Home FamilyChapter 14

Chapter 14

by Siragugal Novels
26 views

டேனியல் தன் முழு பலத்தையும் பிரயோகித்து கதவை தன் காலால்  எட்டி உதைந்தான். பூட்டு உடைந்து கதவு பறந்து திறந்தது, சஞ்சனா பாத்ரூமின் மூலையில் சுருண்டு கிடந்தாள், அவள் உடல் கடுமையாக நடுங்கிக் கொண்டிருந்தது. நரம்புகளில் பாய்ந்த இயற்கைக்கு மாறான வெப்பத்தை அடக்கும் முயற்சியில் அவள் குளிர்ந்த நீரில் நின்று கொண்டிருந்ததால். அவள் முழுமையாக நனைந்து ஆடைகள் ஈரமாக இருந்தன. டேனியல் தன்னை நோக்கி புயலாக வருவதைக் கண்டதும் அவளுடைய அகன்ற கண்கள் பயத்தால் நிறைந்தன.

ஒரு வஞ்சகச் சிரிப்புடன் டேனியல் அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான்.

” என்ன விடு ” என்று சஞ்சனா அலறினாள், அவனிடம் இருந்து விடுபட போராடினாள். தன் உடல் போதைப் பொருளின் அதீக்கத்தில் முழு கட்டுப்பாட்டையும் இழப்பதை உணர்ந்து அவள் பீதி அடைந்தாள் ஆனாலும் அதை எதிர்த்து போராடினாள்.

டேனியல் அவள் வாயை முரட்டுக் கையால் பொத்தி அவள் அழுகையை அடக்கினான். ” ஷ்ஷ்ஷ் நீ எவ்ளோ கத்தினாலும் எந்த பிரயோஜனமும் இல்ல சஞ்சு, உன்ன காப்பாத்த இப்போ இங்க  யாரும் வர மாட்டாங்க “ என்று அவள் காதில் கிசுகிசுத்தவன், அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டான்.

அப்போது, அவனது மொபைல் ஒலிக்க ஆரம்பித்ததும், தான் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பாமல் எரிச்சலடைந்தவன் வேறு வழி இல்லாமல் சஞ்சனாவை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தன் இன்னொரு கையால் மொபைலை வெளியே எடுத்தான். அந்த எண்ணை பார்த்ததும் உடனே அதற்கு பதில் அளித்து, “ என்ன ஆச்சு, இப்போ ஏன் போன் பண்றீங்க ?” என்று கேட்ட டேனியலின் குரலில் எரிச்சல் தெரிந்தது.

” உடனே அங்க இருந்து தப்பிச்சு போ ” என்று மறுமுனையில் குரல் சீறியது. “ என்ன ஆச்சு ? “ என்று டேனியல் மீண்டும் கேட்க, ” ஆர்யன் வந்துட்டான், அவன் ஆபீஸ்ல தான் இருக்கான். அவன் அங்க வந்து உன்ன பாத்துட்டா அடுத்த நிமிஷமே உன்ன கொன்னுடுவான். இப்போவே கிளம்பு “ என்று அந்த நபர் சொன்னதும் டேனியலின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அவன் மனதுக்குள் ஆர்யனை சபித்துக் கொண்திருந்த போது சஞ்சனாவின் கையில் அவன் பிடி ஒரு கணம் தளர்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவள் அவனிடம் இருந்து விடுபட்டு தடுமாறி சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

” நல்லா ஞாபகம் வெச்சுக்க, ஒருவேள ஆர்யன் உன்ன பிடிச்சுட்டா அதுக்கு அப்புறம் என்னால உன்ன நிச்சயமா காப்பாத்த முடியாது. ஆனா நீ என்ன பத்தி எந்த தகவலும் வெளிய சொல்லாத வர, உன் மேல எந்த கேஸ் போட்டாலும், நீ தண்டனை இல்லாம தப்பிக்க நான் உதவி செய்வேன். இப்ப அங்க இருந்து ஓடு “, என்று அந்த குரல் எச்சரித்தது.

டேனியல் விரக்தியில் தன் தாடையைக் கடித்துக் கொண்டான், அவனுடைய திட்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் சிதறி போனது என்று கோவத்தில் கொதித்தான். கண்ணீர் நிறைந்த கண்களில் பயம் நிரம்பிய சஞ்சனாவை அவன் கடைசியாக ஒரு முறை பார்த்தான். ” உன் அதிர்ஷ்டம் இன்னைக்கு நீ தப்பிச்சுட்ட “  என்று முணுமுணுத்தபடி அவசர காலத்தில் வெளியேற பயன்ப்படுத்தும் வழியை நோக்கி விரைந்து அங்கிருந்து தப்பித்தான்.

அலுவலகத்தின் ஹாலில் ஓடும் போது ஆர்யனின் நாடித்துடிப்பு வேகமெடுக்க, ரஞ்சித் அவன் பின்னாலேயே விரைந்தான். ஆர்யனின் தளத்தில் லிஃப்ட் கதவுகள் திறந்த கணத்தில், மங்கலான வெளிச்சம் கொண்ட நடைபாதை முழுவதும் ஒரு அலறல் எதிரொலித்தது. ஒரு நொடி அவன் இதயம் நின்றது போல உணர்ந்தவன் அந்த ஒலியை நோக்கி ஓடினான்.

” சார் நான் இங்கேயே இருந்து இந்த இடத்த செக்யூர் பண்றேன் ” என்று ரஞ்சித் சொல்ல அதற்குள் ஆர்யன் சஞ்சனாவின் அறைக்கு  விரைந்து கொண்டிருந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன, ஆனால் பாத்ரூம் கதவு அகலமாகத் திறந்திருப்பதை பார்த்தான்.

ஆர்யன் உள்ளே நுழைந்ததும், அவன் கண்ட காட்சி அவனது இதயத்தை ஒரு மில்லியன் துண்டுகளாக சிதைத்தது. சஞ்சனா மூலையில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள், அவள் உடல் பலமாக நடுங்கி கொண்டிருந்தது, அவளது கைகள் அவள் உடலை சுற்றி இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தன. அவளுடைய தலைமுடி ஈரமாக இருந்தது, அவளுடைய கண்கள் சிவந்து அழுததால் வீங்கியிருந்தன. அவனது காலடி ஓசை நெருங்க அவள் தடுமாறினாள்.

” சஞ்சு…” என்று ஆர்யன் கிசுகிசுத்தான், அவன் குரல் உடைந்து அவளை நோக்கி விரைந்தான். அவன் அவள் முன் மண்டியிட்டு மெதுவாக அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான்.

“சஞ்சு, என்ன நடந்துச்சு மா ? என்கிட்ட பேசு ” என்று அவன் கெஞ்சினான் ஆனால் அவள் உறைந்து போய் இருந்தாள், அவள்  உதடுகள் துடித்தன, அவள் உடல் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.  

அவள் நிலையை கண்டு ஆர்யனின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. அவள் முகத்தை தன் கைகளால் நிமிர்த்தி தன் பார்வையை சந்திக்க வைத்தான். ” சஞ்சு, நான் தான், ஆர்யன். நீ இப்போ பாதுகாப்பா இருக்க. வா வீட்டுக்குப் போகலாம், சரியா ?” என்று ஆர்யன் சொன்னான்.

சஞ்சனாவின் உதடுகள் பிரிந்தன,” ஆர்யன் … எனக்கு பயமா இருக்கு.” என்று சொன்னவளின் குரல் மெல்லிய கிசுகிசுப்பாக இருந்தது. ஆர்யன் உடனே அவளை இழுத்து அணைத்த போது அவன் தாடை கோவத்தில் இறுகியது. ” நான் வந்துட்டேன் சஞ்சு. உனக்கு ஒன்னும்  ஆகாது. ப்ளீஸ் என்ன நம்பு “ என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான் ஆனால் சஞ்சு அவன் மார்பில் பலவீனமாக அழுத்தி தலையை மறுத்து அசைத்தாள். ” இல்லை…என்னால  முடியாது. எனக்கு… போதை மருந்து  கொடுத்துருக்கு ….ஆர்யன். என் உடம்பு…” என்று பேசும் போதே அவள் குரல் உடைந்து அவள் விம்மி அழுதாள். ” என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… தயவு செஞ்சு … என்ன விட்டு தள்ளி போங்க ” என்று சொல்லி சஞ்சு நடுங்கினாள். ஆனால் அவள் வார்த்தைக்கு மாறாக அவள் கைகள் அவன் சட்டையை இறுக்கமாக பிடித்திருந்தன.

அவள் மீண்டும் மறுப்பதற்குள் ஆர்யன் அவளைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய தனி ஓய்வறைக்கு அழைத்துச் சென்றான். சஞ்சு  அவனுடைய சட்டையைப் பிடித்துக் கொண்டாள், அவளுடைய உடல் பயத்திலும், அசௌகரியத்திலும், அதைவிட மோசமான உதவியற்ற நிலையிலும் நடுங்கியது.

அவளை சோபாவில் படுக்க வைத்து போனை எடுத்து தன் பர்சனல் டாக்டரை ஆர்யன் அழைத்தான்.

” அவளுக்கு போதை மருந்து கொடுத்திருக்காங்க, அவ உடம்பு நெருப்பு மாதிரி கொதிக்குது, இப்போ என்ன செய்றதுனு சொல்லுங்க, ரொம்ப கஷ்டப்படுறா “ என்று ஆர்யன் அவசரம் கலந்த குரலில் கேட்டான். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, ஆர்யன் தனது அறையில் இருந்த மருத்துவப் பெட்டியிலிருந்து மயக்கம் கொடுக்கும் ஒரு மாத்திரையை எடுத்து கொண்டு அவள் அருகில்  மண்டியிட்டு அமர்ந்தான். ” சஞ்சு பேபி, இந்த மாத்திரைய சாப்பிடு. இது உன்ன கொஞ்ச நேரத்துல சரி பண்ணும் “ என்று ஆர்யன் கூறினான் ஆனால் சஞ்சு வேண்டாம் என்று தலையை அசைத்தாள். ” இல்ல ஆர்யன்….எனக்கு நீ வேணும், ஆர்யன்….ப்ளீஸ்…என்னால கண்ட்ரோல் பண்ண முடியல … தயவு செஞ்சு …என்ன கிஸ் பண்ணு ஆர்யன் .. ப்ளீஸ் ” என்று கெஞ்சியபடி அவன் சட்டையை பிடித்து அவனை அருகில் இழுத்தாள் சஞ்சு.

சஞ்சு சொன்னதை கேட்டதும் ஆர்யனின் மூச்சு திணறியது. அவன் கண்களை மூடிக்கொண்டான், தொண்டை அடைத்து போராடியபடி கடினமாக விழுங்கினான். இவ்வளவு கீழ்த்தரமான, கொடூரமான ஏதோவொன்றால் அவள் இப்படி அவதிப்படுவதை அவனால் சகிக்க முடியவில்லை.

” சஞ்சு… என்னால முடியாது. இது நீ இல்ல. மருந்தோட விளைவுனால தான் நீ இப்படி பேசிட்டு இருக்க. இந்த மாத்திர சாப்பிடு எல்லாம் சரி ஆயிடும் “ என்று ஆர்யன் சொன்னான் ஆனால் சஞ்சு அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். ” ப்ளீஸ்…ஆர்யன், இத நிறுத்து. என்னால தாங்க முடியல “ என்று சொல்லி அவன் தலை முடியை பிடித்து இழுத்தாள்.    

ஆர்யன் நடுங்கியபடி பெருமூச்சு விட்டான். ” சரி, நான் உன்ன கிஸ் பண்றேன் ஆனா முதல்ல நீ இந்த மாத்திரையை சாப்பிடு ” என்று ஆர்யன் சொல்ல சஞ்சுவின் கண்களில் விரக்தி படர்ந்தது, அவள் தலையசைப்பதற்கு முன் தயங்கினாள். பின்னர் அவன் கையிலிருந்த மாத்திரையை வாங்கி அவன் உதவியுடன் விழுங்கினாள்.

சஞ்சு மாத்திரையை விழுங்கியவுடன் தன் கைகளை அவனை நோக்கி நீட்டினாள், தன்னை அனைத்து ஆறுதல் கொடுக்க சொல்லி அமைதியாக கெஞ்சினாள்.

ஆர்யன் அவளை அனைத்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவன் உதடுகள் ஒரு கணம் அங்கேயே நிலைத்திருந்தன, அவன் பின்வாங்கிய போது, அவள் முகத்தில் கண்ணீர் வழிவதைக் கண்டான்.

” நீ இப்போ பாதுகாப்பா இருக்க, உனக்கு ஒன்னும் இல்ல சஞ்சு “ என்று மெல்ல முணுமுணுத்தான். அவன் முத்தமிடுவான் என்று ஏங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆர்யன் அவள் தலை முடியை கோதிக் கொண்டிருந்தான். மெதுவாக மயக்க மருந்து விளைவை ஏற்படுத்தி அவளுடைய உடல் அவன் அரவணைப்பில் தளர்வடையத் தொடங்கியது. அவளுடைய கண் இமைகள் கனத்தன, சில கணங்களுக்குப் பிறகு, அவள் நினைவிழந்தாள்.

ஆர்யன் எழுந்து நின்று அவன் தலைமுடியை ஒரு கையால் கோதினான், அவன் உடல் கோபத்தில் அதிர்ந்தது. சற்றும் யோசிக்காமல், அருகிலிருந்த கண்ணாடி மேஜையை கையில் தூக்கி  பலத்த சத்தத்துடன் தரையில் வீசினான். பின்னர் தன் மொபைலை எடுத்து ரஞ்சித்தை அழைத்தான். அறைக்கு வெளியே காத்திருந்த ரஞ்சித் உடனே பதில் அளித்தான். 

“ரஞ்சித், இதுக்கு பின்னாடி யார் இருக்காங்க ? ” என்று ஆர்யன்  உறுமினான்.

” டேனியல் சார். ஆனா அவன் இங்க இருந்து தப்பிச்சுட்டான், சீக்கிரம் பிடிச்சுடுறேன் “ என்று ரஞ்சித் உடனே அனைத்து தகவலையும் கூறினான்.

ஆர்யனின் கைகள் முஷ்டியை மடக்கின. ” அவன கண்டுபிடி. நீ புடிச்சதும், அவன என் கிட்ட கூட்டிட்டு வா. போலீஸ், கேஸ், கோர்ட் எதுவும் கூடாது. அவன் என் தனிப்பட்ட எதிரி, அவன என்ன செய்யணும்னு நான் தான் முடிவு செய்வேன் “ என்று ஆர்யன் சொன்னதும் ரஞ்சித் உடனே சம்மதன் சொன்னான்.  

ஆழமாக மூச்சை இழுத்து விட்டு சஞ்சனாவின் பக்கம் திரும்பிய ஆர்யன், உறக்கத்தில் அவளது மார்பு சீராக ஏறி இறங்குவதைப் பார்த்தான். அவளை நோக்கி நகர்ந்தவன் அவளை மீண்டும் தன் கைகளில் தூக்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

ரஞ்சித் வழியில் யாரும் இல்லாதபடி பார்த்துக் கொண்டான். அவர்கள் பார்கிங்கை அடைந்ததும் ஆர்யன் அவளை காரின் பின் இருக்கையில் கிடத்தி அவள் தலையை தன் மடியில் வைத்து அமர்ந்தான். 

அவர்கள் மேன்ஷனை அடைந்ததும், ஆர்யன் சஞ்சுவை தூக்கி கொண்டு வருவதை பார்த்து கௌசல்யா, ” சார், சஞ்சுவுக்கு என்ன ஆச்சு? ” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.

” ஒண்ணுமில்ல, பலவீனத்துல மயங்கிட்டா. நீங்க சாப்பாட பேக் பண்ணி வெச்சுட்டு கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு ஆர்யன், சஞ்சுவை அவள் அறைக்கு தூக்கி சென்றான்.    

ஆர்யன் அவளை படுக்கையில் கிடத்தி விட்டு அவளது ஈரமான ஆடையை மாற்றினான். பின்னர் அவளை போர்வை கொண்டு போர்த்திவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான். 

மெல்ல நகர்ந்து சோபாவில் உட்கார்ந்து, படுக்கையில் படுத்திருந்த சஞ்சனாவைப் பார்த்தான். அவள் மிகவும் பலவீனமாக இருந்தாள், அவனது இதயம் அவளுக்காக வலித்தது. சில மணி நேரம் கடந்து  திடீரென்று, சஞ்சு தூக்கத்தில் அலறினாள்.

” இல்லை! தயவு செஞ்சு விடு ..வேணாம் “ என்று தூக்கத்தில் புரண்டு புரண்டு அலறினாள். ஆர்யன் ஓடி சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டு, “ சஞ்சு, ஒண்ணுமில்ல மா, நான் இங்க உன் கூட தான் இருக்கேன் “ என்று மென்மையான குரலில் ஆர்யன் கிசிகிசுத்தான்.  சஞ்சு நடுங்கினாள், பெருமூச்சு விட்டாள். அவள் கைகள் அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு ஆறுதல் தேடின.

” ஆர்யன்…” என்று மெல்லிய குரலில் சஞ்சு சிணுங்கியதும், “ நான் இங்கே தான் மா இருக்கேன்” என்று அவளுக்கு உறுதியளித்து அவன்  அவளுடைய நெற்றியில் மென்மையாக ஒரு முத்தம் கொடுத்து, “ நீ பாதுகாப்பா இருக்க ” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவன் வார்த்தையிலும், அரவணைப்பிலும் மெல்ல மெல்ல சஞ்சு அமைதியானாள். அவள் மூச்சு சீரானது, அவன் மீதான அவளது பிடி தளர்ந்தது ஆனாலும் அவனை விட்டு விலகாமல் அவன் மார்பில் முகம் புதைத்தபடி நெருங்கி படுத்தாள்.

ஆர்யன் அவளை பாதுகாப்பாக பிடித்து அவள் முதுகை மெதுவாக தட்டி கொடுத்தான். சஞ்சு மீண்டும் உறங்க ஆரம்பித்தாள் ஆனால் ஆர்யன் உறங்காமல் கண் விழித்திருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு முறையும் அவள் அசையும் போதோ, முனகும் போதோ, அவளை ஆறுதல்படுத்துவதற்காக அவன் மெதுவாக இனிமையான வார்த்தைகளை பேசினான்.

காலை வெளிச்சம் அறையை நிரப்பிய போது, சஞ்சு அவன் கைகளில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள், அதே நேரத்தில் அவன் விழித்திருந்தான், அவள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தான்.

சஞ்சனா மெல்ல கண் விழித்த போது தன்னைச் சுற்றி அரவணைப்பை உணர்ந்தாள், ஒரு வலுவான கரம் அவளை இறுக்கிப் பிடித்திருந்தது. மெல்ல கண் சிமிட்டியவள் நிமிர்ந்து பார்த்தாள், ஆர்யன் தன்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டிருப்பதையும், அவளும் அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள்.

அவளது புலன்கள் தெளிவடைய, முந்தைய இரவின் நினைவுகள் மீண்டும் அவள் மனதில் விரைந்தன. பயம் அவள் நெஞ்சைப் பற்றிக் கொண்டது, ஆனால் அவள் அதை நினைத்துப் பார்ப்பதற்குள், ஆர்யனின் குரல் அவளை எண்ணங்களிலிருந்து வெளியே இழுத்தது.

அவளது அசைவை உணர்ந்து, ” சஞ்சு, இப்போ எப்படி இருக்க ?” என்று ஆர்யன்  மெதுவாக கேட்டான். சஞ்சு மென்று விழுங்கிவிட்டு பேச முயன்றாள். “ம்ம்ம் … நல்லா இருக்கேன் ” என்று சஞ்சு பதில் சொன்னாள் ஆனால் அவள் குரல் உடைந்தது, உணர்ச்சிகள் அவளை மூழ்கடிக்க அவள் உதடுகள் துடித்தன. அவள் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிந்தது.

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அழாத சஞ்சு, நீ நல்லா இருக்க. நான் உன் கூட தான் இருக்கேன். கவலைப்படாத ப்ளீஸ்.” என்று ஆறுதல் சொல்லி அவனது அணைப்பை இறுக்கினான் ஆர்யன். அவன் வார்த்தையை கேட்டு அவள் பலவீனமாக தலையசைத்தாள்.

” சரி இப்போ நீ குளிச்சிட்டு வா, நேத்து நைட்ல இருந்து நீ ஒன்னும் சாப்பிடல, சீக்கிரம் சாப்பிட வா “ என்று  ஆர்யன் மெதுவாக அவளை வலியுறுத்தினான். சஞ்சனா அவன் அரவணைப்பில் இருந்து விலகி மெல்ல படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள். அவள் நகரும் போது தான் அவளுடைய ஆடைகள் மாற்றப்பட்டிருப்பதை கவனித்தாள். அவள் பார்வை ஆர்யனை நோக்கி மௌனமாக ஆனால் கேள்விக்குறியுடன் சென்றது.

அவளது பார்வையைப் புரிந்துகொண்டு, “அது…அது வந்து நான் தான் உன்னோட டிரஸ் மாத்தினேன். நீ ஈரத்துல இருந்த.. அதனால தான் .. மன்னிச்சிடு” என்று ஆர்யன் சொல்ல சஞ்சு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு சிறிய தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு பாத்ரூம் நோக்கி நடந்தாள்.

ஆர்யன் பெருமூச்சு விட்டு விறைத்த தசைகளை விரித்தான். இரவு முழுவதும் விழித்திருந்ததால் ஏற்பட்ட களைப்பு அவனை பற்றிக் கொண்டது, ஆனால் கையாள வேண்டிய வேறு விஷயங்கள் நிறைய  இருந்தன. மொபைலை எடுத்து ரஞ்சித்துக்கு டயல் செய்தான்.

“அவனைப் பிடிச்சியா ரஞ்சித் ?” என்று கேட்ட ஆர்யனின் குரல் கூர்மையாகவும் இருந்தது.

“ஆமாம் சார். நைட்டே புடிச்சிட்டேன், உங்க அழைப்புக்காக தான் காத்துட்டு இருந்தேன். இப்போ அவன நம்ம ரகசிய பாதாள சிறையில  தான் அடச்சு வெச்சுருக்கேன் “ என்று ரஞ்சித் சொன்னதும் ஆர்யன் முஷ்டியை மடக்கினான்.

” அவனோட கை, கால்கள கட்டி போடு. சஞ்சனாவுக்கு அவன் கொடுத்த அதே போத மருந்த அவனுக்கு ப்ரேக்பாஸ்ட், டின்னர் ரெண்டு வேலைக்கும் கொடு. நான் சொல்ற வர நிறுத்த வேணாம்.  அவன் அந்த போதையில ஒன்னும் பண்ண முடியாம துடிதுடிக்கணும், என் சஞ்சு அனுபவிச்சத விட ஆயிரம் மடங்கு அவன் அனுபவிக்கட்டும். அதுக்கு அப்புறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன் “ என்று ஆர்யன் கர்ஜித்தான்.  

” புரியுது சார் ” என்று தயங்காமல் பதில் சொன்னான் ரஞ்சித்.

ஆர்யன் அழைப்பை துண்டித்து சஞ்சனாவின் அறைக்கு காலை உணவை கொண்டு வருமாறு கௌசல்யாவுக்கு ஒரு செய்தியை அனுப்பிவிட்டு சஞ்சு வெளியே வர காத்திருந்தான். ஆனால் நேரம் ஆகியும் சஞ்சனா பாத்ரூமை விட்டு வெளியே வரவில்லை.

முகத்தைச் சுளித்துக் கொண்டு தயங்கித் தயங்கி ஆர்யன் கதவை லேசாகத் தட்டினான். ” சஞ்சு, குளிச்சிட்டியா ? ” என்று ஆர்யன் கேட்க அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

ஓடும் நீரின் சீரான ஒலி மட்டுமே அவன் காதுகளை சந்தித்தது. அவனது கவலை அதிகரித்து ” சஞ்சனா, பதில் சொல்லு ” என்று சொல்லி ஆர்யன் கதவை பலமாகத் தட்டினான், அப்போதும் பதில் வரவில்லை.

ஆர்யனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு நொடியையும் வீணாக்காமல், பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே விரைந்தான். சஞ்சு ஷவருக்கு அடியில் முழங்கால்களை சுற்றி கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டான். உடனே அவளை நோக்கி விரைந்தவன் குளிர்ந்த நீரில் இருந்து அவளைத் தூக்கி வெளியே விரைந்தான். சஞ்சு அவனை எதிர்க்கவில்லை.

” சஞ்சனா, என்னடி பண்ற ? ” என்று கேட்ட ஆர்யனின் குரலில் கவலை நிரம்பியிருந்தாலும் அவள் மௌனமாக இருந்தாள். மிகுந்த அக்கறையுடன் ஒரு துண்டை அவளைச் சுற்றிப் போர்த்தி அவள் தலைமுடியை மெதுவாகத் துடைத்தான். பின்னர், ஒரு வார்த்தையும் பேசாமல், அவன் அவளை அலமாரிக்கு தூக்கிச் சென்றான்.

“நான் ரூம்ல வெயிட் பண்றேன். டிரஸ் மாத்திட்டு வெளிய வா” என்று மெதுவாக சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, புதிய ஆடைகளை அணிந்தபடி சஞ்சனா வெளியே வந்தாள். ஆர்யன் அவளை சோபாவுக்கு அழைத்துச் சென்று காலை உணவுத் தட்டை எடுத்தான். அவள் மறுப்பு தெரிவிக்க விடாமல் உணவை எடுத்து அவளிடம் நீட்டி, “ சாப்பிடு சஞ்சனா ” என்றான் மென்மையாக.

சஞ்சு முதலில் தயங்கினாள், ஆனால் ஆர்யன் வலுக்கட்டாயமாக அவளுக்கு ஊட்டினான். அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கண்ணீர் மௌனமாக அவள் கன்னங்களில் உருண்டது.

” சஞ்சு, ப்ளீஸ் அழாத, என்னால உன்ன இப்படி பார்க்க முடியலடி, கஷ்டமா இருக்கு ” என்றான் ஆர்யன் அமைதியான வலி நிறைந்த குரலில். 

” டே …னி … டேனியல்…” என்று அவள் பேச முயன்று போராடினாள். ஆனால் ஆர்யன் அவள் உதட்டில் விரலை வைத்து, “ ஷ்ஷ்ஷ்ஷ், எதுவும் பேசாத சஞ்சு. கொஞ்சம் அமைதியா இரு. முதல்ல சாப்பிடு ” என்று சொல்லி அவளை அமைதிப்படுத்தி உணவை ஊட்டினான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும், டாக்டர் அவளுக்கு பரிந்துரைத்த  மருந்தைக் கொடுத்தான். பிறகு, அவளை அருகில் இழுத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டான். ஒரு கையால் அவளை சுற்றி வளைத்தபடி மறு கையால் அவள் கையைப் பிடித்தான்.

மருந்து பலனளிக்கத் தொடங்கியதும், அவளுடைய சுவாசம் சீராகி  அவள் தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஆர்யன் அவளை கவனமாக தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன் அறைக்குள் சென்று புத்துணர்ச்சி பெற்றான்.

அவன் திரும்பி வந்த அவளது அறையில் மீண்டும் அமர்ந்து, அவளைக் கண்காணித்தான். அங்கேயே அமர்ந்து அவன் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சஞ்சனாவின் போன் ஒலித்தது. பவித்ராவின் பெயரை பார்த்ததும் சஞ்சுவை எழுப்பாமலேயே அழைப்பை மியூட் செய்தான். 

” ஒரு அவசர வேலை காரணமா நான் ஊருக்கு கிளம்ப வேண்டி இருந்துச்சு. வேலை முடிஞ்சு நான் திரும்பி வந்த உடனே உனக்கு போன் பண்றேன் “ என்று பதிலை டைப் செய்து பவித்ராவுக்கு அனுப்பினான். ஏறக்குறைய உடனடியாக, ” சரி சஞ்சு, வந்ததும் எனக்கு போன் பண்ணு. டேக் கேர் ” என்று அவளிடம் இருந்து பதில் வந்தது.

ஆர்யனின் பார்வை மீண்டும் சஞ்சனாவின் பக்கம் திரும்பியது. தூக்கத்தில் கூட அவள் புருவங்கள் சுருங்கி, அவள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். ஆர்யன் அவள் அருகில் சென்று கேட்ட போது  “ஆர்யன்… எனக்கு பயமா இருக்கு “ என்று அவள் முனுமுனுப்பதை கேட்டான். உடனே அவன் நெஞ்சு இறுகியது. சற்றும் தயங்காமல் படுக்கையில் அவள் அருகில் படுத்து அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் இயல்பாகவே அவனுக்குள் சுருண்டு, அரவணைப்பையும் ஆறுதலையும் தேடினாள்.

ஆர்யன் அவளைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு, அவள் முதுகில் மெதுவாக, இதமான தட்டி கொடுத்தான். எந்த கவலையும் இல்லாமல், சிரித்து பயமின்றி வாழ்ந்த சஞ்சனாவின் நினைவுகள் அவன் மனதில் நிரம்பி வழிந்தன. அவள் இப்படி நொறுங்கிப் போயிருப்பதைப் பார்த்ததும் அவன் நொறுங்கிப் போனான்.

ஒரு சொட்டுக் கண்ணீர்த் துளி அவன் கன்னத்தில் வழிந்து அவள் கன்னத்தில் விழுந்தது.

சட்டென அதைத் துடைத்துவிட்டு அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான். ” உனக்கு நான் இருக்கேன் சஞ்சு, உனக்கு எதுவும் நடக்க நான் விடமாட்டேன்.” என்று மெல்ல கிசுகிசுத்தான்.

ஒருவழியாக களைப்பு ஆட்கொள்ள, அவளை இறுகப் பிடித்துக் கொண்டு, அவளருகில் அவளோடு உறங்கினான்.

**************

முன்னோட்டம்:

” நான் உன் கூட ஒரே படுக்கையில படுத்து தூங்கனும்னு சொல்றியா ? அது உனக்கு சௌகரியமா இருக்குமா ஸ்வீட் ஹார்ட்  ? “

You may also like

1 comment

Leave a Comment

Latest Posts

error: Content is protected !!