என்று சொன்ன மாயாவின் குரலில் இனிமையும் விளையாட்டுத்தனமும் ததும்பியது. ஆனால் ஆர்யன் எப்போதும் போல, “தேங்க்யூ மிஸ் மாயா” என்று சம்பிரதாயமாக பதில் சொன்னான்.

” கொஞ்ச நேரத்துல நான் ரெடியாகி வந்துடறேன்” என்றாள் மாயா. ஆனால் சந்திரசேகர், “ பொறுமையா ரெடியாகி வா பிரின்சஸ் “ என்று சொன்னார். 

“இல்ல பா. நம்ம வீட்ல ஆர்யன் இருக்கும் போது என்னால லேட்டா வர முடியாது” என்று சிரித்தவள் உடை மாற்ற வேகமாக உள்ளே சென்றாள்.

ஆர்யன் சந்திரசேகரைப் பார்த்து “சார், நரேன் எங்க ?” என்று கேட்டான். அதற்கு அவர், ” நம்ம ரெண்டு பேரும் பிசினஸ் பத்தி பேசி முடிக்குறதுக்குள்ள அவன் வந்துடுவான் “ என்று பதில் சொன்னார்.

ஆர்யன் சரி என்று தலையசைத்ததும், ” அப்போ நாம பிசினஸ் பேச ஆரம்பிக்கலாம் “ என்று சந்திரசேகர் சொன்னதும் ஆர்யன் சாதாரணமாக இருப்பது போல அவன் முகபாவம் இருந்தது ஆனால் அவன் அவர் வார்த்தைகளை கேட்க கவனமாக இருந்தான்.

“ நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாம காஸ்மெடிக் பிசினஸ்ல பார்ட்னர்ஷிப் பண்ணுவோம் “ என்று சந்திரசேகர் சொன்னதும், “உங்க சாய்ஸ்ல எனக்கு ஓகே” என்றான் ஆர்யன் கூலாக.

” நம்ம பார்ட்னர்ஷிப்ல எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு. இத நீ அக்ரீமென்ட்ல சேர்க்கணும். “ என்று சந்திரசேகர் சொன்னதும், “நீங்க சொல்லு” என்று பேச்சுவார்த்தைக்கு தயாரானான் ஆர்யன்.

“முதல்ல, பார்ட்னர்ஸ் ஒரே இடத்துல இருந்து தான் வேலை செய்வாங்க, DC குழுமம், ARC டவர்ஸ் இல்ல புது ஆபீஸ் இதுல உனக்கு எது வேணுமோ அத தேர்வு பண்ணலாம் ” என்று சந்திரசேகர் சொன்னதும், ” காஸ்மெடிக் பிசினஸ் நான் நடத்துற பல பிசினஸ்ல ஒன்னு மட்டும் தான் சார். என்னால ARC டவர்ஸ் விட்டு வெளிய வேலை செய்ய முடியாது. நான் நிர்வாகம் பண்ண வேண்டிய மத்த பிசினஸ் நிறைய இருக்கு அதனால ARC டவர்ஸ் தான் என்னோட தேர்வு “ என்று ஆர்யன் உறுதியாக சொன்னான்.

ஆர்யன் சொன்னதை கேட்ட சந்திரசேகர், ” எனக்கு அதுல சம்மதம். ரெண்டாவது கண்டிஷன், நம்ம ரெண்டு பேர் பக்கமும் ஊழியர்களை சம எண்ணிக்கையில இருக்கணும். அதாவது ஒவ்வொரு துறையிலயும் ARC.யில இருந்து ஒருத்தர், DC குழுமத்துல இருந்து ஒருத்தர் “ என்று சந்திரசேகர் விளக்கினார்.

அதற்கும் ” நல்லது சார். எனக்கு சம்மதம்” என்றான் ஆர்யன்.

” அப்போ சரி, நீ அக்ரீமன்ட் பேப்பர்ஸ் ரெடி பண்ணிடு, நாம சீக்கிரம் ஆரம்பிக்கலாம் “ என்று சிரித்தபடி சந்திரசேகர் சொன்னார். அதற்கு ஆர்யன், “ நீங்க மூணு கண்டிஷன் சொன்னீங்க ஆனா ரெண்டு தான் சொல்லி இருக்கீங்க, மூணாவது கண்டிஷன் சொல்லுங்க “என்று ஆர்யன் அமைதியாகச் சொன்னான்.

” நாம லஞ்ச் சாப்பிட்ட அப்புறம் பேசுவோம். நாம அக்ரீமென்ட்ல கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி நாம முடிவு பண்ண போற கண்டிஷன் அது “ என்று சந்திரசேகர் கள்ளச் சிரிப்புடன் கூறினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சஞ்சுவின் வயிற்றில் பயத்தில் ஒரு முடிச்சு உருவாவதை போல உணர்ந்தாள். அவள் இயல்பாக ஆர்யனைப் பார்த்தாள், அவளுடைய கண்கள் அவளது பதட்டத்தைக் காட்டிக் கொடுத்தன. எப்பொழுதும் அவளுடன் பழகும் ஆர்யன் அவள் பார்வையைச் சந்திக்கத் திரும்பி அவளுக்கு ஒரு இதமான, நம்பிக்கையூட்டும் புன்னகையை உதிர்த்தான். சஞ்சு பதிலுக்கு தலையசைத்தாள்.

நரேனும், மாயாவும் சிறிது நேரத்தில் தோட்டத்திற்குத் வந்து அவர்களுடன் அமர்ந்தான்.

” டேய் மாப்ள, ஸாரி டா லேட் ஆயிடுச்சு “ என்று நரேன் ஆர்யனைப் பார்த்து சொல்ல, “பரவாயில்ல டா ” என்று ஆர்யன் சொன்னான்.

” லஞ்ச் சாப்பிடலாமா ? என்று மாயா உற்சாகமாக கேட்டதும், “ கண்டிப்பா பிரின்சஸ் “ என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார் சந்திரசேகர்.

மாயா உடனடியாக பணிப்பெண்களிடம் உணவு பரிமாறச் சொன்னாள். அவள் எல்லாவற்றையும் முன்கூட்டியே நன்றாக திட்டமிட்டிருந்தாள்.

“ஆர்யன், இன்னைக்கு லஞ்ச் உங்களுக்கு புடிச்ச எல்லாமே இருக்கு. நான் தனிப்பட்ட முறையில என்ன சமைக்கணும்னு மெனு முடிவு பண்ணேன் “ என்று சொல்லி மாயா புன்னகையுடன் ஆர்யன் அருகில் குனிந்து, “ சர்ப்ரைஸ்… இந்த சிக்கன் பிரியாணிய உங்களுக்காக நானே சமைச்சேன் ஆர்யன்.” என்று கூறி பரிமாற இருந்தாள்.

ஆர்யன் பதில் சொல்வதற்குள் ரஞ்சித் பணிவுடன், ” ஸாரி மிஸ் மாயா, பாஸ் இப்ப அசைவம் சாப்பிடுறது இல்ல ” என்று கூறினான். அதை கேட்டதும் மாயாவின் புன்னகை லேசாக தடுமாறினாலும் “ரஞ்சித், அவருக்கு சிக்கன் பிரியாணி ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் ” என்றாள் ஆனால் ஆர்யன் மன்னிப்புக் கோரும் ஒரு சிறு புன்னகையை உதிர்த்து, “ ரஞ்சித் சொல்றது சரி தான் மிஸ் மாயா. நான் சமீபத்துல சைவத்துக்கு மாறிட்டேன். “ என்று சொன்னான்.

“பரவாயில்ல மாயா, ஆர்யன் சைவம் சாப்பிடட்டும். அப்பா உன் பிரியாணிய சாப்பிடுறேன் ” என்று சொல்லி சந்திரசேகர் சிரித்தபடி அந்தத் தருணத்தை இலகுவாக்க முயன்றார்.

மாயாவின் முகத்தில் வருத்தம் தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அவள் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு தன் தந்தையை நோக்கித் திரும்பி அவருக்கு பரிமாறினாள்.

“மாயா, உன் பிரியாணி பரிமாறு, உன் சமையல நான் ஜட்ஜ் பண்றேன்” என்று நரேன் இறுக்கத்தை குறைக்க முயன்றான்.

சந்திரசேகர் புன்னகையுடன் சஞ்சனாவை நோக்கித் திரும்பி, “அப்போ மிஸ் சஞ்சனா, நீங்க ரொம்ப நேரமா அமைதியா இருக்கீங்க. சொல்லுங்க, என்ன வேணும்?” என்று கேட்க, “எனக்கு சைவம் மட்டும் தான் ரொம்ப பிடிக்கும் சார்” என்றாள் சஞ்சு பணிவாக.

” நல்லது ” என்று ஆமோதிப்பது போல் தலையசைத்தார் சந்திரசேகர். அதோடு, ” ARCயில உங்க வேலை எப்படி இருக்கு?” என்று கேட்டார்.

” நல்லா இருக்கு சார்” என்றபடி சஞ்சு கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து, ” நான் பிசினஸ் பத்தி நிறைய கத்துக்குறேன் “ என்று சொன்னாள்.

“ஸ்மார்ட் கேர்ள்” என்று சந்திரசேகர் சொல்ல, சஞ்சு பணிவுடன் புன்னகைத்தாள், ஆனால் சங்கடமாகவும் உணர்ந்தாள். அவள் மிக மிக குறைவாகவே சாபிட்டாள். இனிப்புகள் பரிமாறப்பட்ட போது, அவள் ஒரு இனிப்பைக் கூட தொடவில்லை.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், ” நரேன், நீ ஏன் சஞ்சனாவை தோட்டத்துக்கு கூட்டிட்டு போக கூடாது, அவங்களுக்கு நம்ம தோட்டம் ரொம்ப புடிக்கும் “ என்று சந்திரசேகர் சொன்னதும், சஞ்சு ஆர்யனைப் பார்த்தாள். அவன் அவளை நரேனுடன் செல்லும்படி  ஒரு நுட்பமான தலையசைப்பு மூலம் சைகை கொடுத்தான். சஞ்சு எழுந்து நரேனைப் பின்தொடர்ந்து தோட்டத்தை நோக்கிச் சென்றாள்.

அவர்கள் சென்றதும் சந்திரசேகர் மாயாவைத் திரும்பிப் பார்த்து, ” மாயா, ட்ரிங்க்ஸ் குடிக்கலாமா?” என்று கேட்டார்.

” கண்டிப்பா கொண்டு வரேன் பா “ என்று சொன்னவள் ஆர்யனை பார்த்து, “ஆர்யன், உங்களுக்கும் கொண்டு வரட்டுமா ?” என்று கேட்டாள் ஆனால் ஆர்யன், “இல்ல, வேணாம் மிஸ் மாயா,” என்று சொல்லி பணிவுடன் மறுத்துவிட்டான்.

ஆர்யனையும் ரஞ்சித்தையும் சந்திரசேகருடன் தனியாக விட்டுவிட்டு மாயா தன் தந்தைக்கு பானம் கொண்டுவர கிளம்பினாள்.

“அடுத்த வாரத்துக்குள்ள பார்ட்னர்ஷிப் அக்ரீமென்ட் கையெழுத்து போடலாமா ?” என்று கேட்ட சந்திரசேகர், நேராக விஷயத்துக்கு வந்தார்.

” ஹ்ம்ம், பண்ணிடலாம் சார், ஆனா நாம பேசின மாதிரி நம்ம ரெண்டு தரப்புல இருந்தும் ஊழியர்கள் எண்ணிக்கையில சமமாக இருக்கும் போது, முதலீடும் சமமாக இருக்கனும். அது மட்டும் இல்ல, ARC ஏற்கனவே சந்தையில ஒரு பெரிய இடத்துல இருக்கு அதனால பிசினஸ்ல, லாபத்துல ARCக்கு 60% இருக்கும் “ என்று ஆர்யன் சொன்னதை கேட்டு யோசனையில் ஆழ்ந்த முகத்துடன் சந்திரசேகர் உன்னிப்பாகக் கேட்டார்.

” இப்போ இருக்க shares அடுத்த ரெண்டு வருஷத்துக்கு மாறாம இருக்கும். அதுக்கு அப்புறம் உங்களுக்கு விருப்பம் இருந்தா அப்போ shares வாங்கலாம். நாம ஒரே ஆபீஸ்ல தான் வேலை செய்வோம், ஆனா ஒருத்தர் மட்டும் தான் பிசினஸ் சம்மந்தமா பயணம் செய்வோம். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல எங்கேயும் ஒன்னா போக மாட்டோம். உதாரணமா, நான் இப்போ லண்டன்ல இருக்க ஒரு கிளைன்ட் கூட அக்ரீமென்ட் கையெழுத்து போட போறேன் அதுக்கு நான் ஒருத்தன் மட்டும் தான் போவேன் “ என்று ஆர்யன் விளக்கமாக சொன்னான்.

ஆர்யனின் வார்த்தைகளை யோசித்த சந்திரசேகர் லேசாக புருவத்தை சுருக்கி பின்னால் அமர்ந்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “சரி, ஒத்துக்கறேன். நீ பேப்பர்ஸ் ரெடி பண்ணதும் என்னோட வக்கீல் எல்லாத்தையும் செக் பண்ணுவாரு “ என்று கூறினார்.

” நீங்க இன்னும் ஒரு கண்டிஷன் சொல்லல சார் “ என்று ஆர்யன் கூறியதும், ” உன்னோட புத்திசாலித்தனத்துல எப்பவும் என்ன ஆச்சரியப்பட வைக்குற ஆர்யன், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட மூணாவது கண்டிஷன் நாம கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி அக்ரீமென்ட்ல சேர்ப்போம் “ என்று சொன்னார்.

” அது என்ன ?” என்று ஆர்யன் அமைதியாகக் கேட்டான்.

” ரொம்ப சின்ன விஷயம் தான், சஞ்சனா இனி உன்னோட PAவா மட்டும் இல்ல ARCயில ஊழியரா கூட இருக்க மாட்டா. ரஞ்சித் உன்னோட PAவா வேலை செய்வான் “ என்று சொல்லி சந்திரசேகர் புன்னகைத்தார்.

அவர் வார்த்தையை கேட்ட ஆர்யன் கொஞ்சமும் அசரவில்லை. நரேனுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த சஞ்சுவை நோக்கி பார்வையைத் திருப்பினான், அவளது கள்ளம்கபடம் இல்லாத சிரிப்பு அவன் மனதை கொள்ளை கொண்டது.

” சஞ்சனா என் PAவா இருக்குறதுக்கும் இந்த பார்ட்னர்ஷிப்க்கும் என்ன சம்மந்தம்னு என்னால கேட்க முடியும் ஆனா நான் கேட்க மாட்டேன் “ என்று ஆர்யன் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் கூறினான். 

” கொஞ்சம் யோசிச்சு சொல்லு” என்று சந்திரசேகர் தன்னம்பிக்கையுடன் சொன்னார் ஆனால் ஆர்யன், ” முதல் முறையா என்கிட்ட பார்ட்னர்ஷிப் கேட்டிருக்கீங்க, உங்க வார்த்தைகய ஏத்துக்க நான் யோசிக்கவே மாட்டேன் அதனால எனக்கு இதுல முழு சம்மதம் “ என்று சொன்னான்.

” நிச்சயமா உனக்கு இதுல சம்மதமா ? என்று கேட்ட சந்திரசேகர், அவன் சுலபமாக சம்மதித்ததைக் கண்டு வியப்படைந்தார்.

” ஆமா, எனக்கு சம்மதம் ” என்றான் ஆர்யன் உறுதியாக.

ஆர்யனின் பக்கத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த ரஞ்சித், அவனின் முடிவால் முகத்தில் மின்னிய பதற்றத்தை மறைக்க முடியாமல் தடுமாறினான்.

******************

முன்னோட்டம்:

” அவர் திட்டப்படி நாம எல்லாத்தையும் செய்வோம் ஆனா அக்ரீமென்ட் கையெழுத்து போடுற அன்னைக்கு என்னோட இறுதி ஆட்டம் அவர் கொஞ்சம் கூட நெனச்சு பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியா இருக்கும் “

 

 

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!